Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் என்ன நடக்கிறது? கிளிநொச்சியில் இருந்து விக்னேஷ் கண்ணன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பட்டப்பகலில் இலங்கை இராணுவத்தினரும் காவல்துறையினரும் செறிவாக இருக்கக்கூடிய கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் அலுவலகத்தின் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியிருந்தது. இச்சம்பவம் நடந்து ஒரு சில நாட்களின் பின்னர் அதன் தொடர்ச்சியாக கிளிநொச்சியில் உள்ள உதயன் அலுவலகம்மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்மீது தொடங்கப்பட்ட வன்முறை நடவடிக்கைகள் கிளிநொச்சியிலும் தொடரப்படுகிறது. இதனால் கிளிநொச்சி பெரும் அச்ச சூழ்நிலையில் இருக்கிறது.

தமிழர் தேசத்தை மௌனமாக வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டமிட்டு முன்னெடுக்கும் இந்த நடவடிக்கைகள்தான் இன்று தமிழ் மக்களுக்கு எதிராக எத்தகைய அநீதி நடக்கிறது என்பதை உலகத்திற்குத் தெளிவாக காட்டுகிறது. முள்ளிவாய்க்காலில் நிகழ்த்திய போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிராக உலகளவில் இலங்கை அரசுக்கு பலத்த சவால்கள் ஏற்பட்டிருக்கும் இந்த நிலைமையிலும் இந்த நடவடிக்கைகள் தொடரப்படுகின்றன என்றால் அதை என்ன அர்த்ததில் புரிந்து கொள்ள வேண்டும்? என்பதுதான் மிகவும் முக்கியமானதாகும்.

அமைதியாயிருந்த நகரம்

கிளிநொச்சி விடுதலைப் புலிகளின் தலைநகரமாக இருந்தது. அமைதிப்பேச்சு வார்த்தையுடன் இந்த நகரத்திற்கு உலகளவில் ஒரு அமைதி முகம் ஏற்பட்டது. 2002ஆம் ஆண்டின் பின்னர் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் சமாதான ஒப்பந்தம் கைசாத்திடப்பட்ட பின்னர் கிளிநொச்சிக்கு சமாதானத்தின் தூதுவர்கள் பலரும் வந்து சென்றார்கள். சமாதான ஒப்பத்தின் தூதுவராக இயங்கிய நோர்வே அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் முதல் யப்பான் வெளிவிவகார அமைச்சர் யசூசி அக்காசி வரை கிளிநொச்சி மண்ணில் கால் பதித்தார்கள். ஈழப்போர் தொடங்கிய நாட்களிலிருந்து யுத்த முகத்தோடிருந்த கிளிநொச்சி நகரம் சமாதான முகத்துடன் பலரையும் வரவேற்றது.

விடுதலைப் புலிகளின் நிர்வாக ஆளுகையின் கீழ் அங்கு வசித்த மக்களுக்கு கிளிநொச்சி ஒரு அமைதி நகரமாகவே இருந்தது. யாழ்ப்பாணம் உட்பட இராணுவக்கட்டுப்பாடுகளில் இராணுவம் மற்றும் துணை ஆயுதக்குழுக்களினால் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்ட பலரும் கிளிநொச்சியில் வந்து தஞ்சமடைந்தார்கள். 2006ஆம் ஆண்டில் இலங்கை அரசு யுத்தத்தை தொடங்கிய பொழுது கிளிநொச்சிக்கான தரை வழி மார்க்கங்களையும் தடைசெய்து பொருளாதாரத்தடையை ஏற்படுத்திய பொழுதும்கூட அங்குள்ள மக்கள் தம்முடைய வாழ்க்கையை அச்சுறுத்தலின்றி கழித்தனர். இலங்கை அரசின் விமானங்கள் குண்டுகளை கொட்டி வன்னியெங்கும் அழிவுகளை ஏற்படுத்திய பொழுதும்கூட விமானங்கள் நுழையாத பொழுதுகளில் கிளிநொச்சி அமைதியோடுடிருந்தது.

கிளிநொச்சிமீதான போர்

கிளிநொச்சிமீது பல படையெடுப்புக்களை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டது. 1984இல் கிளிநொச்சி இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் வந்தது. பின்னர் 1990இல் புலிகள் கிளிநொச்சியை மீட்டார்கள். மீண்டும் 1996இல் இலங்கை இராணுவம் நடத்திய பெரும் இராணுவ நடவடிக்கையில் கிளிநொச்சி சந்திரிகா அரசாங்கத்தின் இராணுவதத்திடம் வீழந்தது. மீண்டும் 1998இல் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய பெரும் தாக்குதல்மூலம் கிளிநொச்சி விடுதலைப் புலிகளின் வசமானது. 1998 முதல் 2009 வரை கிளிநொச்சி விடுதலைப் புலிகளின் தலைநகரமாக இருந்தது. விடுதலைப் புலிகளின் நிர்வாக அலுவலகங்கள் அங்கு செயற்பட்டன.

