Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சித்தம் - (மருத்துவம் ....இன்னும் பல) தமிழர்களின் வாழ்வியல் உணவும் மருந்தும்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சித்த மருத்துவத்தில் பூவரசம் பூக்கள்

poovarasu-500x250.jpg
 

பூவரசம் மரத்தில் இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரச மரத்தின் பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்தமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக இந்த இலைகளை விஷத்தை போக்கும் வல்லமை உடையதால் இதனை பூச்சிக்கடி மற்றும் விஷ வண்டுகடிகளுக்கு மருந்தாக இந்த பூக்களை சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

நீர் பாதியாக சுண்டும் போது இறக்கி வடிகட்டி காலை மாலை வேளைக்கு இரண்டு அவுன்ஸ் குடிக்கவேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினமும் இதுபோல புதிதாக கஷாயம் தயாரித்து குடித்து வரவேண்டும். பின்னர் மூன்று நாட்கள் இடைவெளி விட்டு, மறுபடியில் மூன்று நாட்கள் சாப்பிடவேண்டும். இதனால் விஷக்கடி மூலம் ஏற்பட்ட ஊறல், தடிப்பு, அரிப்பு, மயக்கம், சோம்பல் போன்றவை நீங்கும்.

சொறி, சிரங்கு சொறி சிரங்கினால் அவதிப் படுபவர்கள் பூவரசம் பூவை அரைத்து அவற்றின்மீது பூசிவர தோல் மென்மையாகும், சொறி சிரங்கு குணமடையும். விஷக்கடி குணமாகும் பூச்சிக்கடி, வண்டுக்கடி, காணாக்கடி போன்ற பூச்சிகள் கடித்து அதனால் தோலில் ஊறல் நோய் ஏற்படும். அவர்கள் பூவரசம் பூ 25 கிராம் எடுத்து நசுக்கி, பழகிய மண்சட்டியில் போட்டு, 200 மில்லிலிட்டர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.

இந்த கஷாயம் உட்கொள்ளும் போது எண்ணெய், கடுகு தாளிக்காமல் சாப்பிடவேண்டும். மீன், கருவாடு சேர்க்கக் கூடாது. மூட்டு வீக்கம் வயதான காலத்தில் மூட்டுப் பகுதியில் நீர் கோர்த்து வீக்கத்தால் அவதிப்படுபவர்கள், பூவரசம் பூவுடன் சமஅளவு, காய் பட்டை, எடுத்து அரைத்து நல்ல எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி, மூட்டு வீக்கங்கள் மேல் பூசிவர வீக்கம் குணமடையும்….
 
http://poonthaimalar.blogspot.co.uk/

  • Replies 364
  • Views 676.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனம் அது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்

மனம் அது செம்மையானால் வாசியை அடக்க வேண்டாம்

மனம் அது செம்மையானால் வேதங்கள் ஓத வேண்டாம்

மனம் அது செம்மையானால் இறைவனை தேடித் திரியவேண்டாம்

“மனம் என்ற கோவில் திறக்கின்ற நேரம் அழைக்காமலே அங்கு தெய்வம் வந்து சேரும்”

இவை அனைத்தையும் சொன்னவர் “திருமூலர்”

 

உடல் எடையை குறைக்க இப்போது, சிரமமே இல்லாத செலவே பிடிக்காத வழிமுறையை கண்டு பிடித்து, மருத்துவ வல்லுனர்கள் வெளியிட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள உணவு உயிர் தொழில்நுட்ப வல்லுனர் ஆங்குர் தேசாய் மற்றும் லா ட்ரோப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் வருமாறு:-

குண்டான உடலை இளைக்கச் செய்வதில் கரும்பு முக்கிய பங்கு வகிக்கிறது. கரும்புச் சாற்றில் உள்ள ரசாயனங்கள், உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரையச் செய்கிறது. இதன் மூலம் உடல் எடை குறைகிறது. எடை குறைவதால் ஏற்படும் உடல் சோர்வையும் கரும்பு சாறு தடுக்கிறது. ரத்த அழுத்தத்தையும் இது கட்டுப்படுத்துகிறது. உடலில் சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.

பயன்படுத்த தொடங்கிய 12 வாரங்களில் இதன் பலன் வெளிப்படையாக தெரிய வரும். பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தாமல், உடல் எடையை குறைக்க கரும்பு பயன்படுகிறது.

இவ்வாறு அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

1173670_524043991022258_660259279_n.jpg

 

 

வாய்புண் தொல்லைக்கு வீட்டிலேயே மருந்திருக்கு! ! ! !

நெல்லி இலைகளை அவித்த நீரீனால் அடிக்கடி வாய் கொப்பளித்துவர வாய்ப்புண்கள் ஆறிவிடும். நெல்லிச் சாறையும், தேனையும் சமமாகக் கலந்து, மூச்சுத் திணறல், நீண்ட கால விக்கல் நோய் முதலியவற்றிற்குக் கொடுத்து வரலாம். சில மருத்துவர்ள் இதோடு திப்பிலி சூரணத்தையும் சேர்த்துக் கொடுப்பார்கள்.

வாய்ப்புண் போக, மணத்தக்காளி இலைகளை நிறைவாய் போட்டு மென்று, சற்று நேரம் வாயில் வைத்திருந்து விழுங்கவும். இவ்வாறு முற்றின தேங்காயையும் உபயோகிக்கலாம்.

வாயில் வயிற்றில் புண் இருந்தால் பாலில் சிறிது தேனைக் கலந்து சாப்பிட்டுவர சில நாட்களில் புண் குணமாகும். வாய்ப்புண் அதிகமாகி விட்டால் காரத்தை அடியோடு நிறுத்த வேண்டும். மாசிக் காயை உடைத்து அதன் தோலை மாத்திரம் வாயில் போட்டு அப்படியே அடக்கிக் கொள்ளுங்கள். ஊறிவரும் நீரை விழுங்குங்கள். வாய்ப்புண் சரியாகிவிடும்.

வாயில் புண் இருந்தால், அகத்திக்கீரையைச் சமைத்துப் சாப்பிடவும். வாய்ப்புண்ணும் நாக்குப் புண்ணும் குணமாகும். புண் அதிகமாக இருந்தால், புண் மீது பசு வெண்ணையைத் தடவுங்கள். குழந்தைகளுக்கு வாய்ப்புண் வந்தால், மாசிக்காயை பாலில் கரைத்து தேனில் குழைத்து நாக்கில் தடவ குணமாகும்.

தீராத வாய்ப்புண்ணிற்கு கடுக்காயை உடைத்து ஒரு துண்டை வாயில் அடக்கி வைத்திருக்கவும். சாறு தொண்டையில் போகப்போக உடனடியாக குணம் கிடைக்கும். பச்சரிசி, பயத்தம்பருபபு 1 ஸ்பூன் வெந்தயம், முழு பூண்டு 1 உரித்துப்போட்டுகுக்காரில் வைத்து வெந்தவுடன், அத்துடன் கெட்டியான தேங்காய்ப்பால் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்புண் ஆறி வாய்ப்புண்ணும் நீங்கும். மணத்தக்காளிக் கீரையையும், அகத்திக் கீரையையும் பொரியலாகச் செய்து, தேங்காய்ப் பருப்பு சேர்த்து சாப்பிட்டால், வாய்புண் இரண்டே நாட்களில் குணமாகும்.

1378516_698182050199845_2118050996_n.jpg

 

 

பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் உதிரப்போக்கு..!

சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு!

பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் உதிரப்போக்கு, உரிய அளவைவிட அதிகமாகவும், அதிக நாட்களுக்கும் இருந்தால் அதை அதிஉதிரப்போக்கு எனகிறோம்.

காரணங்கள்:

ரத்தம் உறைவதில் ஏற்படும் குறைஷ்பாடுகளினாலும், ரத்தசோகை, தைராய்டு நோய்கள், காசநோய், கருப்பைக் கட்டிகள், சினைப்பை நீர்க்கட்டிகள், கர்ப்பத்தடை மாத்திரைகள் உட்கொண்டதன் பின்விளைவுகள் போன்ற காரணங்களாலும் அதிக உதிரப்போக்கு ஏற்படும்.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

அத்திப் பட்டையை மோர் சேர்த்து இடித்துச் சாறு எடுத்து 30 மி.லி. அருந்தலாம்.

அத்திப் பால் ஐந்து சொட்டு எடுத்து வெண்ணெய் சேர்த்து உண்ணலாம்.

குங்கிலியத்தை நெய்விட்டுப் பொரித்து நீர் சேர்த்துக் குழைத்து, கால்ஸ்பூன் உண்ணலாம்.

இளம் வாழைப்பூவை அவித்து 30 மில்லி சாறெடுத்துத் தேன் கலந்து உண்ணலாம்.

இத்தியின் பிஞ்சை அரைத்து, கொட்டைப் பாக்கு அளவு உண்ணலாம்.

தொட்டாற்சிணுங்கியின் இலைச் சாற்றை 15 மி.லி. அருந்தலாம்.

நாவல் பட்டை, ஆவாரைப் பட்டை சம அளவு எடுத்து நான்கு பங்கு நீர் சேர்த்து, ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம்.

கால்ஸ்பூன் லவங்கப் பட்டைப் பொடியை எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.

கவிழ்தும்பை இலையைக் கைப்பிடி அளவு எடுத்துத் தேன் சேர்த்து, வதக்கி நீர் சேர்த்துக் காய்ச்சி அருந்தலாம்.

அசோகப் பட்டையை இடித்துச் சாறு எடுத்து 30 மி.லி. அருந்தலாம்.

கட்டுக்கொடியின் இலைச்சாற்றை ஒரு டேபிள்ஸ்பூன் அருந்தலாம்.

முள்இலவுப் பட்டை, தாமரைக் கிழங்கு, செம்பருத்தி வேர் இவற்றின் பொடியைக் கலந்து, அதில் அரை ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து உண்ணலாம்.

மந்தாரைப் பூ மொக்கு ஐந்து எடுத்து ஒரு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சிக் கால் டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.

அரசம்பட்டை, ஆலம்பட்டை சம அளவு எடுத்து சிதைத்து, நான்கு பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம்.

மாங்கொட்டைப் பருப்பின் பொடியை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து உண்ணலாம்.

நிலப் பூசணிக் கிழங்கின் பொடியுடன் சர்க்கரை, வெண்ணெய்ச் சேர்த்துக் கிண்டி நெல்லிக்காய் அளவு உண்ணலாம்.

வாலுளுவைப் பொடியை இரண்டு கிராம் எடுத்துத் தேனில் கலந்து உண்ணலாம்.

திப்பிலி ஐந்து பங்கு, தேற்றான் மூன்று பங்கு சேர்த்து அரைத்து அதில் நான்கு கிராம் நீராகாரத்தில் கலந்து, காலையில் குடிக்கலாம்.

மாம்பிசின், விளாம்பிசின் பொடி சமஅளவு எடுத்து, அதில் கால் ஸ்பூன் மோரில் கலந்து உண்ணலாம்.

கீழாநெல்லியின் வேர்ப்பொடியை அரை ஸ்பூன் எடுத்து நீராகாரத்துடன் கலந்து உண்ணலாம்.

சேர்க்க வேண்டியவை:

துவர்ப்புச் சுவை உள்ள உணவுகள், அத்திப் பழம், பேரீச்சை, பால், தயிர், காளான், சிகப்புத் தண்டுக்கீரை, ஈரல்.

நீக்க வேண்டியவை:

இஞ்சி, பூண்டு, காயம், அன்னாசி, எள், பப்பாளி, நல்லெண்ணெய்.

1378513_524036557689668_1329211490_n.jpg

 

 

வெள்ளைப்படுதல் நோய்.! சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு!

பெண்களின் பிறப்புறுப்பின் வழியே வெண்ணிறக் கசிவு வெளியேறுவதை வெள்ளைப்படுதல் நோய் (Leucorrhea) என்கிறோம். நுண்ணுயிர்த் தொற்று, சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று, கருப்பை வாய்ப்பகுதி வீங்குதல், கருப்பை மற்றும் யோனியில் புண், புற்றுநோய் போன்றவற்றால் வெள்ளைப்படும் நோய் ஏற்படலாம். சில சமயம் அந்தப் பகுதியில் நமைச்சலும் துர்நாற்றமும் ஏற்படும்.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

கீழாநெல்லி இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து, தயிரில் கலந்து 10 நாட்கள் தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் உண்ணலாம்.

அம்மான்பச்சரிசி இலையை அரைத்துச் சுண்டைக்காய் அளவு எடுத்து, தயிரில் கலந்து பருகலாம்.

பொடுதலை இலையுடன், சம அளவு சீரகம் சேர்த்து அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.

கைப்பிடி அளவு வெள்ளருகுடன் 5 மிளகு, ஒரு பல் பூண்டு சேர்த்து அரைத்து மோரில் கலந்து அருந்தலாம்.

இரண்டு செம்பருத்தி பூவுடன், சிறு துண்டு வெண்பூசணி சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, சர்ககரை சேர்த்து அருந்தினால் ரத்தத்தோடு கூடிய வெள்ளைப்படுதல் குணமாகும்.

ஜவ்வரிசியை வேகவைத்துப் பால் சேர்த்து 10 நாட்கள் அருந்த, வெள்ளை, ரத்த வெள்ளை, சீழ்வெள்ளை ஆகியன குணமாகும்.

பொரித்த படிகாரம், மாசிக்காய், வால்மிளகு சம அளவு எடுத்துப் பொடித்து, அதில் கால் ஸ்பூன் எடுத்து வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் சீழ்வெள்ளை, ரத்த வெள்ளை குணமாகும்.

இளநீரில் ஒரு ஸ்பூன் சந்தனத்தூளை ஊற வைத்து, அந்த நீரை வடித்துப் பருகி வரலாம். .

திப்பிலி 5 பங்கு, தேற்றான் விதை 3 பங்கு கலந்து நன்றாய்ப் பொடித்து, அதில் 4 கிராம் எடுத்துக் கழுநீரில் 3 நாட்கள் சேர்த்து உண்ணலாம்.

ஓரிதழ் தாமரை இலை, யானை நெருஞ்சில் இலை இவற்றைச் சம அளவு எடுத்து அரைத்து, நெல்லிக்காய் அளவுக்கு எடுத்து மோரில் கலந்து அருந்தலாம்.

பரங்கிப்பட்டை, சுக்கு, மிளகு, நற்சீரகம் இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதில் அரை ஸ்பூன் எடுத்து தேங்காய் பாலில் கலந்து பருகலாம்.

சப்ஜாவிதைப் பொடி ஒரு ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.

ஒரு கைப்பிடி துத்தியிலையை இடித்து 4 பங்கு நீர் சேர்த்து 1 பங்காக வற்றவைத்து அதில் பால், சர்க்கரை கலந்து பருகலாம்.

சிறு துண்டு கற்றாழையைத் தோல் சீவி, கசப்பு நீங்கப் பத்து முறை நன்கு கழுவி சர்க்கரை சேர்த்து, தினமும் காலையில் சாப்பிட்டுவர வெள்ளை, ரத்த வெள்ளை, சீழ்வெள்ளை ஆகியன குணமாகும்.

விஷ்ணு கிரந்திவேர், ஆவாரை வேர்ப்பட்டை சம அளவு எடுத்து அரைத்து அதில் நெல்லிக்காய் அளவு எடுத்துப் பாலில் உண்ணலாம்.

தண்ணீர்விட்டான் இலையை அரைத்து 30 மி.லி. சாறு எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.

தென்னம்பூவை இடித்து, 30 மிலி சாறு எடுத்து, மோர் சேர்த்துப் பருகலாம்.

உணவுகள்

சேர்க்க வேண்டியவை:

தர்பூசணி, வெண்பூசணி, வெள்ளரி, வெந்தயம், பசலைக்கீரை, தண்டுக்கீரை, பருப்புக்கீரை, இளநுங்கு, நாட்டு வாழைப்பழம், நல்லெண்ணய், பனங்கிழங்கு.

தவிர்க்க வேண்டியவை:

மசாலா மற்றும் காரம் நிறைந்த உணவுகள். எண்ணெயில் பொரித்த உணவுகள், கோழி இறைச்சி.

1383984_524039001022757_1933093474_n.jpg

Like · · Share · 716 · 2 hours ago

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனித உடல் ஓர் அதிசியம் !!

மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்று பொய் விடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானைக் காது அளவிற்கு இருக்கும்

ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம். உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே. பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறை கண்ணை சிமிட்டுகிறோம். இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.

உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள். விதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை. தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும்போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.

நமது பாதங்களை பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும் காரணம் ஒரு சதுர அடியில் வெறும் 3ல் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன

இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. வருடத்திற்கு நான்கு கோடி தடவை. இதயத்தின் இடதுபக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்.

நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, இரண்டு நீச்சல் குளங்களை அப்புறபடுத்த தேவையான க்ளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க கூடிய அளவிற்கு பாஸ்பரஸ், 10 பார் சொப்புகளுக்கு தேவையான கொழுப்பு ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு என பல பொருட்கள் உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாளில் இப்படி நிறையப் போட்டால் எப்படி வாசிக்கிறது ????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு நாளில் இப்படி நிறையப் போட்டால் எப்படி வாசிக்கிறது ????

 

என்ன செய்வது? தகவல்கள் கிடைக்கும் போதுதானே போடமுடியும். நான் எனக்கு தகவல்கள் கிடைக்க கிடைக்க போடுகிறேன், நீங்கள் மெதுவாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் உபயோகியுங்கள்.

 

நான் ஒவ்வொன்றாக பதிவேற்றம் செய்தாலும், yarl.com சில சமயங்களில் மொத்தமாகவே பதிவேற்றிக் கொள்கிறது.

அலர்ஜியா! கவலையை விடுங்க மிளகு இருக்கு

ஒவ்வொருவர் உடலுக்கும் ஒத்துக்கொள்ளாதது பொருட்கள் உண்டு. அதைச் பயன்படுத்தும் போதோ அல்லது உணவுக்காக சேர்த்துக் கொண்டாலும் அலர்ஜி ஏற்படும். இதைக் காணாக்கடி என்பர். இதனால் உடலில் அரீப்பும், தடிப்பும் ஏற்படும்.. இதைப்போக்க, சிறிது வேப்பிலையுடன் 7 அல்லது 8 மிளகை சேர்த்து வாயில் போட்டு நன்றாக கசகச என்று மென்று விழுங்க வேண்டும். இவ்வாறு நாள் ஒன்றுக்கு 3 வேளை சாப்பிட்டால், அரீப்பும் தடிப்பும் மறையும்.

எக்காரணத்தினால் தடிப்பு மற்றும் அலர்ஜி ஏற்பட்ழருந்தாலும், செய்ய வேண்டிய முதலுதவி. மருதாணி இலையின் சாற்றைப் பிழிந்து, தேங்காய் எண்ணெயில் கலக்கி நன்கு சுண்டவைத்து அதை உடலெங்கும் பூச கட்டுப்படும்..

அலர்ஜி என்றதும் மஞ்சளும், கருவேப்பிலையும் ஞாபகத்துக்கு வர வேண்டும். இரண்டையும் நன்றாக அரைத்து, ஒரு மாதம் சாப்பிட்டு வர, நோ அலர்ஜி, நோ நமைச்சல்.

தூசி அலர்ஜி & சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் சம அளவு எடுத்து இதில் சுக்கு தவிர மற்ற இரண்டையும் ஒரே பக்குவத்தில் வறுத்து, மூன்றையும் பொடி செய்து சலித்துக் கொண்டு, குப்பை மேனி என்னும் மூலிகைச் சாறை இந்தப் பொடியில் விட்டு அரைத்து, வெண்ணெய் போல் ஆனதும், ஒரு சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாய் உருட்டி, நிழலில் உலர்த்திக் கொண்டு, காலை- மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால், தூசி அலர்ஜி குணமாகும்.

1391845_524119501014707_1404683481_n.jpg

 

அலர்ஜி - ஒவ்வாமை

 

 

சில காய்களில் உள்ள மருத்து குணங்கள்:-

சுரைக்காய்:-

என்ன இருக்கு: நீர்ச்சத்து, புரதம், சுண்ணாம்புச் சத்து.இது உடல் சூட்டைத் தணிக்கும்.. இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது. ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும்.

யாருக்கு நல்லது: எல்லோரும் பகலில் மட்டும் சாப்பிடலாம்.

யாருக்கு வேண்டாம்:

சளித் தொந்தரவு உள்ளவர்களுக்கு.

பலன்கள்: இதயத்துக்கு வலிமை சேர்க்கும். ரத்தத்தை வளப்படுத்தி தாது பலம் சேர்க்கும். ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மையைப் (இழந்தவர்கள்) பெறுவார்கள்..

பூசணிக்காய்

என்ன இருக்கு: புரதம், கொழுப்பு

யாருக்கு வேண்டாம்: ஆஸ்துமா, தலைவலி, சைனஸ் நோயாளிகள், உடல் பருமனானவர்கள் சாப்பிடக் கூடாது.

யாருக்கு நல்லது: குழந்தைகளுக்கு. மூலச்சூடு நோய் உள்ளவர்களுக்கு மிகமிக நல்லது.

பலன்கள்: நரம்புகளுக்கு வலுவூட்டும். வயிற்றுப் புண்களை ஆற்றும். உடல் எடையைக் கூட்டும். வெண்பூசணியே நல்லது.

கொத்தவரைக்காய்

என்ன இருக்கு : நார்ச்சத்து

யாருக்கு நல்லது : நீரிழிவு, ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு.

யாருக்கு வேண்டாம்: சிறுவர்கள், நோயுற்றோர் இதனை தவிர்ப்பது நல்லது. குறிப்பிடும்படியான சத்துக்கள் இல்லை. வாயுத் தொல்லை, லேசான நெஞ்சுவலியை உண்டாக்கும்.

பலன்கள்: ருசி மட்டுமே

வாழைக்காய்

என்ன இருக்கு: கொழுப்புச் சத்து, விட்டமின் இ.

யாருக்கு நல்லது: வயிற்றுப்புண், ரத்தமூலம் உள்ளவர்களுக்கு பிஞ்சாக சாப்பிட நோய் கட்டுப்படும்.

யாருக்கு வேண்டாம்: வாய்வு, இதய, மூட்டுவலியுள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.

பலன்கள்: உடலுக்கு உரம் அளிக்கும். மலச்சிக்கலை உடைக்கும்

1380645_631387416883577_1174631774_n.jpg

 

 

எப்படியெல்லாம் நெல்லிகாயை பயன்படுத்தலாம்! ! ! !

நெல்லிகாயை காயல்கனி என்பார்கள். காலங்களில் சிறந்தது வசந்தகாலம். இந்த வசந்த காலத்தில் நெல்லிகாய் எல்லா இடங்களிலும் கிடைக்கும். மிகுந்த மருத்துவ குணங்களைக் கொண்ட இந்த நெல்லிகாயை நிறைய பயன்படுத்தினால்நலமாய் வாழலாம். நெல்லிக்காயில் வைட்டமின் சி 100 கிராமிற்கு 600 கிராம் நிறைந்துள்ளது. சி வைட்டமின் நம் உடலில் குறைவதால் தோல் நோய்கள் ஏற்படுகின்றன. அடிக்கடி சிலருக்கு ஜலதோசம் பிடிக்கும். இதுவும் வைட்டமின் சி குறைவினால் தான் ஏற்படுகிறது.

இது தவிர புரதம் கொழுப்பு சுண்ணாம்புசத்துபாஸ்பரஸ், மாவுசத்து நார்ச்சத்து வைட்டமின் ஏ போன்ற சத்துகளும் உண்டு. நெல்லி உடலுக்கு குளிர்ச்சி தரும். இதை உண்பதால் சிறுநீர் தாரளமாக பிரியும். கர்ப்பபை கோளாறகள் நீங்கும். இரத்தம் தூய்மை அடையும். இக்காயின் இன்னும் ஒரு சிறப்பு காயை உலர்த்தினாலும்,வேகவைத்தாலும் குளிர வைத்தாலும் அதிலுள்ள வைட்டமின் சி குறையாது.

எப்படியெல்லாம் நெல்லிகாயை பயன்படுத்தலாம்.

வாங்கியவுடன் தண்ணீர் விட்டு சுத்தம் செய்யவும். ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவுக்கு மேலாக தண்ணீர் விட்டு வேகவிடவும். தேவையான கல் உப்பும் சிறிது மஞ்சள் தூளும் போடவும் 5 அல்லது 10 நிமிடத்திற்குள்ஒரு காயை எடுத்து அழுத்திப் பார்த்தால் அழகாக உடையும் உடனே இறக்கி வைத்து ஆறிய பிறகு பாட்டிலில் நீரோடு எடுத்து வைக்கவும். இதை சாம்பார் சாதம், ரசம் சாதம் என்று எல்லாவற்றிற்கும் தொட்டு கொள்ளலாம்.

தேவையான வெந்த நெல்லிகாயை எடுத்து உடைத்து விதை நீக்கி ஊறுகாய் போடலாம். தேங்காய் பச்சை மிளகாய் வெந்த நெல்லிகாய் சேர்த்து அரைத்து புளிக்காத தயிரில் சேர்த்து உப்பு பச்சடி செய்யலாம். பச்சை நெல்லிகாயை துண்டுகளாக்கி அரைத்து சாறு எடுத்து கொண்டு பருப்பு ரசம் மிளகு ரசம் இவைகளில் சேர்க்கலாம். புளியை குறைவாக சேர்த்து கொள்ள வேண்டும்.

நெல்லிகாயை உப்பு எதுவும் போடாமல் வேக வைத்து விதை நீக்கி நன்கு மசித்துக்கொள்ள வேண்டும். ஒரு கிலோ நெல்லிகாய் என்றால் அரைக்கிலோ சர்க்கரையை சேர்த்து அடுப்பில் வைத்து கிளற வேண்டும். சிறிது சிட்ரிக் அமிலம் சேர்த்து லேகியம் போல் வரும்போது இறக்கி வெண்ணிலா எசன்ஸ் அல்லது ரோஸ் மில்க் எஸன்ஸ், ஸ்ட்ராபெர்ரி ஏதாவது ஒன்றை அரை தேக்கரண்டி சேர்த்து சூடு ஆறியதும் காற்றுப்புகாத பாட்டிலில் எடுத்து வைக்கவும். சப்பாத்தி, பிரட் தோசை, இட்லி போன்ற அனைத்திற்கும் தொட்டு கொள்ளலாம். கொளுத்தும் வெயிலுக்கு நம் உடம்பிற்கு ரொம்ப நல்லது.

நெல்லிகாயை நிறைய வாங்கி வெயிலில் காய வைத்து எடுத்து வைக்கலாம். இதை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி வைத்து கொண்டு தினமும் சிறிது தலையில் தடவி வந்தால் கண்களுக்கு குளிர்ச்சி தரும். முளைச்சூடு குறையும். கூந்தல் கரு கரு வென செழித்து வளரும். முடிகளை வலுவாக்கும் பொடுகும் வராது.

இதயக்கனி ஆரோக்கிய கனி என்று அழைக்கப்படும் நெல்லிகனியை நாம் தினமும் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.

1378089_698265420191508_761155576_n.jpg

 

 

கல்லீரலை வலுவாக்கும் துளசி

கல்லீரலில் பிரச்சனை உள்ளவர்களுக்கு தண்ணீர் உணவுகள் எது சாப்பிட்டாலும் வாந்தி வரும். ஏனெனில் இவர்களுக்கு கல்லீரல் வேலை செய்யவிலலை என்றால் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று அறிந்துகொள்ள வேண்டும் . கல்லீரல் பாதிப்பை போக்க நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும் சதகுப்பை 100 கிராம், சோம்பு 100 கிராம் வாங்கி இரண்டையும் தனித்தனியே லேசாக வறுத்து, இடித்து சூரணம் செய்து, சலித்து எடுக்கவும்.

