Jump to content

காதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி?


Recommended Posts

பதியப்பட்டது
ஒருவர் காதலிலிருந்து பிரிவதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல், கோபத்துடன் பிரிதலால் எந்த ஏமாற்றமும் பெரிதாக பாதிக்காது. இன்னொன்று வேறு ஒருவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, ஏற்கனவே இருக்கும் காதலை வெட்டிவிடுவது. இதை காதல் என்று சொல்லலாகாது. மற்றொன்று ஒருவருக்காக ஒருவர் விட்டு கொடுத்து அவரவர் குடும்பத்தினருக்காக பிரிவது ஒரு வகை. இதிலும் இரண்டு வகை உண்டு. ஒன்று கல்யாணத்திற்கு முன், இன்னொன்று கல்யாணத்திற்கு பின். இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதுவும் கல்யாணத்திற்கு பிறகு ஏற்படும் பெரும் ஏமாற்றம், நம்பிக்கை துரோகம் தான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதிலிருந்து மீள்வது சிறிது கடினமே. அப்படிப்பட்ட காதல் பிரிவு துயரத்திலிருந்து மீள்வதற்கு சில வழிகள் உள்ளன. அவை என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்...1. அதிர்ச்சி தொடக்கத்தில், நம் துணைவர் இன்னொரு ஆணிடமோ அல்லது பெண்ணிடமோ தொடர்பு கொண்டிருப்பதை நம் மனம் ஏற்காது. முதலில் நம்ப மறுக்கும். நாம் இருக்க வேண்டிய இடத்தில் இன்னொருவர் என்பதை முற்றிலும் மனம் ஏற்க இயலாது. அதிலும் உங்கள் துணைவர் உங்களை தவிர வேறு ஒருவருடன் உணர்வுபூர்வமாக நெருங்கி பழகுவதை பார்க்கும் பொழுதோ, உங்களை சுற்றி ஏதோ இழிவான செயலில் ஈடுபடுவதைக் கண்டாலோ, என்ன நடக்கிறது என்று உணர்வது மிக கடினம். இதெல்லாம் கெட்ட கனவா, இல்லை வெறும் பிரம்மையா என்பதை தீர்மானிக்க முயற்சிக்கும் போது, ஒரு மூடுபனியில் இருப்பது போல் இருக்கும். இந்த கட்டத்தில் நீங்கள் உங்களை உணர்வது அவசியம்.2. ஆத்திரம் அது 'கெட்ட கனவும்' இல்லை வெறும் ஒருவித பிரம்மையும் அல்ல, அது உண்மைதான் என்று தெரிந்த பின் உங்களால் ஆத்திரத்தை அடக்க இயலாது. உடல் நிலை மோசமாக மாறும். எந்த செயலையும் செய்ய முடியாது. நீங்கள் படுக்கையை விட்டு எழுந்திருக்க மறுப்பீர். வேலைக்கு செல்லாமலும், அன்றாட வேலைகளையும் செய்ய முடியாமலும், சதா காதல் நினைவையே மனம் நாடும். நடந்தவற்றையே நினைத்து சிந்தித்து கொண்டிருப்பர். பின் பொருட்களை தூக்கி உடைப்பது, கத்துவது, அனைவரிடமும் சண்டை போடுவது மற்றும் தன் சுய கட்டுப்பாட்டை மீறி நடந்து கொள்வது போன்றவைகள் நிகழும். அழுது புலம்புவர். சில நாட்களுக்கு பின் இந்த நிலை மாறும். ஆனால் மனதில் வலி மட்டும் வேரூன்றி இருக்கும். இந்த நிலை போக போக சரியான முடிவுகளை எடுக்க வழிவகுக்கும்.3. கோபம் இந்த கட்டத்தில், ஆரம்பத்தில் வன்முறை செயலில் ஆத்திரம் கொண்டு, பின் அந்த வலியிலிருந்து மீண்டு, மனமானது கல்லாகி, ஒரு சாதாரண நிலையை அடைந்திருப்பீர். இந்த நிலையில் தான் பொதுவாக நீங்கள் சமரச கருத்து தொடங்குவது அல்லது விவாகரத்து பற்றிய முடிவு எடுப்பது நடக்கும். ஆழமான காயம் கொண்டிருந்தாலும், நடைமுறை வழக்கிற்கு ஏற்றவாறு முடிவு எடுப்பது நல்லது. அதை விட்டு பழி வாங்குவது என்பது முட்டாள்தனம். ஆகவே இந்த நேரத்தில் துயரத்திலிருந்து வெளிவர வாழ்க்கையின் இலக்குகளை அடைய மிகுந்த ஆர்வத்தை காட்டலாம் அல்லது திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதை பற்றி யோசித்து முடிவெடுக்கலாம்.4. நினைவு சின்னங்கள் உங்கள் துணைவருடன் சென்றிருந்த சில இடங்கள், பொருட்கள், மற்றும் நினைவூட்டும் அனைத்தையும் மனதில் இருந்து அழிப்பது நல்லது. காதல் கொண்ட வேளையில் கேட்ட சில பாடல்கள், அவர்களுடன் சென்ற ரெஸ்டாரென்ட், இல்லையேல் அவர்கள் கூறிய வார்த்தைகள், அவர்களால் ஏற்பட்ட நட்பு, உறவுகள் போன்ற அனைத்தையும் தவிர்ப்பது நல்லது.5. புது உறவு இப்படிப்பட்ட சம்பவம் நடந்த உடனே வேறு ஒருவரை நம்பி திருமணம் செய்து கொள்ள வேண்டாம். சில நாட்கள் கழித்து பழகி, பேசி, ஒருவரை புரிந்து பின் மணம் முடிப்பது நல்லது. உங்கள் வாழ்க்கைக்கு மற்றொரு நபரை தேர்ந்தெடுக்கும் முன் யோசித்து செயல்பட வேண்டும். இதனால் மறுபடியும் ஏமாற்றம் அடையாமல் இருக்கலாம்.6. இலக்குகள் காதல் தோல்வி அடைந்துவிட்டோம் என்று மனம் தளர்ந்து விடாமல், இலக்குகளை தொடர வேண்டும். சதா அதே நினைவாக இருக்காமல், புத்தகம் படிப்பது, பிடித்த வேலைகளை செய்வது, எங்காவது தூரமாக சென்று ஒரு மாத காலம் மன நிம்மதியுடன் இருந்து வருவது, எப்போதும் நம்மை பிஸியாக வைத்து கொள்வது போன்றவற்றை பின்பற்றுவதால், விரைவில் அந்த துயரத்திலிருந்து மீண்டு, இலக்குகளை அடைய முடியும்.ஆகவே எப்போதும் நம்மை நாமே புரிந்து கொண்டு, பின் வாழ்க்கையை தொடர்வது மிக முக்கியம். வாழ்க்கையில் அனைத்துமே பாடமாக அமையும். நிறைய கற்று கொள்ள நேரிடும். ஒவ்வொருவரையும் எப்படி சமாளிப்பது என்பதை அறிய வேண்டும். எனவே காதல் தோல்வி ஏற்பட்டால், அவற்றை மறந்து, நம் வாழ்கையை தொடர நமக்கு எப்போதும் சந்தோஷம் கொடுக்கும் நம் நண்பர்ககளோடு சேர்ந்து சிரித்து பேசி வாழ்கையை அனுபவியுங்க
 
