Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வனு-அற்று (Vanuatu)

Featured Replies

p3060202uk7.jpg

:lol::lol::lol::lol::lol::lol:

  • Replies 290
  • Views 37.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நன்றிகள் மதன்.

படங்களை பார்க்க ஆசையாக இருக்கு :)

ஓஓஓஓ அப்பிடியா இதிலை இருக்கிற எல்லாப்படமும் உமக்குத்தான் எடுத்து வச்சுக்கொள்ளும்

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

  • தொடங்கியவர்

அக்கிராமத்தினைவிட்டு வெளியே வந்து படகில் இத்தீவினைச் சுற்றி வரும் போது எங்களைக்கூட்டிக் கொண்டு வந்தவர், நீரினுள் பார்க்கக்கூடிய கண்ணாடி தந்து நீருக்குள் பார்க்கச் சொன்னார்.

p3060236hj2.jpg

பார்க்கும்போது அங்கே நீருக்கடியில் உடைந்த நிலையில் ஒரு விமானத்தின் பாகங்கள் தெரிந்தது. 2ம் உலகப் போரின் போது விழுந்த அமெரிக்கா விமானம் தான் அது. அந்த விழுந்து உடைந்த விமானத்தின் பாகங்களினை கடலில் இருந்து எடுக்கும் செலவு அந்தக்காலத்தில் அதிகம் என்பதினால் உடைந்தபாகங்களினை வெளியே எடுக்கவில்லை

அரவிந்தன் அண்ணா நீங்கள் இப்படி எழுதி என் செல்வை கூட்டமுனைகிறீர்கல்:)

  • தொடங்கியவர்

காலை 9 மணிக்கு அத்தீவில்(Lelepa Island)சுற்றுலா சென்று மாலை 6மணிக்கு நான் தங்கியிருந்த விடுதிக்கு(Le Lagon Resort)க்கு வந்தேன். நகரத்தில் உள்ள சீனர்களின் உணவகத்தில் அன்று இரவு உணவினை உண்டேன். ஒருவருக்கு தரும் உணவு இருவர் சாப்பிடக்கூடியதாகவும், மிகவும் ரூசியாகவும் இருந்தது.

பிரித்தானியா இல்வேட்டில்(Ilford) நீயூபெரிப் பாக்(Newbury park) பகுதியில் கொமன்வெல்த் நாடுகளின் நகரங்களில் உள்ள பெயர்களினை (Adelaide Road,Melbourne Road,Christchurch Road,Colombo Road, Toronto Road)வீதிகளில் காணலாம். அதே மாதிரி போட்விலாவின் நகரப்பகுதியில் பிரித்தானியா, பிரென்சு வீதிகளின் பெயர்களினைக்காணலாம். Cornwall Street,Elizabeth Street, Rue de Paris.

  • தொடங்கியவர்

போட்விலா நகர்ப்பகுதியில் இருந்து 15 நிமிடங்கள் பிரயாணம் செய்தால் எரகொர்(Erakor village) கிராமம் வரும். அக்கிராமத்தில் Namo Nana Kaljarel Vilij என்ற இடத்திற்கு சென்றால் 2000ம் வருடங்களுக்கு முன்பு இருந்த கற்கால அனுபவத்துக்கு செல்லலாம். அக்காலத்தில் மிருகங்களுக்கு வைக்கப்படுகிற பொறி, ஆதிகாலத்து முலிகைகள் தயாரிப்பது, பழையகாலத்து முறையில் உணவினை 5 வருடங்களுக்கு கெடாமல் பாதுகாப்பது,பழையகாலத்துப் பாய்கள், கூடைகள் பின்னுவது போன்றவற்றையும் காணலாம். அக்காலத்தில் எவ்வாறு தீ மூட்டினார்கள் என்பதினைக் கீழே உள்ள படத்தில் காணலாம்.

p3070251kn3.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

அரவிந்தன் அண்ணா நீங்கள் இப்படி எழுதி என் செல்வை கூட்டமுனைகிறீர்கல்:)

இன்னும் நான் பலவிடயங்கள் சொல்லப் போகிறேன். அதற்கு பிறகு பணத்தைப்பற்றி யோசியுங்கள் ஈழவன்

  • தொடங்கியவர்

ஒலைகளினால் பாய்கள், உடைகள் செய்வதினை இங்கே காணலாம். இங்குள்ளவர்களும் இவ்வுடைகள் அணிந்தே காட்சியளித்தனர்.

