Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெரிவுகளற்ற அனைத்துலகச் சமூகம் - நிலாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தெரிவுகளற்ற அனைத்துலகச் சமூகம் - நிலாந்தன்
29 ஏப்ரல் 2013
 

 

நந்திக் கடலில் தோற்கடிக்கப்பட்டது விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டும் அல்ல. இலங்கைத் தீவில் அரசாங்கத்திற்கு எதிராகக் காணப்பட்ட அனைத்து எதிர்ப்புச் சக்திகளும் தோற்கடிக்கப்பட்டு விட்டன.

 

 

தகவல் புரட்சி நாடுகளையும் கண்டங்களையும் திறந்து வருகின்றது. நிதி மூலதனமும் நாடுகளையும் கண்டங்களையும் திறந்து வருகிறது. தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரம் என்பவற்றின் அடிப்படையில் கூறின் உலகம் மேலும் மேலும் திறக்கப்பட்டு வருகிறது. இப்பொறிமுறைக்கு எதிராக நாடுகளையும் சமூகங்களையும் மூடமுற்படும் அரசாங்கங்களோ அல்லது அமைப்புக்களோ இப்பொறிமுறையை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முற்படும் நாடுகளோடு அல்லது நாடுகளின் கூட்டமைப்போடு மோத வேண்டிவரும்.

 

இலங்கைத் தீவைப் பொறுத்த வரை விடுதலைப்புலிகள் பலமாக இருந்த வரை தமிழ் மக்களின் அரசியலானது மூடப்பட்டிருந்தது. விடுதலைப்புலிகளை மீறி யாரும் அதைக் கையாள முடிந்ததில்லை. அதற்குள் ஊடுருவவும் முடிந்ததில்லை. அதாவது, விடுதலைப்புலிகள் பலமாக இருந்த வரை தமிழ் மக்களின் அரசியலானது ஒரு இரும்புக் கோட்டையைப் போல மூடப்பட்டதாகக் காணப்பட்டது. ரணில் - பிரபா உடன்படிக்கை காலத்தில் இக்கோட்டையைத் திறந்து விடுதலைப்புலிகளை நெகிழச் செய்து தமது வழிக்குக் கொண்டுவர மேற்கு நாடுகள் முயற்சித்தன. ஆனால், அது நடக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்கவைத் தோற்கடிப்பது என்ற முடிவை எடுத்ததன் மூலம் விடுதலைப்புலிகள் மேற்கு நாடுகளின் முயற்சிகளுக்கு வரையறைகளை ஏற்படுத்தினர். 

 

எனவே, விடுதலைப்புலிகளைத் தோற்கடிப்பது என்ற முடிவை ஏறக்குறைய எல்லா நாடுகளும் எடுத்தன. விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதோடு தமிழ் மக்களின் அரசியல் திறக்கப்பட்டுவிட்டது. ஆனால், சிங்கள மக்களின் அரசியல் அரங்கு மூடப்பட்டுவிட்டது.

 

நந்திக் கடலில் தோற்கடிக்கப்பட்டது விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டும் அல்ல. இலங்கைத் தீவில் அரசாங்கத்திற்கு எதிராகக் காணப்பட்ட அனைத்து எதிர்ப்புச் சக்திகளும் தோற்கடிக்கப்பட்டுவிட்டன. அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு வெளி என்பதே இல்லாமல் செய்யப்பட்டுவிட்டது. இந்த அரசாங்கத்தை விட தீவிர தேசிய சக்தி எதுவும் நாட்டில் இப்பொழுது இல்லை. யுத்த வெற்றிவாதத்தின் மீது சிங்கள மக்களின் அரசியல் கட்டியெழுப்பட்டுவிட்டது. வெற்றியின் உச்சிக் கோபுரத்தில் ஆட்சியாளர்கள் அமர்ந்திருக்கின்றார்கள். வெற்றிக் கோட்டையைத்தாண்டி யாரும் உள்நுழைய முடியாது. விடுதலைப்புலிகள் பலமாக இருந்தவரை தமிழ் மக்களின் அரசியல் எப்படி இருந்ததோ அப்படித்தான் இப்பொழுது சிங்கள மக்களின் அரசியலும் காணப்படுகிறது.

