Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத்தலவில் இருந்து புறப்பட்ட சிறிலங்கன் விமானம் மயிரிழையில் தப்பியது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

srilankan-airlines.jpg

சிறிலங்காவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மத்தல அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானம் ஒன்று பாரிய விபத்தில் இருந்து மயிரிழையில் தப்பியுள்ளது. 

நேற்று முன்தினம் மாலேயில் இருந்து சிறிலங்கா வந்த யு.எல்- 114 என்ற விமானம், மத்தல ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு புறப்பட்டுச் சென்றபோதே, இந்த விபத்து நேரிட்டதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

மத்தல விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், பறவைக் கூட்டம் ஒன்று விமானத்தின் முன்புறத்தில் தாக்கியது. 

இதனால் விமானத்தின் முன்புறக் கண்ணாடிகள் சேதமடைந்தன. 

விமானம் அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதும், சிறிலங்கன் எயர்லைன்ஸ் மூத்த அதிகாரிகளும், விமானிகளும் சேதங்களை ஆய்வு செய்தனர். 

முன்புறக் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளதுடன், துப்பாக்கிக் குண்டுத் துளை போன்ற பல துளைகளும் காணப்பட்டதாக மூத்த விமானி ஒருவர் தெரிவித்துள்ளார். 

அழுக்கத்தினால், கண்ணாடி உடைந்திருந்தால், விமானி வெளியே தூக்கி வீசப்பட்டிருப்பார் என்றும் அவர் கூறியுள்ளார். 



air-crack.jpg

அந்த விமானத்தில் சுமார் 40 பயணிகள் இருந்தனர். 

அவர்களில் மத்தலவில் இருந்து கட்டுநாயக்க செல்வதற்காக ஏறிய சிறிலங்கா அதிபரின் நான்கு உறவினர்களும் அடங்குவர். 

எனினும் அந்த விமானம் மத்தலவில் பயணிகள் எவரையும் இறக்கி விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

பறவைகள், மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியிலேயே மத்தல விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 

அங்கு விமானங்களின் இரைச்சல் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு பெரும் தொந்தரவாக மாறியுள்ளது. 

மத்தல விமான நிலையம் திறக்கப்படுவதற்கு ஓரிரு நாட்கள் முன்னதாகவும் இதுபோன்றதொரு பாரிய விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. 

பரீட்சார்த்தமாகத் தரையிறக்கப்பட்ட விமானம் ஒன்றின் மீது பறவைக் கூட்டம் மோதியதால், அந்த விமானத்தை செலுத்திய இளைய விமானி நிலைகுலைந்து போயிருந்தார். 

பின்னர் மூத்த விமானி ஒருவர் விமானத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால் தான், அந்த விமானம் விபத்தில் இருந்து தப்பியது குறிப்பிடத்தக்கது.

 

http://www.puthinappalakai.com/view.php?20130327108014

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.