Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்மா இருக்கும்போது மோடி எதுக்கு?

Featured Replies

அம்மா இருக்கும்போது மோடி எதுக்கு?

 

 

narendra2bmodi-jaya.jpg

குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை பாரதீய ஜனதாக் கட்சியின் சார்பில் இந்தியாவின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக்க பல ஆதரவுக்குரல்கள் எழுகின்றன. அதே வேளையில் திரு. நரேந்திர மோடியை விட தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா இந்தியாவின் பிரதமராகத் தகுதியுள்ளவர் என்பதற்கு பத்து காரணங்களைத் தெரிவிக்கிறார் பத்திரிகையாளர் சஞ்சய் பின்ரோ.

 
 
JJ-with-Hillary-Clinton-794917.jpgஎல்லோரும் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி பிரதமராகலாமா அல்லது  ஆகக் கூடாதா  என விவாதித்துக் கொண்டிருக்கும் போது,  இந்திய அரசியல் விமர்சகரும் பத்திரிகையாளருமாகிய சஞ்சய் பின்ரோ அவர்கள், தமிழ்நாட்டுப் பெண் ஒருவர் இந்தியாவின் பிரதமராகும் வாய்ப்பைப் பற்றிப் பேசுகிறார். ஜெயலலிதாவின் இன்றைய ஈழத்தமிழர் ஆதரவு கோசம் நாளைக்கு எதிர் மாறாக  மாறலாம், ஆனால் யாராக இருந்தாலும் தமிழர் ஒருவர் பிரதமர் ஆவதில்  எங்களுக்கு மகிழ்ச்சியே. அதனால் தான் இந்த Why only Modi, why not Amma?  ஆங்கிலக் கட்டுரையை, இயன்றவரை, கருத்து மாறாமல் தமிழாக்கம் செய்ய முயன்றிருக்கிறேன். :-)
 
 

குஜராத்தின் மோடியை இந்தியாவின் பிரதமருக்கான வேட்பாளராக முன்னிறுத்த பல திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. ஆனால் தென்னிந்தியாவிலிருந்து பலம் வாய்ந்த தலைவர் ஒருவர் முடிசூடிக் கொள்ளலாம் என்பதை இந்தியாவின் தேசிய ஊடகங்கள் சிந்தித்துப் பார்ப்பதாகத் தெரியவில்லை. ஒரு  சில மாதங்களாக, தெற்கிலிருந்து வேட்டி கட்டிய பிரதமர் வருவதைப் பற்றிய பேச்சுகள், சென்னையில் நடைபெற்ற அரசியல்வாதிகளும், திரைப்பட நடிகர்களும் பங்கு பற்றிய ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசப்பட்டு, அவை பத்திரிகைகளிலும், பல சமூக ஊடகங்களிலும் வெளிவந்தன.

Modi supports Sri Lankan Tamils to woo Jayalalitha 

 
ஆனால் விந்தியத்துக்கு அப்பாலிருந்து ஒரு சேலை கட்டிய பிரதமர் வந்தால் எப்படி? காங்கிரஸ் கட்சியுடனோ அல்லது பாரதீய ஜனதா கட்சியுடனோ எந்த தொடர்பும் வைக்கப் போவதில்லையென  தீர்க்கமாக ஏற்கனவே அறிவித்து விட்டார் தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெயலிதா. மூன்றாவது அணி என்ற நிலை வரும்போது, காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் மாறாக, மோடியின் நண்பியும், தமிழ்நாட்டில் மிகவும் அரசியல் பலமும் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதா, 
2014இல் யார் ஆள்வது என்பதை தீர்மானிக்கும் 
‘கிங்க்மேக்கர்
’ ஆக மட்டுமன்றி தானே  அரசியாகக் கூடிய வாய்ப்பு, இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத  இன்றைய அரசியல் நிலையில் உண்டு. 

