Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புரட்சித்தலைவரின் திரைப்படம் மீண்டும் மெகா சாதனை!

Featured Replies

சென்ற வாரம் சென்னையில் பாரத் மற்றும் ராஜ் திரையரங்குகளில் புரட்சித்தலைவரின் நாடோடி மன்னன் ரீ-ரிலீஸ் ஆகியது.... திவ்யா பிக்சர்ஸ் வெளியிட்டிருக்கிறார்கள்.... 1958ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் இப்போது ரிலீஸ் செய்யப்பட்டும் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த வாரம் ஆல்பட், கோபிகிருஷ்ணா மற்றும் கணபதிராம் திரையரங்குகளில் நாளை முதல் ரிலீஸ் ஆகிறது.... இன்றே ரிசர்வேஷனும் தொடங்கியிருக்கிறது....

இந்தப் படம் தான் புரட்சித்தலைவரை தமிழ்நாட்டின் மன்னன் ஆக்கியது என்று சொன்னாலும் மிகையில்லை.... இந்தப் படம் வெளியாவதற்கு முன்னர் புரட்சித்தலைவருக்கு அவ்வளவாக திரையுலக மார்க்கெட் இல்லையாம்.... சிவாஜி சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தாராம்.... எனவே தலைவரே இந்தப் படத்தை தயாரித்து, இயக்கி, நடித்தாராம்... இந்தப் படம் வெளியாகும் முன்னர் நண்பர்களிடம் தலைவர் சொன்னது, "இந்தப் படம் வெற்றி பெற்றால் நான் மன்னன்.... இல்லையென்றால் நாடோடி"

அபூர்வசகோதரர்கள் எப்படி கமல்ஹாசனுக்கு வெற்றிகரமான செகண்ட் இன்னிங்ஸாக அமைந்ததோ, அதுபோலவே இந்தப் படமும் புரட்சித்தலைவருக்கு மாபெரும் செகண்ட் இன்னிங்ஸாக அமைந்தது.... அவர் முதல்வர் ஆகும் வரையில் திரையுலகில் வெற்றிகரமாக இருக்க அச்சாரம் இட்டது நாடோடி மன்னன் தான்.... படத்திற்கு வசனம் எழுதிய கண்ணதாசனும் வெற்றிக்கு இன்னொரு காரணம்.....

சென்ற வாரம் படம் வெளியாகிறது என்று கேள்விப்பட்டதுமே படத்தை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் என்னை தொற்றிக் கொண்டது.... இந்தப் படத்தை 10 முறையாவது பார்த்திருப்பேன்.... (உலகம் சுற்றும் வாலிபன் குறைந்தது 50 முறை) எனக்குத் தெரிந்த நண்பர்களிடமும் படத்தை பார்க்கச் சொல்லி வற்புறுத்தினேன்.... சென்ற சனிக்கிழமை மாலை சைதாப்பேட்டை ராஜ் தியேட்டருக்கு படம் பார்க்கச் சென்றேன்.... ஏராளமான கூட்டம்.... புரட்சித்தலைவர் தோன்றும் காட்சிக்கு வழக்கம் போல கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது....

படத்தை முதல் தடவை பார்த்தவர்களுக்கு ஒரு ஏமாற்றம்.... படம் கருப்பு வெள்ளையில் தொடங்கியதால்.... இந்தப் படம் Partly Colour என்பது முன்னரே பார்த்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.... பல காட்சிகளில் விசில் சத்தம் கூரையைக் கிழித்தது.... குறிப்பாக அந்தக் காலத்திலேயே ஒகேனக்கலில் புரட்சித்தலைவர் கிளைமாக்ஸை எடுத்திருப்பார்.... மிகப் பொருத்தமாக ஒகேனக்கலை மினியேச்சர் செய்தும் சில ரிஸ்க்கான காட்சிகளை எடுத்திருந்தார்..... புரட்சித்தலைவர் இயக்கிய முதல் படம் இது.... அவர் இயக்கிய மூன்று படங்களுமே வசூலில் பெரும் சாதனை செய்தது தான்....

என் வற்புறுத்தலுக்கு இணங்கி வண்ணாரப்பேட்டையில் வசிக்கும் என் வடசென்னை நண்பன் சென்ற ஞாயிறு அன்று மாலைக் காட்சிக்கு பாரத் தியேட்டர் சென்று டிக்கெட் கிடைக்காமல் இரவுக்காட்சி பார்த்திருக்கிறான்.... புதுப்படங்களே தியேட்டர்களில் ஈயடித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சுமார் 48 ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்தப் படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பது மிகப்பெரிய சாதனை தான்....

பழைய படங்கள் மீண்டும் மக்களிடம் பேராதரவைப் பெறுவது என்பது ரொம்பவும் சிரமம்.... ஓராண்டுக்கு முன்னால் காமதேனு தியேட்டரில் இரத்தக் கண்ணீர் ரீ-ரிலிஸ் செய்தபோது போயிருந்தேன்.... அதுவும் அரங்கு நிறைந்து வெற்றிகரமாக ஓடியது.... படம் பார்க்க வந்தவர்கள் முற்றிலும் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது....

