Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

த.தே.கூவே மக்களை தூண்டி விட்டு ஆர்ப்பாட்டத்தினை செய்கின்றதாம்; கண்டுபிடித்து கூறுகிறார் விமல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

த.தே.கூவே மக்களை தூண்டி விட்டு ஆர்ப்பாட்டத்தினை செய்கின்றதாம்; கண்டுபிடித்து கூறுகிறார் விமல்

 

 

8823380bc703f543b8d85770e895c334.jpg

வடக்கில் பரம்பரை பரம்பரையாக  வாழ்ந்து வந்த முஸ்லிம் சிங்கள மக்களை விடுதலைப் புலிகள் வடக்கில் இருந்து விரட்டியடினர். எனினும் தற்போது சமாதானம் ஏற்பட்டுள்ள வேளையில் இடம்பெயர்ந்து வாழும் மக்களை அரசாங்கம் மீளகுடியேற்ற முற்படும்பொழுது தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இதனை இன ரீதியாகவே பார்க்கின்றனர் என வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் வாழும் 1000 வறிய குடும்பங்களுக்கு 175 மில்லியன் ரூபா நிதியினை வீடமைப்புக் கடனாக வழங்கி வைக்கும் வைபவம், பிலியந்தலை மத்திய மகா வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 

தமிழ் மக்களுக்கு மட்டுமே வட மாகாணம் பூர்வீக நிலம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் சொந்தம் கொண்டாடுகின்றனர். அதுமட்டுமல்லாமல் அவர்களது அரசியல் இலாபத்திற்காகவே தமிழ் மக்களை தூண்டி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். காலத்திற்கு காலம் தேர்தல்கள் வரும்போது அவர்களின் நிகழ்ச்சி நிரலில் இன ரீதியன செயற்பாடுகள் இடம்பிடிக்கின்றன.

ஆனால் வடக்கில் வாழும் தமிழ் மக்கள் மேல் மாகாணத்தில் எந்தப் பகுதிக்கும் சென்று குடியேறி வாழக்கூடிய சமாதான சூழலை அரசு ஏற்படுத்தியுள்ளது. 

அத்துடன்வடக்கில் மட்டும் 20 வருடங்களுக்கு முன் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த மக்களை மீளக்குடியேற்றும் போது இவர்கள் இன ரீதியாகச் சிந்தித்து இன குரோதங்களை மீண்டும் தமிழ் மக்களிடையே தூவி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

அமெரிக்க தூதுவர் அண்மையில் கொழும்பு, காலி முகத்திடலில் குப்பை பொறுக்கும் காட்சிகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டன. அவர் அவருக்குரிய வரம்புக்குள் நில்லாமல் அவர் கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லீம் முக்கிய உறுப்பினர்களை கொழும்புக்கு அழைத்து இரகசிய பேச்சுவார்த்தை நடத்துகின்றார். மேலும் அவர் கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்களை பிரிப்பதற்கே துணை போகின்றார்.

அத்துடன் கிழக்கு மாகணாத்தில் உள்ள மாகணசபையில் உள்ள ஆட்சியை பிரித்து  தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கூட்டாச்சியை ஏற்படுத்துவதற்கு முயலுகின்றார்.  

அதே போன்று வட மாகாண சபையிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியை கொண்டுவருவதற்கும் அமெரிக்கா தூதுவர்  செயல்படுகின்றார். இந்த நாட்டை முழுமையாள குப்பை மேடாக்குவதே அவரது முயற்சி.

நிதியமைச்சின் செயலாளர் டி.பி.ஜயசுந்தர மின்சார கட்டண அதிகரிப்பின் புதிய வரைபு திட்டத்தினை உருவாக்கியவர். ஜயசுந்தர போன்றவர்களுக்கு ஏழை மக்களின் பசி பட்டினி விளங்குவதில்லை. இம்மக்கள்  பற்றி ஒரு சிறிதளவேனும் அன்பு கருணை இல்லாதவர்கள். 

இந்த மின் கட்டண அதிகரிப்பை மீள்மாற்றம் செய்து குறைந்த வீட்டுப் பாவனையாளர்களான ஏழை மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய வகையில் மின்கட்டணம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். என விமல் வீரவன்ச மேலும் தெரிவித்தார். 

 

http://onlineuthayan.com/News_More.php?id=345492009202279155

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.