2009 ஜனவரி இரண்டாம் நாள் கிளிநொச்சியிலிருந்து விடுதலைப் புலிகள் பின்வாங்கியதைத் தொடர்ந்து கிளிநொச்சியைக் கைப்பற்றியது இராணுவம். 2006ஆம் ஆண்டில் சமாதான ஒப்பந்தம் இருந்த பொழுதே இலங்கை அரசு கிளிநொச்சிமீதான விமானத்தாக்குதல்களை தொடங்கியிருந்தது. வடக்கில் மன்னாரில் ஆரம்பித்த யுத்தம் மெல்ல மெல்ல தீவிரமடைந்து கிளிநொச்சியை சுற்றி வளைத்தது. கிளிநொச்சியில் முறிகண்டி முதல் பூநகரி வரையாக புற நகரில் தொடர்ந்து இடம்பெற்ற நீண்டநாள் சண்டைகளின் பின்னர் கிளிநொச்சி மீண்டும் இலங்கை அரசின் வசமானது.

அழிக்கப்பட்ட கிளிநொச்சி

கிளிநொச்சியில் 2010 ஜனவரி முதல் இலங்கை அரசு மீள்குடியேற்ற நடவடிக்கையை தொடங்கியது. கிளிநொச்சியின் புறநகர் பக்கமாக சண்டை நடந்த பொழும்கூட கிளிநொச்சி நகரம் பெருமளவு அழிவிலிருந்து தப்பித் திருந்தது. ஆனால் மீள்குடியேற மக்கள் நகரத்திற்குத் திரும்பும்பொழுது கிளிநொச்சி நகரம் பேரழிவுக்கு உள்ளான நகரமாகத் தோற்றமளித்தது. கிளிநொச்சியின் அடையாளம் என்பது புலிகள் காலத்தில் கட்டியெழுப்பப்ட்ட நகரத்தின் தோற்றத்தைக் கொண்டிருந்தது. அந்த அடையாளங்கள் இருக்கக்கூடாது என்பதற்காகவே கிளிநொச்சியை இலங்கை இராணுவம் அழித்தது. தமிழப்பெயர்கள் கொண்ட நகரமாக இருந்த கிளிநொச்சியின் தமிழ்ப்பெயர் பலகைகள் பொருத்தப்பட்ட கடைகள் முழுவதும் அழித்து தரைமட்டமாக்கப்பட்டன.

நகரில் இருந்த வீடுகள் கட்டிடங்கள் யாவற்றையும் இலங்கை அரச படைகள் புல்டோசரினால் அழித்துப் போட்டனர். அங்கிருந்த மக்களின் சொத்துக்கள் யாவற்றையும் சூறையாடி இராணுவமுகாங்களையும் இராணுவ வணிக நிறுவனங்களையும் அமைத்தார்கள். இதன் பின்னர் அழிக்கப்பட்ட நகரத்திற்கு மக்கள் மீளத் திரும்புகையில் கையில் இருந்த தறப்பாளைக் கொழுவிக் கொண்டு மீளக்குடியேறினார்கள். 1996ஆம் ஆண்டு படையெடுப்பின் பின்னர் மீளக்குடியேறி கட்டியெழுப்பிய வாழ்வு முழுவதையும் அழித்து துடைத்து திரும்பவும் மக்கள் மீளக்குடியேறினார்கள்.

அரசியல் யுத்தம் தொடக்கம்

கிளிநொச்சியில் கடந்த முப்பது ஆண்டுகளாக தேர்தல் அரசியல் எதுவும் இடம்பெறவில்லை. அங்கு போரும் போராட்டமுமே தொடர்ந்து இடம்பெற்றது. கிளிநொச்சியில் மீள்குடியேற்றம் தொடங்கியவுடன் தேர்தல்களும் அறிவிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து அரசாங்கத்தின் கட்சிகளுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இடையிலான பாரிய அரசியல் யுத்தம் அங்கு நிகழத் தொடங்கியது. 2010ஆம் ஆண்டில் நடந்த பாராளுமன்றத் தேர்தலின் பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சிறிலாங்கா சுகந்திரக்கட்சிக்கும் இடையில் கடும் போட்டி ஏற்பட்டது.

முப்பதாண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் நடக்கும் தேர்தலில் வெல்வதன் மூலம் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தமக்கு ஆதரவு தருகிறார்கள் என்பதைக் காட்டி தமிழ் மக்களுக்கு எதிராக செய்த எல்லா நடவடிக்கைகளையும் நியாயப்படுத்த அரச தரப்பு கடுமையாக முயற்சித்தது. சுகந்திரக்கட்சியின் ஒரு அணி விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட மற்றைய அணி விடுதலைப் புலிகளை எதிர்க்காமல் பிரசாரத்தில் ஈடுபட்டது. மக்களுக்கு உதவிகளை வழங்கி வாக்குகளை அள்ளும் தந்திர அரசியலில் ஈடுபட்டது.

