Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசாங்கத்துக்கு வெறுப்பேற்றும் வகையில், அமெரிக்கா திட்டமிட்டே இதனைச் செய்திருக்கலாம்....?

Featured Replies

•மிச்சேல் ஜே சிசன் உலகின் பல்வேறு கொந்தளிப்பு பிரதேசங்களில் பணியாற்றிய மூத்த இராஜதந்திரி. அவரது வருகை இலங்கைக்கு நெருக்கடியாக அமையலாம் என்று அரசாங்கம் எற்கனவே எதிர்பார்த்திருந்தது. ஆனால்இ கொழும்பில் கடமைகளைப் பொறுப்பேற்ற சிறிது காலம் வரை அமெரிக்கத் தூதுவர் பெரிதாக எந்த நகர்வையும் மேற்கொள்ளவில்லை. அது அரசாங்கத்துக்கு ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தவே செய்தது. ஆனால்இ இலங்கையின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று நிலைமைகளை ஆராய்ந்த பின்னர்இ அமெரிக்கத் தூதுவர் வெளியிடும் கருத்துகள் அரசாங்கத்துக்கு எரிச்சலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அவர் உயர் பாதுகாப்பு வலயம்இ படைகளை நிறுத்துவதுஇ முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாகத் தெரிவித்த கருத்துகள் ஏற்கனவே கண்டனங்களை ஏற்படுத்தியிருந்தன. என்கின்றார் இன்போ தமிழின் கொழும்புச் செய்தி ஆய்வாளரான கே.சஞ்சயன் அவர்கள் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து கருத்துகளை வெளியிடவோஇ அதில் தலையிடவோ வெளிநாட்டு இராஜதந்திரியான அவருக்கு எந்த உரிமையும் கிடையாது என்று அமைச்சர்கள் பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில்இ தற்போதுஇ அமெரிக்கத் தூதரகமும்இ திருகோணமலை நகரசபையும் செய்து கொண்டுள்ள உடன்பாடு அரசாங்கத்தை விசனத்தில் ஆழ்த்தியுள்ளது. திருகோணமலையில் அமெரிக்கன் கோணர் எனப்படும் தகவல் நிலையத்தை அமைப்பதற்கான உடன்பாடே அது. இதுபோன்று ஏற்கனவே கண்டியிலும்இ யாழ்ப்பாணத்திலும் அமெரிக்கன் கோணர் இயங்கி வருகின்றது. இந்த உடன்பாடு குறித்துஇ வெளிவிவகார அமைச்சுக்குத் தெரியப்படுத்தவோஇ முன் அனுமதி பெறப்படவோ இல்லை என்பது அரசாங்கத்தின் குற்றச்சாட்டு. தன்னால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் அலட்சியப்படுத்துவதாக அமெரிக்கா உணரத் தொடங்கியுள்ள நிலையில் தான்இ தற்போதைய முறுகல்கள் தோன்றத் தொடங்கியுள்ளன. இந்த முறுகல் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்தடுத்து கூட்டத்தொடர்கள் நெருங்கும் போது இன்னும் அதிகமாகலாம்.எனக் குறிப்பிடும் கே.சஞ்சயன் இ தனது விரிவான ஆய்வில்இ •அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் மேலும் நெருடல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில்இ கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானங்கள் மற்றும் பொறுப்புக்கூறல்இ நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி வருவது போன்ற காரணங்களால்இ அமெரிக்கா மீது இலங்கைக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை என்பது தெளிவு. வெளிப்படையாக இலங்கை அரசாங்கம் அமெரிக்காவை எதிர்த்து நிற்காமல் போனாலும்இ அவ்வப்போது மறைமுகமாக அமெரிக்காவைச் சாடுவதை அரசாங்கம் வழக்கமாகவே கொண்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவில் இருந்து அமைச்சர்கள்இ அதிகாரிகள் வரை இதற்கு விதிவிலக்கான நிலையில் இல்லை. போருக்குப் பின்னர்இ இந்த விடயங்களில் அமெரிக்கா கடைப்பிடித்து வரும் இறுக்கமான