Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

Featured Replies

ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்கள் மீது காலதாமதமாக முடிவு எடுக்கப்படுவதால் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கவுள்ளது.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை 2011ம் ஆண்டில் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நிராகரித்தார்.

இதையடுத்து இவர்கள் சார்பில் மதிமுக பொதுச் செயலர் வைகோ உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தார்.

இவர்களின் மனுக்களையும் ஏற்கெனவே புல்லர் தாக்கல் செய்த மறுஆய்வு மனுக்களையும் ஒரே கோரிக்கை தொடர்புடைய வழக்காகக் கூறி உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அதனால், இந்த வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்படும்வரை கைதிகளுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இதற்கிடையே, வீரப்பன் கூட்டாளிகள் சைமன், ஞானப்பிரகாஷ், மாதையன், பிலவேந்திரன் ஆகிய நான்கு பேர் உள்ளிட்டோரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த பெப்ரவரி மாதம் நிராகரித்தார். இதையடுத்து இவர்களும் உச்ச நீதிமன்றத்தில் தங்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கக் கூடாது என்று கோரி மறுஆய்வு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

இவர்களின் கோரிக்கை புல்லர் விடுத்த கோரிக்கைக்கு ஒத்து இருப்பதால் அதன் தீர்ப்பு வெளியாகும்வரை வீரப்பன் கூட்டாளிகள் நால்வருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் ஆறு வாரங்கள் தடை விதித்தது.

இந்த நிலையில் தேவேந்தர் பால்சிங் புல்லரின் மறுஆய்வு மனுவை விசாரித்திருந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, குரியன் ஜோசஃப் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கவுள்ளது.

இந்தத் தீர்ப்பு, ராஜீவ் காந்தி கொலையாளிகள், சந்தனக் கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் நான்கு பேர் ஆகியோரின் மறுஆய்வு கோரிக்கைக்கும் பொருந்தும் என்பதால் உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து மாநிலங்களில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் பட்டியல், நிலுவையில் உள்ள கருணை மனுக்களின் விவரம், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு ஆகியவற்றை நீதிமன்ற உத்தரவின்படி மத்திய, மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தன.

அதைத் தொடர்ந்து, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சார்பில் "சிறையில் நீண்ட காலத்தைக் கழித்து விட்டதால் 3 பேருக்கும் தூக்குத் தண்டனை அளிக்க கூடாது'' என்று உச்ச நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலர் வைகோ வழக்கு தொடர்ந்தார்.

ராஜீவ் கொலையாளிகளுக்கு ஆதரவாக மூத்த வழக்குரைஞர் ராம்ஜேத்மலானி ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கின் வாதம் கடந்த மாதம் 19ம் தேதி முடிவுற்று, புல்லர் வழக்குடன் சேர்த்து தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று கோரி முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும்  தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று  வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கவுள்ளது.

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13954:rajiv-gandhi-attack&catid=36:tamilnadu&Itemid=102

 

  • கருத்துக்கள உறவுகள்

கொடிய விலங்குகளைக் கொண்ட காட்டில் மான்களும் வாழ்ந்து இயற்கை மரணம் அடைவதுண்டு. கொடிய அரசியல்வாதிகளை இன்று கொண்ட இந்தியாவிலும் அப்படி நடக்கலாம்.

 

 

 

'மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற முடியாது'

 

தனது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு கைதியொருவர் விடுத்த வேண்டுகோளை இந்திய உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தில்லியில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் தேவிந்தர் பால் சிங் புல்லர் கைதுசெய்யப்பட்டார். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் 9 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட தேவிந்தர் பால் சிங் புல்லர் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்துவிட்டதால் அவருக்கு மரண தண்டனை அளிப்பது நியாயமில்லை என்று அவரது வழக்குரைஞர்கள் வாதிட்டனர். ஆனால் அந்த வாதத்தை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

ராஜீவ் கொலைக் குற்றவாளிகள், வீரப்பன் கூட்டாளிகள்.

ஏற்கனவே கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள 17 பேர் இந்தியச் சிறைகளில் உள்ளனர்.

