Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவாமி ரணம்...சுவாமி சரணம்... சுப்பிரமணிய சுவாமி சரணம்

Featured Replies

பட்டி மண்டபம் ஒன்றில் திண்டுக்கல் லியோனி கூறிய கதை இது.

 

ஒரு சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அவன் தான் வைத்திருக்கும் எல்லாப் பொருட்களையும் கவிழ்த்து விடுவதில் மகிழ்ச்சியடைந்தான். இதனை அவதானித்த ஒரு பெரியவர் அருகில் நின்ற இன்னொருவரிடம் ஐயா! இந்தச் சிறுவனுக்கு என்ன பெயர் என்று கேட்டார்.


அதற்கு சுப்பிரமணிய சுவாமி என்று பதில் அளித்தார் அந்த நபர்.

 

பெரியவர் சிரித்துக் கொண்டே நினைத்தேன். இந்தப் பையனுக்கு சுப்பிரமணிய சுவாமி என்று தான் பெயர் இருக்கும் என்று. பெரியவர் கூறியதைக் கேட்ட மற்றவர், பெரியவரே ஏன் அப்படி நினைத்தீர்கள் என்று வினவ,  அவன்தானே எல்லாவற்றையும் கவிழ்த்து போடுகிறான். அப்படியானால் அவனுக்கு சுப்பிர மணிய சுவாமி என்று தானே பெயர் இருக்கும்.

 

 

திண்டுக்கல் லியோனி இதைக் கூறிய போது சபையில் எழுந்த சிரிப்பொலியும் கர கோசமும் அடங்கிப் போக நீண்ட நேரம் எடுத் தது.

 

என்ன செய்வது! சிலர் காந்தியாக இருக்க நினைக்கிறார்கள். இன்னும் சில பேர் காந்தியைக் கொன்ற கோட்சேயாக இருக்க விரும்பு கிறார்கள்.காந்தியை பேசும் போதெல்லாம் கோட்சே யும் பேசப்படுவான் என்ற நினைப்பைத்தவிர இவர்களிடம் வேறு எதுவுமில்லை. அந்த வழி யில்தான் சுப்பிரமணிய சுவாமியும். தமிழகம் முழுவதும் ஈழத்தமிழர்களுக்காக கொந்தளித்தபோது - தமிழக மாணவர்கள் உண்ணா விரதப் போராட்டம் நடத்திய போது சுப் பிரமணிய சுவாமி மட்டும் இலங்கை அரசுக்காக வக்காளத்து வாங்கினார்.

 

சுப்பிரமணிய சுவாமியின் இந்தப் போக்கு எதற்கானது? விடுதலைப் புலிகள் மீது கொண்ட கோபத்தை ஈழத்தமிழர்களிடம் பழி தீர்ப்பதற்கானதா?  அல்லது இலங்கை அரசிடம் யாசகம் பெற்றதற்கான கைமாறா?

 

இவை இரண்டுமல்ல, எதிர்வாதம் புரிந்தால்தான் ஊடகங்களில் இடம்பிடிக்க முடியும் என்ற நினைப்பிலா என்பது ஆய்வுக்குரியது. எதுவாயினும் ஈழத்தமிழர்களுக்கு நடந்த இன்னல்களை ஒரு போதேனும் கண்டுகொள் ளாத - கண்டிக்காத சுவாமி, ஜெனிவா தீர்மா னத்தின் போது இலங்கை அரசின் பிரதிநிதி போல கருத்துரைத்தமை கற்றவர் கயவனாக இருப்பது பெரும் கொடுமை என்ற தவத்திரு குன்றக்குடிகளின் வாக்கை நினைவு படுத்தும்.

 

http://www.valampurii.lk/index.php?option=com_content&view=article&id=810:2013-03-25-05-08-39&catid=79:2012-09-26-08-59-23&Itemid=491

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.