 

மேற்கு நாடுகள் இலங்கைத் தீவில் ஒன்றில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த எத்தனிக்கின்றன அல்லது ஆட்சியாளர்கள் மத்தியில் மனமாற்றத்தை ஏற்படுத்த எத்தனிக்கின்றன.  ஆனால், தேர்தல் வழிமுறைகளின் ஊடாகவோ அல்லது நாடாளுமன்றத்துக்கு வெளியிலான நடவடிக்கைகளின்; மூலமாகவோ இப்போது ஆட்சியிலிருக்கும் வம்சத்தை எளிதாக அசைத்துவிட முடியாது. ஏனெனில், இந்த அரசாங்கம், சிங்கள மக்களுக்கு பெற்றுக்கொடுத்த வெற்றியின் பிரமாண்டம் அத்தகையது. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இந்த அரசாங்கத்திற்கு சவாலாக  எழக்கூடிய ஜனவசியம் மிக்க ஆளுமைகள் மிக அரிதாகவே காணப்படுகின்றன. யுத்த வெற்றிவாதத்தின் இரும்புக்கோட்டையைத் தகர்த்து மாற்றங்களை ஏற்படுத்துவதாக இருந்தால் அதற்கு வெளியாரின் பின்பலம் வேண்டும். ஆனால், எவ்வளவுக்கு எவ்வளவு வெளிச்சக்திகள் அரசாங்கத்திற்கு எதிரான தரப்புக்களை ஆதரிக்கின்றனவோ அவ்வளவுக்கவ்வளவு சாதாரண சிங்கள பொதுசனங்கள் அரசாங்கத்தை ஆதரிப்பார்கள். வெளியாரின் உதவியோடு அரசாங்கத்தை எதிர்க்கும் எவரும் யுத்த வெற்றிவாதத்தின் முன் துரோகியாகவே கருப்படுவார். யுத்தத்தின்கிடைத்தற்கரிய வெற்றிகளை வெளியாருக்குக் காட்டிக் கொடுக்கும் ஒருவராகவே அவர் பார்க்கப்படுவார். யுத்தவெற்றி நாயகர்களில் ஒருவரான தளபதி சரத் பொன்சேகாவுகு;கு இது தான் நடந்தது. 

 

மூடப்பட்டுள்ள சிங்கள மக்களின் அரசியலுக்குள் உள்நுழைய முற்பட்ட குமார் குணரத்தினமும் தோல்வியோடு பின்வாங்க வேண்டியதாயிற்று. இப்பொழுது முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகாவைப் பற்றி பிரஸ்தாபிக்கப்படுகிறது. ஆனால், இலங்கைத்தீவின் அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தவல்லதும் யுத்த வெற்றி வாதத்தை மீறி எழுமளவிற்கு ஜனவசியம் மிக்கதுமாகிய ஆளுமைகள் எதையும் உடனடிக்கு தென்னிலங்கை அரசியல் அரங்கில் காணமுடியவில்லை. குறைந்த பட்சம் ஒரு கதைக்காகவேனும் ஆட்சியாளரிடத்தில் மனமாற்றங்களை ஏற்படுத்தவல்ல ஒரு போதிசத்வரையும் காணமுடியவில்லை.

 

எனவே, இரும்புக் கோட்டையாக மூடப்பட்டுள்ள தென்னிலங்கை அரசியல் அரங்கினுள் ஊடுருவ மேற்கு நாடுகளாலும் முடியவில்லை. இந்தியாவாலும் முடியவில்லை. இதனாற்தான் ஆகக்குறைந்தது அரசாங்கத்தையாவது அவர்கள் கையாள வேண்டியிருக்கின்றது. கடந்த இரண்டு ஜெனிவா கூட்டத்தொடர்களின் போதும், கூட்டத்தொடர்களின் பின்பும் இதுதான் நடந்தது. 

 

மேற்கு நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் இலங்கைத்தீவில் இப்போது திறக்கப்பட்டுள்ள ஒரே கதவு தமிழ் அரசியல்தான். விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியோடு அது முற்றாகத் திறக்கப்பட்டுவிட்டது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஒரு கட்சியாகக் காணப்படுவது அதனுடைய அடிப்படைப் பலம்.

 

இது காரணமாகவே அது அனைத்துலக அரங்கில் விடுதலைப்புலிகளை விடவும் கூடுதலான அங்கீகாரத்தோடு காணப்படுகிறது. இது மற்றொரு பலம். 

 

ஆனால், ஒரு பொது இலட்சியத்தின் அடிப்படையில் தனக்குள் ஐக்கியப்பட முடியாத கட்சி அது.  ஈழத் தமிழர்களின் அடுத்த கட்ட அரசியலை முன்னெடுத்துச்செல்லவல்ல தீர்க்க தரிசனமோ படைப்பாற்றலோ அவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

 

இப்போதுள்ள அரசாங்கம் தனது சொந்த வெற்றியின் கைதியாக உள்ளது. வெற்றிச் சிறையைவிட்டு வெளியே வந்ததாற்தான் இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பற்றிச்சிந்திக்கலாம். ஆனால், இந்த அரசாங்கம் வெற்றிச் சிறையை விட்டு வெளியே வரமுடியாது. ஏனெனில், அது எத்தகைய தீவிர தேசிய சக்திகளுக்குத் தலைமை தாங்குகின்றதோ அவற்றை மீறி தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை வழங்க முடியாது.

