Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த சிந்தனைக்கு மற்றொரு வெற்றி! இரண்டானது கூட்டமைப்பு?!

Featured Replies

மஹிந்த சிந்தனைக்கு மற்றொரு வெற்றி! இரண்டானது கூட்டமைப்பு?!

— 

01/05/2013 at 11:18 pm

 

 

sampanthan-150x150.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் காணப்படும் முரண் நிலை மன்னார், கிளிநொச்சி ஆகிய இடங்களில் இடம்பெற்ற இருவேறு  மேதின நிகழ்வுகள் ஊடாக பகிரங்கப்படுத்தியிருப்பதாக தெரியவருகின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இன்றைய மேதின நிகழ்வுகளை நடத்துவது தொடர்பிலும் கூட்டமைப்பிற்குள் ஒருமித்த நிலைப்பாட்டினை எடுக்க முடியவில்லை. இந்த நிலையில் தமிழரசுக்கட்சியின் எதிர்காலத் தூண்களில் ஒருவராகக் கருதப்படுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் மேதின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

 

குறித்த நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் மாவைசேனாதிராஜா, மற்றும் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரியநேத்திரன், யோகேஸ்வரன் ஆகியோர் பங்குகொண்டிருந்தனர். குறித்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் பெறுகின்ற ஏனைய கட்சிகளின் முக்கியஸ்தர்கள் எவரும் பங்கெடுக்கவில்லை என்று தெரியவந்திருக்கின்றது.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகள் ஒன்றிணைந்து முன்னெடுத்த மேதின நிகழ்வு மன்னாரில் நடைபெற்றுள்ளது. மன்னார் நிகழ்விற்கான ஏற்பாட்டினை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேற்கொண்டிருந்தார்.

குறித்த நிகழ்விற்கு தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, ஈபிஆர்எல்எப் கட்சி முக்கியஸ்தரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் மற்றும் ரெலோ கட்சியினைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம் ஆகியோரும் பங்குகொண்டிருந்தனர். குறித்த நிகழ்வில் தமிழரசுக்கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பங்கெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பொதுமுன்னணியாக கட்சியாக பதிவு செய்வதாக ஈபிஆர்எல்எப், ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் தமது மத்திய குழுக்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர்களுக்கும் ஏனைய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமான விரிசல் நிலை இன்னமும் அதிகரித்திருப்பதன் வெளிப்பாடே குறித்த இரண்டு நிகழ்வுகளும் என்று நோக்கர்கள் கருத்துவெளியிட்டுள்ளனர்.

முன்னாள் ஆயுதக் குழுக்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை கட்சியாகப் பதிவு செய்வதற்கு அரசாங்கம் எதிர்ப்பினை வெளிப்படுத்தும் என்பதால் கட்சியினைப் பதிவு செய்வது சாத்தியமில்லை என்று கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் அண்மையில் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத் தக்கது.

http://tamilleader.com/?p=11558

 

இது தமிழ் லீடரின் செய்தி. நாள் போகத்தான் உண்மை தெரிய வரும். ஒன்று தமிழரசுக்கட்சியின் பெயரிலும், மற்றயது கூட்டமைப்பின் பெயரிலும் நடத்தப்பட்டது.

Edited by மல்லையூரான்

ஓ ... இது இது தமிழ் லீடரின் செய்தியா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.