p3070252qb2.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

மிருகங்களினைப்பிடிப்பதற்கு உபயோகிக்கும் பொறி

p3070254kg3.jpg

  • தொடங்கியவர்

உணவுகள் பழுதடையாமல் இருப்பதற்கு வாழை இலையில் உணவினை வைத்து, வேறு சில வழிகளையும் உபயோகித்து நிலத்தின் கீழ் புதைத்து 5 வருடங்களின் பின்பும் உணவினைக்கெடாமல் பாதுகாக்கும் முறை

p3070255gc9.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

அதிகாலத்தில் மனிதமாமிசம் சாப்பிடும் வழக்கம் இங்கே இருந்தது. படிப்படியாகக்குறைந்து 1969ம் ஆண்டு வரை சில இடங்களில் இந்தப்பழக்கம் இருந்தது. தாக்க வரும் மனிதர்களின் நெற்றியினை ஒரே அடியில் பிளப்பார்கள். படத்தில் உள்ளவர் வைத்திருக்கும் அயூதத்தினால் தான் மனிதர்களினை அடிப்பார்கள். அயூதத்தின் ஒவ்வொரு பகுதியும் மனிதனின் வெவ்வேறு பாகத்தைத்( நெற்றி, தோள்பட்டை) தாக்குவதற்கு பயன்படுத்தப்படும்.

p3070256dd8.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

மிருகங்களினைத்தாக்குவதற்கு உரத்த குரலில் கத்திக்கொண்டு போய் தாக்குவார்கள். சத்தம் கேட்டு விலங்குகள் பயப்படும் என்பதினால் உடையில் மணிகள் அணிந்து ஒடித்தாக்குவார்கள்.

p3070253fn2.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

உரத்த குரலில் பாடல்கள் பாடிக்கொண்டு தாக்குவது இவர்களின் வழக்கம்.

p3070259ao8.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

ஆதிகாலத்தில் உணவினை சூடாக்கும் முறையினையும் காண்பித்தார்கள்(Making traditional ground ovens(Hungi~Maori)). பிறகு ஒரு கொட்டிலில் எங்களை இருக்கவிட்டு, குடிப்பதற்கு பழக்குளிர்பானமும், உண்ண பழங்களும் தந்தார்கள். நாங்கள் உண்ணும் போது, தற்கால கிற்றரினை ஒருவர் இசை மீட்ட, வேறு சிலர் மூங்கில் தடிகளையும், பழைய போத்தல்களையும் உபயோகித்து வாத்தியங்களாக வாசிக்க, அவர்கள் உரத்த குரலில் அவர்களது மொழிப்பாடல்களினைப் பாடினார்கள்.

p3070258zq6.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

இங்கு வனு-அற்றில் பல சுற்றுலா நிறுவனங்களின் உதவியுடன் சுற்றுலா பார்க்கலாம். Adventures in Paradise என்ற நிறுவனம் பல சுற்றுலாக்களினை நடாத்துகிறார்கள்.அத்துடன் இவர்கள் விமான நிலையத்தில் இருந்து, தங்கும் விடுதிகளுக்கு பயணிகளைக் கூட்டிக் கொண்டு செல்கிறார்கள் (பயணிகளிடம் இதற்கு பணம் அறவிடுவதில்லை. விடுதிகளிடமிருந்து தான் பணத்தைப் பெறுகிறார்கள்).

சில சுற்றுலா நிறுவனங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பல சுற்றுலாக்களை குறைந்த விலையில் நடாத்துகிறார்கள். அதாவது தனித்தனியே 2 அல்லது மூன்று இடங்களுக்கு செல்வதற்கு செலவிடும் பணத்தை 2 அல்லது 3 சுற்றுலாவையும் ஒரே நிறுவனத்தில் ஒரே நாளில் சென்றால் பணத்தின் செலவைக்குறைக்கலாம். Horizon tours மூலம் போட்விலா நகரம் ,எரகொர்(Erakor village -Namo Nana Kaljarel Vilij ,BLUE WATER ISLAND RESORT ஆகிய மூன்றையும் பார்க்க ஒரே நாளில் 3500 வாற்றுக்கள் தேவைப்பட்டது. தனித்தனியே சென்று இருந்தால் குறைந்தது 6000வாற்றுக்கள் தேவைப்பட்டிருக்கும். (நான் இந்நாட்டுக்கு சென்றபோது ஒரு அவுஸ்திரெலியா வெள்ளி கிட்டத்தட்ட 80 வனு-அற்று வாற்றுகளுக்கு சமனாக இருந்தது.)

பல விடுதிகளில் மசாஜ் வசதிகளும் உண்டு. வனு-அற்று எண்ணையினை உடலில் தேய்த்தும் மசாஜ் செய்வார்கள்

erakor09920smallvr7.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

Efate தீவைச்சுற்றி ஒரு நாள் பயணம்.