 

1990 களின் பின்பகுதிகளில் குறைந்த காலங்கள் தேவ கவுடா பிரதமரான பின்பு, ஐக்கிய முன்னணியின் ஆட்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மூப்பனர் பிரதமராகும் வாய்ப்பை நழுவவிட்ட பின்னர், அம்மாவின் அதிர்ஷ்ட நடசத்திரங்கள் எல்லாம் 
2011 இல் ஒளிர்ந்தது போன்று ஒளிர் விட்டால், 
7
ரேஸ் கோர்ஸ் ரோட்டுக்கு மாநிலத்தின் தேவைகளுக்காக என்ன செய்யவேண்டும் என்று கடிதம் எழுதிக் கொண்டிருப்பதை விட்டு அவர் அவற்றை தானே நிறைவேற்றிக் கொள்ளலாம்.

அடுத்த ஆண்டு அல்லது அதற்கு முன்னால் எந்தக் கட்சிக்கும் அறுதி பெரும்பான்மையற்று தொங்கு பாராளுமன்றம் என்ற நிலை வரும்போது ஒவ்வொரு கட்சியும், ஒவ்வொரு உறுப்பினரும் முக்கியம் என்ற நிலையுண்டாகும். முன்னைய ஆட்சியாளர்களிடமிருந்து, ஜெயலலிதா  பெற்றுக் கொண்ட  மின்தட்டுப்பாட்டுப் பிரச்சனையைத் தீர்த்து, அவரால் மக்களுக்கு அளிக்கப்பட்ட மிக்சியையும், கிரைண்டர்களையும், கம்பியூட்டர்களையும் அடுத்த சில மாதங்களுக்குள் தொடர்ந்து வேலை செய்யச் செய்தால் 
30
 பாராளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றுவது என்பது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தால் முடியாத காரியமல்ல.

அது பேரம் பேசுவதற்கு பாரிய பலத்தைக் கொடுப்பது மட்டுமன்றி, அவரை ஆதரிக்கக் கூடிய கட்சிகளை ஒருங்கிணைந்து தில்லியில் அரசியல் அதிகாரத்தை சுவைப்பதற்கு  நம்பிக்கையுடன் முயற்சிக்கக் கூடிய வாய்ப்பை அளிக்கும். 
முன்பு அரசியல் கூட்டணிகளுக்கு ஆதரவளித்தது  மட்டுமன்றி, ஒரு கூட்டணியையே உடைத்து  விழுத்திய அனுபவமும் கொண்ட போயஸ் தோட்டத்துச் சீமாட்டிக்கு, இவையெல்லாம் புதிதல்ல.

இப்போதைய கேள்வி என்னவென்றால் அவரது செல்வாக்கை ஒரு படி மேலே கொண்டு செல்வாரா என்பது தான். சில வருடங்களுக்கு முன்னால் அம்மாவிடம் அவர் பிரதமராகும் விடயத்தைப் பற்றி நேரடியாகக் கேட்ட சில பத்திரிகையாளர்களில் நானும் ஒருவன். அதற்கு அவரளித்த பதில்,  “அதைப் பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை  ஆனால் அந்தக் கேள்வியைப் பாராட்டாக ஏற்றுக் கொள்கிறேன்” என்று அவர் கூறியது மிகவும் சுவாரசியமானது. 

ஏன் ஜெயலலிதா  ஒரு சிறந்த பிரதமராக இருப்பார் என நான் நினைக்கிறேன் என்பதற்கான காரணங்கள் இதோ.

090424121813_Cartoon_235.jpg

1. ஜெயலலிதாவின் தலைமைத்துவத் தகைமைகளும், அமையப் போகின்ற மூன்றாவது அணியினர் அவரை ஏற்றுக்கொள்ளக் கூடிய தன்மையும் அவருக்குள்ள பெரிய நேர்மறையான வாய்ப்புகளாகும். அப்துல் கலாம் அவர்களை இரண்டாவது முறையும் ஜனாதிபதியாக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு தொடக்கம் பல இடதுசாரி பெருந்தலைகளெல்லாம் ஜெயலலிதாவின் வீட்டுக்குப் படையெடுத்ததை நாம் பார்த்தோம். கடந்த ஆண்டில் முதன்முதலாக ஜனாதிபதி பதவிக்கு பாராளுமன்றத்தின் உதவி சபாநாயகரும், பூர்வீக குடிகளின்
 
தலைவருமாகிய சங்மாவை ஆதரித்து, முன்மொழிந்தது மட்டுமன்றி, பாஜகவின் அத்வானி கூட புனித ஜோர்ஜ் கோட்டையில் ஜெயலலிதாவுடன் அது சம்பந்தமாக பேச்சு நடத்தினார.

