Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாருக்காக இந்த மர்ம மாநாடு?-புகழேந்தி தங்கராஜ்!

Featured Replies

யாருக்காக இந்த மர்ம மாநாடு?-புகழேந்தி தங்கராஜ்!

 

 

90 அகவையைக் கடத்தல் அரிது. இந்த வயதிலும் நிறைந்த நினைவாற்றலோடும் சிறந்த தமிழாற்றலோடும் இருப்பதென்பது அரிதினும் அரிது. இப்படியொரு சாதனையாளருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சென்ற இதழிலேயே சொல்லியிருக்கவேண்டும். அது முந்திச் சொல்வதாக ஆகியிருக்கலாம்... எனினும் முந்திக்கொள்தல் பிந்திச் சொல்வதைப்போல் பிழையல்ல! தாமதத்துக்கு மன்னிக்க வேண்டும் - என்கிற வேண்டுகோளுடன் கலைஞர் வற்றாத உடல்நலத்துடன் சதமடிக்க வாழ்த்துக்கள்!

பிறந்த தினத்துக்கு 4 நாள் முன்பு சென்னையில் நடந்த ஒரு திருமண விழாவில் 'தி.மு.க. கோட்டைக்குள் குள்ளநரிகள் நுழைந்துவிடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்' என்று எச்சரித்திருந்தார் கலைஞர். ஆட்டுக்குட்டிகளைக் கவர முயலும் ஓநாய்கள் விஷயத்தில் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் - என்று இந்தப் பகுதியில் எழுதியதற்கு 2 நாள் முன்பே அவர் அப்படிப் பேசியதிலிருந்து - 'ஓநாய்கள் நரிகள் விஷயத்தில் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும்' என்று நம்மைப் போலவே அவரும் கவலைப்படுவதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

குள்ள நரி - என்று அவர் யாரை அல்லது எதைக் குறிப்பிட்டார் என்று தெரியவில்லை. அதேசமயம் ஓநாய் - என்று நான் குறிப்பிட்டது நிச்சயமாக எந்தத் தனிநபரையும் அல்ல! தாய் ஆடு வெளியே இருக்கும் நிலையில் தனித்து விடப்பட்டிருக்கும் தமிழீழம் என்கிற ஆட்டுக்குட்டியைக் கடித்துக் குதறக் காத்திருக்கும் சுயநல சக்திகளின் குறியீடாகத்தான் - ஓநாய் - என்கிற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தேன்.

எந்த முகூர்த்தத்தில் 'ஓநாய்' பற்றி எழுதினேனோ தெரியவில்லை - உண்மையாகவே ஓநாய்களின் ஆட்டம் ஆரம்பித்துவிட்டது. அப்பாவி ஆட்டுக்குட்டிகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கிற பட்டிக்குள் வாலை நுழைக்கப் பார்க்கிறது ஓநாய். 'நரியை நாட்டாமையாக்கினால் கிடைக்கு நாலு வெள்ளாடு கேட்கும்' என்பார்கள் எங்கள் பகுதியில். அதுதான் நடக்கிறது இப்போது. சிதறிக் கிடக்கிற நாடுகளிலிருந்து புலம்பெயர் சொந்தங்கள் நான்கு பேராவது கிடைக்கமாட்டார்களா என்று காத்திருக்கின்றன இந்திய ஓநாய்கள்.

புலம் பெயர் தமிழ் உறவுகளை அழைத்துஇ ஈழப் பிரச்சினை பற்றி விவாதிக்கப் போகிறாராம் சுதர்சன நாச்சியப்பன். ஈழத்துக்குச் சுற்றுலா போய்விட்டு வந்து - 'சோறுதான் கேட்கறாங்க சுதந்திரம் கேட்கலை' என்று முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்த்தாரேஅதே நாச்சியப்பன்!