ஒரு கிலோ பனைவெல்லத்தை சலித்த சூரணத்தில் போட்டு இடித்தால் அல்வா மாதிரி வரும். இதை புட்டியில் அடைத்து வைத்துக் கொண்டு, நாள் ஒன்றுக்கு 3 வேளைகள் (காலை-6, மதியம்-12, மாலை-6 மணிக்கு) நெல்லிக் காயளவு எடுத்துச் சுவைத்துச் சாப்பிடவும். இப்படி ஒரு மாதம் சாப்பிட்டால், கல்லீரல் குணமாகி, வாந்தி வருவது நின்றுவிடும்.

கல்லீரலை வலூவூட்டி சீராக செயல்பட வைப்பது மாதுளங்கனி. துளசி இலைகள் 10-20 எடுத்து கழுவி, அத்துடன் ஏலக்காய்-4, சுக்கு அரை துண்டு சேர்த்து நசுக்கி 1 குவளை நீரில் கலந்து காய்ச்சி, அரை குவளையாக வடிகட்டி தேவையானால் சிறிது பால், தேன் கலந்து பருகிவர உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

இத்துளசி கஷாயம், துளசி சிரப், ஆஸ்த்மா, இளைப்பு நோய், மூளைக் காய்ச்சல், மலேரியா, நிமோனியா காய்ச்சல், கல்லீரல் சிதைவு ஆகிய நோய்களை வராமலும், வளர விடாமலும் தடுக்கும் ஆற்றல் உண்டு. மதுபானம், போதை மருந்து, சிகரெட் புகையால் பாதிக்கப்பட்ட கல்லீரல் மெல்ல மெல்ல சிதைவடையும்.

முற்றிய நிலையில் இரத்த வாந்தி எடுத்து அறுவை சிகிச்சைக்கு ஆட்பட வேண்டிடும். எலுமிச்சம்பழமும் தேனும் தக்காளி ரசமும் சம அளவு கலந்து காலை-மாலை நேரங்களில் வேளைக்கு ஒரு அவுனஸ் வீதம் சாப்பிட்டு வர கல்லீரலின் சீர் கேடுகள் மறைந்து உடம்பு தெம்பாக இருக்கும். இதனால் சயரோக இருமலும் கூட குறைந்து விடுகிறது. இரத்த ஓட்டம் சீர்பெறும்.

இருதயமும் பலம் பெறும். சிறு நீரீலுள்ள சர்க்கரையும் குறைந்து விடுகிறது. ஈரல் பலப்பட வேண்டுமென்றாலும், கல்லீரலில் ஏதேனும் கோளாறு இருந்தாலும், பாலில் எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து, உடனே சாப்பிட்டு வாருங்கள். சீக்கிரத்தில் குணமாகும். கல்லீரல் மண்ணீரலில் கோளாறுகள் ஏதேனும் இருந்தால், துளசியை இரவில் ஊறவைத்து, காலையில் அதை வடிகட்டி அந்த நீரை மட்டும் சாப்பிட்டு வாருங்கள்.

தொடர்ந்து சாப்பிட்டால் ஈரல் கோளாறுகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். வாரம் ஒருநாள் கீழாநெல்லி, கரீசலாங்கண்ணி, கொத்துமல்லி ஆகிய 3 கீரைகளையும் நெய், சீரகம், பாசிப்பருப்புடன் சமையல் செய்து பகல் உணவில் சாப்பிட்டு வர கல்லீரல் சேதமடையாமல் வலிமையுடன் செயல்படும். கல்லீரலைச் சார்ந்து செயல்படும் மண்ணீரல் கணையம், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளும் நஞ்சுமயம் ஆகாமல், சிதைவின்றி ஊக்கமுடன் செயல்படும். குறிப்பாக புகை, மது, இரவு கண் விழிப்பு, அதிக காரம், அதிக காபி பழக்கமுள்ளவர்களுக்கு வரக்கூடிய கல்லீரல் அழற்சி, கல்லீரல் சிதைவு ஆகியவை வராமல் தடுக்கும்.

1377005_524119854348005_590632157_n.jpg

 

உடல் எடையை குறைக்க உதவும் 10 சூப்பர் உணவுகள் :-

தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு பலர் கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் டயட் என்று சில சமயங்களில் சாப்பிடாமல் இருப்பார்கள். இப்படியெல்லாம் நடந்தால், எந்த ஒரு பலனும் கிடைக்காது. எனவே எப்போதும் மிகவும் ஸ்மார்ட்டாக செயல்பட வேண்டும்.

எப்போதும் கடுமையான உடற்பயிற்சி மற்றும் டயட்டை மேற்கொண்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்களானது கிடைக்காமல், உடல் மிகவும் சோர்வடைவிடும். இதனால் உடல் எடை குறைகிறதோ இல்லையோ, பல உடல்நலப் பிரச்சனைகளை நிச்சயம் சந்திக்க நேரிடும். எனவே அளவான உடற்பயிற்சியுடன், ஆரோக்கியமாக சாப்பிட்டால், உடல் எடையை நிச்சயம் குறைக்கலாம். அதிலும் இதுவரை எத்தனையோ உடல் எடையை குறைக்கும் உணவுப் பொருட்களைப் பார்த்திருப்போம்.

இப்போது பார்க்கப்போவது பலரும் நினைத்துப் பார்க்காத உடல் எடையைக் குறைக்கும் சில உணவுப் பொருட்களைத் தான். இத்தகைய உணவுப் பொருட்களை சாப்பிடுவதோடு, அத்துடன் தினமும் சரியான அளவில் உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் உடல் எடையைக் குறைப்பதற்கு உணவுகள் மட்டும் உதவாது. ஆகவே உடற்பயிற்சியையும் பின்பற்றுங்கள்.

காளான் :-

உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் உணவுப் பொருட்களில் ஒன்று காளான். இந்த காளானை உணவில் அதிகம் சேர்ந்து வந்தால், இதில் உள்ள குறைவான கலோரி மற்றும் கொழுப்புக்களால், உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும்.

முட்டையின் வெள்ளைக்கரு :-

முட்டையின் வெள்ளைக்கருவில் கார்போஹைட்ரேட் குறைவாகவும், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றம் இதர ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே தினமும் உடற்பயிற்சி செய்து முடித்தப் பின்னர், முட்டையின் வெள்ளைக்கருவை சாப்பிட்டால், உடலின் சக்தி அதிகரிப்பதோடு, நீண்ட நேரம் பசிக்காமலும் தடுத்து, உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவும்.

ஆப்பிள் :-

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரை பார்க்க வேண்டிய அவசியமே இருக்காது. அதே ஆப்பிளை தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடையையும் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அது உடலில் தங்கும் தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து, உடல் பருமன் அதிகரிப்பதை தடுக்கும்.

பாகற்காய் :-

பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமின்றி, உடல் பருமனால் அவஸ்தைப்படுவோருக்கும் மிகவும் நல்லது. எப்படியெனில், பாகற்காயை சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்களானது, உடலில் தங்கும் தேவையற்ற கொழுப்புக்கள் தங்குவதை கரைப்பதோடு, கலோரிகளையும் எரித்துவிடும்.

காலிஃப்ளவர் :-

உடல் எடையை குறைக்கப் பயன்படும் உணவுகளில் காலிஃப்ளவரும் ஒன்று. அதிலும் அந்த காலிஃப்ளவரை வேக வைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. ஏனெனில் அதில் குறைவான கலோரியும், அதிகமான வைட்டமின்களும் நிறைந்துள்ளன. மேலும் இதனை சாப்பிட்டால், அடிக்கடி பசி ஏற்படாமலும் இருக்கும்.

பட்டை :-

பட்டையை உணவில் சேர்த்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுடன் இருப்பதோடு, உடல் எடையை குறைக்கவும் உதவும். எனவே இநத் மசாலாப் பொருளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், நல்ல பலன் கிடைக்கும்.

மிளகாய் :-

அனைவருக்குமே காரம் என்றால் மிகவும் பிடிக்கும். கார உணவுகள் கூட ஒரு வகையில் உடல் எடையைக் குறைக்க உதவியாக இருக்கும். அதிலும் குறிப்பாக சிவப்பு மிளகாயை உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டால், அந்த மிளகாயில் உள்ள பொருளானது, உடலில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைத்து, டாக்ஸின்களை வெளியேற்றி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.

முள்ளங்கி :-

முள்ளங்கியை வேக வைத்து சாப்பிட்டால், அதிலுள்ள நார்ச்சத்துக்களானது அப்படியே கிடைத்து, உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களானது கரைக்கப்படுவதோடு, நீண்ட நேரம் பசியெடுக்காமலும் இருக்கும்.

டார்க் சாக்லெட்:-

அனைவரும் சாக்லெட்டில் கலோரிகள் அதிகம் உள்ளது என்று சாப்பிடுவதில்லை. ஆனால் உண்மையில் டார்க் சாக்லெட்டை அளவாக சாப்பிட்டால், உடல் எடை குறைவதோடு, இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.

பச்சை பயறு :-

அனைத்து சமையலறைகளிலும் கிடைக்கக்கூடிய ஒரு வைட்டமின் நிறைந்த உணவுப் பொருள் தான் பச்சை பயறு. உடல் எடையை குறைக்க நினைப்போர், உடற்பயிற்சியை மேற்கொள்வதோடு, பச்சை பயறு அதிகம் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும். மேலும் இது செரிமானத்திற்கும் மிகவும் நல்லது.

1424457_631387473550238_1822566769_n.jpg

தேன் சிறப்பு தேன் விலைமதிக்கமுடியாத உணவு பொருள். இது ஒரு அறிய வகை மருந்து. தென்னை உரிமைகொண்டாடாத நாடுகளே இல்லை.சுத்தமான தேன் ஒருபோதும் கெட்டுப்போகாது. இவற்றின் பயன்கள் அனைத்தையும் யாரும் அறிதிருக்கமாட்டார்கள். தேனில் 78 பங்கு கரி நீரைகளும் (Carbo Hydrates) 18 பங்கு தண்ணீரும், 0.2 பங்கு தாதுப்பொருட்களும், 3.8 பங்கு பயன்தரும் பலவித நுண்ணிய வளங்களும் இருக்கின்றன. இதுதான் என குறிப்பிட்டு சொல்லமுடியாத பல நல்ல பொருள்களும் இதில் அடங்கியுள்ளன. பூவிலுள்ள மகரந்தம், பிசின், வச்சிரம் (Glue) எளிதில் ஆவியாகக்கூடிய எண்ணைகள் போன்றவைகள் அவற்றில் உள்ளன. மகரந்தம் என்பது ஒரு நேர்த்தியான பொடி. அதில் பிசிதம் நிரம்ப உண்டு. அது சிறுவர்களுக்கும்,குழந்தைகளுக்கும் தலைசிறந்த ஆகாரமாகும். தேன் இருதய வளர்ச்சிக்கு மிகமுக்கியமானது ஆகும். இதனை சாப்பிடுவதால் மனம் தேறுவதுடன் இருதயமும் துப்புரவாகி வலிமை அடைகிறது. மருத்துவ ஆராய்ச்சியின் முடிவில் தேன் மிக சிறந்த நோய் தீர்க்கும் மருந்து என கண்டறிந்துள்ளனர். காமாலை, சீதபேதி நோய்களையும், மூத்திரப்பை மற்றும் இருதயம் முதலிய முக்கிய உறுப்புகளின் நோய்களை தீர்க்கும் நல்ல மருந்து தேன் என தெரிவிக்கின்றனர். நாம் உண்ணும் உணவினை செரிக்கும் நல்ல மருந்து தேன் . புலால் உண்ணுவதை விட தேனினை குடித்தால் அதிக உற்சாகமும் ஆற்றலும் உண்டாகிறது. திருமணமான தம்பதிகள் இரவில் பால் பருகும் போது ஒரு தேக்கரண்டி தேனினை சாப்பிட்டு வந்தால் சுக்கில கட்டும் ஆற்றலும் மகிழ்ச்சியையும் அதிகப்படுத்துகிறது. பித்தம் அதிகமாகி அல்லல்படுபவர்கள் இஞ்சியை நன்றாக கழுவி சுத்தம் செய்துக்கொண்டு சிறு துண்டுகளாக வெட்டிக்கொண்டு தேனில் இரண்டு அல்லது முன்று நாட்கள் ஊறவைத்து அதிகாலையில் இரண்டு அல்லது மூன்று துண்டுகள் சாப்பிட்டுவந்தால் எப்படிப்பட்ட பித்தமும் நீங்கிவிடும். குழந்தைகளுக்கு தினந்தோறும் அரை தேக்கரண்டி தேனினை கொடுத்து வந்தால். குழந்தைகளின் தசைகள் உறுதியாகும். ரத்தம் சுத்தமாகி ஆற்றலுடனும், அழகுடனும் விளங்குவார்கள். கடும் வயிற்று வலியா கவலை வேண்டாம். ஒரு டம்ளர் கொதிக்கும் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி தேனினை விட்டு நன்றாக கலக்கி பருகிவிட்டால் பதினைந்து நிமிடங்களில் வயிற்று வலி பறந்துவிடும்.

-ஐஸ்வர்யா

734392_584121821637024_413320613_n.jpg

 

மாதுளையின் மகத்துவம்..!

மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.

புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.

தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.

மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.

மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.

மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும். மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.

1392061_627625637295888_1597761598_n.jpg

 

சிரங்கை ஒழிக்கும் பாகற்காய் இலை..!

==============================

994049_196320123887330_878119089_n.jpg

சிரங்கை ஒழிக்கும் பாகற்காய் இலை..! பாகற்காய் பெரும்பாலும் உடலுக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதன் கசப்புச் சுவைக்காக பலர் அதனை விரும்புவதில்லை. அவ்வாறு இல்லாமல், அறுசுவைகளில் நமது உடலுக்கு நல்லதைத் தரும் இந்த கசப்புச் சுவையிலான பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. பொதுவாக பாகற்காய் உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும். பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு. பொடியாக இருக்கும் பாகற்காயை மிதி பாகற்காய் என்றும், நன்கு பெரிதாக நீளமாக இருப்பதை கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கிறார்கள். பாகற்காயை நாம் எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். புளியுடன் சேர்த்து பாகற்காயை சமைப்பது சிறந்தது என்று சொல்லப்படுகிறது. நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அவர்கள் மட்டுமல்லாமல் ஜூரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களும் பாகற்காயை உண்ணலாம். இந்த பிரச்சினைகள் இருப்பவர்கள் மட்டும்தான் பாகற்காய் சாப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை. இது போன்ற பிரச்சினைகள் வர வேண்டாம் என்றால் எல்லோருமே சாப்பிடலாம். பாகற்காய் நமது நாவிக்குத் தான் கசப்பே தவிர உடலுக்கு இனிப்பானது. பாகற்காயை விட பாகற்காயின் இலையில் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன. அதன் சாறு பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. பாகற்காயின் இலைகளை அரைத்து உடல் முழுவதும் பத்துப்போட்டால் சிரங்கு ஒழிந்துவிடும். இதேபோல பாகற்சாறும் உடலுக்கு மிகவும் ஏற்றது. ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விதத்தில் பாகற்காய் இலையின் சாறைக் குடிக்க நோய் கட்டுப்படும்.

 

* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

* உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம். இதனால் ஆயுள் அதிகரிக்கும்.

* வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால், முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.

* துளசி மனித மூளைக்கு வலிமையைக் கொடுக்கக்கூடியது. அதற்கு, துளசி இலையை ஒரு டம்ளரில் பறித்துப் போட்டு ஊற வைத்து, அந்தத் நீரைக் குடித்து வந்தால் மூளை பலம் பெறும்.

*கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

*நெருப்பு சுட்ட புண்ணிற்கு வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணி ந்து ஆறும்.

*தேமல் மறைய கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.

*எள்ளை தண்ணீரில் போட்டு ஊற வைத்து மறுநாள் காலை அந்த தண்ணீரை குடித்து வந்தால் மாதவிலக்கு பிரச்னை தீரும்.

*கசகசா, வாழைப்பூ, மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

603047_742690799090647_72413263_n.jpg

 

 

மூளையை பாதிக்கும் விஷயங்கள்..!

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் மூளை அழிவுக்குக் காரணமாகும்.

அதிகளவாகச் சாப்பிடுவதனால் மூளையில் இருக்கும் இரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

புகை பிடிப்பதனால் மூளை சுருங்கவும், அல்ரஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது. நிறைய இனிப்புச் சாப்பிடுவதனால் புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பதனால் நமக்குத் தேவையான ஆக்சிஜனை பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்சிஜன் செல்லா விட்டால் மூளை பாதிப்படையும்.

நல்ல உறக்கம் இல்லாமையால் மூளைக்கு ஓய்வு இல்லாமல் போகின்றது. தேவையான அளவு தூங்காமலிருப்பது நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

தலையை மூடிக்கொண்டு நித்திரை செய்வதனால் போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்சிஜனை குறைக்கிறது.

உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆன பிற்பாடு மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால் மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது. அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

1381416_524118631014794_1504279724_n.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஆரோக்கிய வாழ்வுக்கு இஞ்சி அவசியம்

இதயத்துக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது. கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்து கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்துள்ள உணவை அடிக்கடி சாப்பிடுவது இரத்த நாள இயக்கத்தை நாளடைவில் வலுவிழக்கச் செய்துவிடும்.

இரத்தநாளங்களில் இரத்தக்கட்டு ஏதேனும் ஏற்படுமாயின் அதை சரிசெய்வது அவ்வளவு எளிதன்று. இதற்குக் கைகண்ட மருந்தாக இஞ்சி விளங்குகின்றது. இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி மாரடைப்பு நேராமல் இஞ்சி தடுக்கின்றது.

ஆரோக்கியமான 30 நபர்களிடம் இஞ்சியின் மருத்துவகுணத்தைக் குறித்து அறிய சோதனை நடத்தப்பட்டது. முதல் வாரத்தில் 50 கிராம் வெண்ணையும், 4 ரொட்டித்துண்டுகளும் அவர்களுக்குக் கொடுக்கபட்டன. அடுத்த வாரம் அதனுடன் ஐந்து கிராம் இஞ்சி சேர்த்து கொடுக்கப்பட்டது. அதற்கு அடுத்த வாரம் அவர்களின் இரத்தம் சோதிக்கப்பட்டது.

அவர்களின் இரத்த நாளத்தின் முதல் வார இயக்கம் 18.8 சதவிகிதம் குறைந்து இருந்தது. ஆனால் அதற்கு அடுத்த வாரம் 6.7 சதவிகிதம் அதிகரித்து இருந்தது. இதன் மூலம் இரத்தநாளங்களின் செயல்பாட்டிற்கும், இரத்த ஓட்டத்திற்கும் இஞ்சியின் பயன்பாடு தெளிவாக நிரூபிக்கப்பட்டது. மாரடைப்பு ஏற்படுவதற்கு, இரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்பும், அவற்றில் ஏற்படும் இரத்தக் கட்டும் மிக முக்கிய காரணம் ஆகும்.

கொழுப்புச் சத்து அதிகமாக உள்ள உணவுகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம். இதற்கு இரத்தநாளங்களின் சுவர்களில் கொழுப்பு படிந்து இரத்த நாளங்களை வலுவிழக்கச் செய்வதும், இரத்த ஓட்டத்தின் வேகத்தை அது பாதிப்பதும் காரணமாகும். மேற்கண்ட ஆய்வின் மூலம் இரத்தநாளங்களின் வலுவிற்கும், சரியான இரத்த ஓட்டத்திற்கும் இஞ்சி வெகுவாக உதவுகிறது என்பது நிரூபணமாகியுள்ளது.

பல நோய்களுக்கு அருமருந்தாக

சளிப்பிடித்தல் ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது. இரத்தஓட்டம் சீராக இருக்க உதவுகிறது; கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது; மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டி

இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது. மகளிரின் கருப்பைவலிக்கும் மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.

தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும். மூட்டுவலிக்கும் இது நன்மருந்தாக இருப்பதால் ஆஸ்பிரின் ஒவ்வாதவர்களுக்கு இது நல்லதொரு அருட்கொடையாகும். எனவே ஒவ்வொரு நாள் உணவிலும் இஞ்சியை சேர்த்துக்கொள்வது உடலுக்கு பாதுகாப்பானது என மருத்துவ ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.
576557_196447953874547_528029592_n.jpg

 


இரத்த அழுத்தம் குறைக்கும் உருளைக்கிழங்கு..!

உருளைக் கிழங்கு என்று சொன்னாலே நம்பில் பலருக்கு ஞாபகம் வருவது மொறுமொறு சிப்ஸ், நொறுக்குத்தீனிகளில் உருளைக் கிழங்கு சிப்ஸ்சிற்கு தனி இடம் உண்டு. குழந்தைகள் இளைஞர்களை கவர விதவிதமான ருசிகளில் உருளைக் கிழங்கு சிப்ஸ்கள் தயாரிக்கப்படுகின்றன.

அதே நேரத்தில் உருளைக் கிழங்கு என்றாலே 'ஐயோ' என்று அலறுபவர்களும் உண்டு. உடல் பருமன், கொழுப்பு போன்ற பிரச்சினைகளை நினைத்து உருளைக் கிழங்கை கண்டு ஒதுங்குபவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் 'நீங்கள் நினைப்பது தவறு. உருளைக் கிழங்குக்கு இரத்த அழுத்தத்தை குறைக்கும் அசாத்திய திறன் உண்டு என்று ஆய்வாளர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.

ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று வேளை உருளைக் கிழங்குகளை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிப்பதில்லை. மேலும் ஓட்ஸ் போன்ற உணவுகளை சாப்பிடும் போது ஏற்படும் அளவுக்கு இரத்த அழுத்தம் குறைகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜோய் வின்சன் என்ற நிபுணர் தலைமையிலான குழு இது தொடர்பான ஆய்வை நடத்தியது.

இந்த ஆய்வுக்காக கருஞ்சிவப்பு நிற உருளைக் கிழங்கை பயன்படுத்தினார்கள். எண்ணை இன்றி மைக்ரோ வேவ் அடுப்பு மூலம் சமைத்தனர். இதை இரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற பாதிப்புள்ள நபர்களுக்கு கொடுத்தனர். தினமும் 2 வீதம் 2 மாத காலம் இந்த உருளைக் கிழங்கு கொடுத்து வந்தனர்.

பிறகு அவர்களின் இரத்த அழுத்தம் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அப்போது அவர்களின் இரத்த அழுத்தம் குறைந்திருந்தது. அத்துடன் அவர்களில் யாருக்கும் உடல் எடையும் அதிகரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதெல்லாம் சரி, இரத்தக் கொதிப்பை குறைக்குமளவுக்கு உருளைக் கிழங்கில் அப்படி என்னதான் இருக்கிறது?

பைடோ கெமிக்கல் என்று அழைக்கப்படும் தாவரம் சார்ந்த சில இரசாயனப் பொருட்கள் மற்றும் விட்டமின்கள் உருளைக் கிழங்கில் அதிகமாக இருக்கின்றன. இவையே உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் வேலையை செய்கின்றன.

உருளைக் கிழங்கு பிரென்ஞ்சு பிரை, சிப்ஸ் போன்றவற்றை அதிக வெப்பத்தில் சமைப்பதால் இரத்த கொதிப்பை குறைக்கவல்ல இரசாயனப் பொருட்களும், பைடோ இரசாயன பதார்த்தம் அழிக்கப்பட்டு விடுகின்றன. எனவே சிப்சில் எஞ்சியிருப்பது உருளைக் கிழங்கின் மாவுச்சத்து கொழுப்புச் சத்து மற்றும் தாதுக்கள் மட்டுமே என்று சிப்ஸ் பிரியர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கிறார் வின்சன்.

இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டது, கருஞ்சிவப்பு நிற உருளைக் கிழங்கு என்பதால் நீங்கள் புலம்ப வேண்டாம். ஏனென்றால், வெள்ளை மற்றும் கருஞ் சிவப்பு நிற உருளைக் கிழங்கு இரண்டுக்கும் ஒரே திறன் தான் இருக்குமென்று உறுதியாக நம்புகிறார் இந்த ஆய்வை நடத்திய ஜோய் வின்சன்.

இனிமேல் இரத்த அழுத்தம் குறைய தைரியமா உருளைக் கிழங்கு சாப்பிடலாம்!
1380738_196435420542467_508373456_n.jpg

 


பலவீனம் நீக்கும் ஏலக்காய்

வாசனை பொருட்களின் அரசி என்று அழைக்கப்படும் ஏழக்காய் சமையலின் போது வாசனைக்காக பயன்படுத்தப்படும் பொருட்களில் முக்கியமான
ஒன்று. அசைவ உணவில் இதைச் சேர்த்தால் அதன் ருசியே தனிதான் செரிமான சக்தியைக் கூட்டி, பசியைத் தூண்டுவதில் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. வாசனைப் பொருளாக பயன்படுத்தப்படும் ஏலக்காயில் மருத்துவ குணம் நிறைந்துள்ளது. இதில் கனியும் விதைகளும் மருத்துவப் பயன் கொண்டவை.

நாற்பது ஆண்டுகால ஆய்வுகள் ஏலக்காயில் உள்ள எளிதில் ஆவியாகும் எண்ணெய்களின் மருத்துவத்தை உறுதி செய்கின்றன. நறுமணம் கொண்ட

விதைகள் வயிற்று வலியினை சரிசெய்கின்றன. ஜீரணத்தை தூண்டுபவை. உடலின் வெப்பத்தை கூட்டி ஜீரணத்தினைத் அதிகப்படுத்தும். இது தசை

சுரிப்பு கோளாறுகளுக்கு எதிரானது.

பலவீனம் நீக்கும் ஏலக்காய்

ஏலக்காயில் பல எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் உள்ளன: போர்னியோல்,கேம்ஃபர், பைனின், ஹீயமுலீன்,கெரியோஃபில்லென், கார்வோன்,

யூகேலிப்டோல், டெர்பினின்,சேபினின், இவை இதன் மருத்துவ குணங்களுக்கு அடிப்படையாகும். இந்திய மருத்துவத்தில் ஆஸ்துமா, மூச்சுக்குழல்

அழற்சி, சிறுநீராகத்தின் கல், நரம்பு தளர்ச்சி, மற்றும் பலவீனம் நீக்க பயன்படுத்தப்படுகிறது. சீன மருத்துவத்தில் சிறுநீர்ப் போக்குகட்டுப்பாடின்மையினைப் போக்கவும் வலுவேற்றியாகவும் உதவுகிறது. வாய் துர்நாற்றம் போக்கவும் ஏலக்காய்

பயன்படுத்தப்படுகிறது; பாலுணர்வு தூண்டும் பொருளாகவும் உள்ளது.

மன அழுத்தத்திற்கு ஏலக்காய் டீ

மன அழுத்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள், "ஏலக்காய் டீ" குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய்

அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சீக்கிரமே குறைகிறதாம்!

நாவறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக்

கோளாறு என பல பிரச்சினைகளிலிருந்து, ஏலக்காயை சும்மா வாயில் போட்டு மெல்லுவதாலேயே நிவாரணம் பெறமுடியும். எனினும் இதை அதிகமாக, அடிக்கடி சேர்த்துக்கொள்வது நல்லதல்ல.

தலைசுற்றல், மயக்கம் போக்கும்

வெயிலில் அதிகம் அலைவதால் வரும் தலைசுற்றல், மயக்கத்திற்கு ஏலக்காய் சிறந்த மருந்தாகும். நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர்
தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் கொஞ்சமாக பனைவெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். விக்கலை உடனே

நிறுத்தும் சக்தி ஏலக்காய்க்கு உண்டு. இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில்

நன்கு காய்ச்சி, வடிகட்ட வேண்டும். மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தால், விக்கல் உடனே நின்றுவிடும்.