 

2. அரசியல் இடைவெளியையும் மீறி நட்புறவுகளைக் கொண்டிருப்பவருக்கு ஒரு உறுதியான கூட்டணியை அமைத்து, அதை ஒருங்கிணைத்துக் காப்பது கடினமானதொன்றல்ல. சமாஜ்வாடி கட்சியின் தலைவரும், உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சருமாகிய 
 
அகிலேஷ் யாதவுடன்
  
அம்மாவுக்குள்ள நல்லெண்ணமும், பிரகாஸ் காரத் போன்ற இடது சாரித் தலைவர்களின் நட்பும், ஏனைய கட்சிகளுக்கு இதை விட்டால் வேறு மாற்று வழி இல்லாததாலும்,
  
திரிணமூல் கட்சியின் தலைவி மம்தா டிடி கூட அம்மாவின் தலைமையை ஏற்றுக் கொள்ளலாம். காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத மாநிலங்களை, பொதுவான முறைப்பாடுகளின் அடிப்படையில் இணைக்கக் கூடிய அம்மாவின் தன்மை நிரூபிக்கப்பட்டதொன்று, அது ஏனைய மாநிலங்களில் உள்ள கட்சிகளிடம் ஜெயலலிதாவுக்குள்ள செல்வாக்கைக் காட்டுகிறது.

polscape_2_20060626.jpg
3. 
ஜெயலலிதா ஒரு இரும்புப்பெண்மணி என்று அழைக்கப்பட்டாலும், தனது பரம எதிரிகளைக் கூட இணை பிரியாத நண்பர்களாக்கும் தன்மை அவருக்குண்டு. உதாரணமாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் வைகோவை 
POTA (Prevention of Terrorism Act)
 இன் கீழ் பதினெட்டு மாதங்கள் சிறையில் அடைத்தார் ஜெயலலிதா. வேலூர் சிறையிலிருந்து வெளியில் வந்த வைகோ, சிறைக்கு வெளியில் வைத்தே “இந்த பாசிச அரசை எதிர்த்து நான் போராடுவேன்” என்று சூளுரைத்ததை என்னால் மறக்க முடியாது. அதற்கு ஒரு சில மாதங்களின் பின்னர் அம்மாவுடன் இணைந்து கொண்ட வைகோ, “தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றிலே இது தான் முக்கியமான சிறந்த நிகழ்வு” என்றார். 
2011 இல் சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவால் தொகுதிகளைப் பிரிப்பதில் பாரபட்சம் காட்டிய போதிலும்
, இன்னும் ஜெயலலிதாவை வைகோ தனது சகோதரியாகக் கருதுகிறார்.

 

 
4.   
இந்திய அரசியலில், 
65 வயதான ஜெயலலிதா இன்னும் இளமையானவர் தான். பலம் வாய்ந்த மாநிலத் தலைவர் மட்டுமன்றி, அறுதிப் பெரும்பான்மையுடன்
, தமிழ்நாட்டில் ஆட்சியையும் அமைத்துக் கொண்டு, அவரது கட்சியையும் தனது முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஜெயலலிதா,  பல பிரதமர்களை ஆட்டிப்படைத்த உட்கட்சிப் பூசல்களைப் பற்றிக் கவலைப்படவே தேவையில்லை.

  
5.   
ஆட்சி என்று வரும்போது அர்த்தமற்ற செயல்களுக்கு இடமளிக்காது கடுமையுடன் நடந்து கொள்ளும் தன்மையுள்ளவர் அம்மா என்பதை தமிழ் நாட்டை நன்கு அறிந்த எவரும் ஒப்புக்கொள்வர். தேவையேற்படும் போது சவுக்கை எடுத்துச் சுழற்றவும் தயங்காதவர் – அது பல காலமாகத் தீர்க்க முடியாமல் இருந்த வீரப்பனின் தொந்தரவாக இருந்தால் என்ன, இதற்கு முந்தைய ஆட்சியில் ஒரு இலட்சம் அரச ஊழியர்களை வீட்ட்டுக்கனுப்பியதாக இருந்தாலென்ன, கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்தை கையாண்ட விதமாக இருந்தாலென்ன, மெதுவாக மிதிப்பது (Soft-Pedalli
ng)அல்லது ஓரு காரியத்தை மெதுவாகச் செய்வது  என்பது அம்மாவின்   அகராதியிலேயே கிடையாது.

