Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெட்ராஸ் கஃபே படத்தை தடை செய்யவேண்டும்! :- தமிழர் கட்சி, அமைப்புகள், மாணவர்கள் கோரிக்கை

Featured Replies

946604_271399693000601_454904930_n.jpg
புன்னகை மன்னன் ,கன்னத்தில் முத்தமிட்டாள்,தெனாலி போல இதையும் விட்டு விட கூடாது தோழர்களே!!

படத்தின் திரை தோல்வியே தமிழர் எழுச்சியின் மறுவடிவமாக மாறும்,இனி இப்படி ஈழவிடுதலை குறித்து தவறாக பேசும் படங்களின் வரவை ஒழிக்கும்!இப்படம் திரை இடப்பட்டால் திரை அரங்கத்தில் உள்ள திரை சீலையை கிழிப்பது உறுதி!இனி திரையிலும் தரையிலும் அடி தான்!

இனம் வாழ நாம் செய்யும் செயல் இருந்தால்!அது தரம் தாழ்ந்து போவது போல் இருந்தாலும் தவறு இல்லை என்பது கருத்து!!!!

## இத்திரைப்படம் தமிழகத்தில் திரை இடப்பட்டால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கெட்டால் கேட்டால் நாங்கள் பொறுப்பு அல்ல !அது எங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் நிகழ்வுளாய் அமையும்!##

-- மானம் உள்ள தமிழ் மாணவர்கள்--

 
மெட்ராஸ் கஃபே படத்துக்கு தடை கேட்கும் சீமான்!
 
mardas_cafe.jpg
 
ஈழ விடுதலை இயக்கம் ஒன்றுக்குள் ஊடுவிய உளவாளியை மையப்படுத்தி திரையாக்கப்பட்டுள்ள படமான "மெட்ராஸ் கஃபே" க்கு தடை விதிக்க கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை காவல்துறை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தி பட இயக்குனர் ஷோதித் ஸ்ரீகர் இயக்கத்தில் உருவாகியுள்ள "மெட்ராஸ் கஃபே" படத்தில் கதாநாயகனாக ஜான் ஆபிரகாம் நடித்துள்ளார். 
 
இந்த படத்தில் விடுதலைப்புலிகளை தீவிரவாதிகளாக தவறாக சித்தரித்துள்ளதாகவும், இதனால் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி இயக்குனர் சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. 
 
இதேபோல், மெட்ராஸ் கஃபே படத்துக்கு தடை விதிக்க கோரி தமிழீழ மாணவர்கள் கூட்டமைப்பும் சென்னை காவல்துறை ஆணையரிடம் மனு கொடுத்துள்ளது.
 
”மெட்ராஸ் கஃபே” தொடர்பான செய்தி
 
ஈழ விடுதலை இயக்கத்துக்குள் ஊடுருவிய உளவாளியின் கதை! `மெட்ராஸ் கஃபே`
 
 
தமிழர்கள் கேட்பது உரிமை! ராஜபக்‌ஷ கேட்பது பிச்சை!
 
 
mahindaaa.jpg
 
 
ராஜபக்‌ஷ அரசியலுக்கு வருவதற்கு முன்பு சினிமாவில் நடித்தவர். இப்போது ஜனாதிபதியாக ஆன பிறகும், வசனங்களில் வெளுத்து வாங்குகிறார். புதுசு புதுசாகப் பொய்களைச் சொல்வதில் சமர்த்தர்.
இந்தியா வந்திருந்தவரிடம் ஈழத் தமிழர் பிரச்னை பற்றிக் கேட்டபோது, ''என் நாட்டுப் பிரஜைகளைக் காப்பாற்ற எனக்குத் தெரியும்'' என்று சொன்னார். ''யாரும் இங்கே இருந்துகொண்டு பேசாதீர்கள். என் சொந்த செலவில், உங்களுக்கு இலங்கையைச் சுற்றிக்காட்டுவேன்'' என்று சிரித்தார்.
 