கிளிநொச்சியில் இறங்கிய அணிகள்

இப்பொழுது கிளிநொச்சியை இலக்கு வைத்து இலங்கை அரசின் பல அணிகள் களத்தில் இறங்கியுள்ளன. நாமல் ராஜபச்ச, கீதாஞ்சலி நகுலேஸ்வரன், கே.பி, சந்திரகுமார் மற்றம் டக்கிளஸ் தேவானந்தா முதலிய எல்லோரும் தனித்தனி அணிகளுடன் தனித்தனி அலுவலகங்களை போட்டு களத்தில் இறங்கியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேசப்பொறுப்பாளர் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் செஞ்சோலை போன்ற சிறுவர் இல்லங்களை மீளத் தொடங்கியுள்ளார். கடந்த உள்ளுராட்சித் தேர்தலின் பொழுது கூட்டமைப்பைச் சேர்ந்த பலரை விலைக்கு வாங்க நாமல் ராஜபக்ச கடுமையாக முயன்றார். அதைப்போல அமைதி, அபிவிருத்தி முதலிய வாசகங்களுடன் சந்திரகுமார் எம்.பியும் கிளிநொச்சியில் தலை காட்டுகிறார்.

இவர்கள் எல்லோரது நடவடிக்கைகளும் கூட்டமைப்பிற்கும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராகவே நடக்கிறது. இலங்கை இராணுவத்தின் முழுமையான பாதுகாப்புடனும் இராணுவ ஆதிக்கத்துடனும் இலங்கை அரசின் வடக்கிற்கான கூட்டணி பல்வேறு சூழ்ச்சிகளை செய்து மக்களை திசைதிருப்ப முற்பட்ட பொழுதும் அந்த நடவடிக்கை தொடர்ந்தும் கடும் தோல்வியையே கொடுத்து வருகிறது. இலங்கை அரசாலும் இலங்கை அரச படைகளாலும் இலங்கை அரசின் வடக்கிற்கான கூட்டணிகளாலும் கிளிநொச்சி மக்களின் மனதை வெல்ல முடியாமல் இருக்கிறது.

கூட்டமைப்புக்கு எதிரான நடவடிக்கை

மக்களின் மனதை வெல்ல முடியாதவர்கள் வேறுவழியில் தமது நடவடிக்கையை கிளிநொச்சியில் ஆரம்பித்திருக்கின்றனர். இதன் முதல் நடவடிக்கையாக கிளிநொச்சியில் உள்ள கூட்டமைப்பின் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு சோதனை செய்யப்பட்டது. அங்கிருந்து ஆணுறைகள், குண்டுகள், ஆபாசப்படங்பகளை கைப்பற்றியதாக சொல்லப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் வேழமாலிகிதன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து சிறீதரனுக்கும் அவரது பிரத்யேக செயலாளர் பொன்காந்தனுக்கும் எதிராக கிளிநொச்சியில் ஆர்பாட்டம் ஒன்றை அரச தரப்பால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனைத் தொடரந்து தமிழகம் செல்ல முற்பட்ட பொன்காந்தனை கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இலங்கை குற்றத்தடுப்புப் புலனாய்வுத் துறையினர் கைது செய்தனர்.

எதற்காக இந்த நடவடிக்கைகள்? கிளிநொச்சியில் தமிழ்ப் பெண்களை இராணுவத்தில் இணைத்த பொழுது அவர்களின் அபாய நிலைமை குறித்துப் பேசினார் சிறீதரன். இதுபோன்ற இலங்கை அரசின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு எதிராக சிறீதரன் தொடர்ந்து பேசியும் செயற்பட்டும் வருவது இலங்கை அரசிற்கு தன் அரசியலை செய்ய பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறது. தவிர ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு தனி நாடே தீர்வு என்றும் அவர் பேசினார். அத்துடன் விடுதலைப் புலிகளை ஆதரித்தும் அவர் பேசினார். இவைகளினால் சிறீதரன் மீதான நடவடிக்கையை இலங்கை அரசு ஆரம்பித்தது. தொடர்ந்து பல தடவைகள் நாலாம் மாடிக்கு அழைத்து இலங்கை குற்றத்தடுப்புப் பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டிருக்கிறார்.

கிளிநொச்சியை உலுப்பும் தாக்குதல்கள்?