வாயுத் தொல்லையால் அவதிபடுகிறவர்கள் , கூச்சமின்றி நாடவேண்டிய மருந்து ஏலக்காய். ஏலக்காயை நன்கு காயவைத்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு
முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாயுத்தொல்லை எப்போதும் இருக்காது.
1377327_196381880547821_1112813978_n.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

டெங்கு காய்ச்சலைத் தடுக்கவல்ல நிலவேம்பு மூலிகைக் குடிநீர்..!

நிலவேம்பு (Andrographis paniculata) மூலிகை மருத்துவத்தில் பயன்படும் செடியாகும். கைப்புச் சுவையுடையதான இதன் இலையும் தண்டும் மருத்துவ குணமுடையவையாகும். இச்செடி இரண்டு முதல் மூன்று அடி வரை நிமிர்ந்து வளர்கிறது. இதன் கக்கத்திலிருந்து உருவாகும் பூக்கம் இளஞ் சிவப்பு நிறமுடையவையாகும்.

சித்த மருத்துவத்துத்தின் அடிப்படையில் மூலிகை குடிநீரை டெங்கு வந்தவர்கள் மட்டும் இன்றி, வராமல் தடுப்பதற்கும் பயன்படுத்தலாம். தொடர்ந்து 7 நாட்களுக்கு மூலிகை குடிநீரை குடித்தால், டெங்கு மட்டுமின்றி, பன்றிகாய்ச்சல், சிக்குன்குனியா, மலேரியா போன்ற நோய்களும் வருவதை முற்றிலும் தடுக்கலாம். காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. ஒவ்வொரு சீதோஷ்ண நிலை மாறும் சீசனிலும் நிலவேம்பு குடிநீரை குடிப்பதன் மூலம் வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்க முடியும்.

1390588_196482893871053_1788035120_n.jpg

 

 

கள்ளி

======

இது ஒரு சிறந்த மூலிகைத் தாவரம் ஆகும். மரம்போல் உயரமாகவும் புதர்போலவும் வளரக்கூடியது. மூலிகைப் பண்பு மிக்கது.

இதனை உணவுக்காகவோ உள்ளுக்குச் சாப்பிடும் மருந்தாகவோ பயன்படுத்தமுடியாது. காரணம் இது அமிலத்தன்மையும் விஷத் தன்மையும் உடையது. வெளிப்புறமாகப் பூச்சு வைத்தியமாகவும் ஆவியில் கொதிக்கவைத்து ஒத்தனம் கொடுக்கும் வைத்தியமாகவும் சிறந்த பயனளிக்க் கூடியது.

இது முன்னர் மானாவாரி விவசாயிகளின் விவசாயத்துக்கு சிறப்பாக உதவி வந்துள்ளது.

இதனை நிலத்தைச் சுற்றிலும் வேலியாக நட்டு வளர்த்திருப்பார்கள்.

இது வேலியாகப் பயன்படும் அதே நேரம் அதன்மேல் பிரண்டை, கோவை, வேலிப்பருத்தி போன்ற அருமையான மூலிகைக் குணமுள்ள தாவரங்கள் நன்கு படர்;ந்து வளரும். அவை முலிகையாகவும் உணவாகவும் நமக்குப்பயன்படும் அதேநேரம் கால்நடைகளுக்கும் மிகச்சிறந்த தீவனமாகும்.

கள்ளியின் இளம் மடல்கள்கூட வரண்ட காலங்களில் வெள்ளாடுகளுக்குத் தீவனமாகப்பயன்படும்.

இவற்றின்மேல் பல்வகைத்தாவரங்கள் படர்ந்து வளருமாதலால் அவை சில பறவையினங்களுக்கும் ஓணான் பச்சோந்தி பாம்புகள் போன்றனவற்றுக்கும் வாழ்விடங்களாகப் பயன்படுகிறது.

முன்னர் கிராமப்புற மக்கள் இந்தக் கள்ளியின் காய்ந்து கிடக்கும் மடல்களை விறகுக்காகவும் பயன்படுத்துவர்.

கிராமப்புற விவசாயியின் இணை பிரியாத நண்பனாக இருந்த இது தற்காலம் பழக்கத்திலிருந்து வெகுவாக ஒழிக்கப்பட்டு கேட்பாரற்றுக் கிடக்கும் இடங்களிலும் மலைப் பிரதேசங்களிலும்தான் இப்போதும் உள்ளது.

கடும் வரட்சியைத் தாங்கி நின்று மனித இனத்துக்கும் கால்நடைகளுக்கும் பயன்படும் இவை போன்றவற்றை ஒழித்துக்கட்டுவது எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்பதுதான் நாம் உணரவேண்டிய ஒன்று.

74579_196482617204414_1965059060_n.jpg

 

1005828_196460160539993_2076536256_n.jpg
என்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்?

1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.

2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்

3. முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந் தால் அது நல்ல முருங்கை காய்

4. சர்க்கரை வள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும், அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்

5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல மக்காச்சோளம்.

6.தக்காளி: தக்காளி நல்ல சிவப்பில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம் (குறிப்பு பெங்களூர் தக்காளி ஒரு வாரம் ஆனாலும் கெடாது இருக்கும்).

7. கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்

8. சின்ன வெங்காயம்: பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும்

9. குடை மிளகாய் : தோல் சுருங்காமல் fresh ஆக இருப்பதை வாங் கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிற குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்

10. காலிபிளவர்: பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த் தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும்

11. மாங்காய்- தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டி பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும்

12. பீர்க்கங்காய் ( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ) : அடிப் பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்கு மாறு பார்த்து வாங்குவது நல்லது

13. பரங்கிக்காய் கொட்டைகள் முற்றியதாக வாங்கவும்

14. புடலங்காய் : கெட்டியாக வாங்கவும். அப்போதுதான் விதைப்பகு தி குறைவாக, சதை பகுதி அதிகமாக இருக்கும்

15. உருளை கிழங்கு: முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறி னாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்

16. கருணை கிழங்கு: முழுதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்

17. சேப்பங்கிழங்கு : முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக் கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. உருண்டையாக பார் த்து வாங்கவும்

18. பெரிய வெங்காயம் மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்

19. இஞ்சி: லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்

20. கத்திரிக்காய்: தோல் softஆக இருப்பதுபோல் பார்த்து வாங்கவும்

21. சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்

22. பூண்டு: பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. வாங்கலாம்

23. பீன்ஸ் பிரன்ச் பீன்ஸில் நார் அதிகம். புஷ் பீன்ஸில் நார் இருக் காது. தோல் soft-ஆக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்

24. அவரை: தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது

25. பாகற்காய்: பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையா ன நீண்ட காய் நல்லது

26. வாழைப்பூ : மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளி ர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்

27. மொச்சை :கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்

28. சௌசௌ : வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்

29. முள்ளங்கி: லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு- நல்ல காய்

30. வெள்ளரி மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கி னால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்

31. பச்சை மிளகாய் :நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டானது தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமா க இருக்கும்.

— with Jayakumar Nallaiyan and Sampath Kumar.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

ஓமம் (ajwain) உடலில் ஏற்படும் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த செடியின் அனைத்து பாகங்களும் யுனானி, ஆயுர்வேத மருத்துவத்திற்கு முக்கியமானதாக பெரிதும் பயன்படுகிறது.. ஓமத்தின் விதைகளை மசாலா பொருளாக சமைப்பதற்குபயன் படுத்துகின்றனர். மேலும் பிஸ்கட், சாஸ், ரசங்கள், குளிர்பானங்கள், ஊறுகாய் போன்றவற்றை தயார் செய்யும் போது இதனை பயன்படுத்துகின்றனர். இதன் விதைகளைக் கொண்டு தேநீர் செய்து குடிக்கின்றனர். ஓமத்தால் ஏற்படும் உடல் நல நன்மைகள் என்ன என்று பார்க்கலாம்.

வாயு வெளியேற்றம்: வாயு பிரச்சனையிலிருந்து விடுபட 125 கிராம் தயிர், 2 கிராம் ஓமம், 1/2 கிராம் கருப்பு உப்பு, சேர்த்து சாப்பிட்டால் வாயு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் எளிதில் நீக்கி விடும் தன்மை கொண்டது. இதை மதிய உணவிற்கு பிறகு 10 முதல் 15 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விக்கல், குமட்டல், உளறுதல் மற்றும் அஜீரணம் ஆகிய பிரச்சனைகளை தீர்க்கும்

செரிமானக் கோளாறு: சரியான முறையில் செரிமானம் ஆகாததால் செரிமானக்கோளாறு ஏற்பட்டு குடலில் புண் ஏற்படும். இந்த பிரச்சனைகளை தவிர்க்க சாப்பிட்ட பிறகு ஓமத்தை எடுத்து வாயில் போட்டு மென்று கொள்வதால் செரிமான பிரச்சனைகளை தீர்க்க முடியும்..

ஈறுகளில் வீக்கம்: ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டு இருந்தால் ஓம எண்ணெய் ஒரு துளி அளவு சேர்த்து சில நிமிடங்களுக்கு பின் வாயில் ஊற்றி 5 நிமிடத்திற்கு பின் அலசிவிடவேண்டும். இப்படி செய்வதால் வாய் நாற்றம், ஈறுகளில் ஏற்பட்ட வீக்கம் அனைத்திலிருந்தும் நிவாரணம் பெறலாம்.

மூட்டு வலிகள்: ஓம(ணீழீஷ்ணீவீஸீ) எண்ணெய்யை கடுகு சேர்த்து சுடவைத்து மூட்டுவலி உள்ள இடங்களில் மஜாஜ் செய்வது போல நன்கு தடவினால் மூட்டுவலிக்கு தீர்வு காணலாம்.

வலி மற்றும் காயங்கள் : ஓம விதைகளுடன் தண்ணீர், மஞ்சள் சேர்த்து பேஸ்ட் போல செய்து காயங்கள் ஏற்பட்ட இடத்தில் போட வலி மற்றும் வீக்கங்கள் குணம் பெறும்.

வயிறு வலி: வயிற்று வலியால் அவதிப்படுவோர் சூடான தண்ணீரில் மிளகு 1 தேக்கரண்டி, ஓமம் 1 தேக்கரண்டி சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் வயிற்றுவலி குணமாகும். அரிப்பு, படை, எக்ஸிமா போன்றவைகளுக்கு கொதிக்கும் தண்ணீரில் ஓமத்தைப்போட்டு வெந்ததும் அதை பேஸ்ட்டாக செய்து அரிப்பு ஏற்படும் இடத்தில் தடவ வேண்டும். இந்த பேஸ்ட்டை முகத்தில் ஏற்படும் பருக்களிலும் தடவலாம்.

1396068_524452650981392_1111193331_n.jpg

 

 

நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இயங்கிட..!

•தலையை பின்புறம் 10 முறையும் முன்புறம் 10 முறையும் சாய்க்கவும்.

•தலையை நன்றாக பின்நோக்கி வைத்துக் கொண்டு, வாயை நன்றாகத் திறந்து அசைத்து மூடவும்.

•தலையை ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு திருப்பவும்.

•பிறகு தலையை வலது தோள்பட்டை வரை கொண்டு சென்று மறுபடி இடது தோள்பட்டைக்கு கொண்டு செல்லவும். இது போல் 10 முதல் 20 தடவை செய்யவும்.

•வா‌ய்‌க்கு‌ள் கா‌ற்றை ‌நிர‌ப்ப‌ி மூடவு‌ம். ‌பி‌ன்ன‌ர் கா‌ற்றை வெ‌ளியே‌ற்றவு‌ம். இதுபோ‌ல் 10 முறை செ‌ய்யவு‌ம்.

•க‌ண்களை வ‌ட்டமாக சு‌ற்‌றி‌ப் பா‌ர்‌க்கவு‌ம். இதுபோ‌ல் ஒரு 2 ‌நி‌மிட‌ம் செ‌ய்யவு‌ம்.

•கழுத்தை நேராக இருக்குமாறு வைத்து தரையில் உட்கார்ந்து கழுத்தை கொஞ்சம்-கொஞ்சமாக சாய்க்கவும். அதே போன்று மெதுவாக மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு கழுத்தை மேலே உயர்த்தவும்.

•இரு புருவங்களுக்கும் மேலே ஒற்றை விரல்களால் சில நிமிடங்கள் வரை அழுத்திக் கொண்டேயிருந்து விடவும்.

•கண்களைச் சுற்றி சுருக்கங்கள் விழுவதால் வெகு சீக்கிரம் வயதாகி விட்டது போன்று தோற்றம் ஏற்படும். கீழ்க்கண்ட பயிற்சியின் மூலம் கருப்பு வளையங்கள் நீங்க வாய்ப்புள்ளது.

•முதலில் நேராகப் பார்த்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வையைத் தூக்கி மேலே பார்த்து, பிறகு கீழே பார்க்கவும். இதே போன்று வலப்புறமும், இடப்புறமும் பார்க்கவும்.

•விரல்களின் அடிப்புறத்தால் முகம் முழுக்க மெதுவாக அழுத்தினால் முகத்தில் உள்ள தளர்ச்சி நீங்கும்.

941281_627943880597397_974636729_n.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

ஞாபக சக்தி விருத்திக்கு சூர்ணம்

ஞாபக சக்தி என்பது நினைவாற்றல் ஆகும்.இதன் வலிமைக்கு ஏற்பவே மக்களின் அறிவுத்திறனும் அதன் மூலம் வாழ்க்கை முன்னேற்றம் அடைகின்றனர் என்பது உண்மை. ஆகவே சித்தமருத்துவ முறையில் கூறும் ஒரு சூர்ணம் செய்து உண்டு ஞாபக மறதியை நீக்கி அறிவாளராய் வாழ்வில் வளம் பெறலாம்.

செய்முறை :

1 - வல்லாரை இலை - 70 -கிராம்

2 - துளசி இலை - 70 -கிராம்

3 - சுக்கு - 35 -கிராம்

4 - வசம்பு - 35 -கிராம்

5 - கரி மஞ்சள் -35 -கிராம்

6 - அதிமதுரம் -35 -கிராம்

7 - கோஷ்டம் - 35 -கிராம்

8 - ஓமம் - 35 -கிராம்

9 - திப்பிலி - 35 -கிராம்

10 - மர மஞ்சள் - 35 -கிராம்

11 - சீரகம் - 35 -கிராம்

12 - இந்துப்பு - 35 -கிராம்

இவைகள் அனைத்தும் தமிழ் நாட்டில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இதன் எடை அளவு அனைத்தும் வாங்கி வந்து வெயிலில் உலர்த்தி உரலில் இட்டு இடித்து தூள் செய்து சல்லடையில் சலித்து பதனம் செய்யவும்.

உண்ணும் முறை :

காலையில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து பசு நெய்யில் குழைத்து உண்ணவும். இரவில் அதே அளவு எடுத்து பசும் பாலில் கலந்து உண்ணவும். இதே போல் தினமும் உண்டு வர வேண்டும்.

ஒன்றிரண்டு மாதங்களில் மறதி, மந்தபுத்தி நீங்கி அபார ஞாபக சக்தி பெருகும். மேலும் உடலில் சுறுசுறுப்பு உண்டாகும்,மூளையில் நோய்களே வராமல் காப்பாற்றும்.

1380292_524456274314363_18805565_n.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஞ்சி, சுக்கு, கடுக்காய், உண்ணும் முறை

கலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலம்
கொண்டிடில் கோலை ஊன்றி குறுகி
நடப்பவனும் கோலை வீசிகுலாவி நடப்பானே.

சித்தர்கள் இது போன்ற பாடல்கள் வடிவில் எளிய முறையில் நோய் களைத் தீர்க்கும் வழிமுறைகளை வடித்துள்ளனர். ஆனால் இவைகளின் உண்மை விளக்கங்களை கண்டறிந்து அதன் படி உண்டோமானால் பாடல்களில் கண்டபடி உண்மையான பலன்களை அடைய முடியும்.

சித்த மருத்துவ முறையின் தத்துவமே அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்பதுதான் அதாவது அண்டம் என்ற பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங் களின் ஒரு பகுதிதான் பிண்டமாகிய நமது உடலிலும் இயங்குகின்றது.

நிலம்,நீர்,நெருப்பு, காற்று, ஆகாயம், என்ற ஐந்து பூதங்களில் நிலம் கீழே நாம் வாழ்வதற்கு ஆதாரமாகவும், ஆகாயம் மேலே சாட்சியாகவும் இருப் பதால் நடுவில் உள்ள நீர், நெருப்பு, காற்று என்ற மூன்று வித சக்திகளை மட்டும் இயங்கும் சக்திகளாக குறிப்பிட்டுள்ளனர்.

எனவேதான் சித்த மருத்துவ முறையில் நாடி பிடித்து நோய்களைக் கணிக்க மூன்று விரல்களைப் பயன்படுத்துகின்றனர். அவை வாதம், பித்தம், கபம் எனப்படும்.

வாதம் - காற்று - 1,மாத்திரை அளவு.
பித்தம் - நெருப்பு - 1/2,மாத்திரை அளவு.
கபம் - நீர் - 1/4-மாத்திரை அளவு.

இது நாடியின் அளவுகளாகும் இதன் படி கையில் நாடி துடித்தால் உடலில் நோய் இல்லை என அர்த்தம்.இந்த நாடி அளவுகளை கூடவோ குறை யவோ அல்லாமல் சமன் படுத்தும் மருந்துகள் தான் மேற்கண்ட பாடலில் உள்ளவை.

வாதம் - காற்று - 1, மாத்திரை அளவு -- சுக்கு.
பித்தம் - நெருப்பு - 1/2,மாத்திரை அளவு -- இஞ்சி.
கபம் - நீர் - 1/4-மாத்திரை அளவு -- கடுக்காய்.

இஞ்சி, சுக்கு, கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத, பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை. அடுத்து ,

சித்த மருத்துவத்தின் அடிப்படையே ஒவ்வொரு மருத்துவ மூலப் பொருட்களிலும் அமிர்தமும் , நஞ்சும் இணைந்துள்ளது என்பதுதான். எனவேதான் சித்தர்கள் இவைகளில் உள்ள நஞ்சுவை நீக்கி மருந்துகளை தயாரிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர். சுத்தி முறை எனும் பிரிவு சித்த மருத்துவ முறையில் மட்டுமே உள்ளது.

சுக்குக்கு புற நஞ்சு - கடுக்காய்க்கு அக நஞ்சு எனும் விளக்கம் உள்ளது அதாவது சுக்கில் மேலே உள்ள தோல் பகுதி நஞ்சு எனவும் ,கடுக்காயில் உள்ளே உள்ள கொட்டை நஞ்சு எனவே இவைகளை நீக்கினால்தான் அமிர்தமாக வேலை செய்யும்.

சுக்கு சுத்தி ;

தரமான சுக்கு தேவையான அளவில் வாங்கி சுக்கின் மேல் புறம் வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பு ஒரு போஸ்ட் கார்ட் கணத்தில் பூசி காயவிடவும். பின்பு மிதமான நெருப்பில் வாட்டவும் சுண்ணாம்பில் நெருப்பு பிடிக்கும் சமயம் எடுத்து விடவும். பிறகு நன்கு ஆரிய பின் ஒரு கத்தியால் சுண்ணாம்பை சுரண்ட சுக்கின் மேல் தோலுடன் வந்து விடும் . இதனை இடித்து சலித்து பதனம் செய்யவும்.

கடுக்காய் சுத்தி ;

கடுக்காயை உடைத்து மேலே உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும். கொட்டை நஞ்சு எனவே நீக்கிவிடவும். சதைப் பகுதியை இடித்து தூள் செய்யவும்.

இஞ்சி சுத்தி ;

இஞ்சியை சிறிது நீர் விட்டு அரைத்து பிழிந்து சாற்றை வடித்து வைக்கவும் இதை பத்து நிமிடம் கழித்து பார்க்க அடியில் சுண்ணாம்பு போல் வண்டல் இருக்கும் இதுதான் நஞ்சு எனவே மேலே உள்ள தெளிவை மட்டும் எடுத்துக் கொள்ளவும் .

இந்த முறையில் சுத்தி செய்த பிறகு அமிர்தமாக வேலை செய்யும்.

உண்ணும் முறை :

காலையில் இஞ்சிச்சாறு 15-மிலி (மூன்று டீஸ்பூன்)எடுத்து சுத்தமான தேன் அதே அளவு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இது பித்தத்தை சமன் செய்யும்.

மதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிடவும். இது வாயுவை சமன் செய்யும்.

இரவில் படுக்கும் பொது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீ ரில் கலந்து சாப்பிடவும். இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன் செய்யும். மலம் மிதமாக இளகிப் போகும்.

இதன்படி ஒரு மண்டலம் உண்ண உடலில் இளமை மிடுக்குடன் புத்துணர்ச்சி கிட்டும்.

பழமொழி :

கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்.

ஒரு கடுக்காய் பத்து தாய்க்கு சமம்.

சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சிய கடவுள் இல்லை.

 

1003497_524456190981038_924276937_n.jpg


உங்கள் சமையல் அறையில் இருக்கிறது “வயாகரா”
 
வாழ்வில் அனைத்து வளங்களைப் பெற்றிருந்தும், இல்லற சுகம் என்ற உன்னதத்தை முழுவதும் அனுபவிக்க முடியாத ஆண்கள் ஏராள மானோர் உள்ளனர், இயற்கையின் வரப்பிரசாத மான சாதாரணமாகக் கிடைக்கக் கூடய சமையல் அறை உணவுகள், வாசனைப் பொருட்களை சாப் பிட்டாலே நல்ல பலனைக் காணமுடியும் என்பது பலருக்கு தெரிவதில்லை.
உணவே மருந்து
பொதுவாக, செக்ஸ் உந்துதலானது, சாவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் முதியவனையும் நிமிர்ந்து உட்காரச் செய்யக்கூடிய ஈர்ப்பு சக்தி உடையது. உடல் உறவுக்கும், உணவுக்கும் தொடர்பு உண்டு. நாம் தினசரி சாப்பிடும் சாதா ரண சமையலுக்குப் பயன்படும் பொருட்கள் வயோதிகர்களையும் முறுக்கேறிய வாலிபர்களாக மாற்றும் ஆற்றலைக் கொண்டிருக்கின்றன. கறிவேப்பிலையின் மகத்துவத்தை உணராமல் எப்படி தூக்கி ஏறிகிறோமோ, அதைப் போல் வாசனைப் பொருட்களின் மகத்துவத்தை அறியா மல் நாம் அதனை கறிவேப்பிலை போலவே பயன்படுத்தி வருகிறோம்.
விவரம் அறிந்தவர்களைக் கேட்டால் அவற் றில் உள்ள பல விஷயங்கள் புரியவரும். அவற்றில் நமக்கு எளிதில் கிடைக்கும் சிலவற்றைப் பார்ப் போம்.
பெருங்காயம்
ஆண்மைகுறைவால் மனதில் ஏற்பட்டிருக்கும் பெரும் காயத்தை ஆற்றவல்லது பெருங்காயம். வாசனைக்காக சமையலில் சிறிதளவில் சேர்க்கப் படுகிற பெருங்காயத்தில் இனிய விறு விறுப் பூட்டும், உணர்ச்சிப் பெருக்கேற்படுத்தும் ஆற்றல் உள்ளது. சிலருக்கு இந்த வாசனை பிடிக்காது என்பதால் சமையலில் சேர்க்கமாட்டார்கள். சமையலில் தொடர்ந்து பெருங்காயத்தை சேர்த்து பாருங்கள். ஆண்மை குறைபாட்டால் உங்கள் மன தில் நீண்ட நாட்களாக இருக்கும் “பெருங்காயம்”, பெருங்காயத்தால் ஆறிவிடும்.
ஏலக்காய்
ஏலக்காய் விதைகளை தூள் செய்து அதனை பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து அதன் பின்னர் அரை ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிட் டால் நல்ல பலன் தெரியும்.
ஆனால் ஜாக்கிரதை, இதை அதிக அளவில் பயன்படுத்தினால் எதிர்மறை விளைவிரகளை ஏற்படுத்தி ஆண்மை குறைவு பிரச்சனையை ஏற்படுத்தி விடும் என்று மூலிகை ஆராய்ச்சியாளர் கள் எச்சரிக்கின்றனர்.
மிளகு
மிளகு மிகவும் எளிதில் கிடைக்கக்கூடியது. மிளகு உணர்ச்சியைத் தூண்டி உத்வேகம் அளிக் கும் ஆற்றல் உள்ளது. பண்டைய கிரேக்கர்கள், ரோமனியர்கள் கூட உணவில் மிளகு சேர்த்து வந்தனர். அரேபியர்கள் பல்வேறு விதங்களில் மிளகை உட்கொண்டனர். நான்கைந்து மிளகு களைப் பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் நரம்புகள் முறுக்கேறும், தாம்பத்யத்துக்கு முன்பு சில மிளகுகளை வாயில் போட்டு மென்று தின்றால் நல்ல பலன் கிடைக்கும்.
லவங்கம்
லட்டு போன்றவற்றில் லவங்கம் சேர்க்கப் படுவதுண்டு. பண்டைய சீனர்கள் இதன் பயனை நன்கறித்தனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஐரோப்பியர்களும் லவங்கத்தின் மதிப்பை நன்கு உணர்ந்திருந்தனர் 1642-ம் ஆண்டின் சுவிடன் நாட்டைச் சேர்ந்த மூலிகை விஞ்ஞானி லவங்கத் தைப் பற்றி எழுதியிருந்தார்.
பூண்டு
பூண்டுக்கு இல்லற சுகத்தை தரும் ஆற்றல் நிரம்ப உண்டு. அதன் மகத்துவத்தை எகிப்தியர்கள், கிரேக்கர்கள், ரோமனியர்கள், சீனா மற்றும் ஜப்பானியர்கள் நன்கு தெரிந்து வைத்திருந்தனர். சாப்பிட்டரத எளிதில் ஜீரணமாக்கி, பசியை உண்டாக்கும் ஆற்றல் பூண்டில் இருப்பதே அதன் பலம். பொதுவாக, ஜீரணமான பின்னரே, அதாவது சாப்பிட்டு ஒரு மணிநேரம் அல்லது அதற்குப் பிறகே உறவில் ஈடுபடவேண்டும் என்று கூறப் படு கிறது. அந்த பணியை பூண்டு எளிதில் செய்வதால், பூண்டை உட்கொண்டு உறவில் ஈடுபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
இஞ்சி
இஞ்சி சாப்பிட்டு வந்தால் கணவன் - மனைவி இருவரும் மகிழ்ச்சியாக கொஞ்சி விளையாடலாம். இஞ்சிக்கு ஆண்மையைப் பெருக் கும் ஆற்றல் நிறையவே உண்டு. பண்டைய இலக்கி யங்களில் இஞ்சிச்சாறுடன், தேன் மற்றும் பாதி வேக வைக்கப்பட்ட முட்டையைக் கலந்து ஒரு மாதத்திற்கு சாப்பிட்டு வந்தால் மன்மதனை போல் செயல்படமுடியும் என்று எழுதப்பட்டுள் ளதே அதற்கு சான்று.
சாதிக்காய்
சாதிக்காயை அளவாகப் பயன்படுத்தினால், தம்பத்திய வாழ்க்கையில் மிகையான பலன்களை அனுபவிக்கலாம். சாதிக்காய், தேன், பாதி வேக வைத்த முட்டை ஆகிய மூன்று கலவையும் செக்ஸ் உணர்ச்சியை அதிகரிக்கவல்லவை என்று மூலிகை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உடல் உறவுக்கு முன்பே இந்த கலவையை சாப்பிட்டால், நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்கின் றனர்.
ஓமம்
உணர்ச்சியைத் தூண்டும் ஓமத்தின் ஆற் றலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் அறிந்துள்ளனர். இதன் விதைகள் “தைமால்” என் னும் சத்து அதிகம். ஓமத்தை பொடியாக்கி வைத் துக் கொள்ள வேண்டும். பின்னர் புளியங் கொட்டையின் தோலை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் பருப்பை (ஓம விதைக்கு சம அளவில்) பொடி செய்து, அதனை பொடி செய்த ஓமத்து டன் கலக்கி, நெய், வெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயில் வதக்க வேண்டும். ஒரு ஸ்பூன் கல வையை பால் மற்றும் தேனுடன் கலந்து தாம்பத்ய முன் சாப்பிடலாம்.
வெங்காயம், முருங்கை, பாதாம்
இது தவிர நாம் தினசரி உபயோகிக்கும் காய் கறிகள், தின்பண்டங்களில் கூட ஆண்மையை அதி கரிக்கும் பொருட்கள் அடங்கியுள்ளன. சிறிய வெங்காயத்தில் ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு. முருங்கை விதையில் ஆண்மையைப் பெருக்கும் “பென்-ஆயில்” உள்ளது. வல்லாரை இலையை துவையலாக செய்து சாப்பிட்டால் நரம்புகள் பலம் பெறும்.
பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை போன்றவற்றிலும் நரம்பை முறுக்கேற்றும் சக்தி அதிகமாக இருக்கிறது. வெற்றிலைக்கு ஆண்மையைப் பெருக்கும் ஆற்றல் உண்டு. நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும் அமுக்கராகிழங்கை செக்ஸ் மன்னன் என்றே அழைக்கலாம்.
இது எல்லாம் கடையில் குறைந்த விலைக்கே கிடைக்கும் கடலை உருண்டைக்குக் கூட ஆண்மை யைப் பெருக்கும் மகத்துவம் உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மேற்கண்டவற்றை தேவைக்கேற்றபடி முறையாக சாப்பிட்டு வந்தால் உங்கள் செக்ஸ் பிரச்சனைகள் பறந்தோடி விடும்.
(மாற்று மருத்துவம் இதழில் வெளியானது)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

ஆரம்ப கால புற்றுநோயை தடுக்க கேரட் மற்றும் உருளைகிழங்கு

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்ட ஆய்வொன்றில் கேரட் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை ஆரம்ப நிலையில் காணப்படும் மார்பக புற்றுநோயை தடுக்க கூடியது என தெரிய வந்துள்ளது. இவற்றில் உள்ள வைட்டமின் 'ஏ' வழியே பெறப்படும் ரெட்டினாய்க் அமிலம் ஆனது செல்க ளின் வளர்ச்சி, புதுப்பொலிவு மற்றும் செல் பாதுகாப்பு ஆகியவற்றில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி தோல் வனப்புடன் இருப்பதற்கும் உதவுகிறது.

