Jump to content

புல்லுமலைக் கிராமத்தின் குழந்தைகளையும் ஆதரிப்போம்.


Recommended Posts

புல்லுமலைக் கிராமத்தின் குழந்தைகளையும் ஆதரிப்போம்.

மட்டக்களப்பு நகரத்தின் மேற்கே 30 கிலோ மீற்றருக்கு அப்பால் செங்கலடி பதுளை பிரதான வீதியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு எல்லைக் கிராமமாக ‘பெரிய புல்லுமலை’ எனும் அழகிய கிராமம் அமைந்துள்ளது.

 

சுமார் 800வரையிலான தமிழ்குடும்பங்கள் குடியிருந்த இக்கிராமம் விவசாயத்தையே தன் ஆதாரமாகக் கொண்டிருந்தது. காலத்துக்குக் காலம் யுத்தத்தின் பாதிப்பு இக்கிராமத்தையும் அதிகளவில் காவு கொண்டது. யுத்தத்தினால் ஊர்களை விட்டு மக்கள் வெளியேறிவிட  ஒரு கட்டத்தில் புல்லுமலை மனிதர்கள் இல்லாத ஊராக இருந்ததும் ஒருகாலம்.

 

இதர இடங்களில் குடியேறி அங்கங்கே பல குடும்பங்கள் நிரந்தரமாக தங்கிவிட்ட போதும் 148 குடும்பங்கள் தங்கள் சொந்த ஊரான புல்லுமலைக்குத் திரும்பியுள்ளனர். யுத்தத்தின் பாதிப்பு இந்தக் கிராமத்துக் குழந்தைகளையும் குடும்பங்களையும் மிகவும் பாதித்துள்ளது. உளவள ஆற்றுப்படுத்தல் முதலான சமூக மேம்பாடு வரை இக்கிராமத்துக்குச் செய்ய வேண்டிய மாற்றங்கள் நிறையவே இருக்கிறது.

1.jpg

800பிள்ளைகள் கல்விகற்ற புல்லுமலை தமிழ்க்கலவன் பாடசாலையானது முதலாம் வகுப்பு முதல் 10;வகுப்பு வரையான வகுப்புக்களைக் கொண்டிருந்தது. யுத்த முடிவின் பின் தற்போது குடியேறிய குடும்பங்களிலிருந்து 90 பிள்ளைகள் மட்டுமே பாடசாலைக்குச் செல்கின்றனர். இங்கு போதியளவு அசிரியர்கள் இல்லை. கணிதம் , விஞ்ஞானம் போன்ற பாடங்களுக்கான ஆசிரியர் இல்லாது இப்பாடங்களை கற்க முடியாத நிலமையில் பிள்ளைகள் அவதிப்படுகின்றனர்.

 

மீளவும் உயிர்த்துள்ள இந்தப் பாடசாலை மாணவர்களின் கல்வி நிலமையும் அடிப்படை வசதிகளும் மிகவும் பின் தங்கியே காணப்படுகிறது. போக்குவரத்து முதல் பிள்ளைகளுக்கான கற்கை உபகரணங்கள் வரையிலும் உதவிகளை எதிர்பார்த்தே கனவுகளோடு மாணவர்கள் தொலைதூத்திலிருந்தும் நடந்து சென்று படிக்கின்றனர்.

2.jpg

யுத்தத்தினால் பெற்றோரை இழந்த பிள்ளைகள் , விதவைகள் , குடும்ப வறுமையை போக்க அரபு நாடுகளுக்குச் சென்று துன்புறும் பெண்களின் குழந்தைகள் வரை இக்கிராமத்தின் கண்ணீர்க் கதைகள் பல.

 

இந்த 90 மாணவர்களுக்கும் முதல் கட்ட அவசர உதவியாக பாதணிகள், புத்தகப்பைகள், மற்றும் நூலகம் ஒன்றிற்கான உதவியையும் வழங்க வேண்டிய அவசியத்தை எமது பணியாளர்கள் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்கள்.

கட்டம் கட்டமாக இக்கிராமத்தின் முன்னேற்றத்தை நோக்கிய எங்கள் பயணத்தில் புலம்பெயர் தமிழர்களின் ஆதரவினை வேண்டுகிறோம்.

