Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உதயன் மீதான தாக்குதலுக்கு அரசே பொறுப்பு; அடித்துக் கூறினார் ரணில்

Featured Replies

வடமாகாண தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் உதயனை முடக்க அரசு முயற்சிக்கிறது. இதற்காக தம்மிடம் உள்ள விசேட உடை அணிந்த குழு ஒன்றினை உதயன் மீது ஏவிவிட்டு தாக்குதல் நடத்துகின்றது. இந்த சம்பவங்களுக்கு அரசே பொறுப்பு. இவ்வாறு தெரிவித்தார் ஐ.தே.கவின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட எதிர்க்கட்சித் தவைலர் இன்று நண்பகல் உதயன் பத்திரிகை நிறுவனத்தைப்பார்வையிட்டார். 

இதன் பின்னர் அங்கு ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத்  தெரிவித்தார்.

அவர் மேலும்  தெரிவித்ததாவது,

உதயன் எங்களை கருத்துக்களால் தாக்குகிறது. உதயனை அரசாங்கம்  ஆயுதங்களால் தாக்குகிறது.  

ஊடகங்கள்  மீதும் ஊடக வியலாளர்கள் மீதும் அரசு திட்டமிட்டு தாக்குதல் நடத்துகிறது. இதற்குக் காரணம் ஊடகங்களை அரசு தம்வசப்படுத்திக் கொள்வதே. தெற்கில் பல ஊடகங்கள் அரசின் பக்கம் தாவி விட்டன. அவ்வாறு அரசு பக்கம்  தாவாத ஊடகங்கள் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தி அவற்றை இல்லாமல் செய்ய முயற்சிக்கிறது. 

அரசு எதிர்பார்ப்பதைப் போல உதயன், சுடர்ஒளிப்பத்திரிகைகள்  செயற்படவில்லை. இதனால் தான் அவற்றின் மீது அரசு வன்முறையினைக் கட்டவிழ்ந்து விட்டுள்ளது. 

பயங்கரவாதிகள் இருக்கின்றார்கள் என்று கூறிக் கொண்டு இந்த நாட்டில் ஜனநாயகத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என அரசே நினைக்கிறது.

நீதித்துறையின் சுதந்திரத்தை இல்லாமல் செய்துள்ள அரசு ஊடக சுதந்திரத்தையும் இல்லாமல் செய்ய முயற்சித்து வருகின்றது. 

இவ்வாறான செயற்பாடுகளை கண்டும் காணாததுமாக இருக்கும் ஊடக அமைப்புக்களை எண்ணி நான் கவலைப்படுகின்றேன். இவ்வாறான அமைப்பினர் ஒரு அறிக்கையினை மாத்திரம் விடுத்துவிட்டு பின்னர் ஜனாதிபதியுடன் விருந்துண்ணப் போய்விடுகின்றனர். 

இதனைவிடுத்து ஊடகங்கள் அடக்கப்படும் போது அதற்கு எதிராக குரல் கொடுக்கும் மனப்பாங்கை இவர்கள் இனியாவது ஏற்படுத்திக் கொள்வார்கள் என நான் நினைக்கிறேன். 

யாழ்ப்பாணத்தில் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்க எதிர்க்கட்சிகள் ஒன்றினைந்து பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம். இது தவிர தென்னிலங்கையில்  உள்ள ஊடக அமைப்புக்கள்  யாழ்ப்பாணத்து ஊடக நிலமைகள்  தொடர்பில் நேரில் சென்று அவதானிக்க வேண்டும் என்றும் கோரவுள்ளோம். 

இதன் போது தான் யார் உண்மையாக செயற்படுகிறார்கள் யார் பொய் சொல்கின்றனர் என்பதை இந்த ஊடக அமைப்புக்கள் புரிந்து கொள்ள முடியும். 

இதுமட்டும் அல்ல ஊடக அடக்கு முறைக்கு எதிராக நாடாளுமன்றில் நாம் குரல்  கொடுக்கவுள்ளோம் இதன் போது இவ்வாறான சம்பவங்களைத் தடுக்க தெரிவுக்குழு ஒன்றினையும் அமைக்க கோரவள்ளோம்.

ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கும் எவரையும் நாங்கள் பாதுகாப்போம். என்றார்.

 

DSC09249.JPG

 

DSC09275.JPG

 

DSC09286.JPG

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.