 

எனவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பானது இந்த அரசாங்கத்திடமிருந்து தீர்வு எதையும்பெற முடியாது. இந்த அரசாங்கம் தரக்கூடியதை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. தமிழர்கள் கேட்பதை இந்த அரசாங்கம் கொடுக்கப்போவதுமில்லை.  தன் சொந்த வெற்றிச் சிறைக்குள்ளிருந்து வெளிவர முடியாத ஓர் அரசாங்கத்திற்கு எதிராக நாடாளுமன்றத்துக்கு வெளியே போராடத் தேவையான திடசித்தமோ தீர்க்கதரிசனமோ தியாக சிந்னையோ அதற்குரிய பாரம்பரியமோ படைப்புத் திறனோ கூட்டமைப்பிடம் இருப்பதாகத்தெரியவில்லை.

 

எனினும் எல்லாப் பலவீனங்களுக்கும் அப்பால் ரி.என்.ஏ.தான் இப்பொழுது தமிழ்த் தரப்பாகக் காணப்படுகிறது. மொட்டைக் கத்தி என்றாலும் உறைக்குள் இருப்பது அந்தக் கத்திதான். அமெரிக்காவும் இந்தியாவும் அதைத் தான் கையாள முடியும். மற்றது தமிழ் டயஸ்பொறா.  டயஸ் பொறாவிலும் ஒற்றுமை இல்லை. ஒரு பொதுத் தமிழ் நிதியத்தை உருவாக்க முடியாத அளவிற்கும் ஒரு தமிழ் அறிவியல் நடுவத்தை கட்டியொழுப்ப முடியாத அளவிற்கும் சிதறிக் காணப்படும் ஒரு டயஸ்பொறா அது. அனைத்துலக அரங்கில் தமிழர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தரப்பாக மேலெழ முடியாமைக்கு; டயஸ்பொறாவிற்குள் காணப்படும் ஐக்கியமின்மையும் ஒரு முக்கிய காரணம். 

 

களத்திலும் புலத்திலும் ஓரளவுக்கேனும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனவசியம் மிக்க ஒரு தலைமைத்துவம் தமிழர்களுக்கு இப்பொழுது இல்லை. விடுதலைப்புலிகள் இருந்த வரை சரிகளோடும் பிழைகளோடும் களத்திலும் புலத்திலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தலைமைத்துவத்தை வழங்கினார்கள். இப்பொழுது அது வெற்றிடமாகவுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்பவல்ல தீர்க்க தசரினமும் அரசியலில் படைப்பாற்றாலும் மிக்க பேராளுமைகள் மேலெழும் போதே அனைத்துலக அரங்கிலும் உள்நாட்டிலும் தமிழர்கள் கேள்விக்கிடமற்ற ஒரு தரப்பாக நிமிர முடியும்.

 

அத்தகைய பேராளுமைகள் அற்ற ஒரு வெற்றிடத்திலேயே இந்தியாவும் மேற்கு நாடுகளும் தமிழ் அரசியலை கையாள வேண்டியிருக்கிறது. இதனால், தமிழர்கள் தமது சொந்த நிகழ்ச்சி நிரலை சக்தி மிக்க நாடுகளின் நிகழ்ச்சி நிரலோடு பொருந்தச் செய்வதற்குப் பதிலாக சக்தி மிக்க நாடுகளின் கருவிகளாகவோ அல்லது அழுத்தக் குழுக்களாகவோ அல்லது அரசியல் நொதியங்களாகவோ சுருங்கிப்போகும் அபத்தும் உண்டு. 

 

எனவே, மேற்கண்டவைகளைத் தொகுத்துக் கூறின் இலங்கைத்தீவில் மேற்கு நாடுகளையும், இந்தியாவையும் பொறுத்த வரை மூடப்பட்டுள்ள தென்னிலங்கை அரசியலை திறப்பதிலும் வரையறைகள் உண்டு. அதேசமயம், திறக்கப்பட்டுள்ள தமிழ் அரசியலைக் கையாள்வதிலும் வரையறைகள் உண்டு. மொத்தத்தில் இலங்கைத்தீவில் அனைத்துலக சமூகத்திற்கான தெரிவுகள் மிகவும் சுருங்கிப் போயியுள்ளன. அதாவது, புலிகளைத் தோற்கடித்த பின்னரும், அனைத்துலக சமூகமானது கடந்த நான்காண்டுகளாக இலங்கைத்தீவில் தமக்குச் சாதகமான தெரிவுகளை உருவாக்க முடியவில்லை என்று அர்த்தம். 

