Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனி, வெல்லம் , சர்க்கரை..... அதன் உற்பத்தி நிறுவனக்களின் தகிடு தத்தங்கள்....

Featured Replies

சீனி, சர்க்கரை, வெல்லம்  (sugar) என இப்படி பல பெயர்களில் நாம் அழைக்கும் சுக்குரோஸ், இனிப்பு சுவைக்காக ஒவ்வொருவராலும் நாளாந்த உணவில், மென் பானங்களில் , பழச்சறுகளில் பயன் படுத்தப்படும் ஒரு பதார்த்தம்.

 

புகையிலை, போதை பொருள் போல, சீனியின் இனிப்பு சுவை சிறுவர்களை, பெரியவர்களை அடிமையாக்கும் பொருள்.

 

சீனி உடலுக்கு தேவையான, உடலுக்கு சக்தியை கொடுக்கும் குளுகோஸை தரும் மூலமாக இருந்தாலும், இதன் அளவுக்கு அதிகமான பவனை உடல் நலனுக்கு உகந்தது அல்ல.

 

நாம் உண்ணும் பழங்கள், சில மரக்கறிகள் (பீற்றுட்) ஆகியவற்றில் இது இயற்கையாகவே இருக்கிறது. அதே போல மாச்சத்து உள்ள, தானியங்கள், (அரிசி, கோதுமை) கிழங்கு வகை போன்றவற்றை உண்ணும் பொது மனித உடலின் சமிபாட்டின் முலம் எமது உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கும் குளுகோஸ் கிடைக்கிறது. 

 

எனவே நாம் தொடர்ச்சியாக அதிக அளவு சீனி சேர்க்கபட்ட குளிர்பனங்க்களை (கோக கோல, பெப்சி, மிரண்டா.......) குடிக்கும் பொது நாம் உடலின் தேவைக்கு மிதமிஞ்சி சீனியை உள்ளெடுக்கிறொம்.

 

இப்படி தேவைக்கு அதிமாக உள்ளெடுக்கும் சீனியை  மனித உடல் கொழுப்பாக மாற்றி உடலில் சேமிக்க்கும்.  இது உடல் நிறை அதிகரிப்பு , அதனுடன் சேர்ந்தே வரும், குருதி அழுத்தம், கொலஸ்திரோல், சலரோகம், என பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமையலாம்.

 

 

இந்த விடயங்கள் ஓரளவுக்கு இப்போது பலருக்கும் தெரிந்திருக்கிறது. அத்துடன் அரச சுகாதார நிறுவனங்களும் இவை பற்றிய தகவலகளை மக்களுக்கு கொடுக்கிறான.

 

ஆனால் எந்த நாட்டு அரச நிறுவங்களும் சீனி பாவனையை கட்டுப்படுத்த சொல்லவோ, அல்லது அளவுக்கு அதிகமாக உணவில் சீனியை சேர்க்கும் உணவு, குளிர் பான தயாரிப்பு நிறுவங்களை கட்டுபடுத்தவோ முயலவில்லை.

 

ஒரு சில அரசுகள், நகர சபைகள் முயன்றாலும் அவர்களது முயசிகள் தோல்வியில் முடிவது உண்டு.

 

அதற்கு உதாரணம், ஐக்கிய அமெரிக்காவில், நியு யோர்க் நகர முதல்வர் கொண்டு வந்த மிக பெரிய கொள்கலன்களில் சோடாக்கள் விற்பதன் (16 அவுன்ஸ்= 473 மி.லி.) மீதான தடை வழக்கு மூலம் தோற்கடிக்கபட்டது.

 

http://www.npr.org/blogs/thesalt/2013/03/11/174037195/judge-overturns-new-york-city-ban-on-big-sugary-sodas

 

 

இதற்கு முக்கிய காரணமாக இருப்பது சீனி தயாரிப்பு நிறுவங்களின் நேரடி மற்றும் மறை முக முயற்சி.

 

இதை பற்றி கனேடிய ஒலிபரப்பு கூட்டு தாபனம் தொடரான நிகழ்ச்சிகளை வழங்கி வந்திருக்கிறது. அவற்றை வரிக்கு வரி தமிழாக்கம் செய்ய நீண்ட நேரம் வேண்டும். அதனால் அதன் சிறு பொழிப்பை மட்டும் கொடுத்து , கட்டுரைகளின் இணைப்பை கொடுக்கிறேன். ஆர்வம் உள்ளவர்கள் அந்த இணைப்புகளை சென்று பார்த்து பயன் அடையவும்.

