Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டப் பெயரில் அரச பங்காளிகள் தேர்தல் பிரச்சாரத்தில் -

Featured Replies

வடிவேலு ஆனைமுகனும் சந்திரசேகரம் துர்க்கேஸ்வரனும் குற்றச்சாட்டு-

karai2_CI.jpg

 

மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டமெனும் பேரில் அரச தரப்பு பங்காளிகள் தேர்தல் பிரச்சாரத்தில் குதித்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. நேற்றைய தினமான ஞாயிற்றுக்கிழமை காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமென்ற பெயரில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூட்டமொன்றை கூட்டியுள்ளார். முற்றுமுழுதான தேர்தல் பிரசாரக்கூட்டமாக நேற்று காரைநகரில்  நடத்தப்பட்டதாகவும் விடுமுறை தினத்தில் அதிகாரிகள்  அழைக்கப்பட்டதாக கூட்டமைப்பு சார்பு காரைநகர் பிரதேச சபை தலைவர் வடிவேலு ஆனைமுகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

காரைநகர் பிரதேச சபை தமிழ்க் கூட்டமைப்பு வசம் உள்ளபோதும் பிரதேச சபையினருக்கு இக்கூட்டத்துக்கான உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்படவில்லை. எனினும் சபையின் செயலாளருக்கு மட்டும் தொலைபேசியில் அறிவித்ததாக கூறுகிறார்கள். மக்களால் தெரிவு செய்யப்பட்ட கூட்டமைப்பு பிரதிநிதிகளிற்கு அழைப்பு விட வேண்டாமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணித்திருந்ததாக பிரதேச செயலர் தம்மிடம் தெரிவித்ததாகவும் ஆனைமுகன் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று அவர் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் மேலும் தெரிவிக்கையில்  மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விளையாட்டுக் கழககங்களை சேர்ந்தவர்களென பலரையும் அழைத்து வாக்களிக்க கோருகின்றனர். மற்றொரு பக்கம் மக்களிடம் அடாத்தாக காசு பறிப்பதிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். சமுர்த்தி பணியாளர்களை தினமுரசு கட்சிப்பத்திரிகை விற்க நிர்ப்பந்திக்கின்றனர் எனவும் அங்கு ஆனைமுகன் மேலும் தெரிவித்தார்.

அதே வேளை மக்களின் வாக்குகளை பெற்று பேரினவாத அரசின் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் துணை போவதாக காரைநகர் பிரதேசசபை துணைத் தவிசாளர் சந்திரசேகரம் துர்க்கேஸ்வரனும்  குற்றஞ்சாட்டியுள்ளார். 

நேற்று இடம்பெற்ற ஒருங்கிணைப்பு மீளாய்வுக் கூட்டம் குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர், "இந்த மீளாய்வுக் கூட்டத்துக்கு அரச அதிகாரிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்ககள் அழைக்கப்பட்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அழைக்கப்படவில்லை. இங்கு அபிவிருத்தி குறித்து கண்துடைப்பாகவே ஆராயப்பட்டது. முற்றுமுழுதாக அமைச்சரின் தேர்தல் பிரசார மேடையாகவே இந்த நிகழ்வு பயன்படுத்தப்பட்டது. அமைச்சரின் தேர்தல் பிரசாரங்களை நாம் முற்று முழுதாக ஒலிப்பதிவு செய்துள்ளோம். அதனை தேர்தல் ஆணையாளரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்" எனவும் அவர் தெரிவித்தார்.

"மீளாய்வு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் என்ற பெயரில் தேர்தல் பிரசாரம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக நாங்கள் தேர்தல் ஆணையாளருக்கு முன்னரே முறைப்பாடு செய்திருந்தோம். அவர் அதனைக் கவனித்து நடவடிக்கை எடுப்பதாக எங்களிடம் தெரிவித்தார்" எனவும் அவர் இன்றைய ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/95185/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.