''புலிகள் அமைப்பை மொத்தமாக முடித்துவிட்டது என்னுடைய சாதனை'' என்றார். அப்புறம் எதற்காக வடக்கு, கிழக்கில் இத்தனை ராணுவ வீரர்கள் என்று கேட்டால், ''புலிகளின் அச்சுறுத்தல் இன்னும் தொடர்கிறது'' என்றார்.
 
''பயங்கரவாத இயக்கத்தை எப்படி வீழ்த்தினீர்கள் என்று அனைத்து நாடுகளும் எங்களிடம் பாடம் எடுத்துக்கொள்ள அழைப்பு விடுத்துள்ளன'' என்று முதல் நாள் சொல்வார். ''புலிகளின் தனிநாடு கோரிக்கையைப் பல உலக நாடுகள் ஆதரிக்கின்றன'' என்று மறுநாள் சொல்வார்.
 
''இங்கு இனி, இனப் பிரச்னை இல்லை'' என்று ஒரு வாரம் சொல்கிறார். ''தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் தர முடியாது'' என்று மறுவாரம் சொல்கிறார்.
 
சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பதைப் போல தமிழர்களின் வாழ்க்கையை வைத்துச் சடுகுடு விளையாடியே, நான்கு ஆண்டுகளைக் கடத்திவிட்டார் ராஜபக்‌ஷ. அவர் தன்னுடைய கையில், '13-வது அரசியல் திருத்தம்’ என்ற மந்திரக்கோலை இப்போது எடுத்துள்ளார்.
 
'13-வது அரசியல் சட்டத் திருத்தம் பற்றி ஆராய ஒரு குழு அமைத்துள்ளேன்’ என்று ராஜபக்ஷே சொல்வதும்...
 
'13-வது அரசியல் சட்டத் திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும்!’ என்று ராஜபக்‌ஷவை நம்முடைய பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்துவதையும்... வைத்துப்பார்த்தால், இந்த 13-ம் எண், ஈழத் தமிழர்களின் தலைவிதியை மொத்தமாக நீக்க ஆண்டவன் அனுப்பிய ஆணையாக, பலரும் படம் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
 
ராஜீவ் காந்தியும் ஜெயவர்த்தனவும் கையெழுத்திட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மிக முக்கியப் பகுதி, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பு, பெரும்பான்மைத் தமிழர்கள் வாழும் பகுதியை ஒன்றாக, ஒரே மாகாணமாக இணைப்பதும், இப்படி இணைக்கலாமா என்று கிழக்கு மாகாண மக்களிடம் பொது வாக்கெடுப்பு எடுப்பதும், அந்த ஒப்பந்தத்தின் மிக முக்கியமான பிரிவுகள். இதன்படி இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டுவர 1988-ம் ஆண்டு, ஜனாதிபதி ஜெயவர்த்தனே முன்முயற்சி எடுத்தார். இந்த திருத்தம்தான் 13-வது அரசியல் சட்டத் திருத்தம்.
 
வடக்கும் கிழக்கும் இணைந்த இந்த மாகாணத்தின் முதலமைச்சர் நாற்காலியைத்தான் பிரபாகரனுக்கு ராஜீவ் காந்தி காட்டினார். 'இந்த ஒப்பந்தத்தை சிங்கள பேரினவாத பூதம், சில மாதங்களில் விழுங்கிவிடும், நான் முதலமைச்சர் ஆவதற்காக சண்டை போடவில்லை'' என்று பிரபாகரன் மறுத்தார். வட-கிழக்கு மாகாணக் குழுவுக்கான தேர்தல் நடந்தது. ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைவர் வரதராஜ பெருமாள் இதன் முதலமைச்சர் ஆனார்.
 
இலங்கையில் இந்திய அமைதிப் படை இருக்கின்ற வரை வரதராஜ பெருமாளும் அங்கு முதலமைச்சராக இருந்தார். அது வெளியேறியதும் வரதராஜ பெருமாளும் வெளியேறினார். இப்போது அவர் எங்கே இருக்கிறார் என்பது அதிகாரப்பூர்வமற்றத் தகவல். பிரபாகரன் சொன்ன சிங்கள பேரினவாத பூதம், மாகாண இணைப்பையும், தமிழ் முதலமைச்சரையும் 1990-ல் விழுங்கியது. 2009-ல் தமிழ் மக்களையும் சேர்த்து விழுங்கியது.
 