அண்மைக்காலம் வரை இந்தியாவில் மரண தண்டனை நிறைவேற்றுவது மிகவும் அரிதாகவே நடந்துவந்தது. எனினும் 8- ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் கடந்த நவம்பரில் இருந்து இந்தியா மரண தண்டனைகளை நிறைவேற்றத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மூன்று பேருக்கும் கண்ணிவெடித் தாக்குதல் தொடர்பில் வீரப்பன் கூட்டாளிகள் நால்வருக்கும் மரண தண்டனை அளிக்கப்பட்டன. இவர்களின் தண்டனைகள் நீதிமன்ற உத்தரவினால் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.bbc.co.uk/tamil/india/2013/04/130412_indiadeath.shtml

 

தூக்கு தண்டனை எதிர்நோக்கும் மூன்று தமிழரை காப்பாற்ற தமிழக அரசுக்கு கோரிக்கை.

 

1365766181.jpg

 

புல்லார் வழக்குத் தீர்ப்பு மூன்று தமிழரையும் பாதிக்கும்  பேரறிவாளன் முருகன் சாந்தன் மரண தண்டனையை  அரசமைப்பு விதி 161 ன் படி தமிழக அரசே இரத்து  செய்க !

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கீழ்க்கண்டவாறு அறிக்கை விடுத்துள்ளது!

தேவேந்திர பால் சிங் புல்லார் வழக்கில் அவரது கருணை மனு நிராகரிப்பை ஏற்றுக் கொண்டு அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது.

நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்க்வி, எஸ்.ஜெ. முகபாத்தியாயா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றப் பிரிவு 12-04-2013 அன்று அளித்துள்ள இத்தீர்ப்பு சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமையையும் குறித்து அக்கறைப்படு வோரிடையே   பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இத் தீர்ப்பு பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகிய மூவர் கருணை மனு நிராகரிப்பு குறித்த வழக்கில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் தமிழர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இராசிவ் காந்தி கொலைவழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகிய மூன்று தமிழர் தொடர்பான கருணை மனுவை இந்தியக் குடியரசுத் தலைவர் நிராகரித்து 11-08-2011 அன்று ஆணையிட்டார். இம் மூவரைத் தூக்கிலிடுவதற்கான நாளும் குறிக்கப்பட்டது. இந்நிலையில் இம் மூன்று தமிழர் உயிர் காக்க தமிழகமே போர்க் கோலம்பூண்டது. குமரி முதல் கும்முடிப்பூண்டி வரை பேரெழுச்சியான போராட்டங்கள் நடை பெற்றன. இப் போராட்டங்களின் உச்சமாக காஞ்சி மக்கள் மன்றத் தோழர் செங்கொடி 28-08-2011 அன்று தீக்குளித்து உயிரீகம் செய்தார்.

இச் சூழலில் 30-08-2011 அன்று இது குறித்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இத்தடை ஆணை பிறப்பிக்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் தமிழக முதலமைச்சர் முன்மொழிய, தமிழக சட்ட மன்றம் இம் மூவர் தூக்கு தண்டணையை இரத்து செய்ய வலியுறுத்தி வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் ஒன்றை இயற்றியது. ஆனால், இவ்வழக்கில் எவ்விதத் தொடர்புமில்லாத எல்.கே.வெங்கட் என்பவர் அளித்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இம் மூவர் மரணதண்டனைகுறித்த வழக்கை தன் விருப்பமாக (suo mato) உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றிக் கொண்டது. அரசமைப்புச் சட்ட விதி 139 (A) (1) க்குப் பொருந்தாதக் காரணங்களைக் குறிப்பிட்டு நீதிபதிகள் சிங்க்வி , முகப்பாத்தியாயா ஆகியோர் இவ்வழக்கை தங்கள் விசாரணைக்கு மாற்றிக் கொண்டனர்.

“கருணை மனு அளித்து மிக நீண்டகாலத்துக்குப் பிறகு அதனைக் குடியரசுத் தலைவர் நிராகரித்தது சட்டவிரோதமானது என்ற நிலைப்பாட்டை தேவேந்திர பால் சிங்புல்லார் வழக்கிலும், மகேந்திரநாத் தாஸ் வழக்கிலும் முன் வைத்தது போலவே இவ்வழக்கிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது. பெரிதும் ஒத்தத் தன்மையுள்ள சிக்கல்கள் விவாதிக்கப்படுவதால் இவற்றை ஒன்றிணைத்து விசாரித்து முடிவு செய்வது பொருத்தமாக இருக்குமென இந் நீதிமன்றம் கருதுகிறது “என இம் முடிவுக்கு காரணமும் கூறப்பட்டது.

இந்நிலையில் புல்லார் வழக்கில் "கருணை மனு அளித்து மிக நீண்டகாலத்துக்குப் பிறகு அதனைக் குடியரசுத் தலைவர் நிராகரித்தது சட்டவிரோதமானது'' என்ற வாதத்தை நிராகரித்த உச்ச நீதிமன்றப் பிரிவு புல்லார் மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துவிட்டது.