Posted

காதல் தோல்வி, பிரிவு, என்பதே இல்லை  அன்பு ............. :D 

 
எதற்கும் இந்தப்பாடலையும் கொஞ்சம் கேளுங்க ......... :lol:

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீட்டில் செயற்கையாக தேனீ/தேன்கூடு வளர்ப்பவர்கள் தேனீக்கு சீனிப்பாணி கொடுக்கின்றார்கள் என கேள்விப்பட்டேன். கடையில் விற்பனை செய்யப்படும் தேன் எப்படிப்பட்ட தேனீக்களால் உற்பத்தி செய்யப்பட்டதோ யார் அறிவார். உண்மையான தேன் குளிர்காலத்தில் கட்டியாகாது என நினைக்கின்றேன்.
    • இசை அரசனும்..... நடிப்பு அரசனும்....  
    • திண்ணையில் ஒரு நாளைக்கு பத்து கருக்கு மட்டைக்கு மேல் வைக்க முடியாது என்ற கட்டுப்பாடுடன் திண்ணையை துறப்பதில் எந்த ஆட்சேபமும் இல்லை 😄
    • பாவம் அந்த தாதியர், அவர் உங்களின் உறவினராகவும் உண்மையை பேசியதாலும் சத்திய மூர்த்தியின் உளவுத்துறையால் பின்தொடரப்பட்டு பழிவாங்கப்படும் சாத்தியமுண்டு.  
    • முன்னர் திண்ணையில் பாய் விரித்து படுத்த ஒருவர் என்றால் அது நீங்களாய்த்தான் இருக்கும்....அடுத்தது நாதமுனி..😂திண்ணை இல்லாததின் பின் அவரும் இல்லை. நாதமுனி   நல்ல மனிதர். அவரை பல தடவைகள் சந்தித்திருக்கின்றேன். கருத்துக்களம் இருக்க திண்ணையில்  பிரயோசனமான உரையாடல்களை ஏன் நிர்வாகம் விரும்புகின்றது என தெரியவில்லை. பல தடவைகள் என்னையும் திண்ணையில் தடை செய்திருந்தார்கள். அது போல் மட்டுறுத்தப்பட்ட உறவுகளை திண்ணை தடையுடன் திண்ணையை ஏனைய உறவுகளுக்கு திறந்து விடலாம் என்பது என் கருத்து. இது நாதமுனிக்காக.....😂🙂  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.