மனிதனின் உடலில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஜீன் ரெட்டினாய்க் அமிலத்தின் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை அதிகரிக்கும் பணியினை செய்கிறது. இதனால் ரெட்டினாய்க் அமிலம், ஆரம்ப நிலையில் காணப்படும் புற்றுநோய் வளர்ச்சியை முற்றிலும் தடுத்து நிறுத்துகிறது என அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

புற்றுநோய் வராமல் தடுப்பதில் கேரட் உருளைக்கிழங்கு முக்கியப் பங்காற்றுகிறது.

கேரட்டில் உள்ள கரோட்டின் எனும் சத்தானது, புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. பீட்டா கரோட்டின் எனும் நோய் எதிர்ப்பு சக்தியை கேரட் அளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தவிர வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிற ஆற்றலும் கேரட்டிற்கு உண்டு.

உதாரணமாக குடல்புண் (அல்சர்) நோய் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டால் வயிற்று வலி வருபவர்கள் கேரட் சாறினை வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் சாப்பிட்டு வர அவை குணமாகும். வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்குவதற்கும் கேரட் துணை புரிகிறது.

இந்த துர்நாற்றத்திற்கு வாயோ, பற்களோ காரணம் அல்ல. வயிற்றிலிருக்கும் கோளாறுதான் காரணம். வாரத்திற்கு ஐந்து நாட்கள் கேரட் சாறினை சர்க்கரை மற்றும் உப்பு எதுவுமின்றி அருந்தி வர வாய் துர்நாற்றம் பறந்தோடி விடும்.

வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு சாறு வரப்பிரசாதமாகும். இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள உருளைக்கிழங்குகளை பச்சயைாக மிக்ஸிசியில் அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்குமுன்பாக இந்தச் சாற்றில் அரை கப் அருந்தினால் இரைப்பைக் கோளறுகள் குணமடையும். உருளைகிழங்கு சாப்பிடுவதன் மூலம் ஆரம்ப கால புற்றுநோயை தடுக்கும்

ஆரம்ப புற்று நோய் இருப்பின் கேரட் மற்றும் உருளை கிழங்கு சேர்த்து புற்றுநோயை தடுக்கலாம்.

1383576_524257817667542_1351017257_n.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

நவ பாஷாணம் என்பது என்ன?

நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்த்ர்கள் முறைப்படி கட்டுவதாகும்.

பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன.இதில் நீலி என்றொரு வகையும் உண்டு.நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும்.

ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக வேதியல்,இயற்பியல் பண்புண்டு.அதை சித்தரியல் முறைப்படி அணுக்களை பிரித்து மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்பார்கள்.ஒன்பது பஷாணங்கள் என்னவென்றால்..,

1.சாதிலிங்கம்.

2.மனோசிலை

3.காந்தம்

4.காரம்

5.கந்தகம்

6.பூரம்

7.வெள்ளை பாஷாணம்

8.கௌரி பாஷாணம்

9.தொட்டி பாஷாணம்

இந்த நவ பாஷாணத்தின் தனமையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன.நவபாஷாண கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே ச்த்தியமான விஷயமாகும்.நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள்,நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கையாகும்.

தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன.பழனி மலைக்கோவில்,கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை,குழந்தை வேலப்பர் கோயில்.மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது,இதில் இரண்டு போகர் உருவாக்கியவை.தேவிப்பட்டிணத்தில் உள்ளவை யார் உருவாக்கியவை என தெரியவில்லை.

நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவ த்தை உடையது; நவபாஷாணங்களா ல் உருவான சுவாமி சிலையை வழி படுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும். பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம். இதை உணர்ந்தே போகர் பழனி மலையில் நவபாஷாணமுருகர் சிலையை உருவாக்கினார். இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் / சாப்பிட்டால் தீராத நோய் எதுவாக இருந் தாலும் தீர்ந்துவிடும்.

Hit LIKE & SHARE நல்ல செய்திகளை பகிர்வோம், பயனடைவோம்.

1450116_524702167623107_1151824639_n.jpg

 

அடர்ந்த காடுகளிலும், அதிலமைந்துள்ள தனிமையான குகைகளிலும் போய் அமர்ந்து தவம் செய்கிறவர்கள் மட்டுமே ஆனந்த வாழ்வை அடைய முடியும் என்று எண்ணினால் அது தவறு. சொந்த பந்தங்களை விட்டு திடீரென்று ஓட்டமெடுத்து எங்கேயோ கண்ணுக்குத் தெரியாத ஒரு இமய மலைப் பள்ளத்தாக்கிலே போய் சோம்பேறியாக வாழ்வதினால் மட்டும் அதை அடைந்திட முடியாது. தெய்விக வாழ்வின் ஆனந்தத்தை அடைய விரும்பும் ஒருவன் தன் ஆடைகளைப் பற்றி கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதை வேறு நிறத்துக்கு மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற அவசியமுமில்லை. நெற்றியில் எதாவது ஒரு அடையாளம் இட்டுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது.

மணிக் கணக்கில் கடும் வெயிலில் தலைகீழாக நின்று சிரசாசனம் செய்ய வேண்டும் என்ற தேவையுமில்லை. தலையை மொட்டையடிக்கவும் வேண்டாம், சடையாண்டியாக நீளமுடி வைத்துக் கொள்ளவும் வேண்டாம். அதாவது அதைக் குறித்த கவலை தேவையில்லை. திரு ஓடைக் கையால் தொடக் கூட வேண்டாம். சிங்கத் தோலில் சயனிப்பது, மான் தோலில் அமர்வது, புலித்தோலில் தியானிப்பது போன்ற எதுவும் தேவையில்லை. மேற்கூறிய இவைகளே உண்மையான ஆன்மிக சாதகனுக்கு முத்திரைகள் என்று கொள்ள வேண்டியதில்லை. உண்மையான ஆன்மிக சாதகன் புறச் சின்னங்களை குறித்து யோசிப்பதே இல்லை. நீங்கள் இருக்கும் இடந்தையோ, அணியும் ஆடையையோ, படுக்கும் படுக்கையையோ, தலைமுடியை அமைத்துக் கொள்ளும் முறைகளாலோ, உங்களுடைய

பாத்திரத்தின் தன்மையையோ வைத்து உங்களை ஆன்மிக வாதி என்று யாரும் முடிவு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. தெய்விகமான ஆன்மிக வாழ்வு என்பது உங்களின் தனிப்பட்ட அனுபவம். அதை மற்றவர்கள் உணர்கின்றார்களா என்ற கவனம் இருக்குமாயின், இன்னும் நீங்கள் கடக்க வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது என்பதே பொருளாகும்.

ஆன்மிக வாழ்வு என்பது தெய்வீக வாழ்வாகும். அதை அடைவதற்கு ஒரே வழிதான் உண்டு. அது என்னவென்றால் நாம் தெய்வீக வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான். தெய்வீக வாழ்க்கை வாழ்வது என்பது இடைவிடாத ஒரு முயற்சியாகும். அது உண்மையோடு நம்மை இணைத்துக் கொள்ள முயலும் முயற்சியல்லாது வேறொன்றுமில்லை. முடிவில் தான் எதுவாக ஆக விரும்பி இவ்வளவு பிரயத்தனப் பட்டோமோ, ஏற்கனவே தான் அதுவகவே இருப்பதை தெய்வீக வாழ்வை வென்றவன் காணுவான். ஆனால், மிகப் பெரிய விஷயம் என்னவென்றால், ஒன்றைக் கொடுக்காமலோ அல்லது இழக்காமலோ ஒன்றைப் பெற முடியாது. அது போல உலகாய எண்ணங்களையும், ஆசைகளையும், பற்றுகளையும் இழக்காமல் தெயவீக வாழ்வின் ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது.

 

534310_241510112670327_590380198_n.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

அல்சர் அவதியா..?

சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு!

இரைப்பையில் சுரக்கும் அமிலங்கள்தான், நாம் உண்ணும் உணவின் செரிமானத்துக்கு உதவுகின்றன. இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் தாக்குதலில் இருந்து இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன.

இந்த சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாதபோது அல்லது சளிச்சவ்வுகளின் தொடர்ச்சியில் இடைவெளி (breakdown)ஏற்படும்போது அமிலமானது இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதித்து சிவந்து வீக்கம் மற்றும் வலியுடன் கூடிய புண்ணை (ulcer) ஏற்படுத்துகிறது. புண் தீவிரமடையும்போது அது இரைப்பை மற்றும் சிறுகுடலில் துளையை ஏற்படுத்தி ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது.

காரணங்கள்: அல்சரை உண்டாக்குவதில் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற கிருமி முக்கியப் பங்கு வகிக்கிறது. தவிர, காரம், மசாலா நிறைந்த உணவுகளாலும் மதுபானம் அருந்துதல், புகையிலைப் பழக்கம், புகைப்பிடித்தல் மற்றும் கணையத்தில் ஏற்படும் கட்டியினாலும், மருத்துவக் கதிரியக்கத்திற்கு உட்படுத்துவதாலும், மனக்கவலை மற்றும் பரபரப்பினாலும் வயிற்றுப் புண் ஏற்படுகிறது.

அறிகுறிகள்:

குமட்டல், வயிற்றின் மேல் பகுதியில் வலி, உணவு சாப்பிட்ட ஓரிரு மணி நேரத்திற்குள் பசி, நோய் தீவிரமடையும்போது ரத்தம் கலந்த அல்லது கறுப்பு நிறத்தில் மலம் கழித்தல், நெஞ்சு வலி, ரத்த வாந்தி, சோர்வு, உடல் எடை குறைதல் காணப்படும்.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம்.

ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம்.

சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சை அளவு எடுத்துப் பாலில் கலந்து பருகலாம்.

கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.

வால்மிளகைப் பொடித்து அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.

பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து சம அளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.

கைப்பிடி அளவு வெண்நொச்சி இலையில் கல் உப்பைப் போட்டு வறுத்து, அடுப்பை அணைத்துவிட்டு சூடு இருக்கும்போதே அதில் மோரை ஊற்றி, தெளிவை இறுத்துப் பருகலாம்.

மணத்தக்காளிக் கீரையைப் பாசிப் பயிறு, நெய் சேர்த்துச் சமைத்து உண்ணலாம்.

பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு திப்பிலி, சம அளவு எடுத்துப் பொரித்து, 2 கிராம் எடுத்து, உணவிற்குப் பின் உண்ணலாம்.

சில்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்துக் கருப்பட்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ணலாம்.

சேர்க்க வேண்டியவை:

கோஸ், கேரட், வெண்பூசணி, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், நாவல், மாதுளம்பழம், வாழைப்பழம் தயிர், மோர். இள நுங்கு.

தவிர்க்க வேண்டியவை:

அதிகக் காரம், பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், தேன், புளி.

கடைப்பிடிக்க வேண்டியவை:

காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. உரிய நேரத்தில் உணவை உண்ண வேண்டும். பரபரப்பைத் தவிர்த்தல் அவசியம். தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். சரியான நேரத்துக்குத் தூக்கம் அவசியம்.

1395406_628071143918004_1104139525_n.jpg

 

அறு சுவைகளும் நம் ஆரோக்யத்திற்கு மட்டுமல்ல, நம் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் கூட காரணமாக இருக்கின்றன. எனவேதான் ஆன்மிக சாதகர்களுக்கு நாவடக்கம் கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது. அறு சுவைகளைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். இனிப்பு - மண் நீர் இணைந்தது. நெருப்புத் தன்மை பொருந்தியது. இளக்கமானது. செரிமானக் காலம் மிகுவது.எலும்பு, சதை, குருதி, கொழுப்பு,சாறு, சுக்கிலம் ஆகிய உடல் தாதுக்களுக்கு ஊட்டமளிக்கிறது. உடலைப் பெருக்க வைப்பது. குரக்கு நல்லது. புளிப்பு - மண் தீ இணைந்தது. பசியைத் தூண்டும். ஜீரணத்தை மிகைப் படுத்தும். உணவின்பால் வேட்கையும் சுவை உணர்வையும் ஏற்படுத்தும். வெப்பத்தை கூட்டும். உவர்ப்பு - நீர் தீ இணைந்தது. உப்பு சுவை என்றழைப்பர். உப்பு உடல் உறுப்புகளுக்குள் கசிவையும் இசைவையும் ஏற்படுத்தும். வியர்வையை மிகுதிப்படுத்தி வெளியேற்றும். கைப்பு(கசப்பு) - நீர் வளி . இந்த சுவையை யாரும் விரும்புவதில்லை. ஆனால் இதுதான் உடலுக்கு உறுதுணையாகிறது. பூச்சிகளைக் கொல்கிறது. விஷத்தை முறிக்கிறது. குறைந்தால் குருதி தூய்மை கெடுகின்றது. கார்ப்பு(காரம்) - தீ வளி இணைந்தது. உணவின்பால் நாட்டத்தை உண்டாக்கும். செரிப்பாற்றலை மிகுவிக்கும்.விந்து நீற்றுப் போகும். உடல் ஆற்றல் குறையும். உடலில் நடுக்கம் ஏற்படும். வலிப்பு நோய் ஏற்படக் கூடும். துவர்ப்பு - மண் வளி இணைந்தது. செரிமானத்தைக் குறைக்கும். மிகுந்தால் வயிறு பொருமும். மலம் சிக்கும். சிறுநீர் தடைப்படும். ஆண்மை, பெண்மை குறையும். உறுப்புகளின் உந்தும் ஆற்றல் குறையும். குறைந்தால் குருதி கெடும். கசியும். அறுசுவைகள் இந்த அளவிற்கு நம் உடலில் முக்கியமான கிரியா ஊக்கிகளாக விளங்குகின்றன. வள்ளுவப் பெருந்தகை சொல்லும் போது ''யாகாவார் ஆயினும் நாகாக்க; காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு'', என்பார். நாம் பொதுவாக நாவடக்கம் என்றால் பேசுவதைக் குறித்து பொருள் கொள்வோம். ஆனால், நாவடக்கம் என்பதை உணவில் சுவை ஆர்வத்தைக் குறைத்துக் கொள்வதையோ அல்லது சுவைகளைக் கைவிடுவதையோ கூட பொருளாகக் கொள்ளலாம். உப்பு, காரம், புளிப்பு போன்ற சுவைகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளும் போது நம் உணர்வுகள் தறிகெட்டு ஓடுகின்றன. விளைவு தவறான எண்ணங்கள் தவறான செயல்களுக்கு காரணமாக அமைந்து விடுகின்றன. நம் முன்னோர்கள் பண்டைய காலங்களில் துறவறம் மேற் கொள்ளும் போது உணவு வகைகளில் சுவைகளை கைவிட்டு விடுவார்கள். உப்பு இல்லாமல் சாப்பிட்டு என்னை நானே பரிசோதித்துக் கொண்டதுண்டு. தீவிரமான பிரம்மச்சரியம் மேற் கொள்பவர்கள் உணவில் சுவைகளை அறவே நீக்கி விடுவார்கள். ஆசைகள் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டிருக்கின்றன. ஐம்பொறிகள் வாயிலாகவும் ஆசைகள் உருவெடுக்கின்றன. தீவிரமான பிரம்மச்சரியத்தில் எந்த ஆசைக்கும் இடமில்லை. மற்ற நான்கு விஷயங்களையும் மனிதன் கட்டுப்படுத்தி வைத்து விட முடியும். ஆனால், உணவு உண்ணாமல் வாழ்வது என்பது இயலாத காரியம். வேண்டுமானால் உணவைக் குறைத்துக் கொள்ளலாம். அப்படி உணவு என்று உண்கிற போது அதை சுவைக்காமல் இருக்க முடியாது. அப்படி சுவைதந்து உண்ணுகிற போது அந்த சுவையில் பற்று வைக்காமல் இருந்து பழக வேண்டும். முதலில் மிகவும் கடினமாகத்தான் இருக்கும். உப்பு, காரம் இல்லை என்றால் எவ்வளவு நல்ல உணவாக இருந்தாலும் உண்ண முடியாது. ஆனால், பற்றுகளை அறுத்தவர்களுக்கு அது சாத்தியமாகிறது. அந்த அறுசுவைகள் முறையாக அமையாது போய்விடும் போதும் அந்தச் சுவையைக் கருத்தில் கொள்ளாது அவர்கள் உண்ண முடியும். நாவை வென்றவர்களுக்கு இது சாத்திய மாகிறது. ஒரு மனிதனுக்கு ஆசை அடங்கி இருக்கிறதா என்பதை இந்த நாவடக்கத்திலிருந்து அறிந்து கொள்ள முடியும். எல்லா ஆசைகளையும் அடக்கியவனே துறவி. அவனே ப்ரம்மச்சரியம் கடைபிடிக்க முடியும். ஆசையை அவன் எவ்வளவு தூரம் அடக்கியிருக்கிறான் என்பதை சுவை என்ற விஷயத்தில் நாவை அவன் எந்த அளவுக்கு அடக்கியிருக்கிறான் என்பதை வைத்து தெரிந்து கொள்ள முடியும். முற்காலங்களில் சீடனின் ஆசையை அளந்தெடுப்பதற்கு குருவிற்கு நாவடக்கமே பயன்பட்டுள்ளது. ப்ரம்மச்சரிய விரதத்தில் நான்கு நிலைகள் உண்டு. அந்த நான்கு நிலைகளைப் பெற்றிருப்பவன் இயல்பாகவே நாவடக்கம் உடையவனாகவே இருப்பான்.

1391685_196581510527858_1753716628_n.jpg

 

 

இரைப்பை புண் ஏற்படக் காரணங்கள்:-

1) எளிதில் ஜீரணமாகாத உணவுப் பொருட்களை அளவிற்கு அதிகமாக உண்பது.

2) பட்டினி கிடப்பது.

3) குறிப்பிட்ட நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் நேரம் தவறி சாப்பிடுவது.

4) மிகச் சூடான பானங்களை அருந்துவது

5) சூடான உணவுப் பொருட்களை உண்பது.

6) காரமான மசாலா கலந்த உணவுகளை உண்பது

7) சத்தான உணவுவகைகளை அதிகமாக உணவில் சேர்க்காதது.

குடலில் கிருமி உடையவர்கள்

9) மது அருந்துதல், புகை பிடித்தல், புகையிலை முதலியவைகளை அளவிற்கு அதிகமாக பயன்படுத்துதல்

10) கல், மண், தூசி மற்றும் கலப்படங்கள் கலந்த அசுத்தமான உணவுகளை உண்பது.

11) சில வகை மருந்துகளை வெகுகாலமாக மருத்துவரின் ஆலோசனை யின்றி உண்பது

மேலும் அதிக கவலை, மன அழுத்தம், கோபம் கொள்வது போன்றவைகளிலும் அல்சர் ஏற்படுகிறது. `நொறுங்கத் திண்ணவனுக்கு நூறு வயது' என்பார்கள். ஆனால் இன்றைய வாழ்க்கையில் யார் அமைதியாக உட்கார்ந்து மென்று தின்கிறார்கள். யாரும் சரியான நேரத்தில் உணவு உண்பதில்லை. இரவுக்கு கடைகளில் இரண்டு மணிக்கு கூட உண்பவர்களைப் பார்க்கிறோம். அதனால் நாம் ஓய்வு கொடுக்காத வயிறு நமக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்து விடுகிறது.

குடல்புண் உள்ளவர்களுக்கு மேல்வயிற்றில் வலி, குமட்டல், வாந்தி, வாயில் புளிப்பு நீர் ஊறல், நெஞ்சு எரிச்சல் ஆகியவை ஏற்படும்.

உணவு முறை : -

1. காபி, டீ, போன்றவைகளை அருந்தக் கூடாது.

2. மது அருந்துதல், புகை பிடித்தலை அரவே விட வேண்டும்.

3. நேரம் தவறாமல் குறிப்பிட்ட நேரத்தில் உண்ண வேண்டும்.

4. உணவில் அதிகம் காரம் சேர்க்கக்கூடாது.

5. குறுகிய இடைவெளியில் அடிக்கடி மோர், இளநீர் ஏதாவது அருந்தலாம்.

6. உணவில் மணத்தக்காளிக் கீரை, அகத்திக் கீரை ஆகியவைகளை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

7. காய்கறிகளில் எளிதில் செரிக்கும் கத்தரிப்பிஞ்சு வெண்டைப்பிஞ்சு, வாழைப்பூ, வாழைத்தண்டு, புடலம் பிஞ்சு ஆகியவைகளை கூட்டு செய்து சாப்பிடலாம்.

8. எளிதில் செரிக்கும் வாழைப்பழம், ஆப்பிள் சாறு போன்றவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

1381566_631913840164268_1415677008_n.jpg

 

 

அகத்தியர் வாழும் பொதிகை மலை

அகத்தியர் வாழும் பொதிகை மலையில் கடல்மட்டத்திலிருந்து சுமார் 6,150 அடி உயரத்திலுள்ள அகத்தியரைத் தரிசிக்கச் செல்வதை புனிதப் பயணம் என்றும் கூறலாம்.

இப்பொதிகை மலை இயற்கை : அபூர்வ மூலிகைகள், மனதைக் கவரும் அருவிகள், சிற்றோடைகள், ஆறுகள், புல்வெளிகள் மரங்கள் நிறைந்த காடுகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. அனைத்து வனவாழ் உயிரினங்களும் உள்ளன.

அகத்தியர் தமிழ் முனிவர்: அகத்தியர் தமிழ் முனிவரைத் தரிசிக்க திருவனந்தபுரம் (கேரளம்) பி.டி.பி. நகரிலுள்ள வனவிலங்குக் காப்பாளர் அலுவலகத்தில் அனுமதி பெற்று, அவர்களது தகவலின் பேரில் போணக்காட்டிலுள்ள வனத் துறை சோதனை மையத்தில் பணம் செலுத்தி, அனுமதிச் சீட்டு பெற்று, அங்கிருந்து வாகனம் மூலம் சுமார் 10 கி.மீ. தொலைவு சென்று, போணக்காடு பிக்கெட் ஸ்டேசன் என்ற இடத்திலிருந்து, வனத் துறையினர் நமக்கு ஏற்பாடு செய்துள்ள வழிகாட்டியுடன் (Guide) மூன்று நாள் பொதிகை மலை பயணம் தொடங்குகிறது.

தமிழ் முனிவரைத் தரிசிக்க ஆண்டுதோறும் ஜனவரி 15 முதல் சிவராத்திரி வரை கேரளத்தவர்கள் தினமும் குழுவாக (நாள் ஒன்று சுமார் 200 பேர்) சென்று வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஏப்ரல் மாதம் முதல் சென்று வருகின்றனர்.

1391461_628427733882345_483840312_n.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1116575_1165998916_633108756_q.jpg
 
இன்சுலின்: நாய்களில் துவங்கி மரபணு மாற்றம் வரை!
ம.செந்தமிழன்


உங்கள் வீட்டுத் தோட்டத்தில் ஒரு மாம்பழ விதையை ஊன்றி வைக்கிறீர்கள். மாஞ்செடியும் வளர்கிறது. சில ஆண்டுகள் கழித்து, அது மரமான பின்னர் அம்மரத்தின் கிளைகளில் ஒட்டுண்ணிக் கொடிகள் முளைக்கின்றன. அவை மரத்தின் உயிராற்றலைச் சிறிதளவு பாதிக்கும். அதை நீங்கள் வெட்டி எறிகிறீர்கள். நீங்கள் விதைத்தது முளைத்தது. அதனோடு வேறு ஒரு கொடியும் முளைத்துவிட்டது. இது பக்கவிளைவு. அதாவது நீங்கள் எதிர்பாராமல் விளைந்தது.

உங்கள் மாமரம் காய்க்கத் துவங்குகிறது. அதன் பழங்கள் எட்டிக்காய்போல் கசக்கின்றன. அதை உண்டவர்கள் சில காலத்தில் நோய்வாய்ப்பட்டு இறந்தே போகின்றனர். பின்னர்தான் தெரிகின்றது, அந்த மாம்பழங்களில் நஞ்சு கலந்துள்ளது எனும் செய்தி. இது நீங்கள் எதிர்பாராத விளைவு மட்டுமல்ல, நீங்கள் விரும்பாத விளைவு. இது பக்க விளைவு அல்ல, நேர் எதிர் விளைவு.

அலோபதி மருத்துவத்தில் ஒரு சொல்லை வெகு தந்திரமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ’பக்க விளைவு’ (side effect) எனும் சொல் அது. ஒரு நோய்க்காக அலோபதி மருந்தினை உட்கொண்டால், ஒன்று அந்த நோய் முற்றிலும் தீர வேண்டும் அல்லது அந்த மருந்தினால் வேறு எதிர்விளைவுகள் நேராமலாவது இருக்க வேண்டும். அலோபதி மருந்துகள் பெரும்பாலான நோய்களைத் தீர்ப்பதே இல்லை. ஆனால், எதிர் விளைவுகளை உருவாக்கிவிடுகின்றன. அலோபதிக்காரர்கள் அழகாக இந்த எதிர்விளைவுகளை ‘பக்கவிளைவுகள்’ என்பார்கள். இது வார்த்தைகளால் நடத்தப்படும் அரசியல். உண்மையில் அவை எதிர்விளைவுகள்.

