Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் படைக்குறைப்பு காரை நகரில் அபிவிருத்தி என்ற அரசின் பம்மாத்து 35ஏக்கர் நில அபகரிப்போடு அம்பலம்

Featured Replies

வடக்கில் படைக்குறைப்பு காரை நகரில் அபிவிருத்தி என்ற அரசாங்கத்தின் பம்மாத்து 35ஏகர் நில அபகரிப்போடு அம்பலமாகியது - 

 
படைத்தளத்திற்கு நில ஆக்கிரமிப்பு மறுபுறம்
வடக்கில் படைக்குறைப்பு பற்றிய  பெரும் பிரச்சாரங்களை அரசாங்கம் முன்னெடுத்து வரும் நிலையில் சுமார் 35 ஏக்கர்  நிலப்பரப்பினை ஆக்கிரமித்து பாரிய இராணுவத்தளமொன்று காரை நகரில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. 
 
பொதுமக்களது காணிகள் மற்றும் காரைநகர் பிரதேச சபைக்கு சொந்தமான  காணிகளென இதற்கென ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
 
காரைநகரின் பிரபல கசூரினா கடற்கரை ஓரமாக வரலாற்று பெருமை மிக்க ஈழத்து சிதம்பரம் ஆலயத்தை அண்மித்த சூழலில் இப்படைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த கடற்கரையில் புதிய நட்சத்திரவிடுதிகளை அமைப்பது உள்ளிட்ட முயற்சிகளை தொழில் முயற்சியாளர்கள் கைவிட்டு வெளியேறி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
 
ஏற்கனவே இலங்கை கடற்படையின் பாரிய கடற்படைத்தளமொன்று காரைநகரிலேயே அமைந்துள்ளது. அதே போன்று அருகாக மாதகல் பகுதியிலும் காங்கேசன் துறையிலும் படைத்தளங்கள் அமைந்துள்ள நிலையில் மேலதிகமாக இப்புதிய முகாம் அமைக்கப்பட்டுள்ளது. 
 
குறிப்பாக சீன அரசினது உதவியுடனான கட்டுமானப் பொருட்களைக் கொண்டு இப்படைத்தளம் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரியவருகின்றது.
கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழுள்ள காரைநகரில்  பெரும்பகுதி பொதுமக்களிற்கு விடுவிக்கப்படாது ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதுடன் அப்பகுதிகிளில் நட்சத்திர அந்தஸ்த்திலான பொழுது போக்கு விடுதிகள் கடற்படையினரால் கட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.