Jump to content

நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பு நடாத்திய கரப்பந்தாட்டம்.


Recommended Posts

நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பு நடாத்திய கரப்பந்தாட்டம்.

25.05.2013 அன்று  மட்டக்களப்பில் நேசக்கரம் பிறைட் பியூச்சர் அமைப்பினால் கரப்பந்தாட்டப் போட்டி நடாத்தப்பட்டது. விபுலானந்த விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் :-

 

கடல் மீன்கள் விளையாட்டு கழகம்
வாழைச்சேனை விளையாட்டு கழகம்
ஆரையம்பதி

விளையாட்டு கழகம்
கிரான் விளையாட்டு கழகம்
கல்லாறு விளையாட்டு கழகம்
விபுலானந்த விளையாட்டு கழகம்
சிவானந்த விளையாட்டு கழகம்
நியூ சவுண்ட் விளையாட்டு கழகம்
எவக்ரீன் விளையாட்டு கழகம்
லைட் ஹவுஸ் விளையாட்டு கழகம்

ஆகிய பத்து விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றியிருந்தன.

sports117_zps42806fd2.jpg
நடுவர்களாக :-
ஜெகதீஸ்வரன்
விஜயகுமார்
சாந்தன் ஆகியோர் கடமையாற்றியிருந்தனர்.

வாழைச்சேனை விளையாட்டு கழகம் முதலாவது இடத்தையும் கடல்மீன்கள் விளையாட்டுக்கழகம் 2ம் இடத்தையும் வென்று வெற்றிக்கேடயத்தைப் பெற்றனர்.சிறந்த விளையாட்டு வீரருக்கான கேடயத்தை வாழைச்சேனை விளையாட்டுக் கழக வீரர் டினேஷ் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

 

sports17_zpsacd3825b.jpg

இப்போட்டியை எமது அமைப்பின் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் ஜோன்சன் மிகவும் திறமையாக நடாத்தி முடித்துள்ளார். பல இளைஞர்களின் அயராத உழைப்பில் தாயகத்தில் கிராம அபிவிருத்தி சமூக மேம்பாடு கல்வி சுகாதார உயர்வில் மேற்கொள்ளப்படும் கூட்டு முயற்சியாக முன்னெடுக்கப்படும் எமது வேலைத்திட்டங்களுக்கு தங்கள் உழைப்பை இலவசமாக எங்கள் சமூகத்துக்காக தந்து பணியாற்றும் ஜோன்சன் போன்ற இளைஞர்களுக்கு எங்களது நன்றிகள்.

johnsan_zps6fc5fc80.jpg

21 வயதான ஜோன்சன் விளையாட்டில் தனது சிறுவயது முதலே அகில இலங்கை மட்டதிலிருந்து அனைத்து மாவட்ட விளையாட்டுப் போட்டிகளில் வென்று பல சான்றிதழ்கள் கேடயங்களைப் பெற்றுள்ளார். இந்த இளைஞன் சரியான தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டால் உலகத்தரம் மிக்க விளையாட்டு வீரனாக வரும் வாய்ப்பு உள்ளது. ஆனால் பொருளாதார வளமில்லாமையால் அஸ்தமித்துப் போன பலரது கனவுகள் போல எங்கள் ஜோன்சனின் கனவுகளும் வெறும் கனவாகப் போகாதிருக்க எங்களாலான ஆதரவினை வழங்க வேண்டும்.

ஒரு ஜோன்சனின் வளர்ச்சி ஆயிரம் ஜோன்சன்களை உருவாக்கும். அத்தகைய திறனையுடைய ஜோன்சனுக்கும் உதவி அவரது குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த நேக்கரம் கொடுப்பதோடு எங்கள் இளைய சமூகத்தின் விளையாட்டுத்துறை ஆர்வத்தையும் மேம்பாட்டையும் அதிகரிக்க முடியும்.

sports16_zpsbd0e87f5.jpg

sports111_zpsbfc44555.jpg

sports11_zpsd2a262e6.jpgsports13_zps801d3c02.jpg

sports15_zps915dd76f.jpg

sports116_zpsde330501.jpg

sports115_zps998324de.jpg

sports113_zps08b91207.jpg

sports112_zps672cd5de.jpg

 

Nesakkaram e.V.
Hauptstrasse 210
55743 Idar-Oberstein
Germany

Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh

www.nesakkaram.org

 

http://nesakkaram.org/ta/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/

 

 

Link to comment
Share on other sites

எமது இளையோருக்கு மிகவும் தேவையான விடயம்.