 

24-04-2013

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/91182/language/ta-IN/article.aspx

 

மிக நிதானமாக உண்மை நிலையை மிக கவனமாக அவதானித்து எழுதப்பட்ட கட்டுரை. இன்றைய ஜதார்த்தத்தை  உணர்த்தி நிற்கிறது.

தமிழில் கட்டுரை எழுதுவதானால் அவியாமல் எழுத முடிவதில்லை. இது கட்டுரையாளர்களிலும் பார்க்க தமிழ் மீது உள்ள குற்றம் போலத்தான் படுகிறது. ஏன் எனில் சங்ககாலம் தொடக்கம் கவிதைக்கா, கலைக்காக மட்டும் மொழியை பாவித்து, நாம் அதில் எழுதி வருவதில் எல்லாம் ஒரு சுவையை எதிர்பார்த்தால் அது எழுதுவோரை சுவையுடன் எழுத வைக்கிறதேயல்லாமல். ஆராய்ந்து எழுத விடுவதில்லை.  இதுவும் விலத்துவிடி இல்லாத ஒரு கட்டுரை.

 

வழமை போல ஆசிரியர் தொடக்கத்தில் எழுதிய வரிகளை விழுங்கிவிட்டுத்தான் முடிவை வைக்கிறார். நோக்கம் புலிஎதிர்ப்பு, புலி ஆராதவு இரண்டுமே தன் காட்டுரையை புகழட்டுமென்றாகத்தான் இருக்க முடியும். கிட்டத்தட்ட முதலும் முடிவும் முரணாத கட்டுரை ஒன்றை புலம் பெயர் ஊடகங்களில் பார்ப்பது என்பது முடியாதாகிவிட்டது.

 

தொடக்கம்:

"விடுதலைப்புலிகள் பலமாக இருந்த வரை தமிழ் மக்களின் அரசியலானது ஒரு இரும்புக் கோட்டையைப் போல மூடப்பட்டதாகக் காணப்பட்டது."

 

முடிவு:

"களத்திலும் புலத்திலும் ஓரளவுக்கேனும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனவசியம் மிக்க ஒரு தலைமைத்துவம் தமிழர்களுக்கு இப்பொழுது இல்லை. விடுதலைப்புலிகள் இருந்த வரை சரிகளோடும் பிழைகளோடும் களத்திலும் புலத்திலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தலைமைத்துவத்தை வழங்கினார்கள்."

 

அடிமட்ட முட்டாளதனமாக, ஆசிரியர், எப்படி தானோ இரும்புக்கோட்டைக்குள் பூட்டிவைக்கபட்டிருபதுதான் தமிழ் மக்களு தமக்கு ஏற்றதான தலைமைத்துவமாக இருந்தது கொண்டார்கள் என்று இரண்டு பக்கத்திற்கும் விளக்கம் வைத்து முடித்துவிடுகிறார்.

 

முழு காட்டுரையையின் விளக்கத்தையும் எழுவது படிப்போரை அலுக்க வைக்கும் என்பதால் சில சில வற்றை மட்டும் பார்க்கலாம்.

 

 

"நந்திக் கடலில் தோற்கடிக்கப்பட்டது விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டும் அல்ல. இலங்கைத் தீவில் அரசாங்கத்திற்கு எதிராகக் காணப்பட்ட அனைத்து எதிர்ப்புச் சக்திகளும் தோற்கடிக்கப்பட்டு விட்டன."

 

வாசிப்போர் மனத்தில் ஒரு மாற்றுக்கருத்துமாதிரி தோற்றப்பட திரிக்கபட்ட வசனம்.  இது புலி எதிப்பாளர்களை கவரச் சோடிக்கப்பட்ட வசனம்.

 

நந்திக்கடலில் அரசு  புலிகளைமட்டும் அழிக்க முயவில்லை என்றும், அங்கு நடந்தது தமிழ் இன அழிப்பென்றும் ஐ.நா உள்ளக அறிக்கைவரை பல ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.  அதில் அமெரிக்கா, மேற்கு நாடுகள், இந்தியா, ஈரான் ஸ்ரேல் எல்லாம் இலங்கையின் நண்பர்களாக இருந்து அழித்தார்கள் என்பது நாம் எல்லோரும் அறிந்தது. மேலும் இன்று இலங்கையில் இவர்களில் பலர் இலங்கை அரசின் எதிரிகள்.

