Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போராடும் தமிழக மாணவர்களுக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் வாழ்த்துக்கள்

Featured Replies

ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் மாணவர்கள் முன்னெடுக்கின்ற போராட்டங்களுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தமது பூரண ஆதரவை வெளிப்படுத்தியுள்ள அதேவேளை அவர்களுக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

 

 

தமிழர்களின் வாழ்வு போராட்டங்களுடன் பின்னிப் பிணைந்தது. போராட்டமே வாழ்க்கையாகவும் வாழ்க்கையே போராட்டமாகவுமே தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.


இந்த மக்களுக்கு ஆதரவாக உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்கள் என்றும் தோற்றுப்போவதில்லை என்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

தமிழக மாணவர்களின் போராட்டங்களை பார்க்கின்ற போது எமது உள்ளங்கள் உருவேறுகின்றன. உணர்ச்சிகள் கொப்பளிக்கின்றன. ஆனால், நாங்கள் இங்கே எதுவுமே செய்ய முடியாமல் எமது பல்கலைக்கழகம் சிறைக்கூடமாக்கப்பட்டுள்ளது என்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தமது வேதனைகளையும் வெளிப்படுத்தியுள்ளனர்.


தமிழக மாணவர்கள் ஈழத் தமிழ் மக்களுக்காக முன்னெடுத்து வருகின்ற போராட்டம் தொடர்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளதாவது,

 

உலகம் உருண்டையானது. அந்த உலக உருண்டையில் தமிழ் மக்கள் வாழ்வதற்கு ஒரு துளி நிலம் இல்லை. அந்த நிலத்திற்காக போராடிய தமிழினம் சிங்கள ஏகாதிபத்தியத்தினால் கொன்று குவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய தமிழினம் இன்று வீதியில் நடைப்பிணமாக அலைகின்றது.


வன்னியில் வாழ்கின்ற எமது உறவுகள் ஒருவேளை உணவைப் பெறுவதற்கே திண்டாடுகின்றார்கள். கணவர்கள் தடுப்பு முகாம்களில் உள்ள பெண்கள் தினமும் சிங்கள இராணுவத்தால் காமுறப்படுகின்றனர். உன் கணவனை விடுவிக்கிறோம் நீ என்னுடன் வா என்று சிங்களப் படை தமிழ்ப் பெண்களைக் கூவி அழைக்கிறது. போரில் காயமடைந்த, மக்கள் ஊனமுற்ற மக்கள் ஒரு கைத்தடியின்றி தள்ளாடுகின்றனர். முன்னாள் போராளிகளின் வாழ்வு சின்னாபின்னமாகியுள்ளது.

 

இந்த நிலையில், சிங்கள தேசம் மங்கலம் பாடிக்கொண்டிருக்கிறது. தான் செய்த எல்லாவற்றையும் மூடி மறைத்துவிட்டு தமிழர் தாயகத்தில் அபிவிருத்தி இடம்பெறுகின்றது என்று உலகுக்கு ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கிறது.


தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதுதான் வடக்கு-கிழக்கில் சிறிலங்கா அரசாங்கம் செய்கின்ற அபிவிருத்தியாகவுள்ளது. வடக்கு கிழக்கு எங்கணுமுள்ள அரச காணிகள், ஆட்களற்ற தனியார் காணிகள் எங்களும் இராணுவ முகாம்களும் சிங்களக் குடியேற்றங்களும் இடம்பெறுகின்றன.

 

அண்மையில் ஐ.நாவில் உரையாற்றிய சிங்கள அமைச்சர் மகிந்த சமரசிங்க, சிறிலங்காவை முன்னேற்றுவதற்கு இன்னும் ஐந்து வருடங்கள் கால அவகாசம் கேட்டிருக்கிறார். தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து சிங்கள முகாம்கள் அமைக்கவும் சிங்களக் குடியேற்றங்களை அமைத்து தமிழர் தாயகத்தை சிங்கள ஆதிக்கமுள்ள இடமாக மாற்றியமைக்கவுமே அவர் ஐந்து வருடங்கள் அவகாசம் கேட்டிருக்கிறார். மாறாக தமிழ் மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு அல்ல.