அண்மையில் கிளிநொச்சியில் உள்ள கூட்டமைப்பு அலுவலகத்தில் எம்.பிக்கள் சிலர் பொது மக்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த பொழுது சிங்கக் கொடியை ஏந்தியபடி வந்த குழு ஒன்று கல் வீசித் தாக்குதல்களை நடத்தியது. இராணுவத்தினரும் காவல்துறையினரும் மிகவும் செறிவாக உள்ள கிளிநொச்சி நகரத்தில்தான் இந்த தாக்குதலை அந்தக் குழு நடத்தியது. அந்தக் குழுவில் வந்திருந்தவர்கள் அனைவரும் போதையில் இருந்தனர். யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் ஐ.நாவுக்கு எதிராக இலங்கை அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் போலவே இந்தப் போராட்டமும் அதே நாட்களில் இடம்பெற்றுள்ளது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து மீண்டும் கிளிநொச்சியில் உள்ள உதயன் பத்திரிகையின் கிளை அலுவலகம்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்தப் பத்திரிகையின் விநோகப் பணிகளை முடக்கும் நோக்கும் தாக்குதல் நடத்தப்பட்டதாக அப்பத்திரிகை தனது செய்தியில் தெரிவித்திருந்தது. உதயன் பத்திரிகை மீதான இந்தத் தொடர் தாக்குதல் கிளிநொச்சியில் இன்னொரு அராஜகமாக நடந்துள்ளது. இதனால் கிளிநொச்சியில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.

மக்கள் எதை உணர்வார்கள்?

இந்த நடவடிக்கைகள் எல்லாமே இலங்கை அரசால் இலங்கை அரச படைகளின் பாதுகாப்பின் மத்தியில் நன்கு திட்டமிட்டுச் செய்யும் நடவடிக்கைகள் என்பதை யாவரும் அறிவார்கள். தமிழ் மக்கள் போரை கைவிட்டு ஜனநாயக வழியில் போராட்டும் என்று சொல்லிக் கொண்டு வந்த இலங்கை அரசின் ஜனநாயக முகம்இதுதான். கிளிநொச்சியில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் மூலம் ஜனநாயக வழியிலான அரசியல் செயற்பாடுகளும் பத்திரிகை செயற்பாடுகளும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருக்கிறது. இந்த இரண்டு செயற்பாடுகளுமே இலங்கை அரசின் அபகரிப்பு நடவடிக்கைகளுக்கு குந்தகமாக உள்ளன. போருக்குப் பின்னர் தமிழ் மக்களை அழித்தொழிக்கும் நடவடிக்கைக்கு எந்தத் தடையும் இருக்கக்கூடாது என்றே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இலங்கை அரசு முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் இழைத்த போர்க்குற்றத்திற்கும் இனப்படுகொலைக்கும் உலகெங்கிலும் இருந்து பரவலான குற்றச்சாட்டுக்களுக்கு முகம் கொடுத்து வருகிறது. அதுவே இலங்கையையின் இனப்பிரச்சினையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய நிலையும் காணப்படுகிறது. இந்த நிலையில்தான் ஜனநாயகத்திற்கு ஒரு துளியளவு இடத்தை வழங்க மறுத்துக்கொண்டு இவ்வாறன தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டபடி நல்லிணக்கம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு. கிளிநொச்சியில் இன்று மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட ஜனநாயக மறுப்பிற்கான வன்முறை நடவடிக்கைகள் பல்வேறு சேதிகளை சொல்லி நிற்கின்றன. மிக முக்கியமாக விடுதலைப் புலிகளின் காலத்து கிளிநொச்சியில் வாழந்துவிட்டு இலங்கை அரச படைகளின் காலத்து கிளிநொச்சியில் வாழும் கிளிநொச்சிப் பிரதேச மக்களுக்கு இந்த தாக்குதல்கள் எதை உணர்த்துகின்றன என்பதே முக்கியமானது.

கிளிநொச்சியில் இருந்து விக்னேஷ் கண்ணன்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/90424/language/ta-IN/article.aspx

 

கிளிநொச்சியில் இறங்கிய அணிகள்

 

 

இப்பொழுது கிளிநொச்சியை இலக்கு வைத்து இலங்கை அரசின் பல அணிகள் களத்தில் இறங்கியுள்ளன. நாமல் ராஜபச்ச, கீதாஞ்சலி நகுலேஸ்வரன், கே.பி, சந்திரகுமார் மற்றம் டக்கிளஸ் தேவானந்தா முதலிய எல்லோரும் தனித்தனி அணிகளுடன் தனித்தனி அலுவலகங்களை போட்டு களத்தில் இறங்கியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேசப்பொறுப்பாளர் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் செஞ்சோலை போன்ற சிறுவர் இல்லங்களை மீளத் தொடங்கியுள்ளார்.

 

 

இன்னும் ஆள முடியாத கிளிநொச்சியும் தமிழினத்தை விற்றே வாழுபவர்களும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.