Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலேசியாவில் மே 5 ஆம் தேதி பொதுத் தேர்தல்

Featured Replies

10 ஏப்ரல், 2013

 

மலேசியாவில் எதிர்வரும் மே மாதம் 5 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த மாதம் நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர் நஜீப் நடவடிக்கை எடுத்ததை அடுத்து அங்கு அடுத்த பொதுத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் தொடங்கின.

மலேசியா அரை நூற்றாண்டுக்கு முன்னர் சுதந்திரம் அடைந்த பிறகு மிகவும் கடும் போட்டியை ஏற்படுத்தக் கூடியத் தேர்தலாக இது இருக்கும் என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

ஆளும் தரப்பு, முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தலைமையிலான எதிர்கட்சிக் கூட்டணியிடமிருந்து கடுமையான சவாலை எதிர்கொள்கிறது.

அடுத்த பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் முறைப்படி ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி தொடங்குகிறது.

கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆளும் தேசிய முன்னணி முதல் முறையாக நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்தது.

அன்வர் இப்ராஹிம் அவர்கள் நஜீப் ரசாக் அவர்களுக்கு முன்னர் பிரதமராக இருந்த மஹாத்திர் முகமது அவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆறு வருடங்கள் சிறையில் இருக்கும் நிலை ஏற்பட்டது.

அரசியல் ரீதியாக தன்மீது முன்னெடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் என்று அன்வர் இப்ராஹிம் கூறுபவற்றை எதிர்கொள்வதிலேயே அவர் கடந்த 15 ஆண்டுகளில் பெரும் பகுதியை கழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

http://www.bbc.co.uk/tamil/global/2013/04/130410_malaysia_elexndate.shtml

 

  • தொடங்கியவர்

11 ஏப்ரல், 2013

 

இந்திய வம்சாவளியினரின் வாக்குகளை குறி வைக்கும் மலேசிய கட்சிகள்.

 

மலேசியாவில் எதிர்வரும் மே மாதம் 5 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தேர்தல் இது என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருக்கும் ஐக்கிய மலாய் தேசிய அமைப்பான அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி ஒரு புறமும், முதல் முறையாக பல எதிர்கட்சிகள் இணைந்து அமைத்துள்ள மக்கள் கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மலேசிய இந்திய காங்கிரஸ் அளும் தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கிறது.

ஆனால் அண்மைக் காலமாக இந்திய வம்சாவளி மக்களின் நலன்களை முன்னெடுத்து வருவதாகக் கூறும் ஹிண்ட்ராஃப் அமைப்பு இத்தேர்தலில் தமது நிலைப்பாடு என்ன என்பதை இதுவரை அறிவிக்கவில்லை.

அங்கு நடைபெறவுள்ள 13 ஆவது பொதுத் தேர்தல், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சவாலான ஒன்றாக அமைகிறது என்று கூறுகிறார் மக்கள் ஓசை நாளிதழின் முதன்மை ஆசிரியர் ராஜன்.

மே மாதம் 5 ஆம் தேதி, 222 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், 13 மாநில சட்ட மன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், மலேசிய அரசியல் வரலாற்றில் முதல் முறையாக எதிர்கட்சி ஐந்து மாநில சட்டமன்றங்களை கைப்பற்றிது. இம்முறை அது அதிகரிக்கும் என்று எதிர்கட்சிகள் கூறியுள்ளன.

நடைபெறவுள்ள தேர்தலில் எந்தக் கூட்டணி ஆட்சியை அமைக்கும் எனும் முடிவை நிர்ணயிக்கும் சக்தியாக இந்திய வம்சாவளி மக்கள் இருப்பார்கள் எனவும் ராஜன் கூறுகிறார்.

பிரதமர் நஜீப் ரசாக் தலைமையிலான ஆளும் கூட்டணியில் 13 கட்சிகளும், முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தலைமையிலான எதிர்கட்சி கூட்டணியில் மூன்று கட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

மலேசியாவில் 18 லட்சம் இந்திய வம்சாவளி மக்கள் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மக்களின் வாக்குகளை நாடி இரண்டு கூட்டணிகளும் களத்தில் இறங்கியுள்ளன.

பெரும்பாலானத் தொகுதிகளில் முடிவை தீர்மானிக்கும் சக்தியாக சிறுபான்மை இந்தியர்கள் இருக்கிறார்கள் என்கிறார் ராஜன்.

ஆளும் தேசியக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களுக்கான பொருளாதார சொத்துடமையை மூன்று விழுக்காடு வரை உயர்த்துவது, கார்களின் விலையை குறைப்பது, பொதுமக்களுக்கு கூடுதல் வீட்டுவசதி ஆகியவை உட்பட பல அம்சங்களை தமது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அன்வர் இப்ராஹிம் தலைமையிலான மக்கள் கூட்டணி பாலர் பள்ளி முதல் பல்கலைகழகம் வரை இலவசக் கல்வி, மலேசியாவில் பிறந்த அனைவருக்கும் குடியுரிமை போன்ற விஷயங்களை தமது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளனர்.

 

 

மலேசிய நாடாளுமன்றம்

 

121128165414_malaysia_parliament_304x171

 

 

தற்போதைய பிரதமர் நஜீப் ரசாக்

 

130403142136_najib_election_304x171_reut

 

 

மக்கள் கூட்டணியின் தலைவர் அன்வர் இப்ராஹிம்.

 

120106094016_anwar_ibrahim_malaysia_304x

 

http://www.bbc.co.uk/tamil/global/2013/04/130411_malaysia_elexn_scenario.shtml

 

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.