 

அப்படியானால், இந்த அரசின் போர் வெற்றியால் ஏமாந்த, இந்தியா, மேற்கு நாடுகள், ஸ்ரேலை ஆன  இலங்கையின் போர்க்கால நண்பர்களை, ஆசியர், புதிய முக மூடி மூலம் நிரந்தர எதிரிகளாக காட்டுக்கிறார். அதாவது இவர்களுக்கும், இலங்கை அரசியலில் என்றுமே அரசின் கடசியான SLFP யுடன் எதிரியாக இருக்கும் UNP யின் இடத்திலேயே போட்டு ஆராய்கிறார். இதனால் இன்று மட்டும் முரணிப்போய் இருக்கும் அரசு சார்பான JVP  இடம் ஒன்றும் கொடுக்கமுடியாமல்  இரும்பு அறை ஒன்றை செய்த்து அதற்குள் போட்டு ஒருவரும் பார்க்கத்தபடி  மூடிவிட்டர்.

 

மொத்தத்தில் UNP அல்லது ரணிலின் சிங்கள மக்களிடமான தோல்வியை புலிகளின் தோல்வியால் வந்தது என்ற கருத்துமாயை எழ்த்தக்க நிலையில் வசனங்களில் குயக்கம் ஆட்டி முடித்துவிட்டார். புலிகளின் தோல்விக்கு முன்னர், UNP 17 வருடங்கள் சிங்கள மக்கள் மீது தொடர்ந்து அராஜரீகத்தை நடத்தியதால் பேர் ஊர் தெரியாமல் இருந்த சந்திரிக்கா பதவியில் வந்தார் என்ற உண்மை ஆராயப்படவில்லை.  சிங்கள மக்கள், சரித்திரம் பூராக தமிழரை அழிகும் கட்சிகளுக்கு மட்டும்தான் வாக்களித்து வந்தும், சந்திர்க்க அந்த வாக்குறுதிய கொடுக்காமலே பதவிக்கு வந்திருந்தார். இதில் UNP யின் அராஜரீகம் சிங்கள மக்களினால் எந்தளவுக்கு உணரப்பட்டிருந்த என்பது விளங்க்கிக் கொள்ளப்பட வேண்டும்.

 

உண்மையாக தோற்றது அரசின் எதிரிகள் மட்டும் அல்ல. நண்பர்களும் என்பதுதான் யதார்த்தம். மேலும் அரசின் எதிரிகள் போரில் அரசு புலிகளை வென்றதால் அல்ல தோற்றார்கள் என்பதும் உண்மை. UNP யின் தோல்விக்கு காரணம் போர் அல்ல. J.R ம் பிரேமதாசாவும். 

 

ஆசிரியர் நடிப்பது போல அல்லாமல் குணரத்தினமும், பொன்சேக்காவும் ஆசிரியரின் சொல்லான "ஜனவசியத்தை" எந்த தேர்தலிலும் நிரூபிக்காதவர்கள். குணரத்தினம் JVPல் தன்னும் ஒரு இடத்தையும் பிடித்திருக்காத தமிழர். அவர் ஜனாதிபதியாக வந்திருக்கலாம் போல மாயை காட்டுகிறது கட்டுரை. போரின் வெற்றியை காரணம் காட்டினால், பொன்சேக்கா மேற்குநாடுகள் எதிர்பார்த்தது போல தேர்தலில் வென்றிருக்க வேண்டும். இதனால்  ஆசிரியர் ஒற்றை காரணத்தை வைத்து ஒரு நிகழ்சியை விவரிப்பது தமிழில் சுவரசியக்கட்டுரை எழுத மட்டுமே பொருத்தம். ஒற்றைக்காரணம் ஒரு அரசியல் ஆராச்சியல்ல.

 

 

"இலங்கைத் தீவைப் பொறுத்த வரை விடுதலைப்புலிகள் பலமாக இருந்த வரை தமிழ் மக்களின் அரசியலானது மூடப்பட்டிருந்தது."

 

சுதந்திரத்தின் பின், தமிழ்மக்களின் குடியுரிமை பறிப்பு,  சிங்களம் மட்டும் சட்டம், கோடிஸ்வரன் வழக்கு தோல்வி, சத்தியாகிரகம் அடக்கு முறை, பௌத்த சிங்கள அரசியல் அமைப்பு, தரப்படுத்தல், தமிழாராச்சி மகாநாடு குழப்பம், SJV க்கு தேர்தலில் நிற்க உரிமை மறுப்பு, அமிர்தலிங்கத்தை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் வைத்து பதவி நீக்கம், தமிழர் எதிர்க்கட்சி அமைக்க முடியாத படி தடை செய்யபட்ட  புதிய அரசியல் அமைப்பு, போர் என்றால் போர் என்ற பேச்சு பேசு இனக்கலவரத்தால் அழிப்பட்டுப்போன மக்களை ஆமியை போட்டு அடித்த போதெல்லாம் தமிழரை அரசியல் பஞ்சணை மெத்தையில் போட்டு பவனிகொண்டு வந்த சிங்கள அரசுகளை ஒதுக்கிவிட்டு புலிகள் தமிழரை அரசியல் இரும்பு கூட்டுக்குள் போட்டர்கள் என்று கட்டுரை வரைகிறார் ஆசிரியர்.