இளையோரை மது, போதை பொருட்களில் இருந்து திசை திருப்ப உதவும்.

ஜோன்சனுக்கு நன்றி. இன்னும் வளர வாழ்த்துக்கள்.

 

உங்கள் ஊக்குவிப்புக்கு நன்றிகள் விவசாயி விக். ஜோன்சன் சட்டத்துறை படிக்கக்கூடிய புள்ளிகளை க.பொ.த உயர்தரத்தில் பெற்றிருந்தார். ஆனால் அவரது வீட்டு பொருளாதார நிலமை தொடர்ந்து படிக்க முடியாது போய்விட்டது. நல்ல திறமையான விளையாட்டு வீரன் திறமையாளன் ஆனால் பொருளாதார வளம்தான் எல்லாக் கனவுகளுக்கும் தடை.

 

 

Link to comment
Share on other sites

அக்கா, எனது சக விவசாயி வரன் தனது மகள் நிலாவின் பெயரில் உதவ $160 தந்துள்ளார். இவர் ஐ.பி.எம்மில் பொறியியலாளர் ஆக உள்ளார்.

நான் மன்னார் திட்டத்திற்கு தர யோசித்திருந்தேன். ஆனால் ஜோன்சனின் பணியும் எமது இளையோருக்கு மிக மிக முக்கியம்.

ஒற்றுமை, கூட்டு முயற்சி, உடல்/மன நலம் வளரும்.

ஜோன்சனுக்கு அந்த காசை அனுப்பிவிடுகிறேன்.

மன்னார் திட்டத்திற்கு இன்னும் சிலரிடம் உதவி கோரியுள்ளேன்.

கிடைத்ததும் அனுப்புகிறேன்.

நன்றி.

 

மிக்க நன்றிகள் விவசாயி விக்.

ஜோன்சனின் தகப்பனார் ஆடு வளர்ப்பு செய்ய ஏற்கனவே ஆதரவு கோரியிருந்தார். அவரது ஆடு வளர்ப்பை ஊக்குவிக்க இந்தத் தொகையை வழங்குவோம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி ,வாழ்த்துக்கள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல செய்தி ,வாழ்த்துக்கள் !

 

Link to comment
Share on other sites

அக்கா,

மன்னார் விவசாய திட்டத்திற்கு யூடி எனும் எனது நண்பி உதவுகிறார். இவர் ஒரு கனடிய அரசாங்க உத்தியோகத்தர். அவர் வரும் செவ்வாய் காசு தருவதாக கூறியுள்ளார். தொகையை சேர்த்து அனுப்புகிறேன்.

 

விவசாயி விக்,

உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு மிக்க நன்றிகள்.

ஒரேயிடத்தில் மட்டும் தொடர்ந்து நின்றுவிடாமல் போரால் பாதிப்புற்ற எல்லைக்கிராமங்களான பெரிய புல்லுமலை உள்ளிட்ட 14 கிராமங்களின் விபரங்களை தொகுத்துள்ளோம்.

 

இக்கிராமங்களின் கல்வி ,சுகாதாரம், அடிப்படை வாழ்வாதாரம் போன்றவை மிகவும் பின்தங்கிய நிலமையிலேயே உள்ளது. உங்கள் உதவியை கட்டைபறிச்சானில் தெரிவு செய்யப்பட்ட 32விதவைகளின் வாழ்வாதார உதவிக்கு பெற்றுத் தந்தால் உதவியாக இருக்கும்.

 

அடுத்து வரும் நாட்களில் மேற்படி கிராமங்களின் விபரங்களை பதிவிடுவேன். உங்கள் நண்பர்களை புதிய திட்டத்தில் இணைத்து ஆதரவு தாருங்கள்.

 

மன்னார் திட்டத்திற்கு இப்போது வழங்கப்பட்ட உதவியின் வளர்ச்சி முன்னேற்றத்தை அடுத்த ஆறுமாதங்களுக்கு அவதானித்து அதன் பின்னரேயே அங்கே புதிய உதவிகள் வழங்க முடிவெடுத்துள்ளோம்.