சில ஆண்டுகளுக்கு முன்னால் சாந்தி தியேட்டரில் சரஸ்வதி சபதம் ரிலீஸ் செய்தார்கள்.... பெற்றோருடன் போயிருந்தேன்.... பெரும் கூட்டம்.... ஆனாலும் பெரும்பாலும் பெருசுகள் கூட்டம் தான்.... திருவிளையாடல் இன்னமும் ஏதாவது தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டாலும் வசூலில் சாதனை புரிகிறது என்கிறார்கள்....

அதுபோலவே 10 ஆண்டுகளுக்கு முன்னால் ரிலீஸ் செய்யப்பட்ட உலகம் சுற்றும் வாலிபன் சென்னை தியேட்டர்களில் இணைந்து நூறு நாள் ஓடி சாதனை புரிந்தது....

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் முரட்டுக்காளை, பாயும்புலி, ராஜாதிராஜா, அண்ணாமலை, முத்து, படையப்பா படங்களும் எப்போது தியேட்டர்களில் போடப்பட்டாலும் வசூலில் சாதனை புரிவது வழக்கம்.... கமல்ஹாசனின் சகலகலா வல்லவன், நாயகன், அபூர்வசகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் படங்களுக்கும் இதே வசூல் திறன் உண்டு....

என் வீட்டுக்கு அருகிலே இருக்கும் நங்கைநல்லூர் வெற்றிவேல் தியேட்டரில் (சில ஆண்டுகளுக்கு முன் ரங்கா) 1982ஆம் ஆண்டில் இருந்து இதுவரை சகலகலா வல்லவன் 5 முறை போடப்பட்டிருக்கிறதாம்.... ஒவ்வொரு முறையும் அந்தப் படம் ஒரு மாதம் ஓடி சாதனை புரிகிறதாம்.... தியேட்டர் ஊழியர் ஒருவர் சொன்ன தகவல் இது....

சமீபத்தில் தேர்தல் நேரத்தில் கேப்டனின் 100வது படமான கேப்டன் பிரபாகரன் விருத்தாச்சலம் தொகுதியில் இருந்த சில தியேட்டர்களில் திரையிடப்பட்டு அரங்கு நிறைந்ததாக பத்திரிகைகளில் படித்தேன்... (டிக்கெட் விலை ரொம்பவும் குறைத்திருந்தார்கள் என்பது இன்னொரு காரணம்)..... இருப்பினும் கேப்டன் பிரபாகரன் இன்னமும் கூட சென்னை தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டால் நன்றாகவே ஓடும்.... நடிகர்களிலேயே 100வது படத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ஒரே நடிகர் கேப்டன் தான்.... இவரது 100வது படம் மட்டும் தான் வெள்ளிவிழா கொண்டாடி 250 நாள் ஓடியது....

நிறைய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடினாலும் நாடோடி மன்னனின் தற்போதைய வெற்றி தான் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது.... கிட்டத்தட்ட 48 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட படம்.... தலைவர் மறைந்து 20 ஆண்டுகள் ஆகியும் கூட இந்த அளவுக்கு வெற்றி பெறுகிறது என்றால்.... தலைவரின் "மாஸ்" உலகம் அழியும் வரைக்கும் இருக்கும் என்பதற்கு தக்கச் சான்று அல்லவா?

நட்புக்கு சிலை எடுத்த டாக்டர் கலைஞர்... புரட்சித்தலைவரின் நாற்பதாண்டு கால நண்பர்.... புரட்சித் தலைவருக்கும் கடற்கரைச் சாலையில் ஒரு சிலை எடுக்க வேண்டும்... இன்னும் 10 ஆண்டுகளில் வரப்போகும் புரட்சித்தலைவரின் நூற்றாண்டு விழாவினை அரசு விழாவாக கொண்டாட அரசாணை பிறப்பிக்க வேண்டும்.... இதுவே புரட்சித் தலைவரின் கோடிக்கணக்கான ரசிகர்களின் கோரிக்கை.....

(http://madippakkam.blogspot.com)

நானும் 92ல் ரத்தக்கண்ணீர் அடையார் கணபதிராமில் பார்த்தேன். திரையரங்கு நிறைந்த கூட்டம். 91ல் வெளியான கப்டன் பிரபாகரன் படத்தினை 92ல் கணபதிராமில் திரையரங்கு நிறைந்த கூட்டத்தோடு பார்த்தேன். 50,60ம் ஆண்டில் வெளிவந்த பாதாள பைரவி, கர்ணன், மாஜாபஜார் மீண்டும் யாழ்ப்பாணத்தில் 80 களில் திரையிட்டு அதிக மக்கள் சென்று பார்த்தார்கள். தேவதாஸ் திரைப்படமும் 80 களில் யாழ்ப்பாணத்தில் மீண்டும் வெளியிட்டு அதிக மக்கள் சென்று பார்த்தார்கள்

  • 4 weeks later...

