Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் உடன் பதவி விலக வேண்டும்! - ஹரின் பெர்னாண்டோ வலியுறுத்தல்!!

Featured Replies

வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் உடன் பதவி விலக வேண்டும்! - ஹரின் பெர்னாண்டோ வலியுறுத்தல்!!

9cdc0010-4186-465f-af42-9f19f1a3dec21.jp

வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் உடன் பதவி விலக வேண்டும்! - ஹரின் பெர்னாண்டோ வலியுறுத்தல்!!

வெளியுறவுக் கொள்கைகளை முறையாகக் கடைப்பிடித்து சர்வதேச நாடுகளுடன் நட்புறவைப் பேணும் இராஜதந்திரம் தெரியாத வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், தமது தோல்வியை ஒப்புக்கொண்டு உடன் பதவி விலக வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையுடன் அரசாங்கம் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டிருக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய அவர், இலங்கைக்கு எதிராக அதிகரித்துவரும் தமிழக எதிர்ப்புகளும் இந்தியாவின் ஆதரவற்ற போக்கும் சர்வதேச ரீதியில் நாட்டுக்குப் பெரும் அழுத்தங்களை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பிலுள்ள தொழிற்சங்கப் பணிமனையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகள், இலங்கைக்கு ஆதரவற்ற வகையிலான இந்திய அரசின் போக்கு ஆகியவற்றுக்கு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸே முழுக் காரணம்.

இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் பீரிஸ், 13வது திருத்தச் சட்மூலத்துக்கு அமைய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்றார். இதனையடுத்து வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் அப்படி எதுவும் கூறவில்லை என்று ஓரிரு தினங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறினார். இதுதான் இந்திய அரசின் கோபத்துக்குக் காரணம்.

சர்வதேச நாடுகளுடன் நட்புறவைப் பேணும் கொள்கைகளைக் கையாளும இராஜதந்திரம் வெளிவிவகார அமைச்சர் பீரிஸுக்குத் தெரியாது. அதுமட்டுமல்ல, இந்த அரசுக்கே இராஜதந்திரம் என்றால் என்ன என்பது தெரியாது. இலங்கைக்கு எதிராக அதிகரித்துவரும் தமிழகத்தின் எதிர்ப்பு சர்வதேச ரீதியில் நாட்டுக்குப் பெரும் அழுத்தத்தைக் கொடுக்கும்.

தனக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பொறுப்புகளை ஏற்று வெளிவிவகார அமைச்சர் பீரிஸால் செயற்பட முடியாது. அதனால்தான் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போதுகூட அதில் கலந்து கொள்வதைத் தவிர்த்து அவர் இலங்கையிலேயே இருந்தார். எனவே, தனது தோல்வியை ஏற்றுக்கொண்டு அவர் உடன் பதவிவிலக வேண்டும்.

இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டுவந்த பிரேரணைக்கு ஆணைக்குழுவில் உறுப்பு நாடுகளல்லாத 43 நாடுகள் இணை ஆதரவு வழங்கியிருந்தன. இவ்வாறான நிலையிலும் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான அழுத்தங்களைத் தணிக்க அரசாங்கம் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஐ.நா கூட்டத் தொடர் நடைபெறுவதற்கு முன்னர் சர்வதேச நாடுகளிடம் சென்று இலங்கைக்கான ஆதரவை அரசாங்கம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் அவ்வாறு செய்யவில்லை. அதனால்தான் எமக்கு சர்வதேச ஆதரவு கிடைக்கவில்லை.

19 நாடுகளில் இலங்கைத் தூதர்களாக இராணுவ உயரதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டுடன் தொடர்பை ஏற்படுத்தும் இராஜதந்திரம் இவர்களுக்குத் தெரியுமா? இராணுவத்தினர் என்ற வகையில் கண்டிப்புடன் செயற்படத்தான் இவர்களுக்குத் தெரியும்.

இராஜதந்திரம் வேறு, இராணுவ மயம் வேறு. ஆனால் இந்த அரசாங்கம் இதைக் கூட பிரித்தறிய முடியாதுள்ளது. 19 நாடுகளில் இலங்கைத் தூதர்களாக இராணுவ உயர் அதிகாரிகளை அரசாங்கம் நியமித்ததில் எந்தப் பயனும் இல்லை. இராஜதந்திர யுக்திகளைக் கையாளும் திறமைமிக்க இராஜதந்திரிகள் நாட்டில் இருக்கின்ற போதிலும், அவர்களிடம் இந்தப் பொறுப்புகளைக் கையளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.

அதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை தொடர்பில் முன்வைக்கும் கருத்துகள் எமக்கு ஏற்றுக் கொள்ள முடியாதவையாக இருப்பினும், அவருடன் நாம் இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டும். ஏனெனில், இன்னும் நான்கு வருடங்களுக்கு அவர் அந்தப் பதவியில் இருக்கப் போகிறார். இதனைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டும்' என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.