 

Link to comment
Share on other sites

உங்கள் உதவி கிடைத்தது விவசாயி விக். மிக்க நன்றிகள்.விளையாட்டுகளில் பங்குபற்றும் இளைஞர்களுக்கான ஊக்குவிப்பு பரிசில்கள் சப்பாத்துக்கள் கொடுத்தால் மேலும் அவர்களை ஊக்கப்படுத்தலாம். உங்கள் தொடர்ந்த உதவி மேலும் பல முன்னேற்றங்களை கொண்டு வர ஏதுவாக இருக்கிறது. மீண்டும் நன்றிகள். உங்கள் மூலமாக உதவ முன்வந்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்து விடுங்கள். அவர்களது உதவியை பெற்றவர்களுக்கு கடிதம் படங்கள் மெயிலில் போடுகிறேன். அவர்களுக்கு கொடுத்து விடுங்கோ. தங்கள் உதவியைப் பெற்றவர்களின் பயனை உதவியவர்களும் அறிய வேண்டும்.

Link to comment
Share on other sites

  • 1 month later...

விவசாயி விக்,
உங்கள் நண்பர் தரன் அவர்கள் அவரது மகள் நிலாவின் பிறந்தநாளை முன்னிட்டு உதவிய உதவியை யோன்சன் தனது குடும்ப வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆடு வளர்க்க பயன்படுத்தியுள்ளார்.

 

அடுத்த வாரம் அளவில் வீடியொ கடிதம்  படங்கள் வரும். அனுப்புகிறேன்.

 

தாமதத்துக்கு மன்னிக்கவும். ஆடு வளர்ப்பு கொட்டகை இடம் சகலத்தையும் சகல ஒழுங்குகளையும் யோன்சனும் அவரது தந்தையாரும் தாங்களே தயாரித்துள்ளார்கள். அதற்கான செலவை மீதப்படுத்த தாங்களே ஆறுதலாக செய்துள்ளார்கள்.
 

Link to comment
Share on other sites

யூடி அவர்களின் உதவியும் போரால் பாதிப்புற்ற குடும்பமான எமது பணியாளர் தினேஸ் அவர்களது வாழ்வாதாரத்திற்கு வழங்கியுள்ளோம். மிகவும் வறுமையான குடும்பம். தொடர்ந்து படிக்க வாய்ப்பின்றி தினேஸ் படிப்பையும் இடைநிறுத்திவிட்டார். கடந்த 8மாதங்களாக எமது நிறுவனத்தில் எவ்வித கொடுப்பனவும் இல்லாது பணியாற்றிக் கொண்டிருக்கிறார். யூடியின் உதவியை தினேஸ் குடும்பம்  தாங்களாகவே கோழிவளர்ப்புக்கான கூடு தயாரித்து மேலதிக செலவை மீதப்படுத்தி கோழி வளர்ப்பை ஆரம்பித்துள்ளார்கள்.

யூடி, தரன் ஆகியோருக்கான பயனாளிகளின் கடிதங்கள் வீடியோ பதிவுகள் அடுத்தவாரம் உங்களுக்கு அனுப்பி வைப்பேன்.

 

தினேஸ் எழுதிய உதவி கோரல் கடிதம் :-

thinesh_zpsf0a7bf5d.jpg

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

நன்றி அக்கா. தோட்டத்தில் வேலை கூடிய படியால் உதவி கோர நேரம் கிடைப்பதில்லை.

சந்தைக்கு வரும் ஒரு வாடிக்கையாளர் உதவுவதாக கூறினார். வரும் கிழமை தெரிவிக்கிறேன்.

 

மன்னிக்கவும் விவசாயி விக். உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றிகள். நானும் அதிக வேலைப்பழுவால் கடிதங்களை உடன் இணைக்க முடியாது போய்விட்டது. புதிய வேலைத்திட்டங்கள் பல நடந்து கொண்டிருக்கிறது. அதற்கான ஒழுங்குகள் முன்னெடுப்புகளில் தாமதமாகிவிட்டது. யோன்சனின் நன்றிக்கடிதம் இதோ:-

