Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் தொடர்ந்தும் பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது; பிரித்தானியா எச்சரிக்கை

Featured Replies

2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும், அரசாங்கம் பயங்கரவாதம், அதிகரித்த இராணுவ பிரசன்னம்,சோதனைச் சாவடிகள் என தற்போதும் செயற்பட்டு வருகின்றது. இதனால் இலங்கை தொடர்பில் மேற்குலக நாடுகளுக்கு எதிரான நிலைப்பாடு வலுப்பெற்றுள்ளது. எனவே இலங்கை செல்பவர்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

 

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும், நாட்டில்  அண்மைக்காலமாக தேசப்பற்றுசார் நிலைப்பாடுகள் வலுவடைந்துள்ளமையால் மேற்குலக நாடுகளில் இலங்கை தொடர்பில் எதிர்ப்பலைகள் அதிகரித்துள்ளது.

 

இவ்வாறான காரணங்களை முன்வைத்து பிரித்தானியா இலங்கை செல்லும் தமது பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 

பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் ஏனைய வெளிநாட்டு ராஜதந்திர அலுவலகங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றது.

 

அத்துடன் திட்டமிட்ட ஆயுதக் குழுக்களினால் கடத்தல்கள் இடம்பெற்று வருவதாகவும், இதுவரையில் பிரித்தானிய பிரஜைகளுக்கு இவ்வாறான அனர்த்தங்கள் எதுவும் ஏற்பட்டதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன் இலங்கைக்கு விஜயம் செய்யும் பிரித்தானிய பிரஜைகள் ஆபத்துக்களை எதிர்நோக்கிய சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு என்ற போதிலும், வாகன விபத்துக்கள், கடன் அட்டை மோசடி மற்றும் நீரில் மூழ்குதல் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதேவேளை, கடந்த செப்டம்பர் மாதம் பிரித்தானியா வெளியிட்டிருந்த பயண எச்சரிக்கைக்கு இலங்கை எதிர்ப்பை வெளியிட்டிருந்ததுடன், திருத்தங்களையுதட செய்யுமாறு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://onlineuthayan.com/News_More.php?id=523991925827428806

 

  • தொடங்கியவர்

வரும் மாதங்களில் மேலும் பல நாடுகள்  இலங்கைக்கு பயணம் செய்வதை எச்சரிக்க கூடும்.

 

தமிழக மாணவர் எழுச்சியால் புலம்பெயர் தமிழர்கள் தாக்குதலுக்கு உள்ளாகலாம்.

 

மத கலவரம் ஒன்றும் வெடிக்கும் சாத்தியங்கள் உள்ளன.

ஏனெனில் உண்மையில் உண்மையான பயங்கரவாதம் அங்கு முன்னைவிட இப்போது கோலோச்சுகிறது.

முன்னர் அரச பயங்கரவாதத்தை தடிக்கேட்க புலிகள் இருந்தார்கள். இப்போது யாரும் இல்லை. குருடுத்தனமாக அரசுக்கு உதவியவர்கள் இப்போதும் பயங்கரவாதம் இருப்பதை உணர்ந்து விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.