Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறப்போர் - மாணவர் போராட்டம் பற்றிய ஆவணப்படம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அறப்போர் ஆவணப்படம் படப்பிடிப்பில் உள்ளது... விரைவில் உலகெங்கும் ஜேர்மன், ஆங்கிலம், பிரெஞ் (Subtitle)ஆகிய மொழிகளில் மக்கள் பார்வைக்கு...

 

https://www.facebook.com/Arapoor

 

020613204309_574507_171536879680500_2108

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அறப்போர் பற்றி இல் வெளிவந்த செய்தி...

https://m.facebook.com/photo.php?fbid=175367819297406&id=171319503035571&set=pb.171319503035571.-2207520000.1370691356.&__user=100003514947571

அறப்போர் பற்றி deccan chronicleஇல் வெளிவந்த செய்தி...

https://m.facebook.com/photo.php?fbid=175367819297406&id=171319503035571&set=pb.171319503035571.-2207520000.1370691356.&__user=100003514947571

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Arappor teaser...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இனப்படுகொலைக்கு எதிரான தமிழக மாணவர் போராட்ட ஆவணப்படம், அறப்போர்

 

தமிழர்களை மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள மக்களை சென்றடைய வேண்டும்; தனி ஈழத்துக்கான ஆதரவை பெருக்க வேண்டும் என்கிற நோக்கில் ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், ஸ்பானீஷ் சப்-டைட்டிலுடன் தமிழக மாணவப் போராட்ட வரலாற்று ஆவணப்படமான அறப்போர் தயாராகி வருகிறது.

 

இனப்படுகொலைக்கு எதிரான தமிழக மாணவர் போராட்ட வரலாற்று ஆவணப்படமான ‘அறப்போர்’ குறித்து அதன் இயக்குநர் வே.வெற்றிவேல் சந்திரசேகர் கூறியதாவது:

“இலங்கையில் வடக்கு, கிழக்கு தமிழ்ப்பரப்பில் ஐந்து பேருக்கு ஒரு சிங்களப் படையாள். இதுதவிர சிங்கள போலீஸ் வேறு. கல்யாணத்தில், சாவு வீட்டில் என சிங்களப்படை தமிழர்களை கண்கொத்திப் பாம்பாக கண்காணித்துக் கொண்டிருக்கிறது. இதில் தமிழீழத்துக்கான குரல் எங்கிருந்து வரும்? எப்படி தமிழர்கள் தமிழீழத்துக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்?

மக்களும் மாணவர்களும் ஈழத்தில் ஒலிக்க இயலாத குரலை இங்குள்ள மாணவர்கள் எதிரொலிக்கிறார்கள். ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது என தமிழகம் முழுவதும் மாணவர்கள் கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள்.

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின் நான்கு ஆண்டுகளாகசிலஅரசியல் கட்சித் தலைவர்கள் ஈழ மக்களின் துயரை அரசியலாக்கி ஆதாயம் தேடிக் கொண்டிருக்கையில் அதில் தமிழக மாணவர்கள் அதிருப்தி அடைந்திருந்தார்கள். அந்த நேரத்தில் பிப்ரவரி 17ம் தேதி சேனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயதே ஆன பாலச்சந்திரன் திட்டமிட்டு கொல்லப்பட்டதை ஆதாரத்துடன் வெளிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியாகின. அந்தப் படங்கள் இளைஞர்கள் மனதில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் எண்ணெயை வார்த்தது.

 

அதே நேரத்தில், மார்ச் 6ம் தேதி ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவர இருந்த தீர்மானத்தின் நகல் வெளியானது. அரசியல்கட்சிகள் அந்தத்  தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கையில், அந்தத் தீர்மானம் இலங்கைக்கு ஆதரவானது; இலங்கை நிகழ்த்திய இனப்படுகொலையை மூடிமறைக்க முயல்கிறது; இலங்கை அரசை தன்னைத்தானே விசாரிக்கச் சொல்லும் அமெரிக்காவின் தீர்மானத்தை எதிர்க்க வேண்டும், இந்தியாவே தனி ஈழத்தை ஆதரிக்கும் தீர்மானத்தை முன்னெடுக்க வேண்டும் என்று மாணவர்கள், இளைஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

முதல் முதலாக ஏப்ரல் 8ம் தேதி லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். அந்த உண்ணாவிரதம் பற்றிப் பரவத் தொடங்கியது. மாணவர்களின் தீர்க்கமான கோரிக்கை அதுவரையில் அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கூறி வந்த தி.மு.க.வின் டெசோவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. அமெரிக்கத் தீர்மானத்தை மாணவர்களும் ஆதரிக்க வேண்டும் என்று கோரி லயோலா கல்லூரி மாணவர்களைச் சந்திக்கச் சென்ற தி.மு.க. மற்றும் காங்கிரஸ்காரர்களை மாணவர்கள் மறுத்து அனுப்பினர்.