இந்த நிலையில், சிங்கள சேனைகளின் ஆதிக்கத்தை தமிழக உறவுகள் முற்று முழுதாக உணர்ந்துகொண்டுள்ளீர்கள். குறிப்பாக எமது பிரச்சினைகளை முற்றுமுழுதாக புரிந்துகொண்ட தமிழக மாணவர்களுக்கு எமது அன்பு கலந்த நன்றிகள். நாங்கள் முதற்கண் உங்களைப் பணிகின்றோம். உங்கள் போராட்டங்களை நாங்கள் மெச்சுகின்றோம்.

 

 

இன்று நீங்கள் முன்னெடுக்கின்ற போராட்டங்களில் நாங்களும் வந்து கலந்துகொள்ள ஆவலாக உள்ளது. ஆனால், மீண்டும் நாங்கள் எமது பல்கலைக்கழகத்திற்கு வர முடியாது, ஏன் சிறிலங்காவிற்குள்ளேயே வர முடியாது. கட்டுநாயக்காவில் நிற்பவர்கள் எங்களைக் கைது செய்வார்கள். பின்னர் நாங்கள் காணாமற்போய்விடுவோம். எனவே எங்களுக்கான உங்கள் போராட்டத்தில் நாங்கள் கலந்துகொள்ள முடியாமைக்கு முதலில் எங்களை மன்னித்து விடுங்கள்.


ஈழப் போராட்டத்தைப் பெற்றவர்கள் மட்டுமே நாங்கள், ஆனால் எமது போராட்டத்தை வளர்த்து ஆளாக்கியவர்கள் நீங்கள் தான். பெற்ற எங்களைவிட வளர்த்த உங்களுக்கே எமது போராட்டத்தின் நியாயப்பாடுகள் அதிகம் தெரியும். நீங்கள் எமது போராட்டத்தை நேசித்தீர்கள். எங்களைவிட அதிகமாக நேசித்தீர்கள். அதனால்தான் எமது போராட்டத்தை சிங்களவன் அழித்ததை உங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

 

 

தோழர் முத்துக்குமார், தோழர் செங்கொடி வரிசையில் எத்தனையோ உறவுகள் ஈழத் தமிழர்களுக்காக தங்களையே மாய்த்துவிட்டார்கள். இன்று நீங்கள்

கொதித்தெழுந்திருக்கிறீர்கள். உங்கள் கொதிப்புக்கு ஈடுகொடுக்க முடியாமல் மத்திய அரசு திண்டாடிக்கொண்டிருக்கின்றது. புலிகளின் போராட்டத்தை அழிக்க ஏன் சிறிலங்காவிற்கு உதவி செய்தோம். இதைவிட உதவி செய்யாமல் இருந்திருக்கலாமே என்று மத்திய அரசு யோசித்துக்கொண்டிருக்கிறது.


மாணவர் சக்தி மாபெரும் சக்தி என்பதை நீங்கள் இன்று வெளிக்காட்டிக்கொண்டிருக்கிறீhகள்.

 

 

அன்பிற்குரிய தமிழக உறவுகளே,


பாண்டிய மன்னன் சிவபெருமானுக்கு அடித்த அடி உலகிலுள்ள எல்லா உயிர்களின் முதுகிலும் வீழந்ததைப் போல சிங்களவன் எங்களுக்கு அடித்த அடி உங்கள் முதுகிலும் எத்தகைய காயங்களையும் வலிகளையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நாங்கள் இப்போதுதான் உணர்ந்துகொள்கிறோம். உங்கள் போராட்டங்களைப் பார்த்தே புரிந்துகொள்கிறோம்.