பயோக்ளைடோசோன் எனும் மருந்தினை சர்க்கரை நோய்க்காக உட்கொண்டால், அம்மருந்து சர்க்கரை நோயை குணப்படுத்துவதில்லை. ஆனால், அதே மருந்து புற்று நோயையும், இதய நோய்களையும், உடல் பருமனையும் விளைவிக்கிறது. இதன் பெயர் பக்க விளைவு என்றால், அது மோசடி அல்லவா.

இந்தப் புரிதலோடு இன்சுலினைப் பற்றியும் உங்களோடு உரையாட விரும்புகிறேன்.

இன்சுலினும் நாய்களும்:
நாய்களுக்கும் இன்சுலினுக்கும் மிக நெருங்கிய உறவு உண்டு. முதன்முதலில் இன்சுலினைப் பற்றிய ‘ஆராய்ச்சியை’ அலோபதிக்காரர்கள் துவங்கியது நாய்களை வைத்துத்தான். 1889 ஆம் ஆண்டு, ஆஸ்கர் மின்கோவ்ஸ்கி, ஜோசப் வான்மெரிங் ஆகிய இருவரும் ஒரு நாயின் வயிற்றைக் கிழித்து அதன் கணையத்தை மட்டும் அறுத்து எடுத்து மீண்டும் நாயின் வயிற்றைத் தைத்து விட்டார்கள். கணையம் இல்லாத நாயின் சிறுநீரைச் ‘சோதனை’ செய்து பார்க்கையில், அதில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தது. அந்த நாயின் சிறுநீரை ஈக்களும் மொய்த்தன. ஆகவே, அவர்கள் ‘ஆய்வின்படி’ கணையம் இல்லாவிட்டால், சர்க்கரை அளவு அதிகரிக்கும் எனும் முடிவு எடுக்கப்பட்டது.

1916 ஆம் ஆண்டு, பேராசிரியர் நிக்கோல் பாலேசு என்பவர், கணையத்தின் திசுக்களை வெளியே வளர்த்து அவற்றின் சாரத்தை ‘சர்க்கரை நோய்’ ஏற்பட்ட நாய்களுக்குக் கொடுத்தார். இதில், நாய்களின் சர்க்கரை குறைந்தது.

1921 ஆம் ஆண்டு, மருத்துவர்கள் பிரடரிக் பான்டிங், சார்லஸ் பெஸ்ட் ஆகிய இருவரும் இணைந்து, ஒரு நாயின் கணையத்தை அகற்றி அதற்கு சர்க்கரை நோய் வரவழைத்தார்கள். பின்னர் நாயின் கணையத்தினை கூழாக அரைத்து ஊசி மூலம் அதே நாய்க்குச் செலுத்தினார்கள். இதன் வழியாக, அந்த நாயின் சர்க்கரை அளவு மட்டுப்பட்டது. இந்த தொடர் ’வெற்றிகளை’த் தொடர்ந்து மாட்டுக் (cow) கணையத்திலிருந்து ’இன்சுலின்’ முதன் முதலாக தயாரிக்கப்பட்டது.

இந்த நிகழ்வுவரை, இன்சுலின் மனிதர்கள் மீது ஆய்வு செய்யப்படவும் இல்லை; மனிதர்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படவும் இல்லை என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள்.

1922 ஆம் ஆண்டு லியோனார்ட் தாம்சன் எனும் 14 வயதே நிரம்பிய சிறுவனுக்கு முதன் முதலாக இன்சுலின் கொடுக்கப்பட்டது. அந்தச் சிறுவன் அலோபதி முறைப்படி, முதல் வகை (type 1) சர்க்கரை நோயாளி. இவ்வகையில் ’இயற்கையாகவே உடலில் இன்சுலின் சுரப்பு இருக்காது’ என்பது அலோபதியின் கண்டுபிடிப்பு. லியோனார்ட் தாம்சனுக்குக் கொடுக்கப்பட்ட இன்சுலின் வெற்றிகரமாக வேலை செய்தது என்பது அலோபதி உலகினால் கொண்டாடப்பட்டது. அதன் பின்னர், இன்சுலினை மனிதர்களுக்கும் வழங்கத் துவங்கினார்கள்.

மனிதர்களும் இன்சுலினும்:
லியோனார்ட் தாம்சன் தொடர்ந்து இன்சுலின் ஏற்றிக் கொண்டு தனது இருபத்து ஏழாவது வயதில் மரணமடைந்தார். அதாவது, தொடர்ந்து 13 ஆண்டுகள் இன்சுலின் குத்திக்கொண்ட பின்னர் அவர் இறந்துபோனார். அவரது மரணத்திற்குக் காரணம் என்ன என்றும் அலோபதிக்காரர்கள் காரணம் கூறியிருக்கிறார்கள். அது மிக வினோதமான காரணம். லியோனார்ட் தாம்சன் ’நிமோனியா காய்ச்சல்’ வந்து இறந்துபோனார். அதாவது, சர்க்கரை நோயிலிருந்து ’காப்பாற்றப்பட்ட’ அந்தச் சிறுவன் சாதாரண ‘காய்ச்சலால்’ இறந்துபோனான்.
இப்போதும், தொடர்ந்து இன்சுலின் குத்திக்கொள்ளும் நம் சமூகத்தினர் எண்ணற்ற உடல் தொல்லைகளுக்கு ஆளாகிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சில ஆண்டுகள் தொடர்ந்து இன்சுலின் குத்திக்கொண்டவர்களுக்கு மரணம் நேரிடும்போது, எந்த மருத்துவராவது இந்த மரணத்திற்கு ’இன்சுலின்’ குத்திக்கொண்டது காரணம் எனக் கூறுகிறார்களா?
1996 ஆம் ஆண்டு முதல் இன்சுலின் மரபணு மாற்றம் செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. விலங்குகளில் இருந்துதான் முதலில் இன்சுலின் தயாரிக்கப்பட்டது. 1982 ஆம் ஆண்டு முதல் ’மனித இன்சுலின்’ (human insulin) உருவாக்கப்பட்டது. இதிலும் பல எதிர்விளைவுகள் கண்டறியப்பட்டதால், எலி லில்லி எனும் நிறுவனம் மனித இன்சுலினையே மரபணு மாற்றம் செய்து சந்தைக்குக் கொண்டுவந்துவிட்டது.
சாதாரண தக்காளி, கத்தரிக்காயில்கூட மரபணு மாற்றம் செய்யப்பட்டால் மிக மோசமான உடல்நலக் கேடுகள் விளையும் என்பதை நாம் உணர்ந்துவிட்டோம். ஆனால், இரத்ததில் நேரடியாகக் கலக்கும் ஒரு மருந்தை மரபணு மாற்றம் செய்து கொடுப்பதை இன்னும் அறிந்துகொள்ளாமலேயே இருக்கிறோம்.

உங்களுக்கோ உங்கள் உற்றாருக்கோ வழங்கப்படுவது, மரபணு மாற்றப்பட்ட இன்சுலினா அல்லது விலங்கு இன்சுலினா அல்லது மனித இன்சுலினா என்ற தகவலையாவது நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். இன்சுலின் குறித்த தனது அறிவிப்பில் பிரிட்டன் தேசிய சுகாதார சேவை அமைப்பு (NHS),
’ The NHS has always allowed patients to have an informed choice of treatment before they make their treatment decisions and this includes information about risks and benefits. In recent years, greater emphasis has been placed on informed choice as a result of NHS policy which puts patients at the centre of care and encourages involvement in their treatment decisions so that in the ideal world, patients and their doctors make decisions jointly.
The treatment of diabetes is no exception and therefore people with insulin-requiring diabetes, whether Type 1 or Type 2 diabetes should have an informed choice of insulins and should be given information about risks and benefits.’ என்கிறது.
அதாவது, ’எந்த வகையிலான சிகிச்சை தனக்குத் தரப்படுகிறது, எந்த வகை இன்சுலின் தனக்கு பரிந்துரைக்கப்படுகிறது, தனக்குத் தரப்படும் இன்சுலின் மற்றும் பிற மருந்துகளால் விளையும் நன்மைகள், இடர்ப்பாடுகள் ஆகியவற்றைப் பற்றி ஒவ்வொரு நோயாளியும் அறிந்திருக்க வேண்டும். இந்த செயல்பாட்டில் மருத்துவர்களும் நோயாளிகளும் இணைந்துதான் முடிவெடுக்க வேண்டும்’ என்கிறது பிரிட்டன் தேசிய சுகாதார சேவை அமைப்பு.

இந்திய அரசின் சட்டங்களின்படியும் மேற்கண்ட செய்திகளை அலோபதி மருத்துவர்கள் தங்களிடம் வரும் மக்களிடம் வெளிப்படையாகக் கூற வேண்டும்.
இங்கு என்ன நடக்கிறது என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்!
இன்சுலின் குத்திக் கொள்ளும் அளவினை எந்த நேரமும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்பதுதான் உலகளவிலான அலோபதி அமைப்புகள் செய்யும் எச்சரிக்கை. அவ்வாறு கவனிக்காமல், அளவுக்கு அதிகமான இன்சுலினை குத்திக்கொண்டால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்கிறது கீழேயுள்ள பட்டியல்:
”மன அழுத்தம், சோர்வு, மிகையான தூக்க உணர்ச்சி, அதீத அயற்சி, தலைவலி, பசி, எதிலும் கவனம் செலுத்த இயலாத நிலை, எரிச்சலான உணர்ச்சி, குமட்டல், நரம்புத் தளர்வு, ஆளுமையில் மாற்றம் ஏற்படுதல், அதிவேகமான இதயத் துடிப்பு, நிதானமின்மை, நிம்மதியான தூக்கமின்மை, குழறியபடி பேசுதல், வியர்வை, கூச்ச உணர்வு, நடுக்கம், செயல்பாடுகளில் / அசைவுகளில் நிதானமற்ற நிலை”
மேலே உள்ளவை பொதுவான ’இன்சுலின் அளவு அதிகரித்தால்’ ஏற்படுபவைதான். இன்சுலின் அளவு மிகவும் கூடுதலாகிவிட்டால் என்னென்ன ஏற்படும் என்பது கீழே உள்ள பட்டியல்:
”ஆழ் மயக்கம் (coma), தன்னிலையிழத்தல், தோல் வெளிறிப் போகும் நிலை, வலிப்பு”
மேற்கண்ட பட்டியல்கள் ஏதோ மரபுவழி மருத்துவர்களின் கண்டுபிடிப்பு அல்ல. பிரிட்டனில் இயங்கும் diabetes.co.uk எனும் மிகப் பெரிய நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை.
ஒருவர் சர்க்கரை நோய்க்காக அலோபதி மருத்துவரை அணுகினால், ஒன்று அந்த நோயைத் தீர்க்கும் மருந்தைத் தர வேண்டும் அல்லது ’எங்களிடம் மருந்து இல்லை’ என்று ஒப்புக்கொள்ள வேண்டும். மாறாக, அவரது நோயையும் தீர்க்காமல், சர்க்கரையைக் காட்டிலும் மிகக் கொடுமையான எண்ணற்ற நோய்களை உருவாக்கும் மருந்துகளை எழுதிக் கொடுக்கிறார்கள் அலோபதிக்காரர்கள். இதற்குப் பெயர்தான் ‘நவீன மருத்துவம்’!
இதைக் கேள்வி கேட்பவர்கள் ‘பிற்போக்குவாதிகள்’ , ‘அறிவியலே தெரியாதவர்கள்’.
இன்சுலின், பயோக்ளைடோசோன் உள்ளிட்ட மருந்துகளினால் விளைபவை பக்க விளைவுகளா (side effects) ? நேர் எதிர் விளைவுகளா (adverse effects)? என்பதை இப்போதாவது நம் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.
மரபுவழிகளைப் பொறுத்தவரை, ’உடலின் இயற்கை ஆற்றலுக்கு மீண்டும் இன்சுலின் சுரக்கும் ஆற்றல் உண்டு’ என்பதுதான் கோட்பாடு. பெரும்பாலான மரபுவழிகள், உடலின் இயற்கை ஆற்றலைத் தூண்டும் மருந்துகளையும், செயல்முறைகளையும் மட்டும்தான் கொண்டுள்ளன. ஆகவேதான், பல ஆயிரம் ஆண்டுகளாக, நம் முன்னோர் சர்க்கரை நோயைக் கண்டு அஞ்சாமல் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்துவந்தனர்.
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் போன்ற அலோபதி முறை, ஆலமரங்களாக நிலைத்து நிற்கும் மரபுமுறைகளை வீசி எறிய முயற்சித்து மனித உயிர்களுடன் விளையாடிக் கொண்டுள்ளது. எதற்கெடுத்தாலும் செயற்கையான வழிமுறைளைக் கண்டறிந்து, உடலின் இயற்கை ஆற்றலை, இயல்பான மனநிலையை அழித்து மரணப் பெட்டிக்கு அனுப்பும் கொள்கையுடன் இருக்கிறது அம்முறை.
ஒருபுறம் எளிய தீர்வுகள், மறுபுறம் மக்களின் உயிர்களுடன், பொருளாதாரத்துடன் சூதாட்டம் நடத்தும் மருத்துவ முறை இவை இரண்டையும் கண்டு மனம் பொறுக்காத உங்களில் நானும் ஒருவன். தீய வழிகளைப் புறக்கணித்து, எளிய தீர்வுகளை சமூகத்தின் முன்னே கொண்டு நிறுத்தும் இயற்கையின் பிள்ளைகளாக செயல்படுவோம்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆபத்தான அஜினோமோட்டோ

கடந்த சில ஆண்டுகளாக பிரபலமாகி வரும் அஜினோமோட்டோ என்ற உப்பும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். முன்பு சென்னை போன்ற மாநகரங்களில் மட்டும் பிரபலமாக இருந்த மோனோ சோடியம் குளூட்டமேட்என்ற வேதிப்பெயரைக் கொண்ட இந்த விநோத உப்பு, தற்போது கிராமப்புற வீடுகளின் சமையலறைக்குள்ளும் புகுந்துவிட்டது.

* இந்த அஜினோமோட்டோவின் விஷத்தன்மை பற்றி இருவேறு கருத்துகள் இருந்தபோதிலும் பல மருத்துவ ஆராய்ச்சிகள் மனிதர்களுக்கு அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு இது பலவித ஆபத்துகளை உருவாக்கும் என்று நிரூபித்துள்ளன.

* கருவுற்ற எலிகளுக்கு அஜினோமோட்டோ கலந்த உணவைத் தொடர்ந்து கொடுத்து வந்தால் அவற்றின் குட்டிகளுக்கு மூளைப் பகுதியில் உள்ள செல்கள், அளவில் சுருங்கியிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

* அஜினோமோட்டோ கலந்த உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிடும் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் சுரப்பது வெகுவாக குறையும். இதனால் உடல் வளர்ச்சி தடைப்பட்டு உயரம் குறைகிறது. மேலும் இந்த வேதிப் பொருள் மூளையில் ஆர்குவேட் நுக்ளியஸ் என்னும் பகுதியைப் பாதிப்பதால் உடல் எடை தாறுமாறாக அதிகரிக்கும்.

* மூளை மட்டுமின்றி இரைப்பை, சிறுகுடல், கல்லீரல் போன்ற உறுப்புகளிலும் அழற்சியையும், சிறு ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது. இதனால் குழந்தைகளுக்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாத வயிற்றுவலி அடிக்கடி ஏற்படும்.

* ஒவ்வாமை உள்ள ஒரு சிலருக்கு இந்த வேதிப் பொருள் கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே மார்பில் எரிச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டு, உடல் வியர்க்க ஆரம்பித்துவிடும். இந்த நோய்க் குறிகளுக்கு சைனா உணவக நோய் என்று தனிப் பெயரே சூட்டப் பட்டுள்ளது.

* அஜினோ மோட்டே£வைப் போன்றே பாஸ்ட் புட் கடைகளிலும், ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் பயன்படுத்தப்படும் ஜீரோ ஏடேட் ஹைட்ரோ ஜெனடேட் என்ற எண்ணெயும், பல்வேறு ஆபத்துக்களை உருவாக்கும் குணம் கொண்டது என்ற தகவல்களையும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

* ஜீரோ ஏடேட் ஹைட்ரோ ஜெனடேட் என்ற எண்ணெய் பசு, எருது, பன்றி போன்ற பல விலங்குகளின் கொழுப்பிலிருந்து தயாரிக்கப் படுவதாகும். இதில் உடலுக்குத் தேவையற்ற ஒருவித கொழுப்பு இருக்கிறது. பாக்கெட்டுகளில் கிடைக்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ், பீட்ஸா, சாக்லெட், துரித உணவுகள் போன்றவை இந்த எண்ணெயில்தான் தயாரிக்கப்படுகின்றன.

* இந்த எண்ணெயைப் பலமுறை திரும்பத் திரும்ப பயன்படுத்தினாலும் உணவின் மணம் மாறாது பதினெட்டு மாதம் வரை உணவுப் பொருள் கெட்டுப் போகாது. மெக்டொனால்ட், பீட்ஸா கார்னர்களில் கிடைக்கும் ஸ்னாக்ஸ் பொருட்கள் நாம் வீட்டுத் தயாரிப்பை விட சுவையுடன் இருப்பது போல தோன்றுவதற்கு இந்த எண்ணெய்தான் காரணம்.

* ஆனால் இந்த எண்ணெயைப் பயன்படுத்தினால் உடலில் வேண்டாத கொழுப்பு சேர்ந்து இருதய நோய், புற்றுநோய், உடல் பருமன் எல்லாம் வந்துவிடும் என்கிறார்கள்.

* திருமணம் போன்ற விருந்து நிகழ்ச்சிகளில் உணவு உண்போர் உடனடியாக வயிற்று உபாதையால் அவதிப்படுகிறார்கள்.

* ஆனால் நமது நாட்டில் குழந்தைகளைக் கவரும் வகையில் பல வண்ணப் பாக்கெட்டுகளில் நொறுக்குத் தீனிகளை விற்பவர்கள் அவற்றில் அஜினோமோட்டோ கலந்திருப்பதை மறைத்து மக்களுக்குப் புரியாத சங்கேத மொழியில் எழுதி ஏமாற்றுகிறார்கள்.

* சாப்பாட்டில் அதிகம் பிரியமில்லாத நோஞ்சான் குழந்தைகளுக்குப் பல பெற்றோர்கள் இந்த அஜினோமோட்டோ கலந்த நொறுக்குத் தீனி பொட்டலங்களை வாங்கிக் கொடுப்பர். இந்தக் குழந்தைகளும் வீட்டு உணவைவிட இந்தப் பொட்டலத் தீனிகளை அளவுக்கு அதிகமாக விரும்பித் தின்பர்.

* குழந்தை இதையாவது சாப்பிடுகிறதே என்று ஆசை ஆசையாக பலரும் அதை வாங்கிக்கொடுப்பர்.
சில மாதங்கள், வருடங்கள் கழித்து இந்த நோஞ்சான் எக்கச்சக்கமாக சதை போட்டு ஊளைச் சதையுடன் தோன்றுவான் என்பதே உண்மை.

* பிறப்புக் கோளாறு, உறுப்புகளில் வளர்ச்சியற்றத் தன்மை, தலைவலி, வாந்தி, வயிற்றுவலி, செரிமானச் சிக்கல், கெட்ட கனவு, தூங்குவதில் சிக்கல், சோம்பல், மிதமாகும் இதயத்துடிப்பு, முடிகொட்டுதல், ஆஸ்துமா, பக்கவாதம், அல்சிமர்ஸ் என்ற முதுமை நோய் மற்றும் சர்க்கரை நோய் என அஜினோமோட்டோ அள்ளி வழங்கும் நோய்களாகும்.

பெற்றோர்களே ! குழந்தைகளே இயற்கையான உப்பு நம்மிடம் இருக்க இந்த அஜினோமோட்டோ என்ற ஆபத்து தேவையா?


 
என்னதான் சொல்லுங்க.. இந்த ஒரிஜினல் கோவால செய்யறதுல கிடைக்கிற டேஸ்ட் மாதிரி இந்த பாக்கெட்ல விக்கிற பவுடருங்கள்ல செய்ய ற குலாப்ஜாமூன் இருக்கறதே இல்ல.. ரொம்ப சிம்பிளா முடிச்சிடலாம்னு நினைக்கிறவங்கதான் இந்த ரெடிமேட் பாக்கெட்டை வாங்கிறாங்க. ஆனா நல்ல டேஸ்ட் வேணும்னு நினைக்கிறவங்க சர்க்கரை இல்லாத கோவாவை கடைகள்ல வாங்கியோ அல்லது வெண்ணைய் எடுக்காத கறந்தபாலை வாங்கி சுண்டக்காய்ச்சியோ கோவா தயார்பண்ணி குலாப்ஜாமூன் செய்ய விருப்பப்படுவாங்க.

இந்த சர்க்கரை போடாத கோவா ஆவின் பார்லர்ல கால்கிலோ அரை கிலோ 1கிலோ பாக்கெட்ல கிடைக்குது.. இதுதவிர தனியா டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் அல்லது மளிகைக்கடைகளிலும் கிடைக்குது.. இத வாங்கி வந்து அதனோட மைதாவை சிறிது சேர்த்து (300 கிராம் கோவாவிற்கு 100 கிராம் அல்லது 75கிராம் மைதா) நல்லா பிசைஞ்சு கொஞ்ச நேரம் ஊறவச்ச பிறகு உருண்டையாக அல்லது நீளவாட்டிலோ உருட்டி நெய்யில்(காஸ் அடுப்பின் வெப்பம் மிதமான சூட்டில் இருக்கவேண்டும்) பொறித்து எடுத்து ஏற்கெனவே தயார் செய்துவைத்துள்ள சர்க்கரைப் பாகில் போட்டு ஊறவைத்து எடுத்து சாப்பிட்டு பாருங்களேன்.. இந்த சுவையே தனிதான்..

பாக்கெட்டுகளில் விற்கப்படும் குலோப்ஜாமூன் மிக்ஸ்களில் அதிகளவு மைதாவும், சோடா உப்பும், பலநாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க இரசாயணங்களும் கலக்கப்படுகின்றது.. எனவே சர்க்கரை போடாத கோவா அல்லது வீட்டில் பாலில் தயாரிக்கும் கோவாதான் குலாப்ஜாமூன் செய்வதற்கு பெஸ்ட்.. உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது.. 10 நாள் வரை கெட்டும் போகாது.

தீபாவளின்னாலே எல்லா கம்பெனிகாரங்களும் போட்டி போட்டுகிட்டு ஒண்ணு வாங்கினா ஒண்ணு ப்ரீன்னு கொடுக்கிறாங்க.. எக்ஸ்பியரி ஆன அல்லது ஓரிரு வாரங்களில் எக்ஸ்பியரி ஆகும் பாக்கெட்டும் இருக்கலாம்.. ஜாக்கிரதை.. ஆபத்தை விலை கொடுத்து வாங்கனுமா என்ன?
16286_520138958081495_1653225714_n.jpg

 


 
Udhai Kumar
அது என்ன கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா மட்டும் வாயில போட்டவுடனே கரைஞ்சு உள்ளே போறது கூட தெரியாம அவ்வளவு நைசா தொண்டைக்குள்ள இறங்கிடுதே, ஆனா நம்ம வீட்ல எப்படி செஞ்சாலும் மைசூர்பா அந்த மாதிரி ரொம்ப சாஃப்டா வரமாட்டேங்குதேங்கிறவங் களுக்கு அதனோட ரகசியம் தான் என்னென்னு தெரிஞ்சுக்க ஆசையா இருக்கும்.. ரொம்ப சிம்பிள்.. மைசூர்பா வோட சூத்திரம் என்ன தெரியுமா? 1:2:3 தான்.. அதாவது 100 கிராம் கடலை மாவு என்றால், 200 கிராம் சர்க்கரை, 300கிராம் நெய் என்ற அளவில் கலவை இருக்கவேண்டும்..

கடலைமாவும் சர்க்கரைப்பாகும் அடுப்பில் வைத்துக் கிளறும்போது இந்த நெய்யை சிறிது சிறிதாக ஊற்றிக் கிளறிக்கொண்டே வந்தால் ஒரு ஸ்டேஜில் இந்தக்கலவை மாவு பொங்கி எழும்புவதுதான் பதம்.. அப்புறம் என்ன? கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா சுவை உங்கவீட்டிலும்தான்.. ஒரு கிலோவின் விலை அங்கு ரூ.440 என்றால் வீட்டில் செய்யும்போது அதில் பாதிளவுதான் செலவாகும்.. இந்த தீபாவளிக்கு உங்கள் வீட்டில் முயற்சித்துப்பாருங்களேன்..
1441261_520138871414837_401121190_n.jpg
 

 


 
சாப்பிடும் முன்பு இலையை சுற்றிலும் தண்ணீர் தெளிப்பது சின்ன எறும்புகளோ பூச்சிகளோ நமக்குத் தெரியாமல் உணவில் விழுந்து உயிர் விடக்கூடாது என்பதற்காகவே. சாப்பிடும் முன் இலையின் ஓரத்தில் கைப்பிடிச் சோறு/சாதம் வைப்பது உணவு தானியங்கள் விளைவிக்கும் போது நமக்குத் தெரியாமல் சின்னச்சின்ன உயிரினங்கள் (புழு,பூச்சிகள்) கொல்லப்பட்டிருக்கும், அவைகளுக்கு வைக்கப்படும் பிண்டம் தான் அந்த கைப்பிடிச் சாதம். மற்றும் அந்தச் சாதம் பிற உயிர்களுக்கும் உணவாக வேண்டும் என்ற உயிரிய ஜீவகாருண்ய நோக்கமே.

#இப்படி எல்லா உயிரினங்களையும் மதிப்பதே நம் பண்பாடு

- Sathiesh Sanjee
1001244_525069594253031_877332433_n.jpg
 

 


 
வாழை மரத்தின் மருத்துவ குணங்கள்:-

* தீக்காயம், வெந்நீர் காயம், சூடான எண்ணைபட்ட காயம்- பாதிக்கப்பட்ட இடத்தில் குருத்து வாழை இலையைச் சுற்றிக் கட்டுப் போடலாம். வாழை இலை அல்லது பூவைக் கசக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினாலும் பலன் இருக்கும்.

* காயங்கள், தோல் புண்கள்- தேங்காய் எண்ணையை மஸ்லின் துணியில் நனைத்து, புண்கள் மேல் போட்டு அவற்றின் மீது மெல்லிய வாழை இலையை கட்டு மாதிரி போட வேண்டும்.

* சின்னம்மை, படுக்கைப் புண், உடலில் தீக்காயம்- பெரிய வாழை இலை முழுவதும் தேன் தடவி, அதில் பாதிக்கப்பட்டவரை சில மணி நேரம் படுக்க வைக்க வேண்டும். இதைத் தொடர்ந்து செய்தால் குணமாகும்.

* சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்புளங்கள்- பாதிக்கப்பட்ட இடங்களில் வாழை இலையைக் கட்டி வைக்க வேண்டும்.

* குடற்புழுக்கள், நீரிழிவு, அமிலச் சுரப்பு, தொழுநோய், ரத்த சோகை- வாழை வேரை தீயில் கொளுத்தி, அந்தச் சாம்பலை கால் தேக்கரண்டி அளவுக்கு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டுவர, இவை சரியாகும்.

* அஜீரணம், மூலநோய்- பாலுடன் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அஜீரணம் சரியாகும். தொடர்ந்து 2- 3 வேளை சாப்பிட்டு வந்தால் மூலநோய் தீரும்.

* காசநோய்- அரை கப் தயிரில் வாழைப்பழத்தைப் பிசைந்து ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தம்ளர் இளநீர் சேர்த்துத் தினமும் இரண்டு வேளை வீதம் சாப்பிட்டு வந்தால் சரியாகும்.

* டைபாய்டு, மஞ்சள் காமாலை- தேனில் வாழைப் பழத்தைப் பிசைந்து தினம் இரு வேளை வீதம் சாப்பிடுவது பலன் கொடுக்கும்.