 

அதன்பின், மார்ச் 10ம் தேதி நள்ளிரவில் 8 மாணவர்களும் கைது செய்யப்பட, மாணவர்கள் போராட்டம் தமிழகம் முழுவதும் பற்றிப் பரவியது. தமிழக அரசு கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை விட்டது. காங்கிரஸ்காரர்கள் போராடிய மாணவர்களை தாக்கினர். ஆனால் சிறு வன்முறை கூட இன்றி மாணவர்கள் அமைதியாக அறவழியில் போராடினார்கள்.

 

அதுவரையில் ஈழத் தமிழர்களுக்காக  சட்டக் கல்லூரி, அரசுக் கல்லூரி மாணவர்கள் மட்டுமே போராடி வந்த நிலையில் முதல் முதலாக தனியார் மற்றும் அரசு உதவிப் பெறும் கல்லூரி மாணவர்களும் களத்தில் குதித்தனர்.

ஈழத்தில் இனப்படுகொலை நடத்திய இலங்கை அரசுக்கு ஆதரவாக இருந்த காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்து வந்த திமுக, மாணவர் போராட்டத்தின் விளைவாக கூட்டணியில் இருந்து வெளியேறியது. ஆளும் அதிமுக அரசு சட்டப் பேரவையில் தனி ஈழத்துக்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.

 

அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் திசை மாறிய போது, அமெரிக்காவும் திடுக்கிட்டது. அதன் பலனாக, இலங்கைக்கு  எதிரான தீர்மானத்தை தாங்கள் மட்டுமே வடிவமைக்க வில்லை. இந்தியாவும் சேர்ந்து தான் வடிவமைத்தது என்கிற உண்மையை  அமெரிக்கா போட்டு உடைத்தது. அந்தளவுக்கு பெரிய வீச்சினை உருவாக்கியது மாணவர் போராட்டம்.

அமெரிக்க அரசையே அசைத்துப் பார்த்த அரசியல் கட்சிகளை எட்ட நிறுத்திவிட்ட அறவழிப்பட்ட மாணவர் போராட்டத்தின் போக்கினை அலசுகிறது இந்த ‘அறப்போர்’ ஆவணப்படம்.

 

முதல் முறையாக ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்ச், ஸ்பானீஷ் மொழி சப் டைட்டிலுடன் படம் வெளிவர இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள பல பாராளுமன்ற உறுப்பினர்களிற்கும், மனித உரிமை ஆர்வலர்களிற்கும் இந்தப் படம் காண்பிக்க ஏற்பாடு நடந்து வருகிறது.இதன் மூலம் தனித் தமிழீழக் கோரிக்கையின் நியாயத்தை தமிழ் மொழி பேசாத மக்களுக்கும்புரிய வைப்பதே எங்கள் நோக்கம். முன்னதாக ஜூன் இறுதி அல்லது ஜூலை தொடக்கத்தில் தமிழகத்தில் அறப்போர் ஆவணப்படம் வெளியிடப்படும்’’

இவ்வாறு வெற்றிவேல் சந்திரசேகர் தெரிவித்தார்.

vetri.gif

இவர், ஏற்கெனவே மூன்று தமிழர் விடுதலையை வலியுறுத்தி வெளியான இப்படிக்கு தோழர் செங்கொடி ஆவணப்படத்தை இயக்கியவர். தினமணி, குமுதம் ஆகிய பத்திரிகைகளில் செய்தியாளராக பணியாற்றிய வெற்றிவேல் சந்திரசேகர், பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

 

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சி.கபிலன் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

“தமிழர்களை மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ளவேற்றினத்தவரையும் சென்றடைய வேண்டும்; தனி ஈழத்துக்கான ஆதரவை பெருக்க வேண்டும் என்கிற நோக்கில் ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், ஸ்பானீஷ் மொழி சப்-டைட்டிலுடன் இந்தப் படம் விரையில் வெளியாகிறது. தமிழீழம் என்பது வெறுமனே ஈழத்தமிழர்களின் தேவை அல்ல அது உலகத்தமிழர்களின் தேவை என்பதையும் இதன் மூலம் உலகிற்கு இந்த ஆவணப்படம் எடுத்துரைக்கும்.  

மாணவர் போராட்டம் பற்றி 1965 இல் நடந்த இந்தி திணிப்புக்கு எதிரான மொழிப்போரில் பங்கேற்றவர்கள் இந்தப் படத்தில் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரும் மாணவர் போராட்டம் பற்றி இந்தப் படத்தில் பேசியிருக்கிறார். மாணவர் போராட்டத்தின் முழு வரலாற்றை பதிவு செய்திருக்கிறது இந்த அறப்போர் ஆவணப்படம். இந்திய அரசையே அசைத்துப் பார்த்த தமிழக மாணவர்களின் மொழிப்போர் பற்றிய தகுந்த காட்சிப் பதிவுகள் இல்லாத நிலையில் அண்மையில் நடந்த இந்த மாபெரும் போராட்டத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்கிற ஆவலில் இதை உருவாக்கி வருகிறோம்” என்று அறப்போர் தயாரிப்பாளர் சி.கபிலன் தெரிவித்தார்.