அனைத்து அதிகாரங்களும் குவிந்த ஒரு மத்திய அரசின் கீழ் மாகாண அந்தஸ்து உள்ள கவுன்சில் அமைப்பில், எந்தச் சீர்த்திருத்தத்தையும் துணிச்சலாகச் செய்ய முடியாது. அப்படிப்பட்ட வட- கிழக்கு இணைந்த தமிழ் மாகாண கவுன்சிலையே சிங்கள இனவாத தரப்புகள் ஏற்கவில்லை. இந்த 13-வது அரசியல் திருத்தச் சட்டத்தை எதிர்த்து 'ஜனதா விமுக்தி பெரமுனா’ என்ற அமைப்பு, இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டது. 'இலங்கை அரசியலமைப்புச் சட்டப்படி இந்தத் திருத்தம் செல்லாது’ என்று தீர்ப்புவந்தது. அதாவது, வட கிழக்கு மகாணத்தை இணைப்பது, இலங்கை அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்று தீர்ப்பு வந்துவிட்டது. மிக மிகச் சாதாரணமான ஓர் ஏற்பாட்டைக்கூடச் செய்து தர, சிங்களவர்கள் தயாராக இல்லை என்பது இதன் மூலம் தெரியவந்தது.
 
புலிகள், தனி நாடு கேட்டுப் போர் தொடுத்து வந்தபோது எல்லாம், 'வடகிழக்கு மாகாண இணைப்புதான் ராஜீவ் கனவு. அதனைச்செயல் படுத்த வேண்டும். அதற்குப் புலிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்’ என்று இந்தியத் தரப்பு தொடர்ந்து சொல்லிவந்தது. இப்படி ஓர் இணைப்பையே இலங்கை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது என்ற உண்மையே தெரியாமல், காற்று இல்லாத இடத்தில் பட்டம்விட்டது காங்கிரஸ். இப்போது மிகப் பெரிய மனிதப் பேரழிவு நடந்து முடிந்த பிறகும், '13-வது அரசியல் திருத்தச் சட்டத்தை இலங்கை அரசு ஏற்க வேண்டும். அதனை தமிழ் எம்.பி-க்கள் வலியுறுத்த வேண்டும்’ என்று வெறும் கையில் முழம் போடுகிறது.
 
வடக்கு, கிழக்கு மாகாணத்தை இணைத்து ஒன்றாக்க வேண்டும் என்ற கோரிக்கை அப்போது எழுந்ததற்கு என்ன காரணம்?
 
இரண்டுமே தமிழர்கள் பெரும்பான்மை வாழும் மாகாணங்கள். இரண்டும் இணைவதன் மூலமாக அவர்களுடைய அரசியல் விருப்பங்கள் ஒன்றுபோல பேசப்படவும் நிறைவேறவும் சாத்தியமாகும் என்ற பொருளில் அது கேட்கப்பட்டது. ஆனால், 2009 போருக்குப் பிறகு, இரண்டு தமிழ் மாகாணங்களில் சிங்களவர்களைப் பெருமளவு கொண்டுவந்து குடியேற்றும் காரியத்தைக் கனகச்சிதமாக செய்து கொண்டு இருக்கிறார்கள். இன்று அவை தமிழ் மாகாணங்களாக இல்லை. சிங்களக் கலப்பு மாகாணங்களாகவே இருக்கின்றன.
 
