Jump to content

போரால் சீரழிந்த கிழக்குப் பிரதேசத்தில் சுய முயற்சிக் கமத்தொழில் பணிகளுக்கு நிதி வழங்கல்


Recommended Posts

அன்பார்ந்த நண்பர்களுக்கும் நவ்வாவ்இன் நலன் விரும்பிகளுக்கும்,

 

போரால் சீரழிந்த கிழக்குப் பிரதேசத்தில் சுய முயற்சிக் கமத்தொழில் பணிகளுக்கு நிதி வழங்கல்

 

கிழக்கிலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை இயல்பு வாழ்வுக்கு திரும்பவைப்பதில் நவ்வாவ் கடந்த ஒன்றரை வருட காலமாக முன்னெடுத்துவரும் செயல்பாடுகளைத் தாங்கள் நன்கறிவீர்கள் என்பதில் எமக்குச் சந்தேகம் இல்லை. கடந்த மார்ச் 2013 ல் அமெரிக்க வரியாணை செயலகம் எம்மை மார்ச் 2012 இலிருந்து பதிவு செய்யபட்ட அறக்கட்டளை நிலையமாக அதிவிரைவாக ஏற்றுக்கொண்டது, நாம் தனிய நின்று பொறுப்பெடுத்து நிதிவழங்கி  பின்வரும் வரும் பணிகளை அவதானமாக திட்டமிட்டும், நுண்மையாக நிறைவேற்றி வைத்ததிலிருந்தும் ஊற்றெடுத்ததாகும் என்பதை நாம் பெருமையுடன் காட்டிவைக்க விரும்புகிறோம்.

1.   கிளிநொச்சியில் தொலைத்தூரம் சென்று படிக்கும் மாணவர்களுக்கு 50 மிதிவண்டிகளை வழங்கியிருந்தோம்.

2.   மட்டக்களப்பு மாவட்டத்தில் 3000 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கியிருந்தோம்.

3.   சித்தாண்டிக்கிராமம், மட்டக்களைப்பில், 500 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கியிருந்தோம்.

4.   வெள்ளத்தில் தமது பாதணிகளை இழந்திருந்த 297 மாணவர்களுக்கு மாற்றீடுகள் வழங்கியிருந்தோம்.

5.   வெள்ளத்தால் மூழ்கிய மட்டக்களப்பில் 175 பால்குடி குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கியிருந்தோம்

6.   வன்னியில் போரால் விதவையாக்கப்பட்டவர்களுக்கு 7 சிறுகைத்தொழில்கள் ஆரம்பித்திருந்தோம்.

7.   வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட இரு நபர்களுக்கு மருத்துவ உதவிகள் பெற்றுக்கொடுத்திருந்தோம்.

8.   போரினால் கேட்கும் தகவிழந்திருந்த பிள்ளை ஒன்றுக்கு காதுப்புல அறுவைச் சிகிச்சை பெற்றுக்கொடுத்திருந்தோம்.

கடைசியாக போரினால் அவதிக்குள்ளானவர்களும், விதவைகளும், அதி விரைவில் நல்ல பலனைக்கொடுக்க கூடிய சிறுபயிர்  வியவசாய/கமத்தொழில் பணிகளில் பங்குபற்றியிருக்கிறோம். பணியின் ஆரம்பத்திற்கும், வெற்றிக்கும் தங்களின் வழமையான ஆர்வமுள்ள அர்ப்பணிப்பு தேவையானவற்றை அமைத்துக்கொடுக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை. அதை மனத்தில் வைத்துக்கொண்டு கிழே அந்த பணியின் சுருக்க அறிக்கையை தருகிறோம். இந்த பணிக்கு எதிர்பார்க்கும் செல்வீனம் அண்ணளவாக $40,000.

நவ்வாவ் உங்களின் தாட்சணிய நல்லியல்புகளில் இந்த பணியின் வெற்றிக்குத் தங்கியிருக்கிறது. தயவு செய்து உங்களால் முடிந்தவறை இந்த போரினால் வக்கற்றுப்போனவர்களுக்கு கொடுத்து உதவும் படி கேட்டுக்கொள்கிறோம். காசோலையாக அனுப்ப விரும்பின் NOWWOW, 11 Forest Street, Winchester, Ma 01890. என்ற விலாசத்திற்கும் நேரடியாக அனுப்ப விரும்பின் Bank A/C No 1324577247, Citizens Bank, என்ற வங்கிக் கணக்குக்கும் அனுப்பிவைக்கலாம். Paypall அனுப்ப விரும்புவோர் http://nowwow-us.org/Contibution%20Methods-1.pdf என்ற பக்கத்தை பார்க்கவும். மொன்றியலிலுள்ளோர் இந்த அறிவுறுத்தலை பின்பற்றாமல் மேலதிக விபரங்களுக்கு Mr.Sivayogan Sivasubramaniam at (514)-975-1520 என்பவரை தொரர்பு கொள்க.

