Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புற்று நோய்கள் கறும வியாதியல்ல தடுக்கக் கூடியவைதான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கறும வியாதியல்ல தடுக்கக் கூடியதுதான் புற்று நோய்கள்.

வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? 

cancer_prevention.jpg
எந்ந நோய்க்குப் பயப்படாதவனும் புற்று நோயென்றால் கதிகலங்கவே செய்வான். அந்நோயால் பாதிக்கட்டவர்கள் படும் அவஸ்தையைக் கண்டும் கேட்டும் ஏற்படும் பயம் அவ்வளவு வலுவானது.

 header.jpg

புற்றுநோய் என ஒருமையில் சொன்னாலும் அது பல்வேறு வகைப்பட்டது. தோன்றக் கூடிய ஒவ்வொரு உறுப்பு மற்றும் திசுக்களுக்கு ஏற்ப அது பலநூறு வகைப்படும்.

images.jpg

ஆனால் இப்பொழுது புற்றுநோய்களுக்கு நல்ல சிகிச்சை வந்துள்ளன. ஓரளவு ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தால் பூரணமாகக் குணமாக்க முடியும். நோய் முற்றியவர்களும் வலி வேதனையின்றி வாழக் கூடியவகையில் சிகிச்சைகள் நல்ல முறையில் வழங்கப்படுகின்றன.

IntegrativeCancerTherapy620.gif

 

இது கறுமநோயல்ல. ஒரு சில பரம்பரையில் வரக் கூடியவை. ஆயினும் பெரும்பாலானவை எமது தவறான வாழ்க்கை முறைகளாலும், சுற்றுச் சூழல் மாசுறுவதாலும் ஏற்படுகின்றன. எனவே இந் நோய் வராமல் தடுப்பது சாத்தியமானதே.

National Foundation for Cancer Research   என்ற புற்றுநோய் தொடர்பான அமெரிக்க ஆய்வு நிறுவனமானது இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு ஒவ்வொருவரும் தமது உணவு மற்றும் வாழ்ககை முறைகளில் செய்ய வேண்டியவற்றை அது சொல்கிறது.

