Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விரிவுரையாளரை தாக்கிய வைத்தியருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாவல திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பெண் விரிவுரையாளரை கூரிய ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்தியமை தொடர்பான வழக்கில் சந்தேக நபரான அப் பல்கலையின் மாணவனும் வைத்தியருமான சுரேந்திரஜித்தை தொடர்ந்தும் எதிர்வரும் 29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

கடந்த ஜுன் மாதம் 19ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்றைய தினம் நுகேகொட நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற போதே மேலதிக மஜிஸ்திரேட் நீதவான் இந்த உத்தரவினை பிறப்பித்தார்.

 

சந்தேக நபரின் வைத்திய பரிசோதனை அறிக்கையினை நீதிமன்றில் இன்றைய தினம் சமர்ப்பித்த பொலிஸார் சந்தேக நபரை வெளியே விடுவது ஆபத்தானது என சுட்டிக்காட்டினர்.

 

சந்தேக நபர் எவ்வேளையிலும் தனது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம் எனவும் அத்துடன் தன்னை சுற்றி இருப்பவர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

 

இதனிடையே சந்தேக நபரின் கத்திகுத்துக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நாவல திறந்த பல்கலையின் சட்டப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட விரிவுரையாளர் யசோதரா தேவி கதிர்காம தம்பி தற்போது சிகிச்சைகள் நிறைவில் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகவும் பொலிஸார் மன்றில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=5918

திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டத் துறைத் தலைவி சிரேஷ்ட விரிவுரையாளர் யசோதரா அவர்களின் காயங்கள் ஆழமானவை எனவும், அவர் ஓரளவு பழைய நிலைக்கு இயங்க சில மாதங்கள் செல்லலாம் எனவும் சொல்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.