8.jpg

உதவி பெற்ற தினேஷின் நன்றி :-

Letter-Dinesh.jpg

விவசாயி விக்  யூடி , வரன் ஆகியோருக்கு இக்கடிதங்களை கொடுங்கள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவரும் தோற்கடிக்கப்படவேண்டியவரே. நான் அவருக்கும் வாக்கு போட்டிருக்க மாட்டேன். நிச்சயம் சிங்கபூரில் இருந்து டிக்கெட் போட்டு போய் அவருக்கு பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டிருக்க மாட்டேன். தவிரவும் அவரும் மட்டகளப்பு, அவர் வன்கொடுமை செய்ய பெண்ணும், மட்டகளப்பு, அவரை ஆதரித்த உள்ளூர் கட்சியினரும் மட்டகளப்பு  வாக்களித்த வாக்காளரும் மட்டகளப்பு எனும் போது இதில் பிரதேசவாதம், மையவாதம் என்ற கோணமே எழவில்லை. இல்லையே…அப்பட்டமாக பிரதேசவாதம் கக்காத தமிழ் தேசிய அரசியலும் செய்யாத பலர் அங்கே தேர்தலில் நின்றார்களே. தமிழ் தேசியத்தில் நம்பிக்கை இல்லை, சரி வேறு ஒரு தெரிவை எடுக்கலாமே? தென்னிலங்கை கட்சியில் கேட்ட ஒரு தமிழருக்கு போட்லாலாமே? நான் இன்றும் மேடைக்கு மேடை பிரதேசவாதம் கக்குபவருக்குதான் வாக்கு போடுவேப் ஆனால் நான் பிரதேசவாதி இல்லை என்பது நம்பும்படியாகவா இருக்கு? தெரியும். மட்டகளப்பு மாவட்டமும் பெரும்பான்மை தமிழர் பகுதிதான்.    பிரதர், நான் தமிழ் தேசிய வடையை நியாப்படுத்தவில்லை. அதை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை . நீங்கள் நன்னா டிரக்கை மாத்த வேண்டாம். தமிழ் தேசிய அரசியல் உதவாது என்ற நிலைப்பாடு = பிரதேசவாதம் என நான் எங்கும் எழுதவில்லை. ஆனால் அப்பட்டமாக செயலில், சொல்லில் இன்றுவரை பிரதேசவாதத்தை எழுப்புவரை, அவரின் கொள்கையை ஆதரிப்பது, இறங்கி வேலை செய்வது, நிச்சயம் பிரதேசவாதம்தான். இது நான் ஹிட்லரின் அனுதாபி, அவருக்கு வாக்கு போடுகிறேன், அவருக்கு வாக்கு போடுமாறு பிரச்சாரமும் செய்கிறேன் ஆனால் நான் நாஜி இல்லை என்பது போல ஒரு நிலைப்பாடு.
    • சங்கி ஆனந்தம் சொன்னது சம்பந்தமாக, மெதடிஸ்ட் (CSA, CoE, American Mission) இப்படி ஊருக்குள் போய் மதம் மாற்றுகிறார்களா? நான் அறிய 5ம் வேதம் என கூறப்படும், யெஹோவா சாட்சிகள், பெந்திகோஸ்த் ஆட்கள்தான் இப்படி செய்வது.
    • இதே போன்ற ஒன்றை மட்டக்களப்பு பெண்ணிற்கு இழைத்து இழைத்தவர் கூத்தமைப்பில் மட்டக்களப்பில் பா. ஊ வாக இருந்தார். ஒரு வேளை அவர் இதனை யாழில் செய்திருந்தால் கூத்தமைப்பில் நிறுத்தப்பட்டிருப்பாரா...? ஆகவே யாழ் மையவாதிகள் ஒன்றும் திறம் கிடையாது அடுத்தவனுக்கு பாடம் எடுக்க. ஆக என்ன சொல்ல வருகிறீர்கள் நீங்களும் நானும் பவுன்ஸிலும் டாலர்களிலும்  பாக்கெட்டிற்குள் போட்டுக் கொண்டு நம்ம அடுத்த வேலையை பார்க்கப்போக அங்கே இருக்கும் மட்டக்களப்பார்கள் மட்டும் யாழ் தேசியவாதிகளை நம்பி அடுத்த வேளை சோற்றுக்கு பிச்சையெடுக்க வேண்டும் அப்பிடியா...? முக்கால் வாசி தேசிய வியாதிகள் எல்லாம் ஒன்று புலம் பெயர், இல்லை தமிழர் பெரும்பான்மை பிரதேசத்தில் மட்டும் ஏன் இருக்கிறார்கள் என்று தெரியுமா..? சோற்றுக்கு வயிறு காயும் போதுதான் தெரியும் தேசியத்தின் பெருமை. தமிழர் பெரும்பான்மை பிரதேசங்களில் தேசியவாதிகள் சிறுபான்மை ஆகும் போது தெரியும் தேசியத்தின் பெருமை அதுவரை தேசியவாதிகள் வாயால் நன்னா வடை சுடலாம்
    • ""எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்"" என்பது உந்தக் கரடிக்குத் தெரியாதோ?  😁
    • என்னப்பா உந்தப்பிரச்சனை இன்னும் முடியேல்லையே?😂 நானெண்டால் இத்தடிக்கு கார பாட்ஸ் பார்ட்சாய் கழட்டி வித்திருப்பன்.😎
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.