யார் இந்த நாச்சியப்பன்? ஈழப்பிரச்சினை பற்றி கூட்டம் நடத்த இவர் யார்? இந்தியாவிலிருந்து இயங்குகிற தனிப்பட்ட அமைப்பா? அல்லது சர்வதேச அமைப்பா? அல்லது அரசியல் கட்சியா? அல்லது சர்வதேச கட்டப்பஞ்சாயத்தா? அல்லது 'கேப்' கிடைக்கிற இடத்திலெல்லாம் மூக்கை நீட்ட சுப்பிரமணியசுவாமியா? தெரியவில்லை.

ஏற்கெனவே இந்த நபர் இப்படியொரு கூட்டத்தை (மாநாடு - என்று சொல்லப்பட்டது) நடத்தியதையும் சோனியாகாந்திக்கு இவர் வேண்டியவர் என்று அப்போது சொல்லப்பட்டதால் அந்தக் கூட்டத்தில் சுமார் 8 அமைப்புகள் கலந்துகொண்டதையும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இப்போது நினைவு படுத்தியிருக்கிறார்.

'இந்த மாநாட்டை நடத்துவது அரசாஇ தனிநபராஇ ஏதாவது கட்சியா - என்பதே தெரியவில்லை. இந்த மாநாட்டுக்கும் இந்திய அரசுக்கும் தொடர்பிருக்கிறதாஇ இந்த மாநாட்டுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பிருக்கிறதா - என்பதும் தெரியவில்லை. இப்படியொரு நிலையில் இதை 'டெல்லி மாநாடு' என்று குறிப்பிடுவது சரியா' என்று வெளிப்படையாகக் கேட்டிருக்கிறார் மாவை.

சுதர்சன நாச்சியப்பன் என்பவர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர். சிவகங்கைச் சீமையிலிருந்து அரசியல் நடத்துபவர். சிவகங்கையில் போய் தன் கட்சி மாநாடு ஒன்றை வட்டார காங்கிரஸ் கமிட்டிக்குத் தெரியாமல் தன்னிச்சையாக நடத்த அவரால் முடியாது. கட்சி அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும். இப்படியொரு நிலையில் இருப்பவர் தலைநகர் டெல்லியில் இலங்கைப் பிரச்சினை தொடர்பாக தன்னிச்சையாக எப்படி மாநாடு நடத்த முடியும்? அதுதான் மர்மமாக இருக்கிறது.

கட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் நாச்சியப்பன் தாமாகவே இப்படியொரு நடவடிக்கையில் இறங்குவது 'அது இலங்கையின் உள்விவகாரம்' என்று மூச்சுவிடாமல் பேசிவரும் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷீத்துக்குத் தெரியுமா? சோனியாகாந்திக்கு வேண்டியவர் - என்று நாச்சியப்பன் அடையாளம் காட்டப்படுவது சோனியாகாந்திக்குத் தெரியுமா? தெரியவில்லை!

சோனியாகாந்திக்கு வேண்டியவர் - என்றால் என்ன அர்த்தம்? சோனியாவின் பூரண ஆசீர்வாதத்துடன்தான் இந்த மாநாடு நடத்தப்படுகிறது - என்கிற எண்ணத்தை விதைக்கிறார்களா? சோனியாவின் ஆசிகளுடன்தான் நடக்கிறது என்பது உண்மையென்றால்இ அதை அவர் நேரடியாகவே செய்துவிட்டுப் போகலாமே.. எதற்காக பினாமிகள் மூலம் செய்யவேண்டும்?

'இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்யவேண்டியது தானே.. ஏன் திருட்டுத்தனமாகச் செய்யவேண்டும்' என்று முத்துக்குமார் கேட்டதன் அடிப்படையில்தான் இப்போது நாம் கேட்கவேண்டியிருக்கிறது - 'இந்த மாநாடு சோனியாவின் ஆசியுடன்தான் நடக்கிறது என்றால் அதை நேரடியாகச் செய்ய வேண்டியதுதானே... ஏன் திருட்டுத்தனமாகச் செய்யவேண்டும்?'