 

jaya12.jpg

 
6.   
அம்மாவின் இரும்புக்கரம் சிலவேளைகளில் வெல்வெட்  கையுறை அணிந்தது போல் மென்மையாக மாறுவதுமுண்டு. ஜெயலலிதா மக்களைக் கவரும்
ஜனரஞ்சகக்  கலையில்
 கைவந்தவர் போல் தோன்றுகிறது. ஆனால் அதை ஜனரஞ்சகம் என்பதை விடுத்து, மக்கள் நலம் எனக் குறிப்பிடுவதையே  அவர் விரும்புகிறார். நூறாயிரம் கோடிக்குமதிகமாக கடனிருந்தும், தனது சாதுரியத்தால் நிர்வாகத்தை நடத்திக் கொண்டே 
2011
ம் ஆண்டில்  தேர்தல் அறிக்கையில் அறிவித்த இலவச மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றத் தொடங்கி விட்டார். அத்துடன் தன்னால்
,
 சமுதாயத்தின் எல்லா வகுப்பினரையும்,
 
சிறுபான்மையினரையும், பல்வேறு சாதிக்குழுவினரையும், எல்லாவற்றுக்கும்  மேலாக
,
 ஏழைகளையும் அரவணைத்துக் கொண்டு செல்ல முடியுமென்பதை நிரூபித்துள்ளார். ஒன்று அல்லது ஒரு சில ரூபாய்களுக்கு நல்ல உணவு வகைகளை  வழங்கும் அவரது அம்மா உணவகங்கள் ரஜனிகாந்த் படங்களை விட அமோக ஆதரவு பெற்றுள்ளன. அதே போன்று
,
 அவரது கையில் ஆட்சி இருக்கும்போது மாநிலங்களையும், கூட்டணியினரையும் சமாளிப்பது என்பது அவருக்கு கடினமான விடயமல்ல.

  

7.   
நடுநிலையான எந்த அரசியல் அவதானியும் ஜெயலிதாவின் 
தேசியக் கண்ணோட்டத்தை பார்க்க தவற மாட்டார்கள் – அது பயங்கரவாதத்துக்கு எதிரான தீர்க்கமான எதிர்ப்பாக இருந்தாலென்ன, சட்டம், நீதி, சுற்றாடல் சம்பந்தமான கொள்கைகள், அல்லது அணுமின்சார சார்பு நிலை, எதுவாக இருந்தாலும் அவர் மிகவும் அக்கறை காட்டுவதைக் காணலாம். ஈழத் தமிழர்களின் பிரச்சனைகளுக்காகப் போராடுவதிலும், தீவிரவாதத்தை எதிர்ப்பதிலும், அவரது கருத்துக்களும் புரிந்து கொள்ளலும்,  பாகிஸ்தானைப் பற்றிய விடயத்திலும், வெளிவிவகாரக் கொள்கைகளிலும்  தீர்க்கமாக இருப்பார் என்பதற்கு அறிகுறியாகத் திகழ்கிறது.

No Lankan players in Chennai IPL matches
jaya123.jpg

  
8.   
 ‘உன்னுடைய 
முக்கியமான அதிகாரிகள் யாரென்று கூறு, நீ சிறந்த தலைவனா என்பதை நான் சொல்கிறேன்’ என்பது ஆட்சியாளர்களைப் பற்றிய இக்கால பழமொழியாக இருக்க முடியும். அம்மாவின் கீழ் பணிபுரிந்து இளைப்பாறிய (இப்பொழுது பணியிலுள்ளவர்கள் அம்மாவுக்கு சார்பாகத் தான் பேசுவார்கள் என நினைத்தால்)  எந்த அரசு அதிகாரியிடமும் அவரைப் பற்றி விசாரித்துப் பார்த்தால், எந்தளவுக்கு ஆட்சி, நிர்வாகத்தில் மட்டுமல்ல சிக்கலான விடயங்களில் கூட அவருக்குள்ள புத்திக் கூர்மையைப் பற்றி விவரமாகக் கூறுவார்கள். உறுதியும், தகைமையும் வாய்ந்த அமைச்சரவையை நிறுவுவது என்பது மிகவும் முக்கியமானது, அந்தப் பரீட்சையில் அம்மா இலகுவாக வெற்றியடைவார்.