போட்விலாவில் இருந்து மணிக்குட்டின் திசையாக குளிரூட்டப்பட்ட வாகனத்தில் பிரயாணத்தை ஆரம்பித்தோம். போகும் போது வேறு விடுதிகளில் இருந்தும் சிலர் எங்களுடன் இணைந்தார்கள். போட்விலாவில் மட்டும் தான் நல்ல தார் வீதியினைக் காணலாம். மற்றைய இடங்களில் குண்டும் குழியுமான தார் இல்லாத கரடு முரடான பாதைகள் தான் இருக்கும். கரையோரங்களில் தான் வாகனங்கள் போகக்கூடிய பாதைகள் உண்டு. சுற்றுலாவும் கரையோரங்களினை அண்டியதாகவே இருந்தது.

efatemapoq9.gif

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

போகும்போது ஏற்கனவே குறிப்பிட்ட ( நான் சென்ற)Mele cascades(waterfalls),Hideaway Island(world underwater post office),Le Lepa Island போன்றவற்றின் இயற்கைக் காட்சிகளினை வாகனத்தில் இருந்து பார்த்துக்கொண்டும் Moso island,Devils Point, Port villa Harbour பார்த்துக் கொண்டும் பயணம் செய்தோம்.

untitled5et1zx1.png

mapefate1000td5.jpg

1940ம் ஆண்டில் தான் முதன் முதலாக அமெரிக்காப் படைகளினால் இத்தீவினைச்சுற்றி உள்ள இந்த ஒரே பாதை அமைக்கப்பட்டது.

படத்தில் கடலின் நடுவே தெரியும் நிலப்பரப்பு HIDEAWAY ISLAND

p3050081jp1it7.png

  • தொடங்கியவர்

p3050082xt1.jpg

வாகனத்தில் இருந்து இயற்கைக்காட்சிகள் பார்த்துக்கொண்டே Le Lepa landing என்ற இடத்துக்கு வந்தோம். இங்கிருந்து தான் நான் ஏற்கனவே குறிப்பிட்ட(குகைகள் உள்ள இடம்) நான் சென்ற இடமான Le Lepa தீவுக்கு இலவசப்படகுச் சேவைகள் நடைபெறுகிறது.

p3060237xd7.jpg

  • தொடங்கியவர்

எங்களது வாகனம் Taniliou Havana Harbor என்ற இடத்தில் நிற்க, அங்கே பிஸ்கட்டுக்களும், குளிர்பானங்களும் தந்தார்கள்.

p3050090kn4.jpg

p3050089bu4.jpg

முன்பு அமெரிக்கா இராணுவத்தின் கடல் விமானம் வந்து தங்குமிடமாக இவ்விடம் இருந்தது(Original water base for the amphibious Catalina sea planes) .

p3050086pp2.jpg

  • தொடங்கியவர்

அங்கே ஒரு கொட்டிலில் 2ம் உலகப்போரின் போது அமெரிக்காப் படைகள் பாவித்த எறிகணைகள், சன்னங்கள், கொக்கா கோலா போத்தல்களைக் காணக்கூடியதாக இருந்தது. அமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட கொக்காகோலாப் போத்தல்களினை, அந்தக்கொக்கா கோலா போத்தல்களின் மூடிகளில் இருந்து அறியக்கூடியதாக இருந்தது. மூடிகளில் NY, NJ,NH,CT,CA(US State Codes)என மாகாணங்கள் குறிக்கப்பட்டிருந்தது. படத்தில் உள்ளவர் தான் இவற்றினைச் சேகரித்து இக்கொட்டிலில் வைத்திருந்து எங்களுக்கு விளங்கப் படுத்தினார்.

p3050083em8.jpg

Edited by Aravinthan

  • கருத்துக்கள உறவுகள்

அங்கே ஒரு கொட்டிலில் 2ம் உலகப்போரின் போது அமெரிக்காப் படைகள் பாவித்த செல்கள், சன்னங்கள், கொக்கா கோலா போத்தல்கள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது.

வரப்போகும் தமிழீழச் சுற்றுலாவில் இதைவிட முதலாம் ஈழப்போர், இரண்டாம் ஈழப்போர், மூன்றாம் ஈழப்போர், 4ம் ஈழப்போர், இந்தியா இராணுவக்காலப்போர் செல்கள், சன்னங்கள், மாவீரர்கள் வரலாறு, தூபிகள், இன்னும் பல விசயங்கள் என சுற்றுலாப்பயணிகள் வந்து பார்ப்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆடைத் தொழிற்ச்சாலை(T-shirt factory). ஆடைகள் எவ்வாறு செய்வதினையும் இங்கே விளக்கம் தந்தார்கள்.

அப்ப ஈழத்திலும் நெசவுசாலையினையும் வெளினாட்டில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு காட்டலாம் தானே. அச்சுவேலி கைத்தொழில் பேட்டை, மில்கவைற், நிலாவரைக்கிணறு .... எனக்காட்டலாம் தானே

இன்று தான் மிகுதியை வாசித்தனான் மிகவும் நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கோ வாசிக்க ஆவலாக இருக்கிறது அரவிந்தன் பிரதர்

:lol::lol::lol:

  • தொடங்கியவர்

வாசித்துக் கருத்துப்பகிர்ந்த யமுனாவுக்கு நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.