 

சிறிலங்காவின் சனத்தொகை தமிழ் மக்களையும் சேர்த்து வெறும் இரண்டு கோடி பத்து லட்சம். ஆனால் தமிழக மாணவர்களின் எண்ணிக்கையோ சிறிலங்காவின் ஒட்டுமொத்த சனத்தொகையை விட சில மடங்கு அதிகம்.


எனவே தமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த மாணவர்களும் சிறிலங்காவிற்கு எதிராக கிளர்ந்தெழுந்துவிட்டனர் என்பதை நினைக்கும் போது சிங்களத்திற்கு சித்தம் கலங்குகிறது. செங்களத்தில் தமிழர் சேனையுடன் தனித்து நின்று முட்டி மோத முடியாமல் புறமுதுகிட்டு ஓடிய சிங்களச் சேனைகள் உலகின் சில வல்லாதிக்க சக்திகளுடன் கைகோர்த்து தமிழரின் போராட்டத்தை அழித்ததுடன் லட்சக்கணக்கான தமிழ் மக்களையும் கொன்றுகுவித்தது.

 

ஈழத் தமிழ் மக்களை நாங்கள் அடித்தால் யார் கேட்பார்கள் என்ற அசட்டுத் துணிவோடுதான் சிங்களம் எங்களை அழித்தது, ஆனால், ஈழத் தமிழர்கள் எங்கள் தொப்புள்கொடி உறவுகள் என்பதை நிரூபித்து எங்களுக்காக நீங்கள் சிங்களவர்களிடம் மட்டுமல்ல உங்களவர்களிடமே (இந்திய மத்திய அரசு) நீதி கேட்டு நிற்கிறீர்கள். உண்மையில் உங்களை நினைக்க எங்கள் தேகம் சிலிர்க்கிறது.


கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிங்களவன் எங்களை எங்கள் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் போட்டு உருட்டி உருட்டி உதைத்தான். அதற்கு நாம் நீதி கேட்டதற்காக எங்களை தடுப்பு முகாமுக்கு கொண்டு சென்றார்கள். இனிமேல் எந்தவொரு போராட்டமும் செய்யக்கூடாது என்று நாங்கள் அச்சுறுத்தப்பட்டிருக்கிறோம். நாங்கள் நொந்துபோயிருக்கிறோம்.

 

ஆனால், எமக்கு நீங்கள் ஆறுதல் தந்திருக்கிறீர்கள். தமிழர்களின் தன்மானத்தை நீங்கள் காப்பாற்றுகிறீர்கள். உங்களுக்கு நாம் நன்றி சொல்கின்றோம். எமது தேசம் மலரும்போது நீங்களும் அதில் பங்குதாரர்களாக இருப்பீர்கள். எங்கள் தேசத்தில் உங்கள் பெயர்கள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும்.


எமது இரத்தத்துடன் இரத்தமாக, சதையுடன் சதையாக நீங்கள் கலந்திருக்கிறீர்கள். நாங்களும் நீங்களும் இரத்த உறவுகள் என்பதால்தான் எங்களுக்கு சிங்களவன் அடிக்கின்ற போது உங்களுக்கும் வலிக்கிறது. உங்கள் வலிகளும் எங்கள் வலிகளும் தீர்க்கப்படவேண்டும். அதற்கான உங்கள் போராட்டங்களுக்கு நாங்கள் என்றும் உறுதுணையாக இருப்போம்.

 

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் என்றாலே சிங்கள இராணுவம் அஞ்சி நடுங்கிய காலம் ஒன்றிருந்தது. ஆனால் அதே இராணுவம் இன்று எங்களை அடக்கியாள முற்படுகின்றது. நாங்கள் எதற்கும் அஞ்சமாட்டோம் என்பதை நாங்கள் வெளிப்படுத்துவோம். நீங்களும் எமக்கு உறுதுணையாக இருங்கள். நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம். உங்கள் போராட்டம் எங்கள் போராட்டம். இந்தப் போராட்டம் நிச்சயம் வெற்றிபெறும்.