 

சிங்களம் செய்தவை ஜனநாயகம் என்ற நாடகத்தின் கீழ். ஆனால் புலிகள் செய்தது  ஆயுத போராட்டம் என்ற அவசரகால நிலைமயின் கீழ். ஆயுத போராட்ட நேரம் அரசு அவசரகால சட்டத்தை, பயங்கரவாத தடுப்பு சட்டத்தை போட்டு தமிழரை சுதந்திர அரசியல் செய்யவிட்டத்தாக ஆசிரியர் சோடிக்கிரார்.  இதனான் தான் கூட்டணியின் பொதுக்காரியதரிசி  அமிர்தலிங்கம் மாறுவேடத்தில் இந்தியாவுக்கு ஓடினாரா, அல்லது கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் பாதுகாப்புக்கு இந்தியாவிடம் கெஞ்சினாரா?

 

புலிகள் ஜனநாயகத்தை எப்படி மதித்தார்கள் என்பதை விளக்க, அவர்கள் தலை மறைவு இயக்கமாக இருந்த போது  குற்றவியல் தண்டனைகளை பொது இடங்களின் வைத்து தண்டித்த அமைப்பு, நிழல் அரசொன்றை அமைத்தவுடன் மந்திரியை நியமித்து, கோடுகள், நீதிபதிகள், வக்கீல்கள் வரையும் கொண்டு சென்றார்கள்.  அரசு எப்படி மதித்ததென்றால் நவீன கால ஜனநாயகத்தின் தந்தையான  பிரிடிஸ் அரசியல் அமைப்பில் இருந்து பிரதி செய்யப்பட்ட அரசில் அமைப்பை மாற்றி,  கோடீஸ்வரன் வழக்கில் தனக்கு விருப்பமில்லாத முறையில் நடந்ததற்காக பிறிவிகவுன்சில் அப்பீலை நீக்கியதிலிருந்து   பயங்கரவாத தடை  சட்டம், வெள்ளைவான், பிரதம நீதியரசர் நீக்கம் என்பது வரை வளர்ந்து வந்ததுதான்.

 

"எனவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பானது இந்த அரசாங்கத்திடமிருந்து தீர்வு எதையும்பெற முடியாது. இந்த அரசாங்கம் தரக்கூடியதை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. தமிழர்கள் கேட்பதை இந்த அரசாங்கம் கொடுக்கப்போவதுமில்லை.  தன் சொந்த வெற்றிச் சிறைக்குள்ளிருந்து வெளிவர முடியாத ஓர் அரசாங்கத்திற்கு எதிராக நாடாளுமன்றத்துக்கு வெளியே போராடத் தேவையான திடசித்தமோ தீர்க்கதரிசனமோ தியாக சிந்னையோ அதற்குரிய பாரம்பரியமோ படைப்புத் திறனோ கூட்டமைப்பிடம் இருப்பதாகத்தெரியவில்லை."

 

தொடர்ந்து மாயைகளை உருவாக்குகிறார்.

1."கூட்டமைப்பு தீர்வை பெற முடியாது." (கூட்டமைப்பு பெற்றுவிடலாம் என்கிறதா?)

2. "அரசாங்கம் தரக்கூடியத" ( அரசாங்கம் எதையோ தர முயல்கிறதென்றா சொல்கிறார், அதாவது அரசாங்கம் மேலும் மேலும் இருப்பதை பறிக்கவில்லையா?)