எந்த தொகையும் எமக்கு ஏற்புடையது. அதை தயவு செய்து காலம் தாழ்த்தாமல் கொடுத்துதவுவது வேண்டப்படுகிறது.

 

நன்றி

சுபா சுந்தரலிங்கம்.

தலைவர். னவ்வாவ்

 

  

 

 

போரால் சீரழிந்த கிழக்குப் பிரதேசத்தில் சுய முயற்சிக் கமத்தொழில் – பணியின் சுருக்கம்

 

நவ்வாவ் கிழக்கிலங்கையில் இருக்கும் கட்டைபறிச்சான் கிராமத்தில் போரால் பாதிக்கப்பட்ட குடுபங்களுக்கு புனர்வாழ்வளிப்பதை துரிதப்படுத்த “சர்வதேச தேவையானபோது நண்பர்கள்” (World Friends in Need -WFN)  என்ற கிழங்கிலங்கை தொண்டு நிறுவனத்துடன் சேர்ந்தியங்க ஒத்துக்கொண்டிருக்கிறது. இந்த பணியின் நோக்கம் கட்டைபறிச்சானில் இருக்கும் போரினால் பாதிக்கபட்ட பெண்தலைமையில் இருக்கும், குடி பெயர்ந்து, மீளக்குடியேற்றபட்ட 40 குடும்பங்களுக்கு வாழ்வை மேம்படுத்தி மேலும் சரியவிடாமல் நிலைநிறுத்துவதாகும்.

 

அதன் படி உதவியில் பங்கெடுக்க பின்வரும் தகமை உள்ள குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

1.   பிள்ளைகளை பராமரிக்க வேண்டியிருக்கும் போரினால் தாக்கப்பட்ட பெண் விதவைகள்.

2.   போரினால் வலுவிழந்த குடும்பஸ்தர் ஒருவராவது உள்ள குடும்பம்.

3.   4000 ரூபாவுக்கு குறைந்த வருமானம் உள்ள நொய்மையான வாழ்க்கை நடத்தும் குடும்பம்.

தகுதியான குடுபங்களை தெரிவு செய்வதிலும், தகுதிக்கு திரையிடுவதிலும் விவசாய அமைச்சின் பிராந்திய அலுவலகம்,  பொருளாதார மேம்பாட்டு அமைச்சு, விவசாய சேவைகள் திணைக்களம், காரியதரிப்பிரிவின் அலுவலகம், நிலதாரின் கிராம சேவையாளர் போன்றவர்கள் எல்லோரும் உள்ளடக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த கூட்டு முயற்சியில், நவ்வாவ் தேவையான நிதியைத் திரட்டி அளிக்க, WFN தேவையான தொழில் துறை, தொழில் அனுபவம், சந்தைப்படுதல், ஆளுழைப்பு மூலதனம், மற்றும் தேவையான தொட்டாட்டு உதவிகளை வழங்கும். இந்த திட்டத்தில், தங்கள் நல்வாழ்வுக்காக விவசாயிகள் நிலத்தையும், உடலுழைப்பை கொண்டு வந்தாலே போதுமானது. நவ்வாவ், பணியின் முழுக்கட்டுப்பாட்டையும் வைத்திருப்பதோடு “கவனிக்கும் கரங்கள் நிலையம் - Caring Hands Centre”  என்ற இன்னொரு தொண்டு நிறுவனத்தை பணியின் சீரிய முன்னேற்றத்தை கண்காணிக்க சிறிய கொடுப்பனவுடன் அமர்த்திக்கொள்ளும்.

பணியின் ஆரம்பத்திகதி ஜூன் 1 2013. இது பன்னிரண்டு மாதங்களுக்கு (2-3 போகங்கள்)   நடை முறைப்படுத்தப்பட்டு அதன் பின்னர் விவசாயிகள் தமது நாளாந்த தேவைக்கு தன்னிறைவடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பணியின் கால முடிவில், வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்பங்களின் நாளாந்த குடும்பச் செலவுக்கு இரண்டு மடங்கும், பள்ளி, பள்ளி, படிப்பு செலவுகளுக்கு மூன்றுமடங்கும் போக, நிகர சேமிப்பாக மாதம் 3000ரூபாக்களை வைத்துக்கொள்ள முடியும் என்பது நமது முற்கணிப்பின் துணிபு.