 

இலட்சிய வீரர்கள் வீழ்வதுமில்லை

ஈழத்தில் மாணவர் மாழ்வதுமில்லை
தமிழர்க்கு விடிவொன்று கிடைக்கின்ற வரைக்கும்
தமிழக மாணவர் ஓய்வதும் இல்லை.


 

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்.
யாழ்ப்பாணம்.
17.03.2013

 

http://www.eelamview.com/2013/03/18/jaffna-university-support/

  • தொடங்கியவர்

தமிழக மாணவர்களின் போராட்டம் ஈழத் தமிழர்களுக்கு விடிவை பெற்றுத்தரும்: யாழ்பாண வழக்கறிஞர்

 

தமிழ்நாட்டு மாணவர்களும் மக்களும் நடத்தும் தொடர் போராட்டங்கள் எங்கட மக்களுக்கான விடிவை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது என்று யாழ்பாண‌த்தில் உள்ள வழக்கறிஞர் கூறினார்.

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கக் கோரியும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கக் கோரியும் தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகம் தகித்துக் கொண்டிருப்பதால் மத்திய அரசிற்கும் நெருக்கடிகள் முற்றி வருகின்றன.

பொது வாக்கெடுப்பில் அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காத பட்சத்தில் இந்திய ஒருமைப்பாடே கேள்விக் குறியாகி விடும் என்ற சூழலில், தமிழக‌ போராட்டங்கள் இலங்கையில் உள்ள தமிழர்கள் மத்தியில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன, தமிழக போராட்டங்கள் அந்த மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதற்காக யாழ்பாண‌த்தில் உள்ள வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான ஒருவரை தொடர்பு கொண்டோம். தனது பெயரை குறிப்பிட வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் நம்மிடம் பேசினார் அவர்.

''தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் குறிப்பாக மாணவர்களிடையே ஏற்பட்டிருகின்ற இந்த எழுச்சி எங்கட மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இவ்வளவு காலம் இல்லாத ஒரு நிகழ்வு தமிழ்நாட்டு மாணவர்களிடேயே இப்போது உருவாகியிருப்பது எங்கட மக்கள் மனதில் ஒரு சந்தோஷத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை அரசுக்கு எதிரான வாக்கெடுப்பு தொடர்பான விவாதங்கள் நடந்து வரும் இவ்வேளையில், தமிழ்நாட்டு மாணவர்களும் மக்களும் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள், ரயில் மறிப்பு, உண்ணாவிரதம் போன்ற தொடர் போராட்டங்கள் எங்கட மக்களுக்கான விடிவை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையே ஏற்படுத்தியிருக்கிறது.

அதே வேளையில், இந்திய அரசியலில் இழையோடி போயிருக்க கூடிய அரசியல் பின்ணனி இந்த போராட்டங்களுக்கு எந்த அளவுக்கு துணைபோகும் என்பது ஒரு கேள்வி குறியாகத்தான் இருக்கிறது. இந்திய அரசியலில் ஏற்பட போகும் மாற்றங்கள் இந்த போராட்டங்களை தடுக்குமா அல்லது இந்த போராட்ட விடயத்துடன் நின்று போகுமா என்பதும் எங்கட மக்களுக்கு இனம் புரியாத அச்சமா இருக்கு.

ஐ.நா.வில் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் மத்தாப்பு போன்று போய்விடுமா அல்லது தொடர்ந்து அடுத்தடுத்த கட்டங்களில் இந்த நகர்வுகள் முன்னெடுக்கப்படுமா என்ற அங்கலாய்பும் மக்கள் மத்தியில் இருக்கு. பொதுவாகவே எங்கட மக்களால் வரவேற்கப்படும் தமிழக மக்களின் இந்த முயற்சி இப்போ அல்ல முன்பாகவே வந்திருக்க வேணும்.  கொஞ்சம் தாமதமாக‌த்தான் வந்திருக்கு'' என்றார்.