* இருமல்- கரு மிளகு கால் தேக்கரண்டி எடுத்துப் பொடி செய்து, அதில் பழுத்த நேந்திரம் பழத்தைக் கலந்து இரண்டு, மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.

* சிறுநீரக நோய்கள், ரத்தக் குறைபாடுகள்- நெல்லிச்சாறு அரைக் கரண்டியுடன் பழுத்த வாழைப் பழத்தைக் கலந்து 2, 3 வேளை சாப்பிட்டு வந்தால் இந்தக் குறைபாடு நீங்கும்.
1422437_632083686813950_654297891_n.jpg
 

 


வயிற்றில் உள்ள கொழுப்பைக் கரைக்கும் இயற்கை உணவுகள்:-

இன்றைய காலத்தில் சிறு வயதிலேயே தொப்பை வந்துவிடுகிறது. ஏனெனில் உண்ணும் உணவில் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாததாலும், ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களும் இருப்பதால், உண்ணும் உணவுகள் சரியாக செரிமானமடையாமல், வயிற்றில் தங்கி, வயிற்றை பெருத்துவிடுகிறது. இந்த பழக்கவழக்கங்களைகுழந்தைகளுக்கு பழக்கினால், பிற்காலத்தில் அவர்கள் தான் அவஸ்தைக்குள்ளாவார்கள். மேலும் சிலர் இந்த தொப்பையைக் குறைக்க கடுமையான உடற்பயிற்சி, டயட் போன்றவற்றை பின்பற்றிவார்கள். என்னதான் டயட் கடுமையாக இருந்தாலும், அப்போது உடல் வேண்டுமானால் பலவீனமடையுமே தவிர, தொப்பை மட்டும் குறையாமல் இருக்கும். ஆகவே "முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்" என்னும் பழமொழிக்கேற்பதொப்பையையும் உணவாலேயே குறைக்கலாம்.

கறுப்பு பீன்ஸ்

பொதுவாக பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் இருக்கும். இவற்றை சாப்பிட்டால், பசியே ஏற்படாது. அதிலும கருப்பு பீன்ஸில் அளவுக்கு அதிகமான அளவில் ஃப்ளேவோனாய்டுகள் உள்ளன. இந்த உணவை அதிகம் சாப்பிட்டால், வயிற்றில் சேரும் கொழுப்புகள் குறையும் என்று ஆய்வுகள் பலவும் கூறுகின்றன. ஆகவே மறக்காமல் இந்த கறுப்பு பீன்ஸை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பேரிக்காய் பேரிக்காயில்

குறைவான அளவில் கலோரி இருப்பதோடு, நார்ச்சத்து அதிகமாக உள்ளது. ஆகவே இந்த பழத்தை தினமும் உணவு சாப்பிடுவதற்கு முன் சாப்பிட்டு, பின்னர் உணவை சாப்பிட்டால், உடல் எடை நிச்சயம் குறையும். ஏனெனில் ஆய்வு ஒன்றில், இந்த பழத்தில் நார்ச்சத்துக்கள் மட்டுமின்றி, கேட்டிசின்ஸ் மற்றும் ஃப்ளேவோனாய்டு என்னும் இரண்டு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உணவில் இருக்கும் கொழுப்புகள் வயிற்றில் தங்காமல் பார்த்துக் கொள்ளும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பாப்கார்ன்

ஸ்நாக்ஸிலேயே தானியங்களால் ஆன பாப்கார்ன் மிகவும் சிறந்தது. ஏனெனில் ஆய்வு ஒன்றில் தானியங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கும், அந்த தானியங்களை சுத்திகரித்து சாப்பிடுபவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை ஆராய்ந்தனர். அதில் தானியங்களை சுத்திகரித்து சாப்பிடுபவர்களை விட, அதை அப்படியே சாப்பிடுபவர்களின் எடை குறைவாக உள்ளது என்று தெரியவந்துள்ளன. எனவே ஸ்நாக்ஸ்களில் பாப்கார்ன்னை சாப்பிட்டு வந்தால், உடல் எடை அதிகரிக்காமலும், தொப்பையும் வராமல் தடுக்கலாம்.

உருளைக்கிழங்கு

அனைவருக்கும் பிடித்த காய்கறிகளில் ஒன்றான உருளைக்கிழங்கை சாப்பிட்டால், உடல் எடை குறையும் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் இதனை சாப்பிட்டால், உடல் எடை குறைவதோடு, கொழுப்புகள் சேராமல் இருக்கும்.

வேர்க்கடலை

நட்ஸ் வகைகளில் வேர்க்கடலை மிகவும் சுவையுடன் இருக்கும். அத்தகைய வேர்க்கடலையில் சுவை மட்டும் இருப்பதோடு, அதனை சாப்பிட்டால், உடல் எடையும் குறையும். ஏனெனில் இதில் என்னதான் கொழுப்புகள் இருந்தாலும், அவை மிகவும் ஆரோக்கியமானவை. மேலும் அவை உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்துவிடும். ஆகவே இதனை எப்படி வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம்.

சூரியகாந்தி விதைகள்

கடைகளில் விற்கப்படும் சூப், சாலட் மற்றும் சாண்ட்விச் போன்றவற்றின் மீது சூரியகாந்தி விதைகள் அழகுக்காகவும், சுவைகாகவும் சேர்க்கப்படுகிறது. அத்தகைய சூரியகாந்தி விதைகளில் ஆரோக்கியமான கொழுப்பான மோனோ-அன்-சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. ஆகவே இவற்றை தொப்பை உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால், வயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரைந்துவிடும்.

வெள்ளை டீ

(White Tea) நாம் இதுவரை கிரீன் டீ மட்டும் தான் உடல் எடையை குறைக்கும் என்று நினைத்துள்ளோம். ஆனால் கிரீன் டீயை விட வெள்ளை டீ உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். ஏனெனில் அவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக இருக்கிறது. கிரீன் டீயில் 20 கிராம் காஃப்பைன் இருந்தால், இதில் 15 கிராம் தான் இருக்கிறது. மேலும் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து, இதய நோய் ஏற்படாமல் தடுப்பதோடு, உடல் எடையை குறைப்பதிலும் கிரீன் டீயை விட இது மிகவும் சிறந்தது.

 

1385587_632083826813936_1217312248_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

அன்னதானம்..!

யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை,

யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை,

யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி,

யாவர்க்குமாம் பிறர்க்(கு) இன்னுரைதானே.

- திருமூலர்.

நமது கடந்த பிறவிகளில் நாம் செய்த நல்வினை மற்றும் தீவினைகளின் தொகுப்பை அனுபவிக்கவே நாம் மனிதப்பிறவி எடுத்திருக்கிறோம். அதே போல நமது பெற்றோர்களின் ஐந்து முந்தைய தலைமுறையினர் செய்த நல்வினைகள் மற்றும் தீவினைகளின் தொகுப்பில் எட்டில் ஒரு பங்கையும் சேர்த்தே அனுபவிக்கும் விதமாக நமது பிறப்பு அமைந்திருக்கிறது. மீதி ஏழு பங்குகள் பிற நமது தாத்தா பாட்டியின் பேரன் பேத்திகளுக்குப் பிரிந்துவிடும்.

நமது கர்மாக்களை நாம்தான் அனுபவிக்க வேண்டும். நம் சார்பாக வேறு யாரும் அதைச் சுமக்க முடியாது; மாற்ற முடியாது. பூஜைகள், பரிகாரங்கள் மூலமாக நமது தீயக்கர்மாக்களை நம்மால் குறைக்க முடிந்தாலும், அந்த பூஜைகள், பரிகாரங்களில் நாம் நேரடியாகக் கலந்து கொண்டால் மட்டுமே நமது தீயக்கர்மவினைகள் குறைய துவங்கும். அதே சமயம் அந்தப் பூஜைகள், பரிகாரங்களை நாம் மனப்பூர்வமாகச் செய்ய வேண்டும். அப்போதுதான் அவைகள் சூட்சுமமாகச் செயல்படும். இது எல்லோருக்கும் இலகுவான செயலல்ல.

ஆனால், இவற்றை விட இகுவானவழி பசித்த உயிர்களுக்கு உணவளித்தலாகும். மனிதர் மட்டுமல்ல எவ்வுயிரினதும் பசிப்பிணியைத் தீர்க்கும் போதும் ஆன்மலாபம் உண்டு. மற்ற எந்தத் தானம் செய்யினும் யாரையும் போதுமென்ற அளவுக்குத் திருப்தி்ப்படுத்த முடியாது. எத்தகைய பசியாக இருப்பினும் ஒரு எல்லையில் போதுமென்று கூறுவர். மற்ற எந்தத் தானங்களையும் விட அன்னதானம் என்னும் உயிர்காக்கும் தானம் மிக உயர்வான அறமாகும்.

நமது கர்மவினையை இலகுவாக மாற்றும் சக்தி (கலியுகத்தில்) அன்னதானத்துக்கு மட்டுமே உண்டு. ஆகவே, பசித்தோர்க்கு அன்னதானம் செய்வோம். சகவான்மாக்களை இன்புறச் செய்வோம். நாமும் இன்புற்று வாழ்வோம்.

1450126_525079074252083_2075258692_n.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

மிளகின் அற்புதமான மருத்துவ குணங்கள்! ! ! !

வரலாற்று ஆசிரியர்கள் கூற்றுப்படி கிமு 3000 ஆம் ஆண்டுகளிலிருந்து சிறந்து விளங்கிய கடல் வியாபாரத்தில் தங்கம் போல் விலை மதிக்க முடியாத ஒன்று மிளகு.

மிளகை வீணடித்தால் உப்பு போட்டு அதில் நாள் முழுவதும் மண்டியிட வைக்கும் தண்டனை போர்ச்சுகல் நாட்டில் நடைமுறையில் இருந்தது.

மிளகில் உள்ள சத்துக்கள்:

தாது உப்புகள்

1. கால்சியம்

2. பாஸ்பரஸ்

3. இரும்பு

வைட்டமின்கள்

1. தயாமின்

2. ரிபோபிலவின்

3. ரியாசின்

சளித் தொல்லைக்கு:

மிளகை நன்றாக பொடித்து அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் தொல்லைகளான மூக்கு ஒழுகுதல் குணமாகும். அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.

கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமடையும். கல்யாண முருங்கை இலையுடன், அரிசி சிறிது மிளகு சேர்த்து அரைத்து தோசை செய்து சாப்பிட்டு வர சளி குணமாகும்.

FILEபற்களுக்கு:

மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி, சொத்தை பல், ஈறுவலி, ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல் குணமாகும், பற்களும் வெண்மையாக இருக்கும், வாயில் துர்நாற்றத்தை போக்கும்.

தலைவலி:

மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி, தலைபாரம் குணமாகும். மிளகை அரைத்து அதனை தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகும். மிளகை சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும்.

இரத்தசோகைக்கு:

கல்யாணமுருங்கை இலை, முருங்கை இலை, மிளகு மற்றும் பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை குணமாகும் .

பசியின்மைக்கு:

ஒரு ஸ்பூன் அளவு மிளகை வறுத்து பொடி செய்து அதனுடன் கைபிடியளவு துளசியை சேர்த்து கொதிக்க வைத்து அதனை ஆற வைத்து அதனுடன் சிறிது அளவு தேன் கலந்து சாப்பிட்டு வர பசியின்மை குணமாகும் மற்றும் வயிறு உப்பசம் குணமடையும்.

மிளகு வயிற்றில் உள்ள வாய்வை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தை கரைக்கும் தன்மையுடையது. மிளகு உணவை எளிதில் செரிக்க வைக்கும் தன்மை கொண்டது. மிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

மிளகு இரத்தத்தை சுத்திகரிக்கும்தன்மை கொண்டது.

563564_699980246686692_1698403742_n.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

மருத்துவகுணங்கள் நிறைந்த மல்லிகை! ! ! !

மனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒன்றுமே செய்ய வேண்டாம். உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும்.

மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதில் ஒரு சில அடிப்படை விடயங்களை உங்களுக்குக் கூறுகிறோம். வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும்.

வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும்.

இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும். இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.

இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.

இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும்.

ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.

மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.

எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.

மல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்படட கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்றும் சில பால்வினை நோய்களும் குணமாகும்.

மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணில் வளரும் சதை வளர்ச்ச குறைந்து படிப்படியாக தெளிவான பார்வை பெறலாம்.

1451452_699695443381839_1817382178_n.jpg

 

 

வாய்புண் சரியாக இயற்கை வைத்தியம்:-

நெல்லி இலைகளை அவித்த நீரீனால் அடிக்கடி வாய் கொப்பளித்துவர வாய்ப்புண்கள் ஆறிவிடும். நெல்லிச் சாறையும், தேனையும் சமமாகக் கலந்து, மூச்சுத் திணறல், நீண்ட கால விக்கல் நோய் முதலியவற்றிற்குக் கொடுத்து வரலாம். சில மருத்துவர்ள் இதோடு திப்பிலி சூரணத்தையும் சேர்த்துக் கொடுப்பார்கள்.

வாய்ப்புண் போக, மணத்தக்காளி இலைகளை நிறைவாய் போட்டு மென்று, சற்று நேரம் வாயில் வைத்திருந்து விழுங்கவும். இவ்வாறு முற்றின தேங்காயையும் உபயோகிக்கலாம்.

வாயில் வயிற்றில் புண் இருந்தால் பாலில் சிறிது தேனைக் கலந்து சாப்பிட்டுவர சில நாட்களில் புண் குணமாகும். வாய்ப்புண் அதிகமாகி விட்டால் காரத்தை அடியோடு நிறுத்த வேண்டும். மாசிக் காயை உடைத்து அதன் தோலை மாத்திரம் வாயில் போட்டு அப்படியே அடக்கிக் கொள்ளுங்கள். ஊறிவரும் நீரை விழுங்குங்கள். வாய்ப்புண் சரியாகிவிடும்.

வாயில் புண் இருந்தால், அகத்திக்கீரையைச் சமைத்துப் சாப்பிடவும். வாய்ப்புண்ணும் நாக்குப் புண்ணும் குணமாகும். புண் அதிகமாக இருந்தால், புண் மீது பசு வெண்ணையைத் தடவுங்கள். குழந்தைகளுக்கு வாய்ப்புண் வந்தால், மாசிக்காயை பாலில் கரைத்து தேனில் குழைத்து நாக்கில் தடவ குணமாகும்.

தீராத வாய்ப்புண்ணிற்கு கடுக்காயை உடைத்து ஒரு துண்டை வாயில் அடக்கி வைத்திருக்கவும். சாறு தொண்டையில் போகப்போக உடனடியாக குணம் கிடைக்கும். பச்சரிசி, பயத்தம்பருபபு 1 ஸ்பூன் வெந்தயம், முழு பூண்டு 1 உரித்துப்போட்டு குக்காரில் வைத்து வெந்தவுடன், அத்துடன் கெட்டியான தேங்காய்ப்பால் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்புண் ஆறி வாய்ப்புண்ணும் நீங்கும். மணத்தக்காளிக் கீரையையும், அகத்திக் கீரையையும் பொரியலாகச் செய்து, தேங்காய்ப் பருப்பு சேர்த்து சாப்பிட்டால், வாய்புண் இரண்டே நாட்களில் குணமாகும்.

1378372_632408873448098_1436740364_n.jpg

 

 

உடலும்-மனமும் ஒருசேர இயங்கினால் வெற்றி நிச்சயம்..

....................................................................................................

மனித வாழ்வில் வெற்றிபெற உடலும், மனமும் சேர்ந்து,

சுறு சுறுப்பாக இயங்க வேண்டும்.

இரண்டில் ஒன்று சோர்ந்து போனாலும்கூட, நம்மால் சுமூகமாக இயங்க முடியாது.

உடல் நலம் சரியில்லாததாலும், மனம் தொடர்பான பல பிரச்சினைகளாலும் ஏராளமான பேர் வாழ்க்கையில் தோல்வியடைந்துள்ளனர்.

எனவே உடல்-மனம் ஆகிய இரண்டையும் இணக்கமாக அதேசமயம் சுறுசுறுப்பாக இயக்க வேண்டிய வித்தையை அனைவரும், குறிப்பாக மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.

சிலருக்கு உடலில் சில நீண்டகால நோய்கள்

(உதாரணம் - ஆஸ்துமா) இருக்கலாம்.

அதேபோன்று சிலருக்கு இயல்பிலேயே மனச்சோர்வு,

பய உணர்வு, கவலை போன்ற மனம் சார்ந்த சிக்கல்கள் இருக்கலாம்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இவற்றால் ஒருவர் வாழ்க்கையில் தோல்வியடைய வேண்டியதில்லை.

இந்த குறைபாடுகளை வெற்றிகொண்டு,

வாழ்வில் மிகப்பெரிய மனிதராகலாம்.

சில எளிய பயிற்சிகளின் மூலம் நாம் இதை சாதிக்கலாம்.

உடற்பயிற்சி என்றாலே, பல பெரிய உடற்பயிற்சி சாதனங்கள் உடைய "ஜிம்" சென்று கடுமையாக பயிற்சி செய்ய வேண்டும் என்பதில்லை.

இதற்கு அதிக நேரமும், உழைப்பும் தேவை.

இந்த பயிற்சியை தொடர்ந்து செய்வது பலருக்கு சிரமமாகவும், எரிச்சலாகவும், நேரமின்றியும் இருக்கும்.

எனவே எளிமையான மற்றும் சிறந்த பயிற்சிகளே அனைவருக்கும் ஏற்றது.

ஓடுதல், நீச்சலடித்தல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்றவை எளிமையான சிறந்த பயிற்சிகள்.

மேலும், மரங்கள் அடங்கிய திறந்த வெளியில் பயிற்சியில் ஈடுபடுவது சிறப்பான பலனைத் தரும்.

இதன்மூலம் உங்களுக்கு நிறைய ஆக்சிஜன் கிடைப்பதால் நினைவுத்திறன் அதிகரிக்கும். மேலும் இசையுடன் சேர்ந்து பயிற்சி செய்து பழகலாம்.

இதன்மூலம் பயிற்சி செய்வது நமக்கு சிரமமான ஒன்றாகவே தெரியாது. நமது ஆர்வமும் அதிகரிக்கும்.

இதைத்தவிர, வலது-இடது மூளை ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான மூளை பயிற்சியிலும் ஈடுபடலாம்.

பயிற்சியானது, உங்களின் டென்சனை குறைத்து ரிலாக்சாக வைத்திருக்கிறது.

உடற்பயிற்சியின் மூலம் உங்களின் உற்சாகம் அதிகரிக்கிறது.

இத்தகைய பயிற்சிகளை தொடர்ந்து செய்வது முக்கியம்.

இதன்மூலம் நீங்கள் அதிக பலன் பெற்று,

அந்த பயிற்சிகளுக்கு உங்களை அறியாமல் அடிமையாகி விடுவீர்கள்.

வாழ்க்கையிலும் வெற்றி பெறுவீர்கள்!

உடுமலை.சு.தண்டபாணி தண்டபாணி

1148778_520057344756323_1944779722_n.jpg
935533_520057358089655_1913969053_n.jpg

 

 

குங்குமப் பூவின் மருத்துவ குணங்கள்:

தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகிய வியாதிகளுக்கு குங்குமப் பூ அரிய மருந்தாகும்.

குங்குமப் பூவை 1 பங்கு எடுத்து, அதை 80 பங்கு தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி, அதில் 30 மிலி அளவு காலை, மாலை இருவேளை அருந்தி வர தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகியவை நீங்கும்.

குங்குமப் பூவுடன் தேன் கலந்து தினமும் இருவேளை உட்கொண்டு வர ஆஸ்துமா முதலிய சுவாச நோய்களை போக்கி சுவாசத்தை எளிதாக்கும்.

அம்மை நோய் கண்டவுடன் துளசி இலைகளையும், குங்குமப்பூவையும் சேர்த்து அரைத்து உட்கொள்ள கொடுக்க அம்மை நோய் குணமாகும்.

ஐஸ்வர்யா

1422623_525233120903345_1374485139_n.jpg

 

 

பழைய சாதமு‌ம் ப‌ற்பல ந‌ன்மைகளு‌ம்!

முதல் நாள் சாதத்தில் நீருற்றி மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6 மற்றும் பி12 விட்டமின்கள் ஏராளமாக இருக்கிறது என்று கூறுகிறார் அமெரிக்க மருத்துவர். தவிரவும் உடலுக்கு குறிப்பாக சிறுகுடலுக்கு நன்மை செய்யும் (மில்லியன் அல்ல) ட்ரில்லியன் ஆப் பாக்டீரியாஸ் பெருகி நம் உணவுப் பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்‌கிறதாம். கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும் போது நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்த காய்ச்சலுமே நம்மை அணுகாது.

பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து சில...

காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கும்

இரவே தண்ணீர் ஊற்றி மூடிவைப்பதால் இலட்சகணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.

மறுநாள் இதை சாப்பிடும் போது உடல்சூட்டைத் தணிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்சத்து மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்க செய்கிறது.

இந்த பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது என்கிறார்.

மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகிவிடும்.

அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்துவர ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைத்தது.

எல்லாவற்றிக்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அரு‌‌கில் கூட வராது.

பழைய சாதம் செய்வது எப்படி?

பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது "ப்ரௌன் ரைஸ்" என்று அழைக்கப்படும் "கைக்குத்தல்" அரிசி தான். ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும். மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்து குடிக்க ஜில்லென்று இருக்கும். மதிய உணவு நேரம் வரை டீ, காபி எதுவும் தேவையில்லை. ஆதலால் பழைய சாதம் சாப்‌பிடலா‌ம், ஆரோக்கியமாக இருக்கலாம்.

நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்(Proud to be a tamilan)

1382988_612350325490410_1805335961_n.jpg

 

உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்!

எல்லா உணவு வகைகளில் உள்ளதைவிட இதில் காரப்பொருள் அதிக அளவுடனும், உறுதியான பொருளாகவும் இருக்கிறது. இதுதான் நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது.

யூரிக் அமிலத்தையும் புளித்த நீரையும் கரைத்து வெளியேற்றிவிடுகிறது. அத்துடன் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில் நட்புணர்வுடன் செயல்படும் பாக்டீரியாக்களையும் அதிகம் வளர்த்துவிடுகிறது.

ஊட்டச்சத்துக்குறைவால் ஏற்படும் சொறி, கரப்பான் போன்ற ஸ்கர்வி நோயைக் குணப்படுத்த உருளைக்கிழங்கு மசியலைக் சாப்பிட்டால் போதும். அவித்த உருளைக்கிழங்குகளை தோலுடன் மசித்துத் தினமும் ஒருவேளை வீதம் ஒரு வாரம் முதல் பத்து நாள்கள் வரை சாப்பிட்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

பச்சையான உருளைக்கிழங்கு ரசம் தரும் நன்மைகள்!

வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், ஆகியன உள்ளவர்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள உருளைக்கிழங்குகளாகப் பார்த்து எடுத்து, அவற்றை பச்சையாக மிக்ஸி மூலம் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாக இந்தச் சாற்றில் அரை கப் அருந்த வேண்டும்.

இதுபோல், மூன்று வேளையும் உணவு நேரத்துக்கு முன்பு அருந்த வேண்டும். உருளைக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து, அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது. இதே உருளைக்கிழங்குச்சாற்றை உடலில் எலும்பு இணைப்புகள் மற்றும் தசைப்பகுதிகளில் வீக்கம் முதலிய கோளாறுகளுக்கும், வாத நோய்களுக்கும் வெளிப்பூச்சாகத் தேய்க்க உடல் நலமுறும்.

இந்தச்சாற்றை அடுப்பில் வைத்து மூன்றில் ஒரு பங்காக வற்றச் செய்து அதில் கிளிசரின் சேர்த்து, பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவேண்டும். வீக்கம், வலி ஆகியன உள்ள இடங்களில் இரண்டு அல்லது மூன்ற மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த தைலத்தை அழுத்தித் தேய்த்தால் ஒரே நாளில் வீக்கம் குறையும் வலியும் நீங்கும்.

வாத நோய் குணமாகும்!

இரு பச்சையான உருளைக்கிழங்குகளைத் தோலுடன் மிக்ஸியில் அரைத்துச் சிறிது தண்ணீர்விட்டு, இரு தேக்கரண்டி வீதம், உணவு சாப்பிடுவதற்கு முன்பு, அருந்த வேண்டும். இப்படி அருந்திய சாறு உடலில் வாதநோயைத் தோற்றுவிக்கும் அமிலத்தை வெளியேற்றிவிடுகிறது. தொடர்ந்து உட்கொண்டால் வாதநோய் முற்றிலும் குணமாகும் சாத்தியம் அதிகம் உண்டு.

அவித்த உருளைக்கிழங்குகளின் தோல்களைச் சேகரித்து, சுத்தம் செய்து, ஒரு டம்ளர் தண்ணீரில் பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கவும். பிறகு, இந்தக் கஷாயத்தை அருந்தினாலும் கீல் வாதம் குணமாகும். இந்த முறையில் தினமும் மும்முறை தயாரித்து அருந்த வேண்டும்.

நீண்ட நாள் மலச்சிக்கல் தீர...

கெட்டுப்போன இரத்தம், குடல்பாதையின் நச்சுத்தன்மை உள்ள அமிலம், சிறுநீரில் உள்ள புளிப்பு அமிலம் தொடர்பாக ஏற்படும் நோய்கள் உள்ளோர், நீண்ட நாள் மலச்சிக்ககால் அவதிப்படுவோர் ஆகியோர் உருளைக்கிழங்கு வைத்தியத்தை குறைந்தது ஆறுமாதங்கள் பின்பற்றினால் மேற்கண்ட நோய்களிலிருந்து பூரண நலம் பெறலாம்.

தினசரி உணவில் உருளைக்கிழங்கை அவித்தோ, வேகவைத்தோ, பொரித்தோ, சூப்வைத்தோ சேர்த்துக்கொள்வதுதான் உருளைக் கிழங்கு வைத்தியம். சோறு, சப்பாத்தி போன்றவற்றைக் குறைத்துக்கொண்டு உருளைக்கிழங்குடன் கீரைவகைகளை, குறிப்பாக லெட்டூஸ், பசலைக்கீரை, தக்காளி, செலரி, வெள்ளரிக்காய், பிட்ரூட் கிழங்கு, டர்னிப் கிழங்கு போன்றவற்றையும் சேர்த்துச் சாப்பிடவேண்டும்.

இதன்மூலம் தோலில் உள்ள அழுக்குகளும், சுருக்கங்களும் நீங்கிவிடும். மலச்சிக்கலும் அகன்று இரத்தம் சுத்தம் செய்யப்பட்டுப் புத்தம் புது மனிதனாக ஒவ்வொரு நாளையும் சந்திக்கலாம்

முகத்திற்கு பீளிச்சிங் வேண்டாம்!

வயதால் முகத்திலும், உடலிலும் சுருக்கம் உள்ளவர்கள் பச்சையாக உருளைக்கிழங்கை நசுக்கி முகத்திலும் மற்ற பகுதிகளிலும் தேய்த்துக்கொண்டு இரவில் தூங்கச் செல்ல வேண்டும். சுருக்கங்களை போக்கிச் சலவை செய்த துணிபோல இளமைத் துடிப்புள்ள முகத்தையும், சுருக்கமில்லாத தோலையும் உடலுக்குத் தந்துவிடுகிறது. இந்த வைத்தியம், அமெரிக்காவில் இந்த முறையில் இயற்கையாக முதுமையால் ஏற்படும் தோல் சுருக்கங்களை நீக்கிக்கொள்கின்றனர்.

உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்!

1452208_612504548808321_2069418889_n.jpg
 

 

 

நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள்;

குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.

நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.

நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.

நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும்.

தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.

பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம்,

ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும்.

நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன.

நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.

நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம்.

நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.

நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.

முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.

மனித இதயம் சராசரியான ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது.

ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் பேரல் இரத்தத்தை இரத்த குழாயில் செலுத்துகிறது.

இதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடிவரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது.

மனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன.

ஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.

நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது.

நமது மூளை 80% நீரால் ஆனது.

நமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும்.

நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடிதான்.

மனித தலையில் சராசரியாக 100,000 தலைமுடிகள் இருக்கும்.

பெண்கள் கருத்தரிக்கும் பொழுது, கர்ப்பப்பையானது, அதன் சாதாரண நிலையை விட 500 முறை விரிவடைகிறது.

மனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது.

மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம்

கண்கள் 31 நிமிடங்கள்

மூளை 10 நிமிடங்கள்

கால்கள் 4 மணி நேரம்

தசைகள் 5 நாட்கள்

இதயம் சில நிமிடங்கள்

1453330_650060521691267_376515837_n.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

எளிய இயற்கை வைத்தியம்:-

* புதினா சாறு, தேன், எலுமிச்சை சாறு மூன்றையும் சம அளவு கலந்து குடிக்க, அஜீரணம் உடனே குணமாகும்.

* எலுமிச்சை பழச்சாறை தண்­ணீரில் கலந்து, அந்த தண்­ணீரைக் கொண்டு வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

* வெள்ளைப் பூண்டின் தோலை நீக்கிய பின், சிறிதளவு பாலில் சேர்த்து நன்றாக காய்ச்சி, ஆற வைத்து குடித்தால் வாயு கரைந்து தொல்லை நீங்கும்.

* ஒரு டம்ளர் தண்­ணீரில் சிறிது கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் போட்டு கொதிக்க வைக்கவும். ஆறியபின் வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

* பாதாம் பருப்பு, வெண்டைக்காய், தக்காளி இவைகளை தொடர்ந்து சாப்பிட்டு வர, நினைவுத்திறன் அதிகரிக்கும்.

* பருக்களால் கஷ்டப்படுவோர், தினமும் இளநீரில் மஞ்சள்தூளைக் கலந்து பருக்கள் மீது பூசி வந்தால் நாளடைவில் பருக்கள் மறையும்.

* நீரிழிவு நோய் உள்ளவர்கள் வேப்பிலை, கறிவேப்பிலை இரண்டையும் சம அளவு எடுத்து, நிழலில் காய வைத்து பொடியாக்கி, தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் நோய் குறையும்.

* திருமணம் போன்ற விசேஷங்களில் சாப்பாட்டை ஒரு பிடி பிடித்தால் சிலருக்கு வயிற்றுக்குள் ஏடாகூடமாக இருக்கும். உணவு சரியாக செரிமானம் ஆகவில்லை என்பதற்கான அறிகுறிதான் அது. இதுபோன்று ஏற்படும் என்று நீங்கள் முன்கூட்டியே உணர்ந்தால், சாப்பிட்டு முடித்ததும் சிறிய இஞ்சித்துண்டை தோல் நீக்கி கடித்து சாறை விழுங்கவும். அந்த ஏடாகூட வயிற்றுப் பிரச்சினை பறந்தே போய்விடும்.

* இதுபோல், வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்பட்டால் அதை நிறுத்தவும் சிறிய இஞ்சித் துண்டை சிறிது உப்புடன் சேர்த்து சாப்பிடவும். அப்படி சாப்பிட்டால் எப்படிபட்ட குமட்டலும் உடனே அமைதியாகிவிடும்.

1393927_632408936781425_1733235084_n.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

உடற்பயிற்சிக்குப் பிறகு தக்காளி ஜூஸ் அருமை! ! ! !

பலர் சக்தி பானம் என்று எதைஎதையோ குடித்து உடலைத் தேற்றி வருகின்றனர். ஆனால் தக்காளி ஜூஸ் அருமையான எனெர்ஜி டிரின்க் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

கடுமையாக உடற்பயிற்சி விளையாட்டு வீரர்கள் உட்பட சாதாரண மனிதர்களுக்கும் தேவைதான், ஆனால் அதன்பிறகு தேவைப்படும் எனெர்ஜியக் கொடுக்க, அதாவது இறுகிய தசைகள் ரிலாக்ஸ் ஆகவும், ரத்த ஓட்டம் மீண்டும் நார்மலாகவும் தக்காளி ஜூஸ்தான் சிறந்தது என்கிறது இந்த ஆய்வு.

கிரீஸில் 15 தடகள வீரர்களை வைத்து இந்த பரிசோதனை செய்யப்பட்டதில் தக்காளி ஜூஸ் உடனடி எனெர்ஜி கொடுப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.

தக்காளி ஜூஸ் குடித்தவுடன் குளூக்கோஸ் அளவு விரைவில் நார்மலடைவதை இந்த ஆய்வு கண்டு பிடித்துள்ளது.

தக்காளியில் உள்ள 'லைக்கோபீன்' என்ற ரசாயனம் அதன் சிகப்பு நிறத்தைக் கொடுக்கிறது. சிகப்பு நிறமான எதுவும் உடலுக்கு நல்லதுதான்.

வைட்டமின்கள் பல அடங்கிய தக்காளி புற்று நோய், இருதய நோய்கள் மற்றும் பிற உடல் உபாதைகளை தடுக்கவல்லது.

தசை மற்றும் மூளை பழுதடைவதற்குக் காரணமாகும் சில சுரப்பிகளின் தீமையான அளவை தக்காளி ஜூஸ் குறைக்கிறது.

உடலின் நச்சுத் தன்மையை தக்காளி ஜூஸ் கடுமையாகக் குறைப்பதாக இந்த ஆய்வு நிரூபித்துள்ளது.

1383808_699984430019607_538886412_n.jpg

Like · · Share ·

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

கால் பாதத்திற்கும் நம் உள்ளுறுப்புக்களுக்கும் நரம்பு மண்டலம் ஊடாகத் தொடர்புண்டு. பாதத்தை அழுத்துவதன் மூலம் நம் உள்ளுறுப்புக்ளை புத்துணர்ச்சி ஏற்படச் செய்யலாம்.

The Organs of your body have their sensory touches at the bottom of your foot, if you massage these points you will find relief from aches and pains as you can see the heart is on the left foot. Just try it!

1461068_527059804054010_2133851866_n.jpg

 

 

A + B + C ..... ஒரு ஆப்பிள் ஒரு பீட்ரூட் ஒரு காரட்மூன்றையும்எடுத்து நன்கு கழுவி துடைத்து

தோலுடன் நறுக்கி ஜூஸ் போல அரைத்து அருந்தவும்.

விரும்பினால் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கலாம் .

இந்த பானம் அருந்துவதால் பயன்கள் :

புற்று நோய் வராமல் தடுக்க மற்றும் ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்கவல்லது இந்த ஜூஸ்.

ஈரல் மற்றும் சிறுநீரக சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.

மாரடைப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் காக்கின்றது

நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது .

உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றுகின்றது.

இரத்தத்தை சுத்தபடுதுகின்றது.

பார்வை குறைபாடுகளை நீக்குகின்றது.

மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு தீர்வு.

*உடல் இளைக்க விரும்புவோர் இதை அருந்தி வந்தால் நல்ல மாற்றம் ஏற்படும்.

^ கூடுமானவரை இயற்கை முறையில் விளைந்த காய்களையே பயன்படுத்துங்கள்.

அவ்வாறு கிடைக்காவிடில் நன்கு கழுவியபின்னரே அரைக்கவும் .

நன்றி :- விக்கிரவாண்டி-பக்கம்

1456782_700807213270662_1339605549_n.jpg

 

 

சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கருப்பட்டி!

பனங்கருப்பட்டியின் மருத்துவ குணங்களைப் பற்றி பேசிய காரைக்-குடியைச் சேர்ந்த சித்த மருத்துவர். சொக்க-லிங்கம், ‘‘இன்றைக்கு அனைத்து வகையான மூலிகைகளும் மிட்டாய் வடிவில் கிடைக்கின்றன. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது... கருப்பட்டி. இதன் மருத்துவ பயன்கள் அளவில்லாதது. பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்... இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கி-யமாக இருக்கும்.

சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை, கருப்பட்டி-யுடன் சேர்த்துச் சாப்பிட்டால், வாயுத்தொல்லை நீங்கும். குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால்... உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளி-களும்கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.

சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்... சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது’’ என்றார்.

1422566_412150375578688_968057435_n.jpg

 

 

குழந்தைகளுக்கு எப்பொழுது இணை உணவு ஆரம்பிக்கவேண்டும் ?

பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும் . தண்ணீர் கூட தர தேவை இல்லை .

இதற்க்கு EXCLUSIVE BREAST FEEDING என்று பெயர் . கோடைகாலத்தில் கூட நீர் தர தேவை இல்லை . ஏனெனில் பாலில்80 % நீர் உள்ளது .

இணை உணவுக்கு ஆங்கிலத்தில் WEANING என்று பெயர் .

WEANING : the systematic introduction of suitable food at the right time in addition to mothers milk in order to provide needed nutrients to the baby (UNICEF)

WEANING என்றால் முற்றிலும் தாய்ப்பாலை நிறுத்திவிட்டு உணவு ஆரம்பித்தல் என்று பலர் தவறாக கருதுவதால் தற்போது COMPLEMENTARY FEEDING என்ற சொல்லே பரவலாக பயன்படுத்த படுகிறது .

நான்கு மாதங்களுக்கு பிறகே குழந்தைகள் அறைதிட (SEMISOLID ) உணவை செரிக்க கூடிய சக்தியை அடைகின்றன .

தலை நன்கு நிமிர்ந்து நிற்கும் சக்தியை அடைவதும் 4 மாதத்திற்கு பிறகே

குழந்தையின் எடை 5 மாதத்தில் பிறந்ததை போல் இரு மடங்காக அதிகரிப்பதால் அதன் உணவு தேவை அதிகரிக்கும் . மேலும் உடலில் உள்ள கால்சியம் மற்றும் இரும்பு சத்து சேமிப்புகள் குறைய தொடங்கும் .

குடலில் உள்ள செரிமான நொதிகள் (INTESTINAL ENZYMES ) நன்கு சுரக்க ஆரம்பிப்பதும் 4 -5 மாதங்களில்தான் .

எனவே 5 வது மாத முடிவிலோ அல்லது 6 மாத ஆரம்பத்திலோ இணை உணவுகளை ஆரம்பிப்பது நல்லது .

முதலில் ஏதேனும் ஒரு தானியத்தை கொடுக்கவேண்டும் (அரிசி ,கோதுமை ,ராகி ) அது பழகிய பிறகே இரண்டு அல்லது மூன்று தானிய கலவைகளை சேர்த்து அரைத்து தர வேண்டும் .

அரிசி சாதம் மிகவும் எளுதில் ஆரம்பிக்க சிறந்தது .ஆரம்பத்தில் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் மட்டும் தரவேண்டும் .படிப்படியாக இந்த அளவை அதிகரிக்க வேண்டும் .

தானியங்கள் ஒத்துகொண்ட பிறகே பருப்பு வகைகள் கொடுக்க வேண்டும் .

ஒரு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு உடல் எடையை போல் நூறு மடங்கு கலோரி தேவை . அதாவது 6 கிலோ குழந்தைக்கு 600 கிலோ கலோரி நாள் ஒன்றுக்கு தேவை .எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி சிறிது சிறிதாக பாலும் இணை உணவும் தரவேண்டும் .

ஐஸ் போடாத வீட்டில் செய்த பழச்சாறு 6 மாதம் முதல் தரலாம் . ஆரஞ்சு , ஆப்பிள் சிறந்தது .

நெய் ,எண்ணெய் முதலியவற்றை 5 -6 மாதம் முதல் தரலாம்

முட்டை - 7 -9 மாதங்களில் தரலாம் . முதலில் மஞ்சள் கருவும் பின்பே வெள்ளை கரு தரவேண்டும் . ஏனெனில் வெள்ளை கரு சில குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம் .

6 -8 மாதங்களில் மசித்த உருளை கிழங்கு , மசித்த பருப்பு ஆகியவற்றை தரலாம் .

மென்று சாப்பிடக்கூடிய உணவுகளை (சப்பாத்தி ) 9 -12 மாதங்களில் தரவேண்டும் .

ஒரு வயது ஆகும்போது வீட்டில் செய்யும் எல்லா உணவுகளையும் தரலாம் .

அசைவ உணவை ஒரு வயதுக்கு பின்பே ஆரம்பிப்பது நல்லது. (முட்டை சைவம் தானே ?!!)

ஒரு வயதுடைய குழந்தை அம்மா சாப்பிடும் அளவில் பாதி அளவு உணவு சாப்பிடவேண்டும். (மூன்று வயதில் அப்பா சாப்பிடும் அளவில் பாதி )

ஒரு வயதில் உள்ள குழந்தைக்கு தினமும் 1000 கிலோ கலோரி அளவு சக்தி தேவை .

தாய்ப்பாலை மேலே சொன்ன உணவுடன் சேர்த்தே தரவேண்டும் . இரண்டு வயது வரை தருவது கட்டாயம் . அதற்கு மேல் கொடுப்பது தனிப்பட்ட விருப்பம்.

1383767_527058070720850_573213221_n.jpg

 

 

ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தும்பேரீச்சை! ! ! !

அவசிய் உண்ண வேண்டிய அத்தியாவசிய சத்து நிறைந்த கனியென்றால் அது பேரீச்சை என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துப்பொருட்கள ் இதில்நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொருவரும் பேரீச்சையை அவசியம் சாப்பிட வேண்டும்.

எளிதாக ஜீரணமாகும் சதைப்பகுதி மற்றும் ஒற்றைச் சர்க்கரைகள் நிறைந்தது பேரீச்சை. உண்டதும் புத்துணர்ச்சியும், சக்தியும் உடலுக்கு கிடைக்கிறது. அதனால் தான் விரதத்தை நிறைவு செய்பவர்கள் பேரீச்சைப் பழம் எடுத்துக் கொள்கிறார்கள். பேரீச்சை, எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து கொண்டது. குடற்பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரீச்சைக்கு உண்டு.

பெருங்குடற் பகுதியில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்களை நீக்குவதிலும் பேரீச்சை பங்கெடுக்கிறது. டேனின்ஸ் எனும் நோய் எதிர்ப்பொருள் பேரீச்சையில் உள்ளது. நோய்த் தொற்று, ரத்தம் வெளியேறுதல், உடல் உஷ்ணமாதல் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படக்கூடியத ு டேனின்ஸ். வைட்டமின் ஏ, பேரீச்சையில் ஏராளமான அளவில் உள்ளது. இது கண் பார்வைக்கும்,குடல் ஆரோக்கியத்திற்க ும், சருமத்திற்கும் அவசியமானது.

சிறந்த நோய் எதிர்ப்பொருள்கள ான லுடின்,ஸி-சாந்த ின் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை உடற்செல்களை காப்பதோடு, தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்க ளை விரட்டுவதிலும் பங்கெடுக்கிறது. குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படக் கூடியது.

பேரீச்சை இரும்புச் சத்தை ஏராளமாக அள்ளி வழங்கும். 100 கிராம் பேரீச்சையில் 0.90 மில்லிகிராம் இரும்பு உள்ளது. இரும்புத் தாது, ரத்தத்திற்கு சிவப்பு நிறம் வழங்கும் ஹிமோகுளோபின் உருவாக்கத்தில் பங்கு வகிப்பதாகும். இது ரத்தம் ஆக்சிஜனை சுமந்து செல்லும் அளவை தீர்மானிப்பதிலு ம் பங்கெடுக்கிறது.

பொட்டாசியம் தாது குறிப்பிட்ட அளவில் உள்ளது. உடலுக்குத் தேவையான மின்னாற்றலை வழங்கும் தாதுவாக பயன்படுகிறது. உடற்செல்களும்,உ டலும் வளவளப்புடன் இருக்கவும் பொட்டாசியம் அவசியம். இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவ திலும் பங்கு வகிக்கிறது. பக்கவாதம், இதய வியாதிகள் ஏற்படாமலும் காக்கிறது.

கால்சியம், மாங்கனீசு, தாமிரம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் உள்ளது. கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களின் பலத்திற்கு அவசியம். நாடித் துடிப்பை சீராக்குதல் மற்றும் ரத்தக் கட்டி ஏற்படுவதைதடுத்த ல்ஆகியவற்றிலும் பங்கு வகிக்கிறது. ரத்த சிவப்பனுக்கள் உற்பத்தியில் தாமிரம் பங்கு வகிக்கிறது. மக்னீசியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் பேரீச்சம் பழத்தில் மிகுந்துள்ளது.

1380202_701143899903660_625284408_n.jpg

 

மூளையைக் காக்கும் தோப்புக்கரணம்!

கம்ப்யூட்டரைப் பார்த்து வியக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். விரலசைவில் உலகையே வீட்டுக்குள் கொண்டு வந்து விடுகிற நம்முடைய மகத்தான கண்டுபிடிப்பு அது. இத்தனை சக்தி வாய்ந்த கம்ப்யூட்டரையே வடிவமைத்த சூப்பர் கம்ப்யூட்டர்தான் மனித மூளை. உடலின் உச்சியில், மண்டை ஓடு என்கிற திடப்பொருளின் பாதுகாப்பிற்குள் மூளைதண்டுவடத் திரவத்தில் மிதக்கிற அந்த ஒன்றரை கிலோ ‘மென்பொருளின்’ நலன்பேணும் அக்குபிரஷர் சிகிச்சைகள்.

ஒட்டுமொத்த உடலுறுப்புகளையும் இயக்கும் நம் மூளை, நரம்பு மண்டலத்தோடு பின்னிப் பிணைந்த தொடர்பில் இருக்கிறது. மூளை, நரம்பு மண்டலம் இரண்டும் சேர்ந்த அமைப்பை உடலின் ‘டெலிபோன் எக்ஸ்சேஞ்ச்’ எனலாம். தொடுதல், பார்த்தல், கேட்டல் போன்ற புலன் உணர்வுகள் மூலம் தகவல்களை நரம்புகள் மூளைக்கு அனுப்ப... அது அந்தத் தகவல்களை ஆராய்ந்து அதற்கேற்ப கட்டளைகளைப் பிறப்பிக்கிறது. இதிலிருந்தே உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் மூளையோடு தொடர்பு இருப்பதைத் தெரிந்துகொள்ளலாம். எனவே, உடலில் எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அது மூளையிலும் பிரதி பலிக்கும்.

வீட்டிலோ, வெளியிலோ தெரிந்தோ தெரியாமலோ ஏதேனும் தப்புதண்டா பண்ணி விட்டீர்கள். அப்போது, ‘மூளை இருக்கா?’ என்கிற வசையைக் கேட்டிருப்பீர்கள்தானே? எல்லா உறுப்புகளுக்கும் ஆர்டர் போடுகிற இடத்தில் இருப்பதால், நேரும் எந்த விளைவுக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டது மூளை மட்டுமே! எனவே அது, எனி டைம் அலர்ட்டாக இருக்க வேண்டியது அவசியம். இதயம் ஓய்வு கேட்டால் எப்படி வாழ்க்கை முடிகிறதோ, அதேபோன்ற ஒரு நிலைதான் மூளை ஓய்வு கேட்டாலும்!

மூளை சரியாகச் செயல்படாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதற்கு என எத்தனையோ ஸ்பெஷல் படிப்புகள் வந்தன. ஆனாலும் அவை எதுவுமே முழுமையாக குணப்படுத்த முடியும் என்ற உத்தரவாதத்தை தரத் தயங்குகின்றன. மூளையைப் பற்றிய ஆராய்ச்சிகள் இன்னும் முற்றுப் பெறவில்லை என்பதையே இது காட்டுகிறது.

ஆனால், அக்கு மருத்துவம் மூளையைப் பற்றி முற்றிலுமாகத் தெரிந்து வைத்திருக்கிறது. மூளையின் செயல்பாட்டுக் குறையை மூளைத் தளர்ச்சி, மூளைச் சோர்வு என்கிற வார்த்தைகளில் குறிப்பிடுகிறது அக்கு மருத்துவம். ஏற்கனவே சொன்னதுபோல், மூளை எனி டைம் அலர்ட்டாக இருந்தால் இந்தப் பிரச்னைகள் நம் பக்கமே வராது. எந்நேரமும் மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க அக்குபிரஷர் பரிந்துரைத்து வந்த ஒரு சிறந்த பயிற்சிக்கு இன்று அமெரிக்கா காப்பிரைட் வாங்கி விட்டது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்களிடம் இருந்து வந்த பழக்கம்தான் அது. கோயில்களில் தோப்புக்கரணம் போட்டபடி, ‘நல்ல புத்தியைக் கொடு சாமி’ என அவர்கள் கேட்டதை, நாம் ஃபாலோ பண்ண மறந்து விட்டோம். விளைவு, ‘சூப்பர் பிரெய்ன் யோகா’ என்கிற பெயரில் இன்று அது அமெரிக்கச் சொத்தாகி விட்டது. தினமும் காலையும் மாலையும் 20 தோப்புக்கரணம் போட்டு வந்தாலே மூளைக்கு உற்சாகம் கிடைக்கும் என்பதை அவர்கள் புரிந்து அனுபவிக்கிறார்கள்.

மேலும் மூளைக்குப் புத்துணர்ச்சி தருவதற்கென்றே சில உபகரணங்கள் உள்ளன. பொகோமா, எலக்ட்ரானிக் அக்குபிரஷர் போன்ற அவற்றைத் தினமும் பயன்படுத்தியும் மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். பாட்டரியில் இயங்கும் இவை, சில அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. இந்த அதிர்வலைகள், மூளை நரம்புகளில் வினைபுரிந்து, இயக்கத்தைத் தூண்டிவிடுகின்றன. ஏற்கனவே மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த சிகிச்சை நல்ல பலன் தருகிறது. குழந்தைகளைத் தாக்கும் ஆட்டிசம், கவனச்சிதறல், வலிப்பு போன்றவற்றிற்கும் இந்தப் பயிற்சிகள் மூலம் நிவாரணம் தேடலாம்.

மூளை சம்பந்தப்பட்ட பாதிப்பில் இன்னொரு பெரிய பிரச்னை கோமா எனப்படும் ஆழ்நிலை மயக்கம். மூளையின் நரம்பு செல் பாதிக்கப்படும்போது கோமா நிலை ஏற்படுகிறது. ஒருவர் கோமாவுக்குப் போய் எவ்வளவு நாட்களாகியிருந்தாலும் அக்குபஞ்சர் முறையில் முழுவதுமாக அவரைக் குணப்படுத்தலாம்.

 

1457468_630563723668746_345854389_n.jpg

ஆண்களும் பெண்களும்“இந்த ஐந்தை” கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்!

1. நம்பிக்கை

கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். ஒருவரை மற்றவர் முழுமையாக நம்ப வேண்டும். தங்களுக்கென்று தனிபட்ட திறமை உள்ளது என்பதை உணர வேண்டும். அதை செயல் படுத்திக் காட்டும் வாய்ப்பினை ஒருவருக்கொருவர் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். வருங் காலத்தில் என்ன வெல்லாம் நடக்க போகிற தோஎன்று பயம் கொள்வதைவிட, நிகழ் கால வாழ்க் கையை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவது தான் புத்திசாலித்தனம். முதுமை என்பது எல்லோருக்கும் வருவதுதான். அதற்காக நாற்பது வயதை நாம் தாண்டி விட்டோம். உடல் சோர்வு தெரிகிறது. 50 வயதிற்கு பின் முட்டுவலி தெரிகிறது. 60 வயதிற்குபின் தோல் சுருங்கி போய் விடுமே என்றெல்லாம் பயந்து கொண்டிருக்கக் கூடாது. எந்த வயதிலும் மனதை இளமையாக வைத்துக் கொள்ள முடியும் என்று சந்தோஷபடுங்கள்.

2. பாதுகாப்பு

ஆண்களைவிட பெண்களுக்குத் தான் அதிக பாதுகாப்பு தேவைப் படுகிறது. திருமண வயதையடையும் வரை பெண்களுக்கு பெற்றோரால் பாதுகாப்பு தரப்படுகிறது. பெண்கள் தங்கள் தாயைக் காட்டி லும் தந்தையே அதிக பாதுகாப்பு தருவதாக எண்ணுகின்றனர். திரு மணத்திற்கு பின் பாதுகாப்பிற்காக கணவனை நம்பி வாழ்கின்றனர். இந்த விஷயத்தில் முரண்பாடு நிகழும் போதுதான் ஈகோ போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன. விட்டுக் கொடுக்கும் மனபான்மை இல்லாததுதான் இதற்கு காரணம். பெண், ஆணைவிட தான் தான் மேலானவள் என்றும், ஆண் பெண்ணை விட தானே எல்லா விதத்திலும் மேலானவன் என்றும் எண்ணுகின்றனர். இருவரும் அவரவர் தனித்தன்மைகளில் மேலானவர் தான்.

3. மரியாதை

ஒரு பெண் திருமணத்திற்கு பின் தன் கணவருடைய பெருமை, மரியாதை, கவுரவம் என்று அனைத்து விஷயங்களிலும் தனக்கும் பங்குண்டு என்பதைக் காட்ட வேண்டும். அதில் தான் பெண்ணுக்கு மரியாதை உள்ளது. அதேபோல், மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவளுடன் இணைந்து ஒற்றுமை குலையாமல் குடும்பத்தை பராமரிப்பதில் தான் கணவனுக்கு மரியாதை உள்ளது. இயல்புக்கு மீறிய நடத்தைகளில் ஈடுபடும்போது அவர்களது மரியாதைக்கு பங்கம் வந்து விடுகிறது.

4. அன்பு

வாழ்க்கை பாதையை சீரமைக்கும் ஒரு கருவிதான் அன்பு. வாழ்வை அர்த் த முள்ளதாக மாற்றும் வல்லமை அன் பிடம் மட்டுமே உள்ளது. இந்த உன்னத மான உணர்வுகள் தான் நம் வாழ்வையே அர்த்தமுள்ளதாக மாற்றக் கூடியவை. அன்பால் மலரும் உணர்வுகளே குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் என்ப தை இருவரும் உணர வேண்டும். அன்பை வெளிப்படுத்தவே திருமணம் நம்மை இணைத்துள்ளது என்று எண்ண வேண்டும். மனிதர்கள் உணர்வுகளுக்குக் கட்டுப்பட்டவர்கள். அதனால் பல நேரங்களில் தவறு செய்யக் கூடும். ஆனால், அத்தகைய தவறுகள் அன்பினால் சீரமைக்கப்பட வேண்டும். `என்னை நல்லபடியாக வைத்துக் கொள்ளும் அன்பு உன்னிடம் இருந்து நிச்சயம் கிடைக்கு ம்` என்ற எண்ணம் தம்பதிகள் இருவரிடம் வாழ் நாள் முழுவதும் நீடிக்க வேண்டும்.

5. நேர்மை

நல்ல விஷயங்களின் அடிப்படையில் உருவாக்கபடும் கூட்டுத் தொகுப்பே குடும்பம். நமக்கு நேர்மை அவசியம். “என் சிந்தனை உள்பட எனது ஒவ்வொரு வார்த்தையும், செயலும் உண்மை. அதை உன்னோடு பகிர்ந்து கொள்வேன். என் நோக்கம், இயல்பான முறையில் நீண்ட நாள் உறவை பேணுவது தான்” என்று இருவரும் எண்ண வேண்டும். நேர்மை இல்லாத குடும்பம் தண்டவாளத்தில் ஓடாத ரெயில் போன்றது. நேர்மைதான் குடும்பத்தின் முதுகெலும்பு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

10 மில்லி எண்ணெய்யில் காணாமல் போகும் நோய்கள்..!