  1. உணவில் காய்கறிகளையும் பழவகைகளையும் அதிகளவு சேருங்கள். இறைச்சி வகைகளை குறைந்தளவில் உண்ணுங்கள். நிறமுள்ள காய் காய்கள் பழவகைகளில் உள்ள ஒட்சிசன் எதிரிகள்(antioxidants) புற்றுநோய்க்கு எதிராகப் போராடக் கூடியவை. இறைச்சி வகைகளில் Turkey நல்லது. ஆயினும் கொழுப்பின் அளவைக் குறைக்க அதன் தோற்பகுதியை அகற்றுங்கள்.
  2. தொடர்ச்சியாக மதுபானம் அருந்துவதானது புற்றுநோய்கள் வருவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்துடன் மதுவகைகளில் உள்ள கலோரி அளவு மிக அதிகமாகும். எனவே மதுவவைத் தவிர்ப்பது நல்லது. ஆண்கள் மதுவின் அளவை ஒரு நாளைக்கு 2 டிரிங்கிற்கு மேற்பட விடக் கூடாது.
    Alcohol-causes-cancer.-Unfortunately-it-
    பெண்களில் மார்புப் புற்றுநோய் வருவதற்கு மது ஒரு காரணம் என அறியப்பட்டுள்ளது. எனவே பெண்கள் வாரத்திற்;கு 3 டிரங்கிற்கு மேல் அருந்தக் கூடாது. குடியாதவர்கள் குடியுங்கள் என அர்த்தப்படாது.
  3. கீரை, பசளி, பொன்னாங்காணி போன்ற எல்லா பச்சை இலை வகைகளுக்கும் முதலிடம் கொடுங்கள். தினமும் ஏதாவது ஒன்றை உணவில் சேருங்கள். போஞ்சி, பயிற்றை, அவரை போன்றவையும் அவசியம். எண்ணெயைப் பொறுத்தவரையில் நல்லெண்ணெய், கனோலா, றயடரெவ போன்றவை நல்லது. ஓலிவ் ஓயிலை சலட் போனற்வற்றின் மீது படரவிடுங்கள்.
    metal-colander-with-green-leaves-lettuce
  4. மீன்கள் நல்லது. salmon, tuna or mackerel போன்றவற்றில் ஒமேகா 3 உள்ளது. இவை கலங்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. புற்றுநோயைத் தடுக்கும்.
  5. விதைகள் நல்லது. கஜீ, வோல்நட், அல்மன்ட் போன்றவற்றில் புரதமும் நல்ல வகையான கொழுப்பும் உள்ளது. உணவுகளுக்கு இடைப்பட்ட வேளைகளில் இவற்றை உண்ணலாம். ஆனாலும் அதிகம் வேண்டாம். ஏனெனில் எந்தக் கொழுப்பானாலும் அதிகம் கூடாது.
  6. சுத்திகரிக்கப்பட்ட மாப்பொருள் உணவுகள் நல்லவையல்ல. நன்கு தீட்டிய அரிசி, கோதுமைமா போன்றவை தவிடு நீக்கப்பட்டு முழுமையகச் சுத்திகரிக்கப்படவை. இவற்றில் போசணை கிடையாது. வெற்றுக் கலோரிகளாகும். தீட்டப்படாத அரிசி குரக்கன், ஆட்டாமா, மரவெள்ளி, வத்தாளைக் கிழங்கு போன்றவற்றில் போஷணை அதிகம்.
  7. இராசனம் கலக்காத உணவுகள் நல்லது. இப்பொழுது சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான மரக்கறிகள் பழவகைகள் யாவும் இரசாயன உரத்தில் வளர்ந்து கிருமிநாசினிகளை அதீதமாக உபயோகித்து நச்சாகியுள்ளன. இவற்றிற்குப் பதிலாக இயற்றை உரத்தில் வளர்ந்த மருந்தடிக்காத உணவுகள் நல்லது.
  8. நார்ப் பொருள் செறிந்துள்ள உணவுகள் நல்லது. தீட்டப்படாடாத தானியங்கள், கடலை, பயறு மற்றும் அவரையின உணவுகளில் நார்ப்பொருள் செறிந்துள்ளது. கருவாடு dried cranberries, dried apricots போன்றவையும் சிறந்தன.
  9. இனிப்பின் அளவையும் கொழுப்பு அதிகமான டெசேட் உணவுகளையும் கட்டுப்படுத்துங்கள். அளவு அதிகமாகிவிட்டால் உடற்பயிற்சியை அதிக நேரம் செய்யுங்கள்.
  10. உணவு உண்ணும்போது ஆறுதலாகவும் நிதானமாகவும் உண்ணுங்கள். குடும்பத்தினரோடு சேர்ந்து உண்பது நல்லது.
    images11.jpg
    தொலைக்காட்சி, கணனி போன்றவற்றின் முன் இருந்து ஒருபோதும் உண்ண வேண்டாம். நன்றாகச் சப்பிச் சாப்படுவது உணவுச் சமிபாட்டிற்கு நல்லது. வேறு பராக்குகளுடன் சாப்பிட நேர்ந்தால் வயிறு நிறைவது புரியாது அதிகமாக உண்டுவிடுவீர்கள்.
  11. போதிய நீர் அருந்துங்கள்;. 8 அவுன்ஸ் கிளாசில் 8 கிளாஸ் நீர் இருந்துங்கள் எனச் சிபார்சு செய்கிறார்கள். கழிவுப் பொருட்கள் வெளியேறி உடல் சுறுசுறுப்பாக இயங்க இது அவசியம்.
    images.jpg
  12. பசியோடு எந்த விருந்திற்கும் செல்லாதீர்கள். 'வீட்டில் ஒரு பிடி பிடித்துவிட்டு செல்' என அர்த்தம் அல்ல. பசியைக் குறைக்கக் கூடிய கடலை, கச்சான், பயறு போன்ற ஆரோக்கியமான உணவைச் சற்று உண்டுவிட்டு விருந்திற்குச் சென்றால் அளவிற்கு அதிகமாக உண்ண நேராது.
  13. சிரிப்பைப் போன்ற சகலரோக நிவாரணி மருந்து வேறெதுவும் கிடையாது. வேலை வேலை என மனநெருக்குவாரத்துடன் நாட்களைக் கழிக்காது, சிரிப்பதற்கும் மனதிற்கு இனிமையான பொழுபோக்குகளுக்கும் நேரத்iதை ஒதுக்குங்கள்.
    living-through-breast-cancer-with-faith-
  14. உடலுக்கு நல்ல பயிற்சி அவசியம். வேகமாக நடவுங்கள், நீந்துங்கள், சைக்கிள் ஓடுங்கள் அல்லது வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்யுங்கள். தினசரி 30 நிமிடங்களுக்குக் குறையாது வாரத்தில் 5 நாட்களுக்காவது அவ்வாறு ஈடுபடுவது அவசியம்.
  15. நல்ல ஓய்வும் தேவை. தினசரி 7 மணித்தியாலங்கள் தூங்குவது உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
  16. புகைத்தல் ஆகாது. பல வகையான புற்றுநோய்கள் புகைத்தலால் மட்டுமே ஏற்படுகின்றன. உடனடியாக நிறுத்துங்கள். முடியவில்லை எனச் சோரா வேண்டும். மீண்டும் முயற்சித்து பூரணமாக நிறுத்துங்கள்.
    Lung-cancer-Causes-Signs-and-Treatment-m
  17. கடும் சூரிய ஒளியில் அலையாதீர்கள். உடலை மூடிய உடை, கறுப்புக் கண்ணாடி, Sun screenஉபயோகியுங்கள்.
  18. உணவுக் கால்வாய், கர்ப்பப்பை, மார்பு, புரஸ்ரேட், சருமம் போன்றவற்றில் புற்றுநோய் ஏற்படக் கூடிய சாத்திங்கள் இருக்கின்றனவா என்பதையிட்டு மருத்துவரின் ஆலோசனையுடன் முற்கூட்டிய பரிசோதனைகள் செய்து கொள்ளலாம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col) 

குடும்ப மருத்து

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.