 

புல்லார் வழக்கும் பேரறிவாளன் முருகன் சாந்தன் வழக்கும், பெரிதும் ஒத்தத் தன்மையானவை என இதே   நீதிமன்றம் வரையறுத்துவிட்டதால் புல்லார் வழக்கில் தீர்ப்புரைத்தது போலவே மூன்று தமிழர் வழக்கிலும் மரணதண்டனையை உறுதிசெய்து தீர்ப்புரைக்கும் ஆபத்து உண்டு.

இந்நிலையில் இம் மூன்றுதமிழர் உயிர் காக்க இப்போது இருக்கிற முதன்மையான வாய்ப்பு தமிழக அரசின் கைகளில்தான் இருக்கிறது. அரசமைப்புச் சட்டவிதி 161-ன் படி தமிழக அமைச்சரவை முடிவு செய்து மாநில ஆளுனர் வழியாக பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகியோரது தூக்குதண்டனையை இரத்து செய்ய வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

30-08-2012 அன்று தமிழக  சட்ட மன்றத்தில் முதலைமைச்சர் மாண்புமிகு ஜெ. ஜெயலலிதா அவர்கள் முன் மொழிந்து ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மூன்றுத் தமிழர் உயிர் காக்கும் தீர்மானத்துக்கு உயிர் கொடுப்பதாகவும் இது அமையும் என சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

உச்ச நீதிமன்றத்தின் இப்போதைய தீர்ப்புரையோ, அரசமைப்புச் சட்டவிதி 257 (1) ன் படியான இந்திய அரசின் ஆணைகளோ குறுக்கிட வாய்ப்பில்லாத அதிகாரமே 161-ன் படியான ஆளுநரின் அதிகாரம் ஆகும். அரசமைப்புச் சட்ட விதி 257 இந்திய ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையில் உள்ள நிர்வாக உறவுகளைப்பற்றிப் பேசுகிறது. இதற்கும் விதி 161 ன் படியான ஆளுநரின் தண்டனைக் குறைப்பு அதிகாரத்திற்கும் தொடர்பேதும் கிடையாது. 161 என்பது தனித்த அதிகாரமுள்ள விதியாகும்.

மன்னிப்பு வழங்கும் ஆளுநரின் இந்த அதிகாரமோ, இந்திய தண்டனை சட்டவிதி 54 மற்றும் குற்றவியல் நடைமுறை சட்ட விதி 433 ஆகியவற்றின் படியான மாநில அரசின் தண்டனைக் குறைப்பு அதிகாரமோ, கட்டற்றவை ஆகும்.

எனவே, தமிழக முதலைமைச்சர் அரசமைப்புச் சட்ட விதி 161 ன் படி பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகிய மூன்று தமிழர்களின் துக்குதண்டனையை இரத்து செய்து ஆணை பிறப்பித்து தமிழ் நாட்டுமக்களின் பெருவிருப்பத்தை நிறைவேற்றித்தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

 

தோழமையுடன்,
கி. வெங்கட்ராமன், பொதுச்செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

 

http://www.newsalai.com/details/TDPK-part-appeal-to-TN-chief-minister-to-stop-hanging-of-three-tamils.html#.UWiHiEqC9S1

 

 

April 12, 2013

 

ராஜிவ் வழக்கு- 3 தமிழரை ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியும்: பழ. நெடுமாறன் நம்பிக்கை.

 

12-nedumaran300.jpg

 

 

 

சென்னை: ராஜிவ் வழக்கில் 3 தமிழரின் தூக்கு தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றம் என்ன மாதிரியான தீர்ப்பளித்தாலும் மூவரையும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தாம் அனுப்பிய கருணை மனுவை தாமதமாக குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார். இதனால் தமது தூக்கை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்பது 1993-ஆம் ஆண்டு 9 பேர் பலியான குண்டு வெடிப்பில் சிக்கிய பஞ்சாப்பை சேர்ந்த புல்லரின் கோரிக்கை. இவரது கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம் கருணை மனுவை தாமதமாக நிராகரிப்பதை ஒரு காரணமாக ஏற்று தூக்கை குறைக்க முடியாது என்று தீர்ப்பளித்தது.