 

 

 

சீனி உடல் நலனுக்கு நல்லதல்ல என சொல்லி வெளியிடப்படும் ஆய்வுகளை மறுதலிக்க சீனி தயரிப்பு நிறுவங்கள் மிக பிரபலமான பல்கலைகழக ஆய்வாளர்களுக்கு ஆய்வு செய்ய பணத்தை கொடுத்து சீனி உடலுக்கு நல்லது, அல்லது சீனி உடலுக்கு கேட்டது என ஆய்வு மூலம் உறுதி செய்ய ப்படவில்லை எனும் தோற்றப்பாட்டை ஏற்படுத்த முயன்று வந்தன, இன்றும் அந்த முயசியில் தொடர்கிறான.

 

அரச சுகாதார நிறுவங்கள் சீனி சாப்பிடும் அளவை வரையறுக்க முயன்ற பொது அந்த முயற்சியை தோற்கடித்துள்ளன. ஏன்  எனில் அவ்வாறு கட்டுப்பாடு கொண்டுவந்தால் சீனி விற்பனை பாதிக்கப்படும்.

 

பத்திரிக்கை/ செய்தி நிறுவங்கள் சீனியின் கேட்ட தன்மை பற்றி செய்தி வெளியிடுவதை தமது செல்வாக்கை பாவித்து நிறுத்தி வருகிறன.

 

Sugar industry's secret documents echo tobacco tactics

Sugar Association's intent to use science to defeat critics uncovered by dentist

http://www.cbc.ca/news/health/story/2013/03/08/f-vp-crowe-big-sugar.html

 

 

 

இன்னுமொரு கட்டுரை எப்படி உணவு நிறுவங்கள் மக்களை குறிப்பிட்ட உணவு வகைகளுக்கு அடிமையாக செய்கிறன என சொல்கிறது.  அதற்கான அவர்கள் செய்யும் ஆய்வுகளை விவரிக்கிறது.

 

Food cravings engineered by industry

How Big Food keeps us eating through a combination of science and marketing

http://www.cbc.ca/news/health/story/2013/03/05/f-vp-crowe-food-addiction.html

 

இந்த உணவு தயாரிப்பு நிறுவங்களின் செல்வாக்குக்கு அண்மையில் பிரபலமான செய்தியாக வந்த pizza is a vegetable எனும் செய்தி உதாரணம்.

 

ஐக்கிய அமெரிக்காவில், (அமெரிக்காவில்) பாடசாலைகளில் மதிய உணவுக்கு பிட்சா கொடுப்பது வழாக்கம்.

 

அமெரிக்காவில் பாடசாலை மாணவர்கள், சிறுவர்களிடையே உடல் நிறை அதிகரிப்பு பெரிய பிரச்சனை. பிட்சா, கொழுப்பு கூடியது, உடல் நலனுக்கு நல்லதல்ல என்பதை காரணம் காட்டியும், மாணவர்களுக்கு மரக்கறி களை  போதுமான அளவில் சாப்பிட செய்யவும், உடல் நலனை கொடுக்கும் உணவை உண்ண செய்யவும் சட்ட திருந்த்தம் கொண்டுவர முயன்றனர். அதற்கு பெரிய பிட்சா  தயாரிப்பு நிறுவங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

 

இப்படியான சட்ட திருத்தம் அவர்களது வியாபரத்தை பாதிக்கும். அவர்களின் வியாபாரத்தில் பெரும் பகுதி பாடசாலை மாணவர்களின் மதிய உணவிற்கு கொடுக்கும் பிட்சாவின் முலம் கிடைக்கிறது.  அதற்கு தெரிவித்த எதிர்ப்பை கருத்தில் கொண்டு அரசு ஒவ்வொரு பிட்சவிலும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் தக்காளி சோஸ்  இருந்தால் அதை மரக்கறி உணவு என் ஏற்று கொள்ளலாம் என மாற்றினர். அதுக்கும் இந்த உணவு தயாரிப்பு நிறுவங்களால் ஏற்று கொள்ள படவில்லை. 

 

இந்த நிறுவனக்களின் அழுத்தத்துக்கு பணிந்து சாதாரண பிட்சாவை மரக்கறி என அரசு அறிவித்து விட்டது. இதனால் இந்த நிறுவனக்களின் வியாபாரம் தடை இன்றி நடக்கிறது.

 

 

 

http://www.nbcnews.com/id/45306416/ns/health-diet_and_nutrition/t/pizza-vegetable-congress-says-yes/#.UWbbJjecFbw

 

 

 

Edited by KULAKADDAN

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.