 
9.    
கிறித்தவ புனித கன்னியர் மடத்தில் கல்வி பயின்று, அரசியலில் நுழைந்த திரைப்படக் கதாநாயகியிடம் நளினம், நாகரீகம், பேச்சுத்திறன்
,
கவர்ச்சியான மென்மை  என்பன உலகப் பிரமுகர்களாகிய பில் கேட்ஸ், ஹில்லரி கிளின்ரன் போன்றவர்கள்  கருதப்படுமளவுக்கு, அவர்களை வரவேற்குமளவுக்கு  ஈடானது. திரையுலகத்திலிருந்து வந்ததால், அம்மாவின் பேச்சுத்திறன், கருத்துப் பரிமாற்ற ஆற்றல் என்பன இந்தியாவின் அரசியல் 
வட்டாரத்திலுள்ள  சிறந்தவற்றில் ஒன்றாகும். அம்மாவின்  இந்த திறனை அவர் ராச்சியசபாவில் இருந்த காலத்தில் வெளிப்படையாகக் காணக் கூடியதாக இருந்தது.
  

10. ஒரு அரசியல் தலைவரின் அறிவுத்திறனின் ஆழத்தை அவரது அறிக்கைகளிலும், பத்திரிகையாளர் மாநாடுகளிலும், நேர்காணல்களிலும் காணலாம். ஜெயலிதாவுக்கு 
 
உள்நாட்டு, வெளிநாட்டு விவகாரங்கள், பொருளாதாரம் என்பவற்றில் மட்டுமன்றி சட்டத்திலும் உள்ள அறிவு மற்றவர்களை வியப்படையச் செய்ய வல்லது. (உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்களில் கூட அவருக்கு அறிவும் ஈடுபாடும் உண்டென அவரது வழக்கறிஞர்கள் என்னிடம் கூறியிருக்கிறார்கள்) மிகவும் பொறுப்பு வாய்ந்த பதவியில் அமர விரும்பும் ஒரு தலைவர் பல்வேறு துறைகளிலும், விடயங்களிலுமுள்ள நுணுக்கங்களை அறிந்தவராக இருத்தல் வேண்டும். இந்த விடயத்தில் ஜெயலலிதாவிடம் தேவைக்கதிகமான ஆற்றல் 
 
உண்டு.

 
 நான் என்னுடைய வாழ்நாள் முழுவதும் நடுநிலையான அரசியல் விமர்சகராகவே இருந்து வந்துள்ளேன் அவ்வாறே தொடர்ந்துமிருப்பேன். ஆனால் ஒருவரைப் பாராட்ட வேண்டிய இடத்தில் பாராட்டாமல், அது ஒருபக்கச் சார்பானதாக தோற்றமளித்தாலும் கூட, ஒருவரது திறமையை மறுப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை, இந்தியாவின் உயர் பதவிக்கு ஆசைப்படும் தகுதி ஜெயலலிதாவுக்குண்டு.  ஆனால் தாங்கிக் கொள்வது கடினமாக இருந்தாலும் கூட, மற்றவர்களின்  விமர்சனங்களை அவை  நியாயமற்றவையாக இருந்தாலும், தாங்கிக் கொள்ளும் தன்மையை வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். அத்துடன், பங்களூரில் நடைபெறும் அளவுக்கதிகமாக சொத்து சேர்த்த வழக்கின் தீர்ப்பு, சென்னை சுப்பர் குயீன் தேசிய அரசியலில் தங்கப்பதக்கத்தை வெற்றி கொள்வதை தீர்மானிக்குமளவுக்கு முக்கியமானது.
 
 
 
(Sanjay Pinto is a lawyer, columnist and former Resident Editor of NDTV)
 
 

http://viyaasan.blogspot.ch/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.