தமிழகத்தில் நடக்கும் இந்த போராட்டங்கள் குறித்து தங்களின் உணர்வுகளை வெளிகாட்டும் சூழல் தற்போது இலங்கை தமிழர்கள் மத்தியில் உள்ளதா?

''இலங்கையில் விடுதலைப் புலிகளின் ஆயுத நடவடிக்கைகள் முடிக்கப்பட்ட நிலையில் எங்கட மக்கள் திறந்தவெளி சிறைகளில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆயுதம் தாங்கிய போராளிகளின் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக இலங்கை கொக்கரிக்கிறது. அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்ற வாதங்களுக்கு அப்பால் இலங்கை அரசு, விடுதலைப் புலிகளை ஒழித்து விட்டதாக சர்வதேச சமூகத்தில் சொல்லி கொண்டிருக்கிறது.

ஆனால், இங்கிருக்கிற மக்கள் இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு அல்லது உரிமை கோரும் வாழ்க்கைக்கு வர இயலாத சூழல்தான் இருக்கு. பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் மத சுதந்திரம் எதுவும் இங்க இல்ல. உங்கட்ட சொல்லும் விடயத்தை பப்ளிக்கில் போய் சொன்னால், விடிய இருக்க மாட்டேன் நான். என்னை வொயிட் வேனில் வந்து தூக்கிட்டு போயிடுவாங்க. அல்லது இனம் தெரியாத ஆயுதம் தாங்கிய கும்பல் என்னை அடித்து சுட்டு வைத்துட்டு போகும். இப்போதும் பரா குரூப்னு சொல்ல கூடிய ராணுவத்தின் ஒட்டு குழுக்கள், ராணுவத்துடன் இணைந்து செயல்படும் ஆட்களின் அச்சுறுத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கு. புலிகள் அமைப்பை ஒழித்துவிட்டதாக சொல்லும் இலங்கை அரசு, தமிழ் மக்களுக்கு உரிமைகளை தர விரும்பவில்லை. அவர்கள் சொல்வது எதையும் செய்றதில்லை என்பதுதான் உண்மை.''
 


தமிழ்நாட்டில் நடக்கும் எல்லா செய்திகளும் இலங்கைத் தமிழர்களை சென்றடைகிறதா?

''நிச்சயமாக. இலங்கை வடக்கு மாகாணத்தில் உள்ள கிளிநொச்சி, முல்லைதீவு, வவுனியா உள்ளிட்ட 5 மாவட்டங்களிலும் தமிழ்நாட்டு சேனல்களின் உதவியால் எல்லா விடயங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது. இலங்கையில் உள்ள சேனல்கள் எல்லாம் சிங்கள சேனல்களை தவிர வேறொண்டும் கிடையாது. தமிழ்நாட்டில் இருந்து ஒளிபரப்படும் தமிழ் சேனல்களை மட்டும்தான் எங்கட ஜனம் பாக்குது.

அதே வேளையில், இந்தியாவில் வெளியாகும் இலங்கை பற்றிய செய்திகளும் இலங்கை அரசின் பார்வைக்கு வந்துவிடுகிறது. விடுதலைப் புலிகள் மீண்டும் தாக்குதல் நடத்த கூடும் என்ற கருத்தின் அடிப்படையில் இலங்கை புலனாய்வு நிறுவனத்தின் ஒரு பகுதியை இந்தியாவில் இலங்கை அரசு வைத்திருக்கிறது. இவர்கள் இலங்கையோட சமபந்தப்பட்ட செய்திகளை எல்லாம் உடனுக்குடன் இலங்கை அரசுக்கு அனுப்பி கொண்டிருக்கிறார்கள். அந்த தகவலில் இடம் பெற கூடிய ஆட்களையெல்லாம் இங்கே தேடும் நிலை இன்னும் இருக்கு. எனவேதான் என்னோட பேரை போட வேண்டாம் என சொன்னேன்.'' என்கிறார் அந்த சமூக ஆர்வலர்.

- இரா.மோகன்

 

http://news.vikatan.com/?nid=13047

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.