நிலை இலங்கை அரசாங்கத்தை பல்வேறு சந்தர்ப்பங்களில் நெருக்கடிகளுக்குள் தள்ளிவிட்டுள்ளது. பொறுப்புக்கூறல்இ நல்லிணக்கம் போன்ற விடயங்களில் இலங்கை அரசாங்கத்தின் மீது அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதால் தான்இ ஏனைய பல நாடுகளும் இலங்கைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. இதற்கு உதாரணம்இ ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில்இ அமெரிக்கா எடுத்த முன் முயற்சியினால் தான்இ இரண்டு தடவைகளும் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் பெரும்பான்மை நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன. இதுவே வேறோரு நாடு எடுத்த முயற்சியாக இருந்திருந்தால்இ 2009இல் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் சுவீடன் கொண்டு வந்த கண்டனத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது போன்ற நிலையே ஏற்பட்டிருக்கலாம். ஏனென்றால்இ கொமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என்ற கருத்து கனடா போன்ற நாடுகளால் முன்னெடுக்கப்பட்ட போதும்இ லண்டனில் கடந்த மாதம் நடந்த கொமன்வெல்த் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டத்தில் அதற்குப் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானத்தின்போதுஇ சந்தர்ப்ப சூழ்நிலைகளால்இ அமெரிக்காவின் பின்னால் நின்ற இந்தியாவேஇ கொமன்வெல்த்தில் இலங்கையை நெருக்கடியில் இருந்து காப்பாற்றியது. இதே கொமன்வெல்த் அமைப்பில் அமெரிக்கா இருந்திருந்தால்இ நிலைமை வேறாகியிருந்திருக்கக் கூடும். எனவே தான்இ இலங்கை அரசாங்கத்துக்கு அமெரிக்காவின் மீது அவ்வளவு கோபம் இருக்கிறது. அதேவேளைஇ தனது சொற்படி நடந்து கொள்ளாமல்இ சீனாவின் பக்கம் சாய்ந்து செல்வது குறித்து இலங்கை மீது அமெரிக்காவுக்கும் கோபம் உள்ளது. இரு நாடுகளுமே இராஜதந்திர உறவுகளையும்இ தூதரக உறவுகளையும் வைத்துக் கொண்டிருந்தாலும்இ சீனாஇ பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் இலங்கை கொண்டுள்ளது போன்ற நெருக்கமான உறவுகள் அமெரிக்காவுடன் கிடையாது. அதிலும் தற்போதைய அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் கொழும்பில் கடமையைப் பொறுப்பேற்பதற்கு முன்னதாகவே அரசாங்கத்துக்கும் அவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் தோன்ற ஆரம்பித்து விட்டன. கொழும்புக்கான தூதுவராக பரிந்துரைக்கப்பட்ட பின்னர்இ செனெட் சபையின் வெளிவிவகாரக் குழு முன்பாக மிச்சேல் ஜே சிசன் உரையாற்றிய போதுஇ இலங்கையின் மனிதஉரிமைகள் நிலை குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அது அப்போது அரசாங்கத்துக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. அவருக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும்இ அவரது நியமனத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் அமைச்சர்கள் பலரும் வலியுறுத்தியிருந்தனர். எனினும்இ அமெரிக்காவின் விரோதத்தை சம்பாதிக்க நேரிடும் என்பதால்இ அரசாங்கம் அப்போது எந்த எதிர்ப்பையும் காட்டாமல் இருந்து கொண்டது. மிச்சேல் ஜே சிசன் உலகின் பல்வேறு கொந்தளிப்பு பிரதேசங்களில் பணியாற்றிய மூத்த இராஜதந்திரி. அவரது வருகை இலங்கைக்கு நெருக்கடியாக அமையலாம் என்று அரசாங்கம் எற்கனவே எதிர்பார்த்திருந்தது. ஆனால்இ கொழும்பில் கடமைகளைப் பொறுப்பேற்ற சிறிது காலம் வரை அமெரிக்கத் தூதுவர் பெரிதாக எந்த நகர்வையும் மேற்கொள்ளவில்லை. அது அரசாங்கத்துக்கு ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தவே செய்தது. ஆனால்இ இலங்கையின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று நிலைமைகளை ஆராய்ந்த பின்னர்இ அமெரிக்கத் தூதுவர் வெளியிடும் கருத்துகள் அரசாங்கத்துக்கு எரிச்சலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அவர் உயர் பாதுகாப்பு வலயம்இ படைகளை நிறுத்துவதுஇ முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாகத் தெரிவித்த கருத்துகள் ஏற்கனவே கண்டனங்களை ஏற்படுத்தியிருந்தன. உள்நாட்டு விவகாரங்கள் குறித்து கருத்துகளை வெளியிடவோஇ அதில் தலையிடவோ வெளிநாட்டு இராஜதந்திரியான அவருக்கு எந்த உரிமையும் கிடையாது என்று அமைச்சர்கள் பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில்இ தற்போதுஇ அமெரிக்கத் தூதரகமும்இ திருகோணமலை நகரசபையும் செய்து கொண்டுள்ள உடன்பாடு அரசாங்கத்தை விசனத்தில் ஆழ்த்தியுள்ளது. திருகோணமலையில் அமெரிக்கன் கோணர் எனப்படும் தகவல் நிலையத்தை அமைப்பதற்கான உடன்பாடே அது. இதுபோன்று ஏற்கனவே கண்டியிலும்இ யாழ்ப்பாணத்திலும் அமெரிக்கன் கோணர் இயங்கி வருகின்றது. இந்த உடன்பாடு குறித்துஇ வெளிவிவகார அமைச்சுக்குத் தெரியப்படுத்தவோஇ முன் அனுமதி பெறப்படவோ இல்லை என்பது அரசாங்கத்தின் குற்றச்சாட்டு. பொதுவாக உள்ளூரில் எந்தவொரு செயற்றிட்டங்களை முன்னெடுப்பதானாலும்இ வெளிநாட்டுத் தூதரகங்கள் அதுபற்றி வெளிவிவகார அமைச்சுக்குத் தெரியப்படுத்தி அனுமதி பெற்றுக்கொள்வது தான் நடைமுறை. இந்த நடைமுறை இலங்கையில் மட்டும் பின்பற்றப்படும் ஒன்று அல்ல. ஏனைய நாடுகளிலும் அதே வழக்கம் தான் உள்ளது. ஆனால் அமெரிக்கத் தூதரகம் அவ்வாறு அனுமதி பெற்றுக்கொள்ளாதது ஏன் என்பது மர்மமாக உள்ளது. இலங்கையில் எத்தனையோ திட்டங்களை முன்னெடுக்கும் அமெரிக்காவுக்கு இந்த நடைமுறை தெரியாமல் போயிருக்க வாய்ப்பில்லை. கிழக்கு மாகாணசபையின் ஊடாகஇ இந்தத் திட்டத்தை முன்னெடுக்காமல்இ திருகோணமலை நகரசபையின் ஊடாக இதனை முன்னெடுக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்க ஒரு விடயமே. கிழக்கு மாகாணசபை அரசின் கட்டுப்பாட்டின் கீழேயே இருப்பதால்இ அதனுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்த அமெரிக்கா விரும்பாமல் போயிருக்கலாம். ஆனால் அமெரிக்கா புரிந்துணர்வு உடன்பாடு செய்துள்ள கொண்டுள்ள திருகோணமலை நகரசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அரசாங்கம் விசனம் கொண்டுள்ளதற்கு இதுவும் ஒரு காரணம். சிலவேளைகளில் ஆளும்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இன்னொரு பிரதேசசபையுடன் அமெரிக்கா இந்த உடன்பாட்டைச் செய்திருந்தால்இ அதை அரசாங்கம் கண்டும் காணாமல் விட்டிருக்கலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசம் உள்ள ஓர் உள்ளூராட்சி சபையுடன் அமெரிக்கா புரிந்துணர்வு உடன்பாட்டை செய்துள்ளதை அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இலங்கை அரசாங்கத்துக்கு வெறுப்பேற்றும் வகையில்இ அமெரிக்கா திட்டமிட்டே இதனைச் செய்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. ஆனால் அது உறுதிப்படுத்தப்பட்டது அல்ல. இலங்கை