Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை செல்கிறது இந்திய எம்.பிக்கள் குழு! தமிழக கட்சிகள் புறக்கணிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி: இந்திய எம்.பிக்கள் குழு வரும் 8-ந் தேதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இக்குழுவில் தமிழக அரசியல் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் எவருமே இடம்பெறவில்லை.


இந்திய எம்.பிக்கள் 6 பேர் அடங்கிய குழு வரும் 8-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செளகதா ராய், காங்கிரஸ் கட்சியின் சந்தீப் தீக்ஷித், கெளட் யாஷ்கி, பாரதிய ஜனதாவின் பிரகாஷ் ஜவ்தேகர்,அனுராக் தாகுர், பகுஜன் சமாஜ் கட்சியின் தனஞ்ஜெய் சிங் ஆகியோர் இலங்கை செல்லும் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் இந்திய தொழில் கூட்டமைப்பான பிக்கியின் இரு பிரதிநிதிகளும் இலங்கை செல்கின்றனர்.

 

இலங்கை செல்லும் இந்திய எம்.பி.க்கள் யாழ்ப்பாணத்துக்கும் செல்கின்றனர். அங்கு இந்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்களை அவர்கள் பார்வையிடுகின்றனர். குறிப்பாக இந்திய அரசு வீடு கட்டித் தரும் திட்டத்தை மேற்பார்வையிடுகின்றனர். மேலும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவையும் இந்திய எம்.பி.க்கள் குழு சந்தித்துப் பேசுகிறது.

 

இலங்கையில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலையே... இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கை. ஆனால் இலங்கையுடன் பொருளாதார உறவுகளை மேம்படுத்த தமிழக எம்.பி.க்கள் அல்லாத வட இந்திய எம்.பிக்கள் குழுவை மத்திய அரசு இலங்கைக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

 

இலங்கையின் வாழும் சிங்களவர்கள், இந்திய வம்சாவழியினர் என்று அண்மையில் இந்தியாவுக்கான இலங்கை தூதர் கரியவம்சம் கூறியதைப் போலவே வட இந்திய எம்.பிக்கள் மட்டுமே அடங்கிய முழுவை மத்திய அரசு இலங்கைக்கு அனுப்பியிருக்கிறது என்று தமிழ் உணர்வாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

 

http://tamil.oneindia.in/news/2013/04/06/india-indian-parliamentary-team-visit-sri-lanka-172944.html

  • கருத்துக்கள உறவுகள்

சின்னவன் வெளிட்ட பதிவில் 9ம் திகதி செல்கின்றனர்.


 

உங்களின் பதிவில் 8ம் திகதி முதல் என்றுள்ளது.


 

அவர்கள் 8ம் திகதி வராவிட்டால் பூச்செண்டு வாடிவிடுமே.

.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.