±õ.ƒ¢.¬Ã¢ý À¼í¸Ç¢ø «ó¿¡Ç¢ø ±Ø¾ôÀð¼ ÀÄ ÒÃðº¢ôÀ¡¼ø¸û «Åáø ¾ÉÐ «Ãº¢Âø ¦ÅüȢ측¸

ÀÂý ÀÎò¾ôÀð¼§À¡¾¢Öõ,

±É즸ýɧ𠫍Š¡×õ þ측ÄòÐ ®Æò¾Á¢ÆÕ측¸ ±Ø¾ôÀð¼¨Å §À¡ý§È ¦¾ýÀθ¢ÈÐ.

¯¾¡Ã½Á¡¸ ÀÄ À¡¼ø¸¨Ç ¦º¡øÄÄ¡õ

¾¡Â¸ò¾¢ý ;ó¾¢Ã§Á ±í¸û ¦¸¡û¨¸

¾ýÁ¡Éõ ´ý§È¾¡ý ±í¸û ¦ºøÅõ

´üÚ¨Á¡ö À¨¸Å÷¸¨Ç µ¼ ¨Åô§À¡õ

¯¨ÆôÀ¡§Ä ¿õ¿¡ð¨¼ ¯Â÷ò¾¢ ¨Åô§À¡õ

(À¼õ-ÁШè Á£ð¼ Íó¾ÃÀ¡ñÊÂý.)

§¾¡ð¼í¸¡ì¸ §À¡ð¼ §ÅÄ¢

À¢¨Ã ¾¢ýÀ§¾¡

«¨¾ §¸ûÅ¢ §¸ð¸ ¬Ç¢øÄ¡Áø

À¡÷òÐ ¿¢üÀ§¾¡

¿¡ý ´Õ¨¸ À¡÷츢§Èý

§¿Ãõ ÅÕõ §¸ð¸¢§Èý

â¨ÉÂøÄ ÒÄ¢¾¡ý ±ýÚ

§À¡¸ §À¡¸ ¸¡ðθ¢§Èý

§À¡¸ §À¡¸ ¸¡ðθ¢§Èý

(À¼õ-â섡측Ãý)

¿ÁÐ ¦ÅüÈ¢¨Â ¿¡¨Ç

ºÃ¢ò¾¢Ãõ ¦º¡øÖõ

þôÀ¨¼ §¾¡ü¸¢ý

±ôÀ¨¼ ¦ÅøÖõ

¿£¾¢ìÌ þÐ¦Å¡Õ §À¡Ã¡ð¼õ

þ¨¾ ¿¢îºÂõ ¯Ä¸õ À¡Ã¡ðÎõ

(À¼õ-¯Ä¸õ ÍüÚõ šĢÀý)

  • 3 weeks later...

என்னைக் கவர்ந்த வரிகள்:

மண்குடிசை வாசலென்றால்

தென்றல் வர வெறுத்திடுமா

மாலை நிலா ஏழையென்றால்

வெளிச்சந் தர மறுத்திடுமா

எனக்காக ஒன்று உனக்காக ஒன்று

ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை

இல்லையென்போர் இருக்கையிலே

இருப்பவரும் இல்லையென்பார்

மடிநிறையப் பொருளிருக்கும்

மனம் நிறைய இருளிருக்கும்

எனக்காக ஒன்று உனக்காக ஒன்று

ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை

மேலும்:

வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுண்ணு

விளையாடப் போகும்போது சொல்லிவைப்பாங்க

உன் வீரத்தை முளையினிலேயே கிள்ளிவைப்பாங்க

வேலையற்ற வீணர்களின் தேவையற்றை வார்த்தைகளை

வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே நீ

வீட்டுக்குள்ளே அழுதுகிடந்து விம்பிவிடாதே

நீ விம்பிவிடாதே.

ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி

உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீதரும் மகழ்ச்சி

காலம் கூறும் பாடம் கேழு நாளும் வரும் பயிற்சி

உன் நரம்போடுதான் பின்னிவளரணும் தன்மன உணர்ச்சி

நான் அண்மையில் கேட்ட பாடல் ஒன்றிலிருந்து சில அருமையான வரிகள்:

நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்

நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்

சிலர் அல்லும் பகலும் தெருக்கல்லாயிருந்துவிட்டு

அதிஸ்டமில்லையென்று அலட்டிக்கொண்டார்

விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்

இங்கு குரட்டை விட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்

தூங்காதே தம்பி தூங்காதே

நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே

தூங்காதே தம்பி தூங்காதே.

ஒரு படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான்

உயர் பள்ளியில் தூங்கியவன் கல்வியிழந்தான்

ஒரு கடைதனில் தூங்கியவன் முதலிழந்தான்

கொண்ட கடமையில் தூங்கியவன் கொள்கையிழந்தான்

சில பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால்

பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா

தூங்காதே தம்பி தூங்காதே

நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே

தூங்காதே தம்பி தூங்காதே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.