 

இதே புல்லர் வழக்குடன் சேர்த்துதான் ராஜிவ் வழக்கில் 3 தமிழர்களின் மனுவும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போதைய தீர்ப்பின் தாக்கம் அந்த வழக்கின் தீர்ப்பிலும் இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

 

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன், தற்போதைய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் தாக்கம் மூன்று தமிழர் வழக்கின் தீர்ப்பிலும் நிச்சயமாக இருக்கும் .அதில் சந்தேகம் இல்லை. ஆனால் உச்சநீதிமன்றம் என்னமாதிரியான தீர்ப்பு அளித்தாலும் அதிலிருந்து மூவரையும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியும். மூன்று தமிழருக்கும் கருணை காட்ட வேண்டும் என்று ஏற்கெனவே தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் என்ன மாதிரியான தீர்ப்பு அளிக்கப்பட்டாலும் கூட தமிழக சட்டசபை தீர்மானத்தின் அடிப்படையில் மூவரையும் முதல்வர் ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியும் என்றார்.
 

http://tamil.oneindia.in/news/2013/04/12/tamilnadu-jaya-will-save-3-tamils-life-rajiv-case-173353.html

 

புல்லர் வழக்கின் தீர்ப்பு 3 தமிழர் வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தாது: பேரறிவாளன் தாயார் நம்பிக்கை!

 

சென்னை: புல்லர் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தமது மகனின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று ராஜிவ் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

புல்லர் வழக்கு தீர்ப்பு .

 

1993ஆம் ஆண்டு டெல்லி குண்டு வெடிப்பு வழக்கில் பஞ்சாப்பைச் சேர்ந்த புல்லருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர் 2003-ம் ஆண்டு குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை அனுப்பியிருந்தார். அந்த மனு 2011ஆம் ஆண்டு நிராகரிக்கப்பட்டது. 8 ஆண்டுகாலம் கழித்து தமது கருணை மனு நிராகரிக்கப்பட்டதால் தமது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இம்மனுவை நேற்று நிராகரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிங்வி, முகோபாத்யா பெஞ்ச், குடியரசுத் தலைவர் காலதாமதமாக கருணை மனுவை நிராகரித்தார் என்பதற்காக தூக்கு தண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைக்க முடியாது என்று கூறி புல்லர் மனுவை நிராகரித்தார்.

 

7 தமிழர் வழக்கு.

 

இந்நிலையில் ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு விதிக்கப்பட்ட முருகன், சாந்தன் பேரறிவாளன் உள்ளிட்ட 3 தமிழர்களும் தங்களது கருணை மனுவை 11 ஆண்டுகாலம் கழித்து குடியரசுத் தலைவர் நிராகரித்ததால் தங்களது தூக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனு மீதும் இதே நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் விசாரணை நடத்த உள்ளது. இதனால் புல்லர் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு 3 தமிழர் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பிலும் தாக்கம் ஏற்படுத்தக் கூடும் என்று கருதப்படுகிறது. மேலும் பாலாறு குண்டுவெடிப்பு வழக்கில் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் தங்களுக்கு விதிக்கபட்ட தூக்கை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான விசாரணையிலும் புல்லர் வழக்கின் தீர்ப்பு எதிரொலிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

 

அற்புதம் அம்மாள் நம்பிக்கை.

 

இந்நிலையில் ராஜிவ் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், உச்சநீதிமன்றத்தில் புல்லர் வழக்கில் அவருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது பயத்தையும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் புல்லர் வழக்கு வேறு. என் மகன் மீதான வழக்கு வேறு. புல்லர் வழக்கின் தீர்ப்பு என் மகன் வழக்கில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என நம்புகிறேன். வழக்கறிஞர்கள் எங்களுக்கு நம்பிக்கையான தகவல்களையே தந்து வருகின்றனர். நாங்கள் மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறோம். உலக நாடுகள் தூக்கு தண்டனைக்கு தடை விதித்துள்ள நிலையில், அகிம்சாவாதியான காந்தியடிகள் பிறந்த இந்தியாவில் தடை விதிக்காதது வேதனையளிக்கிறது. தமிழகத்திலேயாவது தூக்கு தண்டனையை ஒழிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை மேற்கொண்டு, இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக ஆக்க வேண்டும். சட்டசபையைக் கூட்டி தூக்கு தண்டனையை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரிடம் மனு அளித்து என் மகனை தன்னிடம் ஒப்படைக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

 

http://tamil.oneindia.in/news/2013/04/13/tamilnadu-rajiv-assassin-s-mother-confident-supreme-court-verdict-173397.html

 

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

மூவரின் உயிரைக் காக்க முதல்வருக்கு மதிமுக கோரிக்கை.