ஒருவேளை சோனியாவுக்கும் காங்கிரஸுக்கும் தெரியாமல் நாச்சியப்பன் தம்மிஷ்டத்துக்கு இப்படியொரு மாநாட்டை நடத்துகிறாரென்றால்இ அதைக் கண்டும் காணாமல் இருக்கும் அளவுக்கா காங்கிரஸ் பலவீனமாக இருக்கிறது? இன்றைக்கு இதை அனுமதித்தால் நாளைக்கு இதே அடிப்படையில் 'இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிப்போம்' என்று ஒரு மாநாட்டை ஜி.கே.வாசன் தன்னிச்சையாக நடத்த முயன்றால் காங்கிரஸால் அதைத் தடுக்க முடியுமா?

இதிலிருந்தெல்லாம் என்ன தெரிகிறது என்றால் இந்த மாநாடு ஒரு 'மர்ம மாநாடு.' இந்த மாநாட்டின் பின்னணியில் மர்ம நபர்கள் இருக்கிறார்கள். அந்த மர்ம நபர்கள் மகிந்த ராஜபட்சே - கோதபாய ராஜபட்சே - பசில் ராஜபட்சே ஆகியோராகக் கூட இருக்கலாம். இருக்கலாம் என்ன இருக்கலாம்... பின்னணியில் அவர்கள் தான் இருக்கமுடியும். இப்படியெல்லாம் கோல்மால் செய்வது அந்தக் கொலைகார கும்பலுக்குக் கைவந்த கலை.

2008-2009ல் இலங்கையில் நடந்தது திட்டமிட்ட இனப்படுகொலை - என்கிற உண்மை சர்வதேச அரங்கில் தொடர்ந்து அம்பலமாகி வருகிற நிலையில்இ இப்படியொரு மாநாட்டை ஒரு பினாமியின் பெயரில் கூட்டவேண்டிய அவசியம் ராஜபட்சேக்களுக்குத்தான் இருக்கிறது. 'நடந்தது போரல்ல இனப்படுகொலை' என்கிற நிஜத்தை உலகம் முழுமையாக ஏற்கும் நிலையில் சர்வதேச குற்றவாளிக் கூண்டில் அண்ணன் தம்பி மூன்று பேரும் சேர்ந்து ஏறவேண்டியிருக்கும். சர்வதேசமும் தமிழ் ஈழக் கோரிக்கையை ஆதரிப்பதை அப்போது அவர்களால் தடுக்க முடியாது.

இலங்கைக்கு எதிரான இந்த அலையைத் திசை திருப்பத்தான் நாச்சியின் நாடகம் அரங்கேற்றப்படுகிறது. தனித்தமிழீழம் - என்கிற முழக்கத்தை நேரடியாக எதிர்க்கும் துணிவின்றி 13வது சட்டத்திருத்தம் அதிகாரப் பரவல் காவல்துறை - காணி - நிதி நிர்வாக உரிமைகள் என்றெல்லாம் பேசி பிளேட்டைத் திருப்புவதுதான் இந்த நாடகத்தின் நோக்கமாக இருக்கவேண்டும். நல்ல நோக்கத்துடன் இந்த மாநாடு நடத்தப்படுவதற்கான வாய்ப்பே இல்லை. நல்ல நோக்கத்துக்காக நடத்தினால் இப்படி மர்மமாகவோ பினாமி பெயரிலோ நடத்தமாட்டார்கள். வெளிப்படையாக காங்கிரஸ் கட்சி பெயரிலோ சோனியா பெயரிலோ தான் நடத்துவார்கள். தீய நோக்கத்துடன் நடத்தப்படுவதால்தான் தீயவர்களைக் காப்பாற்ற நடத்தப்படுவதால்தான் நேரடியாக முகம் காட்டாமல் வாலை மட்டும் நீட்டுகின்றன ஓநாய்கள்.