அரசாங்கத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உதவித் திட்டங்கள் தொடர்பான முரண்பாடுகள் அண்மையில் தலைதூக்கியுள்ளன. வடக்கில் சில திட்டங்களை நடைமுறைப்படுத்த முயன்றபோது இராணுவத்தினர் தலையிட்டதால் அவற்றைக் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டதாக சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்கத் தூதுவர் குற்றம்சாட்டியிருந்தார். அதன் பின்னர்இ இலங்கைக்கான நிதியுதவியை 20 சதவீதத்தினால் குறைக்க இராஜாங்கச்செயலர் ஜோன் கெரி நடவடிக்கை எடுத்திருந்தார். அதனையடுத்துஇ நீதித்துறை மறுசீரமைப்புக்காக அமெரிக்கா வழங்க முன்வந்த 450 மில்லியன் ரூபா நிதியை அமெரிக்கா மீளப்பெற்றது. பிரதம நீதியரசர் விவகாரத்தில் எழுந்த சர்ச்சையால் தான் இந்த நிதி திரும்பப் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. இத்தகைய பின்னணியில் தான்இ அமெரிக்கன் கோணரை அமைக்கும் உடன்பாட்டை திருகோணமலை நகரசபையுடன் செய்து கொண்டுள்ளது. இந்த விடயத்தில் அமெரிக்கா இராஜதந்திர நெறிமுறைகளை மீறியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டாலும்இ அதை அமெரிக்கத் தூதரகம் நிராகரித்துள்ளது. ஏற்கனவே கண்டியிலும்இ யாழ்ப்பாணத்திலும்இ அமெரிக்கன் கோணரை அமைக்கும் போது பின்பற்றப்பட்ட வழிமுறையே இங்கும் பின்பற்றப்பட்டதாக அமெரிக்கத் தூதரகத்தின் சார்பில் உடன்பாட்டில் கையெழுத்திட்ட அதிகாரி தெரிவித்துள்ளார். ஆனால் அரசாங்கம் இதனை இப்படியே விடுவதாகத் தெரியவில்லை. அமெரிக்க அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கும் முடிவில் அரசாங்கம் இருப்பதாகத் தெரிகிறது. இதனை அமெரிக்க அதிகாரிகள் முன்கூட்டிய எதிர்பார்த்திருக்கவும் வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. ஆனாலும் அமெரிக்கா இதனை ஓர் உள்நோக்கத்துடன் தான் செய்துள்ளது போலத் தோன்றுகிறது. ஏனெனில்இ அரசாங்கத்தின் போக்கு அதற்கு பிடிக்கவில்லை என்பது தெரிகிறது. அதைவிடஇ ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்திலும் இலங்கை மீது அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் அமைச்சரவைக் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டுள்ளது. அதனால் தான்இ 2012ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பின்னர்இ ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யப்படவேயில்லை என்று அரசாங்கம் அறிவிக்க வேண்டியேற்பட்டது. இப்போது பல்வேறு தளங்களிலும் அமெரிக்க - இலங்கை உறவு நிலை தளர்ச்சியடைய ஆரம்பித்துள்ளது. இந்த நிலைக்கு இலங்கை அரசாங்கத்தின் போக்கும் ஒரு காரணம். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுஇ இரண்டு மாதங்கள் முடிந்துள்ள நிலையில்இ அதனை நடைமுறைப்படுத்துவதற்கான எந்த அறிகுறிகளும் அரசாங்கத்திடம் இருந்து வரவில்லை. தன்னால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் அலட்சியப்படுத்துவதாக அமெரிக்கா உணரத் தொடங்கியுள்ள நிலையில் தான்இ தற்போதைய முறுகல்கள் தோன்றத் தொடங்கியுள்ளன. இந்த முறுகல் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்தடுத்து கூட்டத்தொடர்கள் நெருங்கும் போது இன்னும் அதிகமாகலாம். http://www.infotamil.ch/ta/view.php?22EEW6300ggOA4eeAAoqcaaddYedddYYd3accooA3e44OOg2022WMi32