 

13-vaiko99-600.jpg

 

 

சென்னை: தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையை ரத்து செய்து மூன்று தமிழர்களின் உயிர்களை காக்கவேண்டும் என்று தமிழக முதல்வருக்கு மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில், நடைபெற்ற இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
 

உச்ச நீதிமன்றம் தேவேந்திரபால் சிங் புல்லர் மரண தண்டனையை உறுதிபடுத்தி தந்த தீர்ப்பு மனித உரிமை ஆர்வலர்களைப் பேரிடியாகத் தாக்கி உள்ளது. திருப்பெரும்புதூர் கொலை சம்பவத்தில் துளி அளவும் தொடர்பு இல்லாத நிரபராதிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரையும் காவல்துறை துன்புறுத்திப் பெற்ற நீதிக்குப் புறம்பான ஒப்புதல் வாக்குமூலத்தைக் கொண்டு தடா நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

 

மரண தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் இந்திய அரசியல் சட்டம் 72-ஆவது பிரிவின்படி இந்தியக் குடியரசுத் தலைவருக்கும், இந்திய அரசியல் சட்டம் 161-ஆவது பிரிவின்படி மாநில ஆளுநருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் சட்டம் 72-ஆவது பிரிவின்படி குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரம், 161-ஆவது பிரிவின்படி மாநில ஆளுநரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தாது என்று அரசியல் சட்டத்தில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 

இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழக அரசு இந்தப் பிரச்சினையில் ஏற்கனவே சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும் கருத்தில் கொண்டு மாண்புமிகு முதல்வர் தமிழக அமைச்சரவையைக் கூட்டி அதில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைப்பதற்கு முடிவெடுத்து மாநில ஆளுநர் மூலம் இந்த மனிதநேய முடிவைச் செயல்படுத்தி பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் உயிர்களையும் காப்பாற்ற வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

 

சென்னையில் பொதுக்கூட்டம்.

 

பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவர் உயிரைக் காப்பாற்ற ஏப்ரல் 30-ஆம் தேதி தலைநகர் சென்னையில் மூன்று தமிழர் உயிர்காக்கும் இயக்கத்தின் சார்பில் மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது எனவும், அதற்கான ஆக்கப் பணிகளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் செய்வதென்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.

 

http://tamil.oneindia.in/news/2013/04/13/tamilnadu-mdmk-resolution-save-3-tamils-173407.html

 

Edited by துளசி

3 பேரின் தூக்கு தண்டனையை மாற்ற அரசு தீர்மானம் நிறைவேற்றுக: கருணாநிதி.

 

13-karunanidhi-speech-300.jpg

 

 

சென்னை: ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் முருகன், சாந்தன் பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்குத் தண்டனையை மாற்ற விதிமுறைப்படி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்" என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

 

இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

 

புல்லர் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. தூக்குத் தண்டனையை அறவே ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே தி.மு.க நிலைப்பாடு.

 

எனவே முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கை மாற்ற தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அந்த தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பி 3 பேரையும் விடுவிக்க ஆவண செய்ய வேண்டும்.

 

மேலும் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரை தொடர்ந்து சிறையில் வைக்காமல் விடுவிக்க வேண்டும் என்றும் கருணாநிதி தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

 

தமிழ் தேசிய பொது உடமைக் கட்சி .

 

இதேபோல் மூவரின் மரணத் தண்டனையை தமிழக அரசே ரத்து செய்ய வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

 

புல்லர் வழக்கும், பேரறிவாளன், முருகன், சாந்தன் வழக்கும், பெரிதும் ஒத்தத்தன்மையானவை என இதே நீதிமன்றம் வரையறுத்துவிட்டால், புல்லர் வழக்கில் தீர்ப்புரைத்தது போலவே உச்ச நீதிமன்றம் மூவர் வழக்கிலும் மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்புரைக்கும் ஆபத்து உண்டு.

 

எனவே அரசமைப்பு சட்டவிதி 161-ன்படி தமிழக அமைச்சரவை முடிவு செய்து, மாநில ஆளுநர் மூலமாக பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ் தேசிய பொது உடமைக் கட்சியின் செயலாளர் கி.வெங்கட்ராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

http://tamil.oneindia.in/news/2013/04/13/tamilnadu-tn-govt-should-adopt-resolution-support-rajiv-assassins-173408.html

 

3 தமிழர்களை காக்க அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேறுக : ராமதாஸ்.
 

சென்னை: 3 தமிழர்களை காக்க அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

 

டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தேவிந்தர் பால் சிங் புல்லார் என்பவர் தமது கருணை மனுவை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்ததை எதிர்த்து தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்தும் தீர்ப்பளித்திருக்கிறது.

 

தூக்கு தண்டனையை ரத்து செய்யும்படி தாம் தாக்கல் செய்த கருணை மனுவை 8 ஆண்டுகள் கழித்து தள்ளுபடி செய்தது தவறு என்றும், 8 ஆண்டுகளுக்கும் மேலாக தூக்குக்கயிற்றின் நிழலில் சிறையில் கடும் வேதனையையும், மன உளைச்சலையும் அனுபவித்த தமக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது இயற்கை நீதிக்கு எதிரானது என்றும் கூறித் தான் புல்லார் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

ஆனால், கருணை மனு மீது முடிவெடுப்பதில் கால தாமதம் செய்யப்பட்டதை கருத்தில் கொள்ளாமலேயே உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இத்தீர்ப்பு கடும் அதிர்ச்சி அளிக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தவறு என்றும், கருணை மனு மீது முடிவெடுப்பதில் செய்யப்பட்ட கால தாமதத்தை நீதிபதிகள் கருத்தில் கொண்டிருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.எஸ். சோதி உள்ளிட்ட சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

புல்லாரின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பதால், அதே காரணத்தின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூன்று தமிழர்களின் மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்யும் ஆபத்துள்ளது.

 

பாலாறு குண்டு வெடிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 பேர், தருமபுரி பேரூந்து எரிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட மூவர் ஆகியோர் தொடர்புடைய வழக்கிலும் இந்தத் தீர்ப்பு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த நிலையில் மூன்று தமிழர்களின் உயிரை காப்பாற்றுவது தமிழக அரசின் கைகளில் தான் உள்ளது.

 

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி கடந்த 2011-ஆம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதேபோன்று அரசியல் சட்டத்தின் 161- வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி மூவரின் தூக்கு தண்டனையை தமிழக ஆளுனர் ரத்து செய்ய வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றுவதன் மூலம் 3 தமிழர்களையும் காப்பாற்ற முடியும்.

 

அரசியல் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி மூவரின் தூக்கு தண்டனையை தமிழக ஆளுனர் ரத்து செய்யும் பட்சத்தில் அதில் யாரும் தலையிட முடியாது.

 

எனவே, தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக அமைச்சரவையை கூட்டி , தீர்மானத்தை நிறைவேற்றி பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று தமிழர்களின் உயிரையும் காப்பாற்ற வேண்டும்.

 

அதுமட்டுமின்றி, உலகில் சுமார் 125 நாடுகளில் தூக்கு தண்டனை ஒழிக்கப்பட்டு விட்ட நிலையில், அந்த நாடுகளை பின்பற்றி இந்தியாவிலும் தூக்கு தண்டனையை ஒழிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் ‘ எனத் தெரிவித்துள்ளார்.

 

http://tamil.oneindia.in/news/2013/04/13/tamilnadu-cabinet-should-pass-resolution-prevent-hanging-173387.html

 

நம்மவர்கள் விடுதலை பெறவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை ஆனால் இரட்டைவேடம் போடும் இவர்களை என்னவென்று சொல்வது.

 

 

 

603932_487984224590483_1185297833_n.jpg

 

 

(முகநூல்)

 

புல்லருக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை தீர்ப்பை கண்டித்து அவரை விடுதலை செய்யுமாறு கோரி இன்று (21.04.2013) தமிழர்கள் மேற்கொண்ட ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம்.

 

430525_4407637882741_371159666_n.jpg

 

64417_4407637322727_1929987885_n.jpg

 

165432_4407637922742_425566558_n.jpg

 

68589_4407636682711_1120038506_n.jpg

 

311068_4407639082771_224512711_n.jpg

 

603862_4407635282676_365067106_n.jpg

 

(முகநூல்)

  • 2 weeks later...

பேரறிவாளன், முருகன், சாந்தன் விடுதலைக்கு குரல் கொடுப்போம். அவர்கள் தூக்கு தண்டனையை ரத்து செய்ய சட்ட பிரிவு 161 ஐ பயன்படுத்த வேண்டும் என்று மாநில அரசை வலியுறுத்துவோம்.

 

912847_531296076916162_1247058450_n.jpg?

 

(முகநூல்)

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.