இந்த ஓநாய்களுக்கு ஆறு நோக்கங்கள்.
1. ஈழத்தில் நடந்த நடக்கிற இனப்படுகொலையை மூடிமறைப்பது.
2. இனப்படுகொலைக்குக் காரணமானவர்களைக் காப்பாற்றுவது.
3. சர்வதேச சுதந்திர விசாரணை கோரிக்கையை முடக்குவது.
4. தமிழீழம் தான் தீர்வு - என்கிற வலுவான குரலை ஒடுக்குவது.
5. தமிழீழப் பொதுவாக்கெடுப்புக்கு முட்டுக்கட்டையாய் இருப்பது.
6. இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தியே தீர்வது.

இந்த நோக்கங்களுக்காகத் தான் நடத்தப்படுகிறதே தவிர வேறெந்த நோக்கத்துக்காக ராஜபட்சேக்களின் பினாமிகள் மாநாடு நடத்துவார்கள் என்று நினைக்கிறீர்கள்?

சிங்கள ராணுவத்தால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலையைக் கண்டிக்கிறோம் - என்று இந்த மாநாட்டில் ஒரு தீர்மானம் போட முடியுமா நாச்சியப்பனால்? சேனல் 4 தொலைக்காட்சிக்கோ அம்னெஸ்டிக்கோ தகவல் கொடுத்து 'நோ பயர் ஸோன்' ஆவணப்படத்தை மாநாட்டுப் பிரதிநிதிகளுக்குத் திரையிட்டுக் காட்டுங்கள் என்று சொல்ல முடியுமா? மாநாடு என்கிற பெயரில் அதிகாரப் பரவல் மூலம் தமிழர்கள் சம உரிமையோடு வாழ வழிவகுப்போம் - என்று கூசாமல் பேசப் போவதைத் தவிர வேறென்ன செய்யப்போகிறார்கள் காங்கிரஸ் கோழைகள்!

பக்கத்து மாநிலம் கர்நாடகம். ஒவ்வொரு வருடமும் தண்ணீர் தரமாட்டேன் - என்று அடம்பிடிக்கிறது. வெள்ளத்தில் மூழ்கிவிடும் நிலை வரும்போதுதான்இ தன்னுடைய அணைக்கட்டுகளில் தேக்கிவைக்க முடியாமல் வடிகிற நீரை - தமிழ்நாட்டுக்குத் திறந்துவிடுகிறது. ஃபிரிட்ஜுக்குள் திணித்துத் திணித்து வைத்தது போக மிச்சம் மீதி ஏதாவது இருந்தால்தான் ராப்பிச்சைக்காரனுக்கு - என்பதைப் போன்ற திமிரோடு ஒவ்வோராண்டும் தமிழனைக் கண்ணீரோடு கையேந்த வைக்கிறது அது. அதன் தலையில் நாலு தட்டு தட்டி தமிழக விவசாயிகளுக்குத் தண்ணீர் வாங்கித் தர வக்கில்லாத காங்கிரஸ் ஓநாய்கள் ராஜபட்சேவின் தலையில் தட்டி தமிழர்களுக்கு சம உரிமை வாங்கிக் கொடுத்து விடப் போகிறார்களா என்ன!