விவசாய செயல்ப்பாடுகள், கடுமுயற்சிக் கமத்தில் அதிக விளைச்சலீட்டும், சிறுபயிர்ச் சாகுபடியை உள்ளடக்கியதாக இருக்கும். எழக்கூடிய சிக்கலை கருத்தில் கொண்டு பணியை செயல்ப்படுத்த அதை இரண்டு படித்திட்டங்களாக நவ்வாவ் பிரித்திருக்கிறது.  

1.   15 குடும்பங்களுக்கான பரிசோதனை பணி திட்டம், அதிலிருந்து வரும் அனுபவதை பெற்றுக்கொண்டு, பின்னர் பாரிய அளவிலான முழு செயல் திட்டத்தை நடை முறைப்படுத்த பயன் படுத்தப்படும்.

2.   முழுப்பணித்திட்டமாக , பரிசோதனை திட்டம் நடந்த மூன்று மாதங்களின் பின்னர், தெரியப்பட்ட எஞ்சிய குடும்பங்களையும் சேர்த்து, மேலும் பன்னிரண்டு மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும்.    

 

 



From: On Behalf Of Suba Suntharalingam
Sent: Monday, May 27, 2013 8:11 AM
To: info@nowwow-us.org
Subject:

 

Dear friends and well-wishers of NOWWOW,

FUNDING OF A SELF-HELP PROJECT IN FARMING IN THE WAR-TORN EASTERN SRI LANKA

No doubt you are fully aware of NOWWOW’s activities in the past year and half, trying to bring normalcy to war-affected families in the North and East of Sri Lanka. We could cite with pride that the expeditious recognition of our organization as a registered charity by IRS in March 2013, backdated to March 2012, emanates from a meticulous planning and precise execution of  the following projects entirely financed by you and single-handedly undertaken by us

   i)    Supply of 50 bicycles to students who travel long distances to attend schools in Kilinochchi.
   ii)    A Project to supply school supplies to 3000 students in Batticaloa district
   iii)   Flood relief for 500 families in Siththandy Village, Batticaloa.
   iv)   Nutrition for 175 nursing babies in the inundated areas of Batticaloa
   v)    Replacement of shoes  to 297 students who lost theirs due to floods in Kilinochchi area
   vi)   7 projects to finance small business start-ups by  war-widows of Vanni
   vii)  Medical help to two war affected individuals in Vanni
   viii)  Ear surgery for one child who lost her hearing due to war in Vanni

Lately we have decided to get involved in a project of cultivation/farming of minor crops that would bring in significant relief much faster to the war widows and war destitute. No doubt, once again, your usual enthusiastic commitment will form the desiderata for the project’s initiation and its ultimate success. With that in mind, we present to you here underneath, a synopsis of the planned project. The projected total cost of the project is $40,000 approximately.

NOWWOW seeks your philanthropic gesture in making this project a success thereby ensuring restoration of normalcy to the family life of those disadvantaged living in the war-dilapidated areas of North and East, one family at a time. Please pledge whatever you can. You may send in a check to NOWWOW, 11 Forest Street, Winchester, Ma 01890. Or you may make a direct deposit to Bank A/C No 1324577247, Citizens Bank, to the credit of NOWWOW and inform us of the details or better yet, you could use paypal. Please visit http://nowwow-us.org/Contibution%20Methods-1.pdf for details. Our Montreal donors are requested to ignore the above guidance and contact Mr.Sivayogan Sivasubramaniam at (514)-514-975-1520 for further instructions

No small amount is too small for us. It is your enthusiastic support that counts for most.Since we are dealing with a matter of time sensitivity here, it is very important that you to remit to us with dispatch whatever amount your pledge.


Thanking you in advance,
Sincerely,
Suba Suntharalingham
President – NOWWOW

 

 

May 27, 2013

Project Synopsis- A Self-Help Project in Farming in the War-Torn Eastern Sri Lanka

NOWWOW has agreed to collaborate with World Friends in Need (WFN), a not-for-profit foundation domiciled in Eastern Sri Lanka, in the execution of a project to accelerate the rehabilitation of selected war-affected families in the Village of Kaddaiparichchcan in Mutur District of Eastern Sri Lanka. The objective of the project is defined primarily as uplifting the war-affected, female-headed households in the earmarked territory, forestalling the deterioration of family life situation and stabilization thereof of the war destitute, such activities being confined to 40 war-displaced, resettled families in the said Kaddaiparichchaan Village.