எது இருந்தாலும் இலங்கை தனது கோணல் ராஜதந்திரத்தில் முன்னணியில்தான் நிற்கிறது.  ஐரோப்பா சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் GSP+ ஐ தடை செய்வேன் என்று மிரட்டியது. உடனே இலங்கை "இல்லாட்டில் பரவாயில்லை" என்று விட்டது. ஐரோப்பா மூன்று வருடங்களாக இலங்கையின் பின்னால் அலைந்து திரிந்துவிட்டு அதை நீக்கியது. ஆனால் இலனகை தொழில் சாலைகளை மூடிவிட்டு தொழிலாளிகளை கிராமப்புற தோட்டங்களுக்கு அனுப்பிவிட்டது. இதனால் தொழில்ச்சாலைகள் மூடபட்டாலும் GDP வளர்கிறது. 

 

ஆனால் அமெரிக்க GSP+ சற்று வித்தியாசமானது. அது நேரே டொலரில் கிடைக்கும் வருமானம். அதை கொண்டு இலங்கை பலகாலம் அமெரிக்க கம்பனிகளை வைத்து அமெரிக்காவில் லொபியிங் செய்து அமெரிக்காவை கைக்குள் வைத்திருக்கிறது. என்வே இலங்கை அதில் சற்று கவனம். மேலும் அமெரிக்கா இதுவரையில் தனது GSP+ ஏதாவது காரணத்தில் தங்கியிருக்கும் என்று இலங்கையை மிரட்டவும் இல்லை. இதனால் இலங்கை அமெரிக்காவில் விற்று அதே பணத்தை எடுத்து அமெரிக்க கமபனிகள் மூலம் லொபியிங் செய்து அமெரிக்க வெளிவிவகார கொள்கைகளை வாங்கி வருகிறது.

 

தனக்கு எதிரான சுசான் ரைஸ்சை ஒதுக்கி தனக்கு விருப்பமான கெரியை பதவிக்கு வர வேலைகள் செய்த்திருக்கு. அமெரிக்கர் என்று பொதுவில் பார்த்தால் இது அவர்களுக்கு நல்லதாகவும் இருக்கலாம். கெரி பல இடங்களில் பெயர் அறிமுகமானவர். றைஸ் வளர்ந்து வரும் ராஜதந்திரி. தமிழர் என்று பார்த்தால் ரைஸ் மகிந்தாவை விளங்கிக் கொண்டவர். கெரி இறிதிவரைக்கும் அவரை நம்பியவர். ஆனாலும் பார்வைக்கு இதில் இழப்பு தமிழர்கள் ஒரு பாடிக்கு மட்டுமே போல் படும். அமெரிக்க வெளியுறவுக்கொள்கை கொறியா, ரஸ்சியா, மத்தியகிழக்கு என்று மட்டும்தான் இருந்து விடப்போகிறதா, அல்லது வளர்ந்து வரும் சீனா இந்தியாவையும் உள்ளடக்குமா என்ற கேள்வி வந்தால் இதில் கெரியின் சமாதான கொள்கைகள்  அமெரிக்காவை அதிகம் முன்னால் இட்டு செல்லாது.  

 

இந்தியா அகிம்சை போராட்டத்தால் சுதந்திரம் பெற்ற நாடு. இது உண்மையில் சீனா, அமெரிக்க போன்ற நாடுகளை ஆயுத்தத்தால் எதிர் கொள்ளாது. அது தனது மூன்றாம் தர ஏய்ப்புக்களால்தான் தாஜா செய்து கொள்ளும்.  கெரி கொறியாவை சரியாக கையாண்டார். வட கொறியா தனது அணு ஆயுதங்களை வெளியே இழுத்துவந்து படம் காட்டியும் கெரி மசிய வேண்டிய தேவை இருக்கவில்லை.இதனால்  வட கொறியா, அதனது ஒரே நண்பனான சீனாவுடனும் பகைத்ததுதான் மிச்சம்.

