Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா அமைச்சரவையில் அடிதடி – விமல் வீரவன்சவுக்கு விழுந்தது அடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

VIMAL_WEERAWASA.jpg

13வது திருத்தச்சட்டத்தைப் பலவீனப்படுத்துவது தொடர்பாக ஆராய்ப்பட்ட சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் விமல் வீரவன்ச தாக்கப்பட்டதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் 13வது திருத்தச்சட்டத்தைப் பலவீனப்படுத்தும் விவகாரம் குறித்து கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன. 

இதன்போதே, சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்சவை மூத்த அமைச்சர் டியூ.குணசேகர தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

எனினும் சிறிலங்கா அரசாங்கம் அது வெறும் வதந்தி என்று கூறியுள்ளது. 

இதுதொடர்பாக சிறிலங்கா அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிடம் கேள்வி எழுப்பியபோது, இது வெறும் கட்டுக்கதை என்றும், அத்தகைய சம்பவம் எதையும் தான் பார்க்கவில்லை என்றும் பதிலளித்துள்ளார். 

எனினும், அமைச்சரவைக் கூட்டத்தில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றதை அவர் உறுதிப்படுத்தினார். 

“மிகவும் சூடான - கூச்சல் நிறைந்த வாக்குவாதங்கள் இடம்பெற்றன. ஒரு பொதுக்கூட்டத்தைப் போல அது இருந்தது. 

எமது அமைச்சரவையில் சத்தமாகப் பேசும் சிலர் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். 

ஆனால் யாரும் விமல் வீரவன்சவை அடிக்கவில்லை” என்று கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், விமல் வீரவன்சவிடம் அமைச்சர் ரவூப் ஹக்கீம், “13வது திருத்தத்துக்கு எதிராக 10 மில்லியன் கையெழுத்துப் பெறும் நீங்கள் எதற்காக அதிகாரப்பகிர்வை வலியுறுத்தும் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் கையெழுத்துப் பெறவில்லை?”என்று கேள்வி எழுப்பிய போதே கொந்தளிப்பாக சூழல் எழுந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

13வது திருத்தச்சட்டத்தை ஒழிப்பதற்கு முதலில் வடக்கு, கிழக்கு மக்களின் கருத்தை அறிய வேண்டும் என்றும் அதன் பின்னரே தெற்கில் அதனைப் அறிய வேண்டும் என்றும் ஹக்கீம் குறிப்பிட்டார். 

இதன்போது ஹக்கீமுக்கு ஆதரவாக டியூ.குணசேகரவும் கடுமையான வாக்குவாதம் செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

http://www.puthinappalakai.com/view.php?20130614108460

விமல் வீரவம்ச, வெகுவிரைவில் ஜனாதிபதி ஆகக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதால், ராசபக்ச அவனை மங்கடிப்பதற்கு, ஹக்கீமை ஏவி விட்டிருக்கிறார்.

விமலின்ரை விழல் கதைகளுக்கு 3ம் வகுப்பு குழந்தை கூட எழும்பி விளாசு விளாசு என்று விளாசிப்போடுமென்றாலும்  டி.யு. குணசேகரா அடித்தார் என்ற கதை வேண்டுமென்றே அரசு அவிழ்த்துவிட்ட கதை போலத்தான் படுகிறது. ஆனால் அது விமலுக்கு  சிங்களவுகளுக்கிடையில்  எழும்பிக்கொண்டுவரும் விலாசத்தை கட்டுப்படுத்தவா அல்லது நிலைமை வெகு கடுமையாக இருந்தது என்ற நாடகத்துக்காகவா என்பது மெல்ல மெல்லத்தான் தெரிய வரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.