 

ஒரு பாதணியின் விலை – 600.00ரூபா

90 பிள்ளைகளுக்கான பாதணிகள் – 54000.00ரூபா (அண்ணளவாக 335€)

ஒரு புத்தகப்பையின் விலை – 450.00

90 பிள்ளைகளுக்கான புத்தகப்பைகள் – 40500.00ரூபா (அண்ணளவாக 250€)

நூலகம் – 50000.00ரூபா (அண்ணளவாக 310€)

இம்மூன்று அவசிய தேவைகளையும் நிறைவேற்ற 895€க்கள் தேவைப்படுகிறது.

 

புல்லுமலைக் கிராமத்தின் ஏழைக்குழந்தைகளின் கல்வியை முன்னேற்றவும் அவர்களது எதிர்காலத்தை சிறப்பாக மாற்றவும் உங்கள் ஆதரவினை வழங்குமாறு அனைத்து புலம் பெயர் உறவுகளிடமும் உரிமையோடு வேண்டுகிறோம்.

தொடர்புகளுக்கு :-

 

Bank information

 

Germany:

NESAKKARAM e.V.55743 Idar-Oberstein

Konto-Nr. 0404446706

BLZ 60010070

Postbank Stuttgart

 

Other countrys:

 

NESAKKARAM E.V

A/C 0404446706

Bank code – 60010070

IBAN DE31 6001 0070 0404 4467 06

Swift code – PBNKDEFF

Postbank Stuttgart

Germany

 

Paypal Account – nesakkaram@gmail.com

Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

 

nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

www.nesakkaram.org

 

http://nesakkaram.org/ta/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

புல்லுமலைக் கிராமத்தின் குழந்தைகளுக்கான பாடசாலை உபகரணங்கள் அவசரம் வழங்க வேண்டியுள்ளது. உதவ முடிந்தவர்கள் உதவுமாறு வேண்டுகிறோம்.

ஏழைக்குழந்தைகள் அடிப்படை வசதிகள் அற்ற வாழ்வை கொண்டு செல்ல நடைபெறும் வாழ்வுப்போராட்டம் தினம் தினம் கொடுமை. இத்தோடு இவர்கள் கல்வியில் முன்னேற வேண்டுமென்ற அக்கறை இக்குழந்தைகளின் பெற்றோருக்கு பெரும் போராட்டமாகவே இருக்கிறது.
இவர்களுக்கு ஆதாரமாக கல்விக்கான அடிப்படை வசதிகளை புலம்பெயர் தமிழர்கள் வழங்க வேண்டும்.

Link to comment
Share on other sites

கள உறவு Naanthaan அவர்கள் தனது உதவியாக 104,71€ வழங்கியுள்ளார். இவ்வுதவியை விரும்பிய திட்டத்திற்கு பயன்படுத்துமாறு கூறி அனுப்பியுள்ளார். புல்லுமலை குழந்தைகளுக்காக இவ்வுதவியை வழங்கவுள்ளோம். மேலதிகமாக தேவைப்படும் உதவியை முடிந்த உறவுகள் தந்து உதவுமாறு வேண்டுகிறோம்.

 

மொத்தம் தேவைப்படும் உதவி - 895€

 

மேலும் தேவைப்படும் உதவி - 895€-104,71€ =790,29€

 

Link to comment
Share on other sites

கலை உறவு நான்தான் இற்கு நன்றி.

 