ஈழத்து காந்தி தந்தை செல்வாவின் அறைகூவலை ஏற்று 1977ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலை ஒரு பொதுவாக்கெடுப்பு போலவே பயன்படுத்தி 'தமிழீழம்தான் ஒரே தீர்வு' - என்று திட்டவட்டமாகவும் தெளிவாகவும் முடிவெடுத்தவர்கள் எங்கள் ஈழத்து உறவுகள். அதை அறியாமல்இ பத்து ஆண்டுகள் கழித்து இலங்கைக்குப் போய்'அதிகாரப் பரவல் 13வது திருத்தம்' என்றெல்லாம் ராஜீவ்காந்தி கையெழுத்து போட்டது சுய உரிமை கேட்ட அந்த மக்களின் முதுகில் குத்திய செயல். அவரது இந்த அறியாமைக்கு ஒன்றரை லட்சம் பேரை பலிகொடுத்த பிறகும் அந்தத் துரோகத்தைக் குளிப்பாட்டி மீண்டும் நடுவீட்டில் உட்காரவைப்போம் - என்று நாச்சியப்பன்கள் முரண்டுபிடித்தால் இருக்கிற ஐந்து சீட்டையும் காங்கிரஸ் இழக்க வேண்டியிருக்கும்.

பிரிவினை கேட்டதாலும் தனி நாடு கேட்டதாலும்தான் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் - என்று டெல்லியில் உட்கார்ந்துகொண்டு விவரம் தெரியாமல் பேசுகிற அசட்டு அம்பிகள் இனியாவது உண்மையைப் புரிந்து கொள்ளவேண்டும். தனி நாடு கேட்டதால் கொல்லப்படவில்லை எங்கள் ஈழத்து உறவுகள். பல்லாண்டுக் காலமாகத் தமிழர்கள் என்பதற்காகவே கண்மூடித்தனமாகக் கொல்லப்பட்டதாலும் தமிழ்ப் பெண்கள் என்பதாலேயே கண்மூடித்தனமாகக் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதாலும்தான் தனிநாடு கேட்டார்கள். தயவுசெய்து ஈழத்தின் வரலாறு தெரியாமல் உங்கள் பித்தலாட்டத்தால் பிரச்சினையைக் குழப்பாதீர்கள்.

ஈழத்தில் இன்று உயிர் பிழைத்திருக்கும் எங்கள் உறவுகள் ஒவ்வொருவரும்இ விரட்டி விரட்டிக் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் அப்பாவிகளில் எவராவது ஒருவருக்கோ கற்பழித்துக் கொல்லப்பட்ட ஆயிரமாயிரம் சகோதரிகளில் எவராவது ஒருவருக்கோ நிச்சயமாக உறவினராக இருப்பார்கள். சுற்றிலும் ஆயுதங்களோடு நிற்கிற ராணுவ வெறியருக்கு அஞ்சி அஞ்சி உயிர்வாழும் அவர்களுக்கு - 'கூடிவாழ்ந்தால் கோடி நன்மை' என்று இங்கேயிருந்து கடுதாசி போட நீங்கள் யார்?

உங்கள் குடும்பப் பெண் ஒருத்தி ஒரு தெருப் பொறுக்கியால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டால் 'அவனோடு சேர்ந்து சந்தோஷமாகக் குடும்பம் நடத்துவதுதான் புத்திசாலித்தனம்' என்று அவளுக்குப் போதிப்பீர்களா? அப்படி நீங்கள் போதித்தால் உங்கள் முகத்தில் அவள் காறித் துப்பமாட்டாளா? அவனை அடிப்பதற்கு முன் உங்களைச் செருப்பால் அடிக்கமாட்டாளா? இந்த அடிப்படையைக் கூட அறிந்துகொள்ளாமலா அரசியல் நடத்துகிறீர்கள்!

தங்களது சகோதரிகள் அவமதிப்புக்கு ஆளாக்கப்படுவதைத் தடுக்கவும் நித்தம் செத்துப் பிழைத்த தங்கள் உறவுகளின் உயிர்களைக் காக்கவும் ஆயுதம் ஏந்தியவர்கள் அந்த மண்ணின் மைந்தர்களான தமிழீழ விடுதலைப் புலிகள். தங்கள் இனத்தைக் காக்க தங்கள் இனத்தின் அடையாளங்களைக் காக்க தங்கள் இனத்தின் தன்மானத்தைக் காக்க பௌத்தத்தின் பெயரால் பறிக்கப்பட்ட தமிழினத்தின் உரிமைகளை மீட்க - தங்கள் உயிரை அர்ப்பணித்தவர்கள் அந்த மாவீரர்கள். நீதிகேட்டுப் போராடிய அவர்களை அடக்க இங்கேயிருந்து கூலிப்படையாகச் சென்றவர்களுக்கும் மக்களுக்காக உயிரையே கொடுத்த அந்த மாவீரர்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை அறியாத அறிவிலிகளாகவே தமிழர்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா நீங்கள்?