 

ஆனால் அதுவல்ல இலங்கையுடனான விவகாரம்.  இலங்கையில், இலங்கை மக்களுக்கான இந்த சின்ன சேவை அலுவலகத்திற்கு அமெரிக்காவால் அனுமதி பெற முடியவில்லை. அதே நேரம் சீனாவுக்கு உழைத்து கொண்டுபோகும்  சீன கடைகளும், சீன நடைபாதை வியாரிகளும்  கொழும்பு முழுவதும் தொடர்ந்தும் ஆக்கிரமித்துகொண்டு இருக்கிறார்கள். பலர் ஒழுங்கான வீசா மட்டும் அல்ல திருட்டு தனமாக இருப்பவர்களும் கூட. அதாவது அணுவாயுத வடகொறியாவிலிருந்து சீனாவை அமெரிக்காவால் பிரிக்க முடியும்; ஆனால் இலங்கையில் சீன அதிகாரத்தை நிகர்க்க முடியாது. இது தெற்காசிய நாடுகளுக்கு தனித்துவமான ஏமாற்று, கோணல் ராஜதந்திரம். இவர்கள் முழுவதாக ஆயுத சமனிலைக்கு செல்லாமல் எமாற்றி வாழ முயல்பவர்கள். இதை கெரி விளங்கி கொள்கைகள் வகுக்க மாட்டார். இதில் தான் சுசான் ரைஸ் ஒரு வித்தியாசமான பதையில் அமெரிக்காவை அழைத்து சென்றுறிருந்திருக்க கூடிய சந்தர்ப்பம் இருந்தது.

 

இலங்கை அதேநேரம் அமெரிக்கவில் உள்ளட்டு எங்கும் GSP+ பாவித்து வியாரம் செய்து வருகிறது. அதிலிருந்து வரும் பணத்தில் அமெரிக்க கம்பனிகளை வைத்து அமெரிக்க வெளியுறவு கொள்கைகளை வாங்குகிறது. இலங்கையில் அமெரிக்கா லொபியிங் என்று செய்ய முடியாது. அரச குடுபத்திற்கு லஞ்சப்  பணம் கொடுக்கலாம். அதை அமெரிக்க சட்டங்கள் ஏற்றுக்கொள்ளாது. (எப்பவாவது CIA லஞ்சம் கொடுப்பது நடக்கலாம், ராஜாங்க அமைச்சு நேரடியாக அதில் இறங்க முடியாது) சீனா இலங்கையில் லொபியிங் செய்வதில்லை. நேரடியாக அரச குடும்பத்தை கவனித்துக்கொள்கிறது. இந்த கணக்கில் ஒரு நூதனம் நடக்கிறது. அமெரிக்காவால் இலங்கையில் ஒரு துரும்பும் நகர்த்த முடியாது. இலங்கைக்கு அமெரிக்காவில் எதுவும் முடியும். இது தனிய GSP+ பணத்தால் மட்டும் அல்ல,. ஒரு பகுதி சீனாக்கொடுப்பனவுகளாலும் தான். ஆனால் GSP+ ஆல் வரும் வருமானம் சீன தொழில்களுக்கு துறைமுகம் கட்டவும், விமான நிலையம் கட்டவும், கை வே போடவும் கொடுக்கபட்டுவிடுகிறது. அதாவது அம்ரிக்கபணத்தில்தான் இந்த கட்டுமானங்கள் ந்டை பேறுகிறது. 

