Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களவர் என்றாலும் தமிழர் என்றாலும் பேய் ஒன்றுதான்

Featured Replies

சிங்கள இனவாதப் பேய் தமிழரை மட்டுமல்ல அவ்வப்போது சிங்களவரையும் அடித்து ஊமைகளாக வைத்திருக்கிறது.


அந்தப் பேய்க்கு பயந்து புலம் பெயர்ந்த ஒரு சிங்களவர் கதை..

 

sunanta.jpg

 

இலங்கை அரசின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்ததற்காக அச்சுறுத்தலுக்கு ஆளான பல பத்திரிகையாளர்கள் சுவிட்சர்லாந்து உள்பட ஐரோப்பாவின் பல நாடுகளில் அரசியல் புகலிடம் பெற்று வாழ்ந்துவருகின்றனர்.

 

ஜெனீவாவில் அரசியல் புகலிடம் பெற்றுவாழும் இலங்கையைச் சேர்ந்த பத்திரிகையாளர் சுனந்த தேசப்பிரிய. இவர் சிங்களர் என்றாலும், இலங்கைத் தமிழர் பிரச்சனை உள்பட பல்வேறு பிரச்சனைகளில் அரசுக்கு முரணான கருத்துக்களை முன்வைத்ததால், அரசிடமிருந்தும் பல்வேறு அமைப்புகளிடமிருந்தும் கடும் அச்சுறுத்தலுக்கு ஆளானார். ஒரு கட்டத்தில் உயிருக்கே ஆபத்து என்ற கட்டம் வந்தபோது, இலங்கையிலிருந்து வெளியேறி, தற்போது சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் வசித்துவருகிறார்.

 

மேலும் அவர் இது குறித்து பேசும் போது, நான் எனது நாட்டிலேயே 2 ஆண்டுகள் தலைமறைவாக வாழவேண்டியிருந்தது. 2009ல் இலங்கை சிவில் சமூகத்தின் சார்பில் ஊடக சுதந்திரம், தமிழ் மக்களின் மனித உரிமை குறித்து ஐ.நாவி்ன் மனித உரிமை கவுன்சிலில் பேசுவதற்காக நான் ஜெனீவாவுக்கு வந்தேன் என்றார். அந்தப் பேச்சு என் நாட்டில் என்னை துரோகியாக சித்தரிக்கவைத்தது. அதனால் திரும்பிப் போக முடியாமல் இங்கேயே தங்க வேண்டியதாயிற்று. என்னுடைய பேச்சு, நடவடிக்கைகளை வைத்து என்னைத் துரோகியாகச் சித்தரித்தது அரசு என கவலைபட தெரிவித்தார்.

 

ஆனால், இது வெறும் சுனந்த தேசப்ரியவின் கதை மட்டுமல்ல. சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த லசந்த விக்ரமதுங்க உள்பட உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை அடைந்ததிலிருந்து இதுவரை இலங்கையில் 18 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

 

2007லிருந்து 2012வரை இலங்கையிலிருந்து 23 பத்திரிகையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி, வேறு நாடுகளில் புகலிடம் பெற்றிருக்கிறார்கள். உலகில் பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான இடங்களில் இலங்கையும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. உயிருக்குப் பயந்து புலம்பெயர்ந்தவர்கள், தங்கள் வாழ்வின் முக்கியமான தருணங்களை இழந்தே வாழ வேண்டியிருக்கிறது.

 

புகலிடம் பெற்று ஐரோப்பாவில் வாழும் வாழ்க்கை என்பது மிகவும் தனிமைமிக்கது. சுனந்த போன்றவர்கள், இலங்கைக்கு அருகில் இருக்கும் ஆசிய நாடுகளிலேயே வசிக்க விரும்பினாலும் அதற்கு வாய்ப்பில்லாத நிலையில்தான் ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் பெறுகிறார்கள்.

 

உயிருக்கு ஆபத்து இல்லை என்ற ஒரே காரணத்திற்காக, உறவுகளைவிட்டு, வெகுதூரத்தில், வேறு ஒரு கலாச்சாரத்தின் நடுவில் வாழும் வாழ்க்கை மிகவும் துயரமானது. இங்கு வசிக்கும் பத்திரிகையாளர்களில் பலர் தங்களுக்குச் சம்பந்தமில்லாத வேலைகளையே செய்து காலம் கழிக்கிறார்கள். என்றாவது ஒரு நாள் தங்களுடைய சொந்த நாட்டிற்குத் திரும்பி, பத்திரிகையாளர்களாகத் தங்களுடையக் கடமையைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை தான் அவர்களை இந்த வாழ்க்கையை சகித்துக்கொள்ள வைக்கிறது.

 

http://www.alaikal.com/news/?p=125663

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.