சிங்கள பௌத்த வெறியர்கள் நடத்திய இனப்படுகொலையின் விளைவாக விதவைகளாக்கப்பட்ட சுமார் 90இ000 சகோதரிகள் இன்றைக்கு ஈழத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு நொடியும் எந்தமாதிரியான அச்சத்தில் அவர்கள் வாழ்கிறார்கள் என்பதை 'அதிகாரப் பரவல்' என்று இங்கிருந்து குரல்கொடுக்கும் மேதாவிகள் புரிந்துகொள்ளவேண்டும். கண்ணீருக்குள்ளேயே கரைந்து கரைந்து அச்சத்தில் உறைந்துபோயிருக்கிறார்கள் அவர்கள். நதிமாதிரி நகர்ந்துகொண்டிருந்த அவர்களது வாழ்க்கை இன்று நடுத்தெருவில் நிற்கிறது.

அவர்களது கண்ணீர் துடைக்க முடியாதது. அவர்களது இதயத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வலி அகற்ற முடியாதது. அவர்களது கோபம் அழிக்க முடியாதது. அவர்களது கண்ணீர் உப்பில் கூழ் காய்ச்ச நினைத்தால் அது நாச்சியப்பனாக இருந்தாலும் சரி ஒருவேளை அது சோனியாவாகவே இருந்தாலும் சரி வரலாற்றுத் துடைப்பம் அவர்களைப் பெருக்கியெடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டுவிடும்.

நாச்சியப்பன்இ சிவகங்கையை அறிந்தவர். சிவகங்கைச் சீமையின் வீர வரலாறு என்பதுஇ விதவையாக்கப்பட்ட ஒரு வீராங்கனையின் ஈர வரலாறு என்பது இந்த மனிதருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். வரலாறு படைத்த அந்தப் பெண்ணரசிஇ வேலு நாச்சியார். சிவகங்கைச் சீமையை வஞ்சகமாக ஆக்கிரமித்த ஆங்கிலேயரைஇ தானே படையெடுத்துச் சென்று எதிர்த்துப் போராடி வென்ற பேரரசி. ஒரு விதவையின் கண்ணீரால் எழுதப்பட்டது அந்த விடுதலை வரலாறு. கண்ணீரைத் துடைத்துவிட்டுஇ தானே களமிறங்கினாள் நாச்சியார். கோழைகளைப் போல மறைந்து நிற்காமல்இ தன்னுடைய மண் மீட்க தானே ஆயுதம் தாங்கினாள்.

வேலு நாச்சியாரின் வெற்றி வரலாற்றைத் தன்னுடைய ரத்தத்தாலும் சதையாலும் எழுதிய அருந்ததியர் குலக் கொழுந்தை அறிவாரா நாச்சியப்பன்... குயிலி என்கிற அந்தச் சகோதரிதான் ஈழத்தின் வீரவரலாற்றைக் காற்றின் திசையெங்கும் எழுதிய எங்கள் கரும்புலித் தோழர்களின் முன்னோடி என்பது தெரியுமா அவருக்கு! நசுக்கப்பட்ட ஒரு இனத்துக்கு நீதி கிடைக்க முட்டுக்கட்டையாய் இருந்தால் அந்த இனம் வீழ்ச்சிக்குப் பிறகும் உயிரைக் கொடுத்தாவது திருப்பி அடிக்கும் - என்பதை இவரைப் போன்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இதையெல்லாம் புரிந்துகொள்ளாமல் டெல்லியில் உட்கார்ந்து கொண்டு ராஜபட்சேக்களைக் காப்பாற்ற மாநாடு நடத்துவது சோனியா வட்டாரத்தில் நாச்சியப்பன் நெருங்க வழிவகுக்கலாம். அதுஇ இந்தியாவுக்கும் ஈழத்துக்கும் இடையிலான இடைவெளியையும்இ காங்கிரஸுக்கும் தமிழகத்துக்கும் இடையிலான இடைவெளியையும் மேலும் அதிகமாக்கிவிடும். அதற்குப் பிறகு மன்மோகன்சிங் மாதிரி அசாமிலிருந்தோ அருணாசலப் பிரதேசத்திலிருந்தோதான் நாச்சியப்பன்கள் மாநிலங்களவைக்குள் மூக்கை நீட்டமுடியும்.