தமிழர் நிலத்தின் பெரும்பாலான பகுதிகள் உயர் பாதுகாப்பு வளையம் என்று அறிக்கப்பட்டு, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் குடியிருப்புப் பகுதிகள் இருந்தாலும், அங்கு தமிழ் மக்கள் குடியேற முடியாது. பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்கள், சிங்கள ராணுவ வீரர்களின் வெற்றிக்காக அரசு தானமாக வழங்கிவருகிறது. அதுவும் தமிழர் நிலத்தில்தான். அரசு நிலங்களாக இந்த மாகாணத்தில் இருக்கும் இடங்களில் சிங்கள மக்கள் கூட்டம் கூட்டமாகக் கொண்டுவந்து குடியேற்றப்படுகிறார்கள். இப்படிக் குடியேறுபவர்களுக்கும் நிலங்களை அரசு தானமாகத் தருகிறது.
ராணுவம் பாதியும், சிங்களர் மீதியும் தமிழ் மாகாணத்தைத் தின்று தீர்த்துவிட்ட பிறகு, அதனை எப்படி தமிழ் மாகாணம் என்று சொல்ல முடியும்?
 
தமிழர்களுக்கான தீர்வை, 'இதோ தருகிறேன்... அதோ தருகிறேன்...’ என்று ஏய்த்துவந்த ராஜபக்‌ஷவின் கைகளில் தந்திரமாகத் தப்பிக்க தரப்பட்ட சாவிதான், இந்த 13-வது அரசியல் திருத்தச் சட்டம். ஐ.நா. சபையிலும் சில உலகநாடு களின் மனச்சாட்சியின் முன்னாலும் குற்றவாளிக் கூண்டில் நிற்கும் ராஜபக்‌ஷ, 'இதோ பார்’ என்று காட்டுவதற்குக் கிடைத்தது இது ஒன்றுதான். அதனால்தான் 13-வது அரசியல் திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் செய்வதுகுறித்து, ஆலோசிக்க நாடாளுமன்றத் தெரிவுக் குழுவினை, அவர் அமைத்துள்ளார்.
 
நியாயப்படி பார்த்தால் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் அதில் இருக்க வேண்டும். இலங்கையின் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, இந்தக் குழுவில் இடம்பெற மாட்டோம் என்று சொல்லிவிட்டது. தமிழ் எம்.பி-க் களும் புறக்கணித்துவிட்டார்கள். எனவே, ராஜபக்‌ஷவின் சுதந்திரா கட்சி எம்.பி-க்கள் மட்டுமே இந்தக் குழுவில் இருக்கிறார்கள்.
 
சிங்கள அமைப்புகள், கட்சிகள், புத்த பிக்குக்கள் ஆகிய மூன்றுக்கும் பிடிக்காத இந்த மாகாண இணைப்பைப் பரிந்துரைக்க, ராஜபக்‌ஷ கட்சி எம்.பி-க்கள் என்ன பைத்தியக்காரர்களா? அப்படியே அவர்கள் பரிந்துரைத்தாலும், அது இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமா என்ன? மொத்த சிங்கள எம்.பி-க்களும் இதனை எதிர்ப்பார்கள்.அப்படியே நிறைவேற்றப்பட்டாலும் இலங்கை உச்சநீதிமன்றம் அதனை ஏற்க வேண்டும். இதை எல்லாம் தெரிந்தே ராஜபக்‌ஷ, 13-வது சட்டத் திருத்தம் பற்றி பேசிவருகிறார்.
 
வடக்கு மாகாணத்துக்கு செப்டம்பர் மாதம் தேர்தல் வரப் போகிறது. யாராவது ஏமாந்த தமிழன் இதனை நம்பி, தன்னுடைய கட்சிக்கு வாக்களிக்க மாட்டானா என்ற நப்பாசையில் சொல்லப்படும் பசப்பு வார்த்தைகள். 'உனக்கு எந்த உரிமையும் தர மாட்டேன். ஆனால், எனக்கு ஓட்டுப் போடு’ - என்ற கேவலமான காட்சி இது.
 
'நீங்கள் எவ்வளவு கேவலமாகத் திட்டினாலும் சரி, எங்களுக்கு வாக்களியுங்கள்’ என்று நிற்கிறார் ராஜபக்‌ஷ.
 
தமிழர்கள் கேட்பது உரிமை. ராஜபக்‌ஷ கேட்பது பிச்சை!
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.