3."தன் சொந்த வெற்றிச் சிறைக்குளிருந்து வெளிவர முடியாத" . (அரசு வெற்றியை வைத்து அரசியல் செய்கிறாத அல்லது இது வரையில் சர்வாதிகாரத்திற்கு நாட்டை இட்டுவந்த சிங்கள மோடையதனத்தை வைத்து சிங்கள மக்களை மேலும் மோடையாக்காளாகி சர்வாதிகாரத்தை இறுக்குகிறதா?. வெற்றியயை வைத்து அரசியல் செய்வது என்பது, முதல் தடவை அல்கோரிடம் தோற்ற புஸ் ஈராக் சண்டை வெற்றியை வைத்து ஜோன் கெரியை உண்மையான ஜனநாய முறையில் தோற்கடித்தமையாகும். இதில் புஸ்சை விட நல்ல வேட்பாளர் கெரியை அமரிக்க மக்கள் போர் வெறி ஊட்டபட்டதால் தோற்கடித்தார்கள்.  ஆனால் கிழக்கு மாகாணத்தில் 4 பிரதிநிதிகளுடன்  முற்றாக தோற்கடிக்கபட்ட அரசு, அரசுக்கெரிராக பிரசாரம் செய்து  7 பிரதிநிதிகள் பெற்ற மு.கா.வை சர்வாதிகாரத்தால் மிரட்டி பணியவைத்து 11 ஆசனங்கள் பெற்ற பெரும்பாண்மை கட்டிசியான கூட்டமைபை அரசாங்கம் அமைக்காமால் தடுத்துவிட்டது. இதில் மிரடப்பட்ட கக்கீம் தான் "சூழ்நிலைக் கைதியாக" இருப்பத்தால் கூட்டமைப்பை வடமாகாண தேர்தலை புறக்கணிக்காமல் அரசாங்கத்தை எதிர்த்து  போட்டியிரும்படி ஆலோசனை கூறிவிட்டு போயிருக்கிரார்.  ஆசிரியர் எப்படி இந்த சம்பவங்களை தனது ஆராய்வில் உட்படுத்தாமல் அரசு தனது போர் வெற்றியை பாவிக்கிறதாக நடிக்க முடியும். அரசு ஜனநாயகத்தில் போர் வெற்றியை வெறும் undue advantage ஆக மட்டும்தான் பாவிக்கிறது என்று கூற முடியாது.   Undue advantage ன் ஒரு உதாரணம் நாட்டில் கொலரா பரவி நாட்டுமக்கள் பயந்தால் அதை தடுக்க வேண்டியது ஜனநாக அரசின் கடமை. ஆனால் கொலராவை நீக்கினால், பயந்த மக்கள் கட்டயாயம் பயத்தை நீக்கிய அரசுக்கு வாக்களிப்பார்கள்.  இதை எதிர்கட்சி ஒன்றுடன் மோதும் அரசு கொள்கை விளக்க தேர்தல் பிரசாரத்தால் சந்திக்க மறுத்து கொலரா காரணத்தை காட்டி தேர்தல் வெல்ல முயலன்றால் அது கொடுமை அல்ல, ஆனால் சரியில்லை.  என்வே அரசு கிழக்கில் மாகாணசபை அமைத்தவிதம் தேர்தல் வெற்றியால் அல்ல.  வெள்ளைவான் அரசியலால். இதுதான் வேறு வகைகளில் மற்றைய மாகாணங்களில் நடப்பதும். பலவகை தேர்தல் ஊழல்கள் மூலம் - வேலை - பணம்- சாராயம்- சண்டித்தனம்.) வெள்ளைவான் அரசியலை ஆசிரியர் தேர்தல் வெற்றி அரசியல்லாக்கப் பார்க்கிறார்.

 

4. "தன் சொந்த வெற்றிச் சிறைக்குள்ளிருந்து வெளிவர முடியாத ஓர் அரசாங்கத்திற்கு எதிராக நாடாளுமன்றத்துக்கு வெளியே போராடத் தேவையான திடசித்தமோ தீர்க்கதரிசனமோ தியாக சிந்னையோ அதற்குரிய பாரம்பரியமோ படைப்புத் திறனோ கூட்டமைப்பிடம் இருப்பதாகத்தெரியவில்லை." (இதே ஆசிரியர் அல்லவா தோற்றது அரசின் எதிரிகள் எல்லோரும்தான் என்கிறார். இதே ஆசிரியர் அல்லவா மேற்குநாடுகள் தமது வகையான அரசு மாற்றம், அரசு மீதான அழுத்தம் என்பவற்றை முயற்சிக்கின்றன என்கிறார்.  அதன் பின் ஏன் தானோ குற்றம் சட்ட மட்டும் கூட்டமைப்பை மட்டும் தனிய தெரிந்து எடுத்து "திட சித்தம், தீர்க்க தரிசனம், தியாக சிந்தை படைப்பு திறன் இல்லாத" ஒன்று என்கிறார். ஆசிரியரின் அப்பட்டமான முயற்சி கூட்டமைப்பு தனது புதிய பாதையாக மேற்கு நாடுகளுடன் இணைந்த ராஜதந்திர போர் என்பதை முன் கதவால்  வந்து அதை எடுத்து வைத்து ஆராயமல் பின் கதவால் சென்று அதை"சீறோ" வாக அறிவித்து விடும் முயற்சி மட்டுமேயன்றி உண்மையான அரசியல் அலசல் அல்ல)

