Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவுக்கான 450 மில்லியன் ரூபா நிதியுதவியை விலக்கிக் கொண்டது அமெரிக்கா

Featured Replies

சிறிலங்காவுக்கான 450 மில்லியன் ரூபா நிதியுதவியை விலக்கிக் கொண்டது அமெரிக்கா [ புதன்கிழமை, 01 மே 2013, 01:54 GMT ] [ கார்வண்ணன் ]

 

US_FLAG.jpg

 

சிறிலங்காவின் நீதித்துறையை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்ட 450 மில்லியன் ரூபா நன்கொடையை அமெரிக்கா திரும்பப் பெற்றுள்ளது. 

சிறிலங்காவின் நீதி அமைச்சு அல்லது பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயற்திறனின்மை மற்றும் அலட்சியம் காரணமாகவே அமெரிக்கா இந்த நிதியை மீளப்பெற்றுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. 

சிறிலங்காவின் நீதித்துறையை தரமுயர்த்தும் நோக்கில், சட்டரீதியான தாமதங்களை தவிர்க்கும் வகையில், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்காகவே இந்த நன்கொடையை அமெரிக்கா வழங்கியது. 

சிறிலங்கா அரசாங்க அதிகாரிகளுடன் இணக்கப்பாட்டுக்கு வரமுடியாத நிலையிலேயே அமெரிக்கா இந்த நிதியுதவியை திரும்பப் பெற்றுள்ளது. 

நன்கொடை திரும்பப் பெறப்பட்டுள்ளதை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். 

இந்த நிதியுதவியின் மூலம் சிறிலங்காவின் நீதித்துறையை தரமுயர்த்துவம் வகையில், நீதிமன்றச் செயற்பாடுகளை கணினி மயப்படுத்துவது, நீதிபதிகளுக்கு தீர்ப்புகளை எழுதுவது குறித்த பயிற்சிகளை வழங்கல், நீதிபதிகளுக்கு காணொலிக் கலந்துரையாடல் வசதிகளை ஏற்படுத்தல் போன்ற திட்டங்களை நடைமுறைத்த திட்டமிடப்பட்டிருந்தது. 

இதன்படி நீதிபதிகள் கொழும்புக்கு செல்வதை தவிர்ப்பதற்காக காலி, கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் மூன்று நிலையங்களை அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

அத்துடன் மரபணு ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு வசதிகளை அறிமுகப்படுத்தும் வகையில் அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்களத்தை தரமுயர்த்தவும் திட்டமிடப்பட்டிருந்தது. 

சிறிலங்காவில் அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் வசதிக் குறைபாடுகளால் பெருமளவு குற்றவியல் வழக்குகள் தாமதமாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் சிறிலங்கா நிதீபதிகளுக்கு அமெரிக்காவில் நீதித்துறை அனுபவங்களைப் பெற்றுக் கொடுப்பதும் இந்தத் திட்டத்தில் உள்ளடங்கியுள்ளது. 

அமெரிக்க நிதியுதவி திரும்பப் பெறப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள சிறிலங்கா நீதியமைச்சின் செயலர் கமலினி டி சில்வா, அந்த நிதியுதவி மீள முறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

நீதித்துறை செயற்பாடுகளுக்காக ஒதுங்கப்பட்ட அந்த நிதி, நீதித்துறை மற்றும் நீதித்துறை சாராத பயிற்சி மற்றும் ஏனைய திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

நீதி அமைச்சுக்கான நிதியுதவியாக இருந்தாலும், இதனைப் பெறுவது குறித்த பேச்சுக்களை சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சே மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அதேவேளை, சிறிலங்காவுக்கான நன்கொடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள அமெரிக்கத் தூதரகம், அது மீளமுறைப்படுத்தப்படுவதற்கு எந்த சாத்தியமும் இல்லை என்றும் கூறியுள்ளது. 

எதிர்காலத்தில் இத்தகைய நன்கொடைகள் குறித்து அனுமானிக்க முடியாது என்றும் அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20130501108186

நம்ம அமைச்சர் கக்கீமின் இன்னொரு புகழ் பெற்ற கைங்கரியம்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

 

 ரொம்ப... தாங்ஸ்.
இது, முதலே.... தெரிஞ்சிருந்தால், கூட கடன் வாங்கியிருப்பம். 

  • தொடங்கியவர்

நிதியுதவியை சிறிலங்கா உதறித் தள்ளியதற்கு காரணமான அமெரிக்காவின் நிபந்தனை [ வியாழக்கிழமை, 02 மே 2013, 04:41 GMT ] [ கார்வண்ணன் ]

 

us-sl-flag.jpg

 

அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்க முடியாது என்பதாலேயே அந்த நாடு வழங்கிய நிதியுதவியை சிறிலங்கா நிராகரித்ததாக, சிறிலங்காவின் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிகாரிகளுடன் இணக்கப்பாட்டுக்கு வரமுடியாது போனதால், நீதித்துறை மறுசீரமைப்புத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட 450 மில்லியன் ரூபா நிதியுதவியை விலக்கிக் கொள்வதாக அமெரிக்கா கூறியிருந்தது.

இதுகுறித்து இந்திய ஊடகம் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ள, சிறிலங்காவின் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், “நிதியுதவியுடன் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் சிறிலங்காவின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதாலேயே அது நிராகரிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

நன்கொடைக்கான நிபந்தனைகள் ஒரு இறைமையுள்ள நாடு என்ற எமது நிலைக்கு ஏற்றதாக இருக்கவில்லை.” என்றும் அவர் கூறியுள்ளார்.

அந்த நிபந்தனைகள் குறித்து வினவியபோது, “இதற்கு மேல் என்னால் சொல்ல முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, இந்த நன்கொடை நிதியைப் பயன்படுத்தும் குழுவின் தலைவராக சிறிலங்காவின் தலைமை நீதியரசர் மொகான் பீரிஸ் இருப்பதே, இந்த சர்ச்சைக்குக் காரணம் என்று கொழும்பில் இருந்து வெளியாகும் ‘டெய்லி மிரர்‘ நாளிதழ், பெயர் வெளியிடப்படாத அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி தகவல் வெளியிட்டுள்ளது.

தலைமை நீதியரசர் மொகான் பீரிசின் நியமனத்தை தாம் அங்கீகரிக்கவில்லை என்பதால், அவர் அந்தக் குழுவின் தலைவராக இருப்பதற்கு அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

ஆனால், மொகான் பீரிசே தலைவராக இருக்க வேண்டும் என்று சிறிலங்கா வலியுறுத்தியுள்ளது.

ஒரு இறைமையுள்ள நாடு என்ற வகையில் அமெரிக்காவின் இந்த எதிர்ப்பு ஏற்றுக் கொள்ள முடியாது என்று சிறிலங்கா கருதுவதாகவும் கொழும்பு டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

 

http://www.puthinappalakai.com/view.php?20130502108196

 

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

இதிலும் தனது பல முகத்தை காட்டால் அமெரிக்காவுக்கு எதிரான இலங்கை அரசின் நடவடிக்கைகளை கக்கீம் தீர்மானம் எடுத்து நடத்துவது தமிழருக்கு நிம்மதியான ஒரு விடையம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.