எப்போதும் போலான உங்கள் ஊக்கத்துக்கு நன்றிகள் விவசாயி விக்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவரும் தோற்கடிக்கப்படவேண்டியவரே. நான் அவருக்கும் வாக்கு போட்டிருக்க மாட்டேன். நிச்சயம் சிங்கபூரில் இருந்து டிக்கெட் போட்டு போய் அவருக்கு பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டிருக்க மாட்டேன். தவிரவும் அவரும் மட்டகளப்பு, அவர் வன்கொடுமை செய்ய பெண்ணும், மட்டகளப்பு, அவரை ஆதரித்த உள்ளூர் கட்சியினரும் மட்டகளப்பு  வாக்களித்த வாக்காளரும் மட்டகளப்பு எனும் போது இதில் பிரதேசவாதம், மையவாதம் என்ற கோணமே எழவில்லை. இல்லையே…அப்பட்டமாக பிரதேசவாதம் கக்காத தமிழ் தேசிய அரசியலும் செய்யாத பலர் அங்கே தேர்தலில் நின்றார்களே. தமிழ் தேசியத்தில் நம்பிக்கை இல்லை, சரி வேறு ஒரு தெரிவை எடுக்கலாமே? தென்னிலங்கை கட்சியில் கேட்ட ஒரு தமிழருக்கு போட்லாலாமே? நான் இன்றும் மேடைக்கு மேடை பிரதேசவாதம் கக்குபவருக்குதான் வாக்கு போடுவேப் ஆனால் நான் பிரதேசவாதி இல்லை என்பது நம்பும்படியாகவா இருக்கு? தெரியும். மட்டகளப்பு மாவட்டமும் பெரும்பான்மை தமிழர் பகுதிதான்.    பிரதர், நான் தமிழ் தேசிய வடையை நியாப்படுத்தவில்லை. அதை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை . நீங்கள் நன்னா டிரக்கை மாத்த வேண்டாம். தமிழ் தேசிய அரசியல் உதவாது என்ற நிலைப்பாடு = பிரதேசவாதம் என நான் எங்கும் எழுதவில்லை. ஆனால் அப்பட்டமாக செயலில், சொல்லில் இன்றுவரை பிரதேசவாதத்தை எழுப்புவரை, அவரின் கொள்கையை ஆதரிப்பது, இறங்கி வேலை செய்வது, நிச்சயம் பிரதேசவாதம்தான். இது நான் ஹிட்லரின் அனுதாபி, அவருக்கு வாக்கு போடுகிறேன், அவருக்கு வாக்கு போடுமாறு பிரச்சாரமும் செய்கிறேன் ஆனால் நான் நாஜி இல்லை என்பது போல ஒரு நிலைப்பாடு.
    • சங்கி ஆனந்தம் சொன்னது சம்பந்தமாக, மெதடிஸ்ட் (CSA, CoE, American Mission) இப்படி ஊருக்குள் போய் மதம் மாற்றுகிறார்களா? நான் அறிய 5ம் வேதம் என கூறப்படும், யெஹோவா சாட்சிகள், பெந்திகோஸ்த் ஆட்கள்தான் இப்படி செய்வது.
    • இதே போன்ற ஒன்றை மட்டக்களப்பு பெண்ணிற்கு இழைத்து இழைத்தவர் கூத்தமைப்பில் மட்டக்களப்பில் பா. ஊ வாக இருந்தார். ஒரு வேளை அவர் இதனை யாழில் செய்திருந்தால் கூத்தமைப்பில் நிறுத்தப்பட்டிருப்பாரா...? ஆகவே யாழ் மையவாதிகள் ஒன்றும் திறம் கிடையாது அடுத்தவனுக்கு பாடம் எடுக்க. ஆக என்ன சொல்ல வருகிறீர்கள் நீங்களும் நானும் பவுன்ஸிலும் டாலர்களிலும்  பாக்கெட்டிற்குள் போட்டுக் கொண்டு நம்ம அடுத்த வேலையை பார்க்கப்போக அங்கே இருக்கும் மட்டக்களப்பார்கள் மட்டும் யாழ் தேசியவாதிகளை நம்பி அடுத்த வேளை சோற்றுக்கு பிச்சையெடுக்க வேண்டும் அப்பிடியா...? முக்கால் வாசி தேசிய வியாதிகள் எல்லாம் ஒன்று புலம் பெயர், இல்லை தமிழர் பெரும்பான்மை பிரதேசத்தில் மட்டும் ஏன் இருக்கிறார்கள் என்று தெரியுமா..? சோற்றுக்கு வயிறு காயும் போதுதான் தெரியும் தேசியத்தின் பெருமை. தமிழர் பெரும்பான்மை பிரதேசங்களில் தேசியவாதிகள் சிறுபான்மை ஆகும் போது தெரியும் தேசியத்தின் பெருமை அதுவரை தேசியவாதிகள் வாயால் நன்னா வடை சுடலாம்
    • ""எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்"" என்பது உந்தக் கரடிக்குத் தெரியாதோ?  😁
    • என்னப்பா உந்தப்பிரச்சனை இன்னும் முடியேல்லையே?😂 நானெண்டால் இத்தடிக்கு கார பாட்ஸ் பார்ட்சாய் கழட்டி வித்திருப்பன்.😎
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.