ஆயில் புல்லிங் எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் பிரபலமடைந்து வருகிறது. எண்ணெயை வாயில் விட்டு சாதாரணமாக கொப்பளிப்பதுதானே என்று அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்து ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களுக்கு அனைத்து நோய்களும் தீரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது

இன்றைக்கு பிரபலமாகிக் கொண்டு வரும் ஆயில்புல்லிங்கை நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து பின்பற்றியுள்ளனர். இது அனைத்து நோய்களுக்கும் பாதுகாப்பான எளிய மருத்துவ முறையாக இருந்துள்ளது. பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு, அத்தகைய தீய, கொடிய கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழித்து அதன் மூலமாக உடலில் நஞ்சு கலந்த வேதியியல் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் புத்துணர்வு பெறுகிறது.

ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்வது பற்றி தெலுங்கு நாளிதழான ஆந்திர ஜோதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது. மூன்று வருடங்களாக 1041 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 927 நபர்களுக்கு நோய் குணமானது தெரியவந்தது. 758 நபர்களுக்கு கழுத்து மற்றும் உடல்வலி குணமாகியது. அலர்ஜி மற்றும் ஆஸ்துமா நோய்கள் 191 பேருக்கு சரியானது.

தோல்நோய், அரிப்பு,கரும்படை, உள்ளிட்ட நோய்கள் குணமடைந்ததாக தெரிவித்திருந்தனர். மேலும், இதயநோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்,நரம்பு தொடர்பான நோய்கள் குணமடைந்ததாக சர்வேயில் தெரிவித்திருந்தனர்.

1383733_629249313800187_1212481824_n.jpg

 

 

வீட்டில் எளிதாய் கிடைக்கும் உணவுப் பொருட்களை வைத்து ஆரோக்கியமாக வாழ பழகிக்கொள்ளுங்கள்.

கொண்டைக் கடலை சுண்டல் ஒரு கப் மற்றும் 100 கிராம் தேங்காய் சாப்பிட்டு வந்தால் துத்தநாக உப்பு பெற முடியும். இது நமது கை நகங்களையும், தோலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் பூசணிக்காயில் உள்ள வைட்டமின் ஏ புற்று நோய் வராமல் 70 சதவீதம் பாதுகாப்பளிக்கிறது. சிறநீரக கற்கள் ஏற்படாமல் தடுக்கும் வல்லமையும் பூசணிக்காய்க்கு உண்டு.

வாழைப்பழத்தின் மருத்துவ குணம்...

எளிதில் கிடைக்கும் பழ வகைகளில் ஒன்று வாழைப்பழம். மருத்துவ குணம் நிறைந்த பழமாக வாழைப்பழம் திகழ்கிறது. ஆப்பிளில் உள்ளதை விட 4 மடங்கு கார்போ ஹைடிரேட்டும், 3 மடங்கு பாஸ்பரசும், 5 மடங்கு வைட்டமின் ஏ வும் மற்றும் இரும்புச் சத்தும் இதில் நிறைந்துள்ளன. ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் உப்பான பொட்டாஷியம் வாழைப்பழத்தில் ஏராளமாக அடங்கி உள்ளது. உடனடி உற்சாகத்தையும் பயனையும் தரக்கூடியது இப்பழம்.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை உறுதிப்படுத்தி தொடர்ச்சியாக காய்ச்சலில் படுப்பதை தடுக்கும் ஆற்றல் வாழைப்பழத்திற்கு உண்டு. வாழைப்பழத்தில் உள்ள இரும்புச்சத்து ரத்த சோகையையும், பொட்டாசியம் ஸ்ட்ரோக்கையும் தவிர்க்கும் வல்லமை பெற்றுள்ளது.

வாழைப்பழம் ஞாபக சக்தி, மூளையின் சக்தி அதிகரிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றலும் இவற்றிற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தமிழ் கூடல்

555957_527059974053993_212040206_n.jpg

 

  • ஆரோக்கியமாக வாழ...

    * தூங்கப் போவதற்கு முன், தினமும் கை, கால்கள், முகத்தை கழுவுங்கள்; பற்களையும் சுத்தம் செய்யுங்கள். சிறிது நேரம் வாய்க்குள் தண்ணீரை வைத்து, நன்றாக வாயை கொப்பளியுங்கள்.

    * தினமும் நன்றாக தூங்குங்கள். மாதத்தில் ஒரு முறையாவது கண்ணாடி முன் நின்று, உங்கள் உடலை பாருங்கள். அப்படி பார்த்தால், உடலில் ஏற்படும் சுருக்கங்கள், படைகள் போன்றவைகளை கண்டறியலாம்.

    * உணவில் பச்சை காய்கறிகளையும், பழ வகைகளையும் தேவையான அளவு சேருங்கள்.

    * முடிந்த அளவு வாகன பயணங்களை மேற்கொள்ளாதீர்கள்; அதிகமான தூரம் நடந்து செல்ல முயற்சி செய்யுங்கள்.

    * தினமும் குறைந்தது, 50 முறை உட்கார்ந்து எழுவது நல்லது. அப்படி செய்தால் இடுப்பு அழகுப்படும்; தொந்தியும், வயிறும் குறையும்.

    * குளிக்கும் போது எப்போதும் குதிகாலையும், கால் விரல்களையும் தேய்த்து கழுவுங்கள்.

    * படுக்கைக்கு அருகிலும், வேலை பார்க்கும் இடத்துக்கு அருகிலும், ஒரு போத்தல் தண்ணீர் எடுத்து வைத்து கொள்ளுங்கள். தேவைப்படும் போதெல்லாம் தண்ணீர் குடியுங்கள்.

    * முளைவிட்ட கடலை, சிறுபயறு போன்றவைகளை காலை உணவில் சேர்க்க வேண்டும்.

    * கை நகங்களை வெட்டி சுத்தம் செய்வதை, கடமையாக கொள்ளவும்.

    * உறங்கும் போது பட்டு துணிகளை அணியுங்கள்.

    * அதிக சூடு, அதிக குளிர் உணவுகள் பற்களுக்கு கேடு பயக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    * இரவு இனிப்பு பலகாரங்கள் சாப்பிட்டால், மறக்காமல் பற்களை சுத்தப்படுத்தி விடுங்கள்.

    * இரவில் அதிக நேரம் விழித்திருப்பதும், பகலில் தூக்கம் போடுவதும் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.

    * கொழுப்பு நிறைந்த எண்ணெயை உணவில் சேர்க்காதீர்கள்; அது, உடல் அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் கேடு பயக்கும்.

    * தினமும் காலையில் தேநீரோ, குழம்பியோ( காபி)குடிப்பதற்கு முன், ஒரு பழம் சாப்பிடுவது நல்லது.

    * தினமும் காலை யில், 10 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்

    969367_634145819941070_1901484992_n.jpg

 

 

உளுந்து - மருத்துவப் பயன்கள்:

நோயின் பாதிப்பு நீங்க:

கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும்.

இவர்கள் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.

உடல் சூடு தணிய:

இன்றைய அவசர உலகில் நோயின் தாக்கமும் அவசரமாக உள்ளது. இதற்கு காரணம் உடல் சூடுதான். மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது.

உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

தாது விருத்தியாக:

உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும்.

உளுந்து வடை:

உளுந்து வடை பசியை போக்குவதுடன் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். பித்தத்தைக் குறைக்கும்.

எலும்பு முறிவு இரத்தக் கட்டிகளுக்கு:

தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும்.

இடுப்பு வலுப்பெற:

சிலர் எப்போதும் இடுப்பில் கை வைத்துக்கொண்டே நிற்பார்கள். இடுப்பு நன்கு வலுவாக இருந்தால்தான் நிமிர்ந்து நடக்க முடியும்.

இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.

குழந்தைகளுக்கு:

சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.

பெண்கள்:

நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. இவர்களுக்கு உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

அல்லது தோல் நீக்காத உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து அரைத்து களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இடுப்பு வலி குணமாகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சித்தர்கள் வகுத்த எண்-கால அட்டவணை! எண் ஒலிப்பு ஒன்றிலிருந்து பிரமகற்பம் எனும் முக்கோடி வரை இருக்கும் அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது. எண் ஒலிப்புச் சொல் 1 ஒன்று (ஏகம்) 10 பத்து (தசம்) 100 நூறு (சதம்) 1000 ஆயிரம்(சகசிரம்) 10,000 பதினாயிரம்(ஆயுதம்) 1,00,000 நூறாயிரம்(லட்சம் - நியுதம்) 10,00,000 பத்து நூறாயிரம்(பிரயுதம்) 1,00,00,000 கோடி 10,00,00,000 அற்புதம் 1,00,00,00,000 நிகற்புதம் 10,00,00,00,000 கும்பம் 1,00,00,00,00,000 கணம் 10,00,00,00,00,000 கற்பம் 1,00,00,00,00,00,000 நிகற்பம் 10,00,00,00,00,00,000 பதுமம் 1,00,00,00,00,00,00,000 சங்கம் 10,00,00,00,00,00,00,000 வெள்ளம்(சமுத்திரம்) 1,00,00,00,00,00,00,00,000 அந்நியம் 10,00,00,00,00,00,00,00,000 மத்தியம்(அர்த்தம்) 1,00,00,00,00,00,00,00,00,000 பரார்த்தம் 10,00,00,00,00,00,00,00,00,000 பூரியம் 1,00,00,00,00,00,00,00,00,00,000 பிரமகற்பம் (கோடிக்கோடி-முக்கோடி)


 
சர்க்கரை நோயாளிகளுக்கு பொன்னாவாரைப் பூ..!

சர்க்கரை நோயாளிகளுக்கு பொன்னாவாரைப் பூ மிகுந்த பலனளிக்கக்கூடிய பூவாகும்.

பொன்னாவாரை பூ - 10 கிராம்
மிளகு - 5
திப்பிலி - 3
சுக்கு - 1 துண்டு
சிற்றரத்தை - 1 துண்டு

இவற்றை இடித்து பொடியாக்கி ஒரு குவளை நீரில் போட்டு பாதியாக வற்றக் காய்ச்சி காலை வேளையில் அருந்தினால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுவதுடன், கை கால் மறமறப்பு, உடல் சோர்வு, மயக்கம், படபடப்பு, கண் பார்வைக் கோளாறு முதலியவை படிப்படியாகக் குறையும்.

பொன்னாவாரைப் பூவை நீரிலிட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். உடலின் வியர்வை நாற்றமும் மாறும்.

பொன்னாவாரைப் பூவுடன் பச்சை பயறு சேர்த்து அரைத்து உடலெங்கும் பூசி குளித்து வந்தால் சர்க்கரை நோயினால் முழங்காலுக்குக் கீழே உண்டான சரும கருப்பு நீங்கி சருமம் பழைய நிலையை அடையும்.

உடல் எரிச்சல் தீரும்.

பொன்னாவாரைப் பூவை உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு டீ.. காஃபிக்கு பதிலாக இதனை கஷாயம் செய்து பனங்கற்கண்டு கலந்து அருந்தலாம்.

பொன்னாவாவாரம் பூ ஆயுளை மட்டுமல்ல, அழகையும் காக்க வல்லது.
945989_526527504107240_1689289163_n.jpg

 


நாவல் மரத்தின் மருத்துவ குணங்கள்:-

வேர்

வெயில் காலத்தில் எழும் அடங்காதத் தாகத்தைத் தீர்ப்பதில் நாவல் மர வேருக்கு இருக்கும் பங்கு பலரும் அறியாதது. நெல்லிக்கட்டை, நன்னாரி வேர்போல நாவல் மர வேர் கட்டைத்துண்டு ஒன்றையும் அருந்தும் நீரில் ஊறப்போட்டால் அந்த நீரானது எப்பேர்ப்பட்ட அடங்காதத் தாகத்தையும் கட்டுப்படுத்திவிடும். சர்க்கரை வியாதியஸ்தர்களுக்கு மேற்படி அடங்காதத் தாகம் எப்போதும் உண்டு. அவர்கள் அனைத்து நாட்களிலும் இந்த நாவல் வேர்க்கட்டை ஊறிய நீரைக் குடிக்கலாம். நாவல் மரம் துவர்ப்பு வகையின் கீழ் வரும். இந்தத் துவர்ப்புச் சுவையானது காயங்களை ஆற்றக்கூடியது என்பதால், நாவல் மர வேரை இடித்துப் புண்கள் மீது கட்டுவார்கள்.

மரப்பட்டை

முற்றிய பட்டையைத் தூள் செய்து பவுடராகச் சேகரித்து வைத்துக்கொண்டால், புண்களைக் குணப்படுத்த நீண்ட கால மருந்தாக உதவும். பட்டையின் உள் சதைப் பகுதியை நீர்விட்டு அரைத்து மோர் அல்லது தயிருடன் சேர்த்துச் சாப்பிட்டால், உடல் சூட்டினால் வரும் கடுப்பு, கழிச்சல் தீரும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க, முற்றியப் பட்டையைக் கஷாயம் வைத்துக் குடிக்கும் பழக்கம் நமது பாரம்பரியத்தில் உண்டு. சித்த மருத்துவத்தில், சர்க்கரை நோய்க்கு பிரதானக் கஷாயமாக இருக்கும் ஆவாரக் குடிநீர் தயாரிப்பிலும் நாவல் மரப் பட்டைக்கு முக்கிய இடம் உண்டு. பெரும்பாட்டுப் பிரச்னையில் அவதியுறும் பெண்களுக்கு இரும்புச் சத்து இழப்பு அதிகமாக இருக்கும். இதனை ஈடுகட்ட சித்த மருத்துவத்தில் பலன் அளிக்கும் செந்தூர பஸ்பம் தயாரிப்பிலும் நாவல் மரப்பட்டைக்கு முக்கிய இடம் உண்டு.

இலை

வெயில் காலத்தில் படுத்தும் கழிச்சல் தீர, நாவல் மர இலைக் கொழுந்துகளைச் சேகரித்து அரைத்துத் தயிரில் சேர்த்துச் சாப்பிட வேண்டும். இது மட்டும் அல்ல.... இளம் கொழுந்துகளாய்ச் சம அளவுக்கு மாவிலைக் கொழுந்துகளுடன் சேர்த்து அரைத்துத் தயிருடன் சாப்பிட்டால், தீராத மூலக்கடுப்பும் நாளடைவில் கட்டுக்குள் வரும்.

பழம்

நாவல் மரம் தரும் கனிந்தப் பழங்களை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. என்ன, அதிகம் சாப்பிட்டால் தொண்டைக்கட்டு வரும். இதைத் தவிர்க்க உப்பில் தோய்த்துப் பழங்களை ருசிக்கலாம். சுவைக்கு சுவையுமாச்சு; உடலுக்கு மாமருந்துமாச்சு. இரைப்பையை வலுப்படுத்தவும் மொத்த உணவுப் பாதையை உறுதி செய்யவும் தேவைப்படும் அடிப்படைச் சத்துக்கள் நாவல் பழத்தில் உண்டு. இதன் துவர்ப்பும் குளிர்ச்சியும் இதயத்தை வலுப்படுத்தக்கூடியவை. கிராமப்புறங்களில், எட்டிக்கொட்டை உண்டதால் ஆன விஷ முறிவுக்கு நாவல் பழச் சாறு அல்லது மரப்பட்டைக் கஷாயத்தை மிகச் சிறந்த முதலுதவி மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். சர்க்கரை வியாதியஸ்தர்கள் சாப்பிட உகந்தது நாவல் பழம். ஆனால், சளி - சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் மட்டும் இடைவெளிவிட்டு அளவோடு சாப்பிடலாம். பிறக்கும் குழந்தைக்குக் கபம் பாதிக்க வாய்ப்பு உள்ளதால், கர்ப்பம் தரித்தப் பெண்களும் இந்தப் பழத்தை அளவோடு சாப்பிட வேண்டும்.

கொட்டை

நாவல் மரம் முழுமையுமே சர்க்கரை நோய்க்கு எதிரான மருத்துவ மகத்துவத்தை உள்ளடக்கியது. நாவல் பழத்தின் கொட்டையில் இந்த மருத்துவ வீரியம் இன்னும் அதிகம். கொட்டையை நிழலில் காயவைத்து மாவாக அரைத்துவைத்துக்கொண்டு, காலை, மாலை இரு வேளைகளும் அரைத் தேக்கரண்டி மாவினை வெந்நீரில் சேர்த்து அருந்த சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். ஆடு தின்னாப் பாலைச் செடியை சாறு செய்து, அதில் இந்த நாவல் கொட்டை மாவையும் சேர்த்து பட்டாணி அளவிலான மாத்திரைகளாக உருட்டி வைத்துகொண்டு, வேளைக்கு இரண்டாக உண்டுவர சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த பலன் கிடைக்கும்.

1395186_633764923312493_115742615_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தமிழ்ச்சித்தர்கள் வகுத்த 64 தமிழர் கலைகள். 65வது கலை சாகாக்கலை எனும் மரணமிலாப் பெருவாழ்வு.
536320_309470659133615_765819711_n.jpg

 


தாழி..!

தமிழன் தெரிந்துகொள்ளவேண்டிய தன் இனத்தின் பெருமை..!

அதை உலகிற்கே உரக்க சொல்லவேண்டியது ஒவ்வோர் தமிழனின் கடமை..!

உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மூடிமறைப்பு.

தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர்.

தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த ஆதிச்ச நல்லூர்… ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நமது மக்கள் நாகரீகத்தோடு வாழ்ந்த ஊர். ஆச்சரியமாக இருக்கிறதா?..ஆம் அதுதான் உண்மை. இந்த இடுகாடு[?]. கி.மு பத்தாம் நூற்ராண்டுக்கும் முந்தையது. இன்றைய ஆய்வுகள் மேலும் ஒரு ஆயிரம் வருடங்களை பின்னுக்குத் தள்ளலாம் என்று தெரிவிக்கின்றன. நாம் அறிந்த எந்த இந்திய சரித்திர காலகட்டத்துக்கும் முந்தைய காலகட்ட மக்களின் இடுகாடு இது.

தமிழ்க்குடியின் தொன்மைக்கான முதற்பெரும் தொல்பொருட் சான்றும் இதுவே. ஏறக்குறைய கிருஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே இங்கு நாகரீகம் மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான்.

1876 -ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டுபிடித்ததுதான் இந்தத் தொல் தமிழர்களது நாகரீகம். அந்த ஜாகர் தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.

பிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903 ஆம் ஆண்டு ஆதிச்ச நல்லூர் வந்து சில தாழிகளைத் தோண்டி எடுத்தார். அப்போது மண்வெட்டி, கொழு முதலியன கிடைத்தன. ஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வில் கிடைத்த அந்தப் பொருள்களை அவர் பாரிசுக்கு எடுத்துப்போய்விட்டார்.

இவ்வாறு ஆதிச்ச நல்லூரில் கிடைத்த மிகத்தொன்மை வாய்ந்த பொருள்கள் மேல் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்த புதைபொருள் சின்னங்கள் கிடைத்தால் ஆதிச்சநல்லூரின் தொன்மையான வரலாறு நமக்குத் மேலும் தெரியும்.

1905 ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறு துணைக் கண்காணிப்பாளர் அலெக்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித்துக் கொடுத்ததோடு அகழ்ந்தெடுத்த பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்தார்.

இவரும் இங்குள்ள மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி, ஆபரணங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை அகழ்வாராய்ச்சி மூலம் ஆராய்ந்து பார்த்து விட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.

இதிலென்ன அதிர்ச்சி இருக்கிறது? என நினைக்கிறீர்களா? அந்த அதிர்ச்சிக்கு காரணம் அந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அன்றைய மக்கள் பயன்படுத்திய இரும்பால் ஆன கருவிகள்தான். "மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால், அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள், அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள், அப்படியாயின் இவர்களது நாகரீகம்தான் மற்ற அனைத்து நாகரீகங்களுக்கும் முற்பட்ட நாகரீகமாக இருந்திருக்க வேண்டும் அல்லவா?.

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்பைக் கண்டுபிடித்து தேன் இரும்பு, வார்ப்பு இரும்பு, எஃகு இரும்பு ஆகியவற்றை உருவாக்கி இருக்கின்றனர் . பயிர்த்தொழில், சட்டிப்பானை வனையும் தொழில், நெசவுத் தொழில், கப்பல் கட்டும் தொழில் போன்றவற்றை இரும்புக் கருவிகள் மூலம் திறம்பட வளர்த்து கடல் வாணிபம் செய்து உலகப் புகழ்பெற்றவர்கள் தமிழர்கள் என ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வுச் சின்னங்கள் உறுதிப்படுத்துகின்றன. திராவிடர்கள் குறிப்பாக தமிழர்கள் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தார்கள் என்ற கருத்துக்கு இந்த அகழ்வாய்வுச் சின்னங்கள் முடிவு கட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.

மிகத் தொன்மையான காலத்திலிருந்தே இரும்பைப் பிரித்தெடுத்து அதை பல பொருள்களாகச் செய்து பயன்படுத்துவதில் தமிழர்கள் கைதேர்ந்தவர்கள் என்று அறியமுடிகிறது. சங்க இலக்கியத்தில் இரும்பினால் செய்யப்பட்ட பொருள்கள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.

மிகத் தொன்மையான காலத்திலேயே தமிழர்கள் எகிப்து, ஆப்பிரிக்கா, சுமேரியா, கிரீஸ், மெக்சிகோ முதலிய நாடுகளுக்கு இரும்புப் பொருள்கள் ஏற்றுமதி செய்து வந்தனர். எகிப்தியர்களும், கிரேக்கர்களும் இந்திய நாட்டில் இருந்துதான் இரும்பை உருக்கி பயன்படுத்தும் முறைகளை அறிந்தனர் என்று கூறப்படுகிறது.

1837ஆம் ஆண்டு இராயல் ஏஷியாட்டிக் சொசைட்டியில் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை ஒன்றில் அறிஞர் ஹீத் என்பவர் தென் இந்தியாவில் செய்யப்பட்ட எஃகுப் பொருள்களே எகிப்துக்கும், ஐரோப்பா கண்டத்திற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று எடுத்துக்காட்டியுள்ளார்.

மெக்சிகோ நாட்டிலுள்ள பிரமிடுகளில் தமிழனின் கைவினைக் கலைகளைக் காணலாம். அண்மையில் எகிப்தில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டிலிருந்து சாத்தன், கண்ணன் என்ற இரண்டு தமிழர்கள் கடல் பயணம் செய்து எகிப்து நாடு சென்று அங்கே கொல்லன் பட்டறை ஒன்று நிறுவி, பணி செய்ததாக கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார். பிரமிடுகள் கட்டப் பயன்படுத்திய கற்களை செதுக்குவதற்குரிய உளிகள் இந்த கொல்லன் பட்டறையில் உருவாகி இருக்க வேண்டும். தமிழனின் இரும்பு நாகரிகத்தை வெளிப்படுத்தியது இந்த ஆதிச்ச நல்லூர்தான்.

அதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர் ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டைஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார். ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் திராவிடர்களின் மண்டை ஓடுகள் என்றும், ஒன்று மட்டும் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் மண்டை ஓடு என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே திராவிடர்களின் முன்னோர்கள் ஆஸ்திரேலிய நாட்டு பழங்குடி மக்களோடு தொடர்பு கொண்டிருந்தனர் என்று தெரியவருகிறது. அங்குள்ள பழங்குடி மக்கள் பேசும் மொழியில் தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா தென் இந்தியாவோடு இணைந்திருந்தது என்ற கருத்தை மட்டுமல்ல குமரிக் கண்ட கோட்பாட்டையும் இது உறுதி செய்கிறது என்றும் கூறலாம். ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் பயன்படுத்திய பூமராங் என்னும் ஒருவகை ஆயுதம் தமிழகத்தில் கிடைத்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பகைவர் மீது எறிந்தால் அவர்களைத் தாக்கிவிட்டு வீசியவர்கள் கைக்கு திரும்ப வரும் ஒருவகை ஆயுதம்தான் பூமராங்.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி, பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்ச நல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறியமுடிகிறது.

ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு செய்ததில் டாக்டர் கால்டுவெல்லுக்கும் முக்கியமான பங்கு உண்டு. தாழியில் சில அரிய பொருட்களை அவரே கண்டெடுத்து அவற்றைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் நாகரிகம் மிக்கவர்கள் என்ற கருத்தை டாக்டர் கால்டுவெல் வெளியிட்டார்.

ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அழகிய மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு.

ஏனிந்த நிலைமை என்று பார்த்தோமானால். "எல்லாம் அந்த பாழாய்ப்போன அரசியல்தான்" எல்லாம் இந்த வடக்கத்தியர்களுக்கு தமிழன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சிதான். இதுதான் இன்றைய ராமேஸ்வரம் மீனவன் முதற்கொண்டு ஈழம் வரை நடந்து கொண்டிருக்கிறது.

இந்த ஆய்வுகளை ஒப்புக் கொண்டால் உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது என்றாகிவிடுகிறது. அப்படியாயின் வெள்ளையர்களும் வடக்கத்தியர்களும் கண்டுபிடித்தவை எல்லாம் இதற்குப் பிந்தைய நாகரீகங்கள்தான் என்பதை ஒப்புக்கொண்டதாகி விடும். இதுதான் பிரச்னை.

இப்போது இங்குள்ள 150 ஏக்கர் நிலத்தை மத்திய அரசின் தொல்லியல் துறை சுற்றி வளைத்து கையகப்படுத்தி வைத்திருக்கிறது. 2005 ஆம் ஆண்டு அத்துறை செய்த ஆய்வுகளின் முடிவுகளைக் கூட இன்னமும் வெளிவிடாமல் வைத்திருக்கிறது. வேறு யாரும் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஓர் உத்தரவையும் போட்டிருக்கிறது. இதுதான் இன்றைய சோகம்.
இதைச் உலகறியச் செய்யவேண்டியது மத்திய அரசு, செய்ய வலியுறுத்த வேண்டியது தமிழக அரசு.

நன்றி: தமிழ்ச்சாரல்
— with AtHi Sankar and 20 others.
549439_324616687606429_1114448923_n.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

பாட்டி வைத்தியம்:-

காதில் சீழ்வடிதல் குணமாக

வெற்றிலையை நறுக்கி தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி, சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிசாவில் பத்திரப் படுத்தவும் காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதில் சீழ்வடிதல் நின்று விடும்.

நெஞ்சுவலி குணமாக

அத்திபழம் தொடர்ந்து சாப்பிட்டு வர நெஞ்சுவலி வராது. அத்திபழம் இருதயத்தை பலப்படுத்துகிறது.

சிலந்தி கடிக்கு மருந்து

தும்பை இலை சாறு எல்லா விஷகடிகளுக்கும் சிறந்த மருந்து. தும்பை இலை சாறு சாப்பிடவும்.

சீதபேதி குணமாக

புளியங்கொட்டை தோல், மாதுளம் பழத்தோல் சம அளவு இடித்து தூள் செய்து பசும்பாலில் சாப்பிட சீதபேதி குணமாகும்.

வயிற்று நோய் குணமாக

சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிட வயிற்று நோய் குணமாகும்.

காதுவலி குணமாக

வெற்றிலை சாறை காதில் விட்டால் காதுவலி குணமாகும்.

நுரையீரல் குணமாக

நாயுறுவி செடியின் விதைகளை காய வைத்து இடித்து தூள் செய்து சலித்து பாட்டிலில் வைத்து தினசரி காலை, மாலை இரு வேளை 10 மில்லி பாலில் சாப்பிட்டு வர நுரையீரல் நோய் குணமாகும்.

வாதநோய் குணமாக

குப்பைமேனி இலை சாறு எடுத்து தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர வாதநோய் குணமாகும்.

காலரா குணமாக

மாஸகொட்டை பருப்பை பொடி செய்து பசும்பாலில் கலந்து கொடுத்தால் தண்ணீராக போகும் பேதி நிற்கும்.

மலச்சிக்கல் சரியாக

அகத்தி கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை 1 ஸ்பூன் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

1455025_633680613320924_882094838_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.