 

"அத்தகைய பேராளுமைகள் அற்ற ஒரு வெற்றிடத்திலேயே இந்தியாவும் மேற்கு நாடுகளும் தமிழ் அரசியலை கையாள வேண்டியிருக்கிறது. இதனால், தமிழர்கள் தமது சொந்த நிகழ்ச்சி நிரலை சக்தி மிக்க நாடுகளின் நிகழ்ச்சி நிரலோடு பொருந்தச் செய்வதற்குப் பதிலாக சக்தி மிக்க நாடுகளின் கருவிகளாகவோ அல்லது அழுத்தக் குழுக்களாகவோ அல்லது அரசியல் நொதியங்களாகவோ சுருங்கிப்போகும் அபத்தும் உண்டு. "

 

மேற்கு நாடுகளால் தீர்வொன்றை பெற்றுதரும் படி அவர்களை வலிய இலங்கை அரசியலில் இழுத்துவந்துவிட வேண்டியது இன்றைய தமிழரின் நிலை. அதில் பாவிக்கத்தக்க ஆயுதம் மேற்கு நாடுகளை அவர்களின் நண்பனான  இலங்கை அரசு எமாற்றி விட்டது என்ற ஒரு உண்மையாகும். அதாவது  ஆசிரியரின் மழுப்பு வசனங்களில் "அரசின் எதிரிகள் எல்லோரும் தோற்றுவிட்டர்கள்" என்ற உண்மை.

 

இதில் ஆசிரியர் படைப்புத்திறன் என்பது ஆரியரின் கட்டுரை சமைக்கும் ஆற்றலுக்கு மட்டும் தான் பொருந்தும். அரசியல் தீர்வை முன்வைக்கும் ஆற்றல் என்பது ஒடுக்கபட்ட இனத்திற்க்கு மட்டுப்படுத்தப்பட்டது. அதன் மறுவளம், ஒரு இனம் அரசியல் தீர்வுகள் காணும் சாத்தியங்கள் இல்லாது போய்கொண்டிருக்கும் போது ஒடுக்கப்பட்ட இனமாக மாறும். இது இன்று கூட்டமைப்பு படைப்பு திறன் இல்லது போனதால் வந்து அல்ல.  டொனமூர் கமிசன், சோலபரி கமிசன், பண்டா- செல்வா ஒப்பந்தம், டட்லி- செல்வா ஒப்பந்தம், இலங்கை-இந்திய ஒப்பந்தம், நதிக்கடல் யுத்தம் எல்லவற்றிலும் தமிழர் தரப்பு மட்டும் இணக்க அரசியலிலும், எதிர்ப்பு ஆயுத போராட்டத்திலும் தோல்வியை தழுவிதால் வந்தது. இன்றைய கூட்டமைப்பின் பாதை புதியது. வெளிநாடுகள் "தமிழர் உரிமைகளை இழந்திருக்கிறார்கள்" என்றதை இன்று ஏற்றுக்கொள்கிரார்கள் இது பழைய முயற்சிகளில் சிங்கள அரசுகள் மனச்சாட்சி இல்லாமல் நம்ப வைத்து ஏய்தார்கள் என்றதை ஒத்துக்கொள்கிறார்கள். 

 

அமெரிக்கா தூதுவர் இரண்டுதடவை "தமிழர்கள் மீண்டும் போராடலாம்" என்றிருக்கிறார். அவர் இதை சொல்ல உள்ளக காரணம் ஏதாவது இருக்கா என்பது தெரியாது. வெளிப்படையான காரானம், அரசு தொடர்ந்து மிரண்டு பிடித்தால் அது அரசு கனவிலும் எதிர்பாராத எதிர்வினைகளையும் கொண்டு வரலாம் என்று அரசுக்கு கூறும் ஒரு பொது அறிவுரையே. அதில் உள்ளடக்கம் கற்பிற்பதை அரசியல் முதிர்ச்சி இனமையாக மட்டும்தான் வர்ணிக்கலாம்.  எனவே இந்த பேச்சை வைத்துதான் படைப்புத்திறன் இல்லாத கூட்டமைப்பு "சக்தி மிக்க நாடுகளின் கருவிகளாகவோ அல்லது அழுத்தக் குழுக்களாகவோ அல்லது அரசியல் நொதியங்களாகவோ சுருங்கிப்போகும்" என்று எதிர்வு கூறுகிராயின் அது அவரின் அரசியல் ஆராச்சியில் அரசியல் முதிர்ச்சி இன்மையைத்தான் காட்டும்.

 

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.