நாச்சியப்பனின் மாநாட்டுக்கு உலகத் தமிழ் அமைப்புகளுக்கு எல்லாம் அழைப்பு அனுப்பப்பட்டுள்ள நிலையில் டெசோவுக்கும் அனுப்பப் பட்டிருக்கிறதா என்பது குறித்து நமக்குத் தகவல் இல்லை. அப்படியே அனுப்பப்பட்டிருந்தாலும் தயாளு அம்மையாரை டெல்லிக்கு அனுப்பமுடியுமா என்கிற கவலையில் ஆழ்ந்திருக்கிற தி.மு.க.வுக்கு அந்த அழைப்பைப் பரிசீலிக்கக்கூட அவகாசம் இராது.

சஞ்சய்தத்துக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யவேண்டும் - என்றெல்லாம் கூட குரல்கொடுத்த சூப்பர் ஸ்டார்கள் வயது முதிர்ந்த நிலையில்இ உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தயாளு அம்மையாரை டெல்லிக்கு வரச்சொல்லி வலியுறுத்தும் உத்தரவு குறித்து கருத்துத் தெரிவிக்காமல் இருப்பது தி.மு.க. தலைமைக்கு நிச்சயம் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும். நம்மைப் பொறுத்தவரை தயாளு அம்மையாருக்கு இந்த விஷயத்தில் மனிதாபிமான அடிப்படையில் விலக்கு தரப்படவேண்டும் என்றுதான் நினைக்கிறோம்.

உடல்நலம் கடுமையாகக் குன்றியிருந்த நிலையில் சிகிச்சைக்காக சென்னைக்கு வந்த நமது பாசத்துக்குரிய தாயார் பார்வதி அம்மாளைஇ மனிதாபிமானமேயின்றித் திருப்பி அனுப்பிய நடவடிக்கை எந்த அளவுக்கு நம்மைக் கவலைப்பட வைத்ததோ அதே அளவுக்குஇ தயாளு அம்மாள் தொடர்பான நீதிமன்றத்தின் கடுமையான போக்கும் நம்மைக் கவலைப்படவைக்கிறது. இதை நாம் பேசாதிருக்கக் கூடாது. மனிதர்களை மனிதர்களாகவே பார்க்கக் கற்றுக் கொடுத்த பிரபாகரனை நேசிக்கும் எவரும் என்னுடைய இந்தக் கவலையை நிச்சயம் பகிர்ந்துகொள்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

தமிழக அரசியல் 06.06.2013 இதழ் கட்டுரை
 
 
580613_628673433811352_213255743_n.jpg

 

 

Loyolahungerstrike    [ Facebook]

 

 

இந்திய அரசின் அனுசரணையுடன் உளவுப்படைகள் டெல்லியில் நடத்தும் ஈழத் தமிழர் மாநாடு
 

இந்திய உளவுப்படையும் துணைக்குழுக்களும் ஏற்பாடு செய்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டுளது [ http://inioru.com/?p=35951 ]

 

 

 

 

 

 

Edited by மகம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.