 

http://tamil24news.com/news/?p=77845

 

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அறப்போர் ஆவணப்படம் விரைவில் வெளியாகிறது

2013 பிப்ரவரி 17 ஆம் தேதி சேனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயதே ஆன பாலச்சந்திரன் திட்டமிட்டு கொல்லப்பட்டதை ஆதாரத்துடன் வெளிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியாகின. அதைத் தொடர்ந்து, மார்ச் 6ம் தேதி ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவர இருந்த தீர்மானத்தின் நகல் வெளியானது.

அரசியல்கட்சிகள் அந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கையில், அந்தத் தீர்மானம் இலங்கைக்கு ஆதரவானது; இலங்கை நிகழ்த்திய இனப்படுகொலையை மூடிமறைக்க முயல்கிறது; இலங்கை அரசை தன்னைத்தானே விசாரிக்கச் சொல்லும் அமெரிக்காவின் தீர்மானத்தை எதிர்க்க வேண்டும், இந்தியாவே தனி ஈழத்தை ஆதரிக்கும் தீர்மானத்தை முன்னெடுக்க வேண்டும் என்று மாணவர்கள், இளைஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.

முதல் முதலாக ஏப்ரல் 8ம் தேதி லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். அந்த உண்ணாவிரதம் பற்றிப் பரவத் தொடங்கியது. அதன்பின், மார்ச் 10ம் தேதி நள்ளிரவில் 8 மாணவர்களும் கைது செய்யப்பட, மாணவர்கள் போராட்டம் தமிழகம் முழுவதும் பற்றிப் பரவியது. தமிழக அரசு கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை விட்டது. காங்கிரஸ்காரர்கள் போராடிய மாணவர்களை தாக்கினர். ஆனால் சிறு வன்முறை கூட இன்றி மாணவர்கள் அமைதியாக அறவழியில் போராடினார்கள்.

20-arappor.jpg

அதுவரையில் அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கூறி வந்த தி.மு.க.வின் டெசோவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இறுதியில், டெசோவும் மாணவர் கோரிக்கைக்கு வந்து சேர்ந்தது. அதுவரையில் ஈழத் தமிழர்களுக்காக சட்டக் கல்லூரி, அரசுக் கல்லூரி மாணவர்கள் மட்டுமே போராடி வந்த நிலையில் முதல் முதலாக தனியார் மற்றும் அரசு உதவிப் பெறும் கல்லூரி மாணவர்களும் களத்தில் குதித்தனர்.

ஈழத்தில் இனப்படுகொலை நடத்திய இலங்கை அரசுக்கு ஆதரவாக இருந்த காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்து வந்த திமுக, மாணவர் போராட்டத்தின் விளைவாக கூட்டணியில் இருந்து வெளியேறியது. ஆளும் அதிமுக அரசு சட்டப் பேரவையில் தனி ஈழத்துக்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.

அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் திசை மாறிய போது, அமெரிக்காவும் திடுக்கிட்டது. அதன் பலனாக, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தாங்கள் மட்டுமே வடிவமைக்க வில்லை. இந்தியாவும் சேர்ந்து தான் வடிவமைத்தது என்கிற உண்மையை அமெரிக்கா போட்டு உடைத்தது. அந்தளவுக்கு பெரிய வீச்சினை உருவாக்கியது மாணவர் போராட்டம்.

அமெரிக்க அரசையே அசைத்துப் பார்த்த அரசியல் கட்சிகளை எட்ட நிறுத்திவிட்ட அறவழிப்பட்ட மாணவர் போராட்டத்தின் போக்கினை அலசுகிறது இந்த ‘அறப்போர்’ ஆவணப்படம்.

முதல் முறையாக ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்ச், ஸ்பானீஷ் மொழி சப் டைட்டிலுடன் படம் வெளிவர இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை ஆர்வலர்களுக்கு இந்தப் படம் காண்பிக்கவும் ஏற்பாடு நடந்து வருகிறது. இதன் மூலம் தனித் தமிழீழக் கோரிக்கையின் நியாயத்தை தமிழரல்லாதோருக்கும் சென்று சேர்ப்பதே நோக்கம். முன்னதாக ஜூன் இறுதி அல்லது ஜூலை தொடக்கத்தில் தமிழகத்தில் அறப்போர் ஆவணப்படம் வெளியிடப்படும்.

மூன்று தமிழர் விடுதலையை வலியுறுத்தியும் மரண தண்டனையை எதிராகவும் வெளியான இப்படிக்கு தோழர் செங்கொடி ஆவணப்படத்தை இயக்கிய வே.வெற்றிவேல்சந்திரசேகர் அறப்போர் ஆவணப்படத்தை இயக்கி உள்ளார். தினமணி, குமுதம் ஆகிய பத்திரிகைகளில் செய்தியாளராக பணியாற்றிய வெற்றிவேல் சந்திரசேகர், பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சி.கபிலன் இந்தப் படத்தை தயாரிக்கிறார். மாணவர் போராட்டம் பற்றி 1965 இல் நடந்த இந்தி திணிப்புக்கு எதிரான மொழிப்போரில் பங்கேற்றவர்கள் இந்தப் படத்தில் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரும் மாணவர் போராட்டம் பற்றி பேசியிருக்கிறார்.

http://www.aanthaireporter.com/?p=34850

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.