 

அமெரிக்கா வறிய நாடாக இலங்கையைக் கருதி GSP+ கொடுக்கிறது. இது நடைமுறையில் அமெரிக்க வரிப்பணம். பொதுமக்களின் பணம். தனியார் கம்பனி பணம் அல்ல. இதில் மலர்பவர்கள் சீனாவும், அரச குடும்பமுமே. லொபியுங்களுக்கு இலங்கை ஒருபகுதியை செலவிடுகிறது. மற்றயது சீனாவிடமிருந்து வருவது போல் தென்படுகிறது. இது எல்லாமே அமெரிக்காவில் விற்ற காசே. சீனா பில்லியன் கணக்கில் வருடாவருடம் இலங்கைக்கு கடன் கொடுக்கிறது. அதை உடனேயே மூலப்பொருள், சீன ஊழியர்களின் உழைப்பு என்று பில் போட்டு திரும்ப கொண்டு போய்விடுகிறது. பின்னர் பில்லியன் டொலர் கடன்களையும் வசூலிக்கிறது. இந்த கடன்களைக்கட்டத்தான் மிகுதி GSP+ வருமான(அம்ரிக்க பொதுமக்களின் வரிப்) பணம் போகிறது.  சீனா இலங்கையில் செய்யும் இந்த 200% லாபம் ஈட்டும் வியாபாரத்திலிருந்து தான் இலங்கைக்கு கொடுக்க வேண்டிய லஞ்சப்பண்களையும் சீனா கட்டுக்கிறது. 

 

இதுதான் இலங்கையின் கோணல் ராஜதந்திரம்.  உண்மையில் இதன் சுருக்கு கயிறு அமெரிக்காவின் GSP+ ல் இருப்பது போல் தோற்றமளிக்கலாம். உண்மையில் அது அங்கு இல்லை. அதை இலங்கை லொபியிங் மூலம் அமேரிக்காவில் வர்த்தக அமைச்சில் இல்லாதவாறு பார்த்துக்கொள்கிறது. இதனால் அமெரிக்க GSP+ நீக்கி இலங்கையை தண்டிக்க அமெரிக்காவால் முடியாது. இதில் மேசி, ஜெ.சி. பென்னி, விடோரியா சிகிறட், காப் பொன்ற பல கம்பனிகள் அடக்கம். அமெரிக்கா தெருவில்  தனது விலாத்திற்கு ஏற்றமாதிரி கை வீசி நடக்க முடியாது. 

 

இந்த கோணல் ராஜதந்திரத்தை ஒரு குடிகாரனுக்கு ஒப்பிடாலாம். ஒரு குடிகாறன் அயலட்டையை மிரட்டி வைத்திருக்கிறான். இரவில் வீடு திரும்போது மூக்குமுட்டத்தான் குடிப்பான. அதனால் தான் அயலட்டை மிரட்ட முடியும் என்பது அவனுக்கு தெரியும். இதில் அயலட்டையால் ஒன்றும் சொல்ல முடியாது. ஆனல் குடிகாரன் சிலகாலம் அவர்களை மிரட்டி தனது காரியங்களை செய்ய முடியும். இதில் தனது பணமும் அழிந்து உடல் நலமும் கெட்டுத்தான் இறப்பான். மியன்மார் இதைச் செய்துதான் இன்று மேற்கு நாடுகளுக்கு அடியபணிய வேண்டிய நிலைக்கு வந்திருக்கு.

 

இலங்கையின் கோணல் ராஜதந்திரம், இன்றைய பொழுதில் அமெரிக்காவை, சொந்த செலவில் தனக்கு சூனியம் வைக்க செய்து வைத்திருக்கு. ஆனால் நாளடைவில் அது இலங்கை பொல்லைகொடுத்து அடி வாங்கியதாகவும் மாறலாம்.  (அதற்கு அமெரிக்கா GSP+ யை நிறுத்த சீனா கடங்களை திரும்ப கேட்கத்தொடங்க வேண்டும். இதிலிருந்து தப்ப ஒருவழி இலங்கை நுரை ன்லையை சீனாவுக்கு கொடுக்க முயல்கிறது. அது துறைமுகத்திலும் சரிப்படும். விமான நிலையம் அதிகம் சீனாவுக்கு தேவைப்படாது. அது போர் நேரம் மட்டும்தான் தேவை. நெடுஞ்சாலைகள் யாரில் ஒருவரிலாவது முழுவதாகப் பொறுக்கும்)

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.