Accordingly, in the selection of the participating families, priority has been given to the following types in the order as described:

  1. War-widows with children to feed;
  2. Families with one or more war disabled; and
  3. Vulnerable families that subsisting on a monthly income below Rs. 4,000 per month

The regional offices of the Ministry of Agriculture, Ministry of Economic Development, the Agrarian Services Department, the Divisional Secretary’s Office, and the Grama Sevaka Niladharin have all been engaged in the selection and screening of the prospective farmers. This collaboration consists of the NOWWOW providing the needed funds; and WFN will be marshalling in the technical, technological, marketing, and human resources expertise and all ancillary services to the project. At this point, it is not envisaged that the farmers will be required to bring in anything other than their own toil in their own land for their own sake. NOWWOW will exercise total control over the project and for a nominal fee, Caring Hands Centre; another not-for-profit entity will oversee the project on our behalf.

The project is scheduled to commence on June 1, 2013. It is intended to run for 12 months (approximately 2-3 cycles of harvest) at the end of which the farmers are expected attain self-sufficiency in their day-to-day life. Our projections indicate that at the end of its successful conclusion, it will result in doubling the household expenses of a family subsisting at below poverty line, triple its school and academic expenditure, and pull them out of the vicious cycle of spiralling indebtedness by bringing in net savings of approximately Rs.3,000 a month.

The planned farming activities consist of high intensity cultivation of minor crops of the high yield variety. Mindful of the complexities of the project, NOWWOW has decided to split the project into 2 distinct phases of implementation, viz:

  1. a pilot project consisting of 15 families,  the management of which is expected to confer us with the necessary knowhow to manage the totality of the project later on; and
  2. the project proper which is expected to start three months (i.e. 1-2 harvest  cycles) after the initiation of pilot project the balance of the recruited families and then to run for twelve months concurrently with the former.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நவ்வவ்வின் அன்பார்ந்த நண்பர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும்,

கட்டைபறிச்சான் கிராம காய்கறிப் பயிரீடு/கமத்தொழில் முதலீட்டுத் திட்டம்

பற்றிய மேலதிக அறிவித்தல் ஒன்று

இவ்வாண்டு மே மாதம் 27ம் திகதியன்று மேற் காணும் திட்டம் சம்பந்தமாகத் தங்களுக்கு என்னால் அனுப்பிவைக்கப்பட்ட மடல் சம்பந்தமாகக் கீழ்க்காணும் செய்தியைத் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கின்றேன்:

பெயர் குறிப்பிட விரும்பாத “தமிழர் நலம் விரும்பி” ஒருவர் கட்டைபறிச்சான் கிராம காய்கறிப் பயிரீடு/கமத்தொழில் முதலீட்டுத் திட்டத்துக்கென நவ்வவ் அமைப்பினால் திரட்டப்படும் பணத்தைத் தமது நற்கொடை மூலம் இரட்டிப்பாக்கித் தருவதாக எமக்கு வாக்குத் தந்துள்ளார். இந்த நற்செய்தியானது எம்மனைவரையும் இரட்டிப்பு ஊக்கத்துடன் பணம் திரட்டு முயற்சியில் இறங்கவைக்கும் என்பதில் ஐயமேதும் எமக்கில்லை. அம்மட்டொடமையாது, நாம் தரும் அன்பளிப்பின் ஒவ்வொரு வெள்ளியும் (டாலர்) அமெரிக்க வருமான வரிக்கழிவுக்குப் பயன்படுத்தப்படக்கூடியதொன்றென்பதனையும் நாம் நினைவிற்கொள்வது சாலவும் நன்று.

எனவே நண்பர்களே, இந்தப்பயிரீட்டுத் திட்டம் காலாகாலத்துடன் நிறைவேற்றப்படுவது பயிரிடும் காலத்துடன் அமைந்தொழுகிப் பலனை முழுமையாக்க உதவி தரும் என்பதனை நினவிற்கொண்டு ஆர்வத்துடன் தொழிற்படுவோமாக.

 

இவ்வண்ணம்,

தங்கள் ஆதரவுக்கு என்றென்றும் நன்றி கூரும்

சுபா சுந்தரலிங்கம்

 

 

Link to comment
Share on other sites

உங்கள் பணி சிறக்க பாராட்டுக்கள் சுபா. இயன்றவரை நாங்களும் உங்களது திட்டங்களில் பங்கெடுப்போம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி. ஆவலுடன் எதிர்பார்ப்போம்.

 

சுபா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.