Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் உருவாக்கிய சாதனைப் பெண்.

Featured Replies

உடலில் உள்ள பாகங்களை இழந்து அல்லது போரில் கடும் பாதிப்புக்களுக்கு உள்ளாகி அல்லது உளவியல் ரீதியான இழப்புக்களுக்கு உள்ளாகி அல்லது தனிமைப்படுத்தப்பட்டு அல்லது போரின் பிறகு வறுமையைச் சுமந்து இப்படி பல துயரம் மிகுந்த பெண்களை கொடுத்த போர் சில வலிய பெண்களையும் உருவாக்கியிருக்கிறது. கண்ணுக்கு முன்னால் கண்ட அவலங்கள்தான் இந்த சமூகத்திற்காக பணியாற்ற வேண்டும் என்கிற உந்துதலைத் தந்தது என்று சொல்லுகிறார் வன்னியைச் சேர்ந்த தவசிறி சாள்ஸ் விஜயரத்தினம். 

வன்னியில் கிளிநொச்சி நகரத்திற்கு அண்மையில் உள்ள திருநகரில் வசித்து வரும் தவசிறி சாள்ஸ் விஜயரத்தினத்திற்கு ‘என்’ சமாதாத்திற்கான சர்வதேச விருது கிடைத்திருக்கிறது. ஆசிய பிராந்திய நாடுகளில் இருந்து தேசிய மட்டத்தில் கணிக்கக்கூடிய வகையில் சமாதானத்தையும் மக்களின் மாற்றங்களையும் ஏற்படுத்துவதற்காக உழைக்கும் தலைவர்களாக பெண்களைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கவே என் சமாதான விருது வழங்கப்படுகின்றது. 

தவசிறியின் வீடு ஒரு தற்காலிக வீடு. தறப்பால்களால் சுற்றி அடைக்கப்பட்டிருக்கின்றன. அவை காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்கு முன்பாக அவர்கள் வாழ்ந்த வீடு அழிந்து போக அதன் மேல் இப்பொழுது அந்த தற்காலிக வீட்டை அமைத்திருக்கிறார்கள். ஆசிய பிராந்தியத்தில் இந்த விருதுபை; பெறும் பெண்களில் வீடுகளில் மிகவும் நலிவான வீடாகவே தவசிறியின் வீடே இருக்கலாம். வன்னிக்கு மாத்திரமின்றி முழுத் தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக இந்த விருது இவருக்கு கிடைக்கிறது. 

இந்தோனேசியா, இலங்கை, கிழக்குத் திமோர், நோபாளம், ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ் முதலிய ஏழு நாடுகளைச் சேர்ந்த பெண்களுக்கு இந்த விருது வழங்கப்படுகின்றது. இலங்கையில் முன்னிலை வகிக்கும் பல பெண்கள் இந்த விருதுக்காக போட்டி வகித்த பொழுதும் தவசிறிக்கே இந்த விருது கிடைத்திருக்கிறது. கிளிநொச்சி நகரில் ஒரு சைக்கிளில் கோவைகளை சுமந்தபடி தவசிறி திரிந்துகொண்டிருப்பதை பலரும் பார்த்திருக்க்கூடும். 

பதினொரு வருடங்களின் முன்பாக கணவரால் கைவிடப்பட்ட தவசிறி தனது நான்கு பிள்ளைகளுடன் ஆண்துணையின்றி வாழ்ந்து வந்தார். வறுமையிலும் தனது பிள்ளைகளை கல்வி கற்பிக்க வேண்டும் என்ற அவாக் கொண்டவர். அவரது மூன்று பிள்ளைகளும் பல்கலைக்கழத்திற்கு தெரிவானவர்கள். ஒரு மகன் பல்கலைக்கழக பட்டப்படிப்பை நிறைவ செய்துவிட்டார். மற்றையவர் இப்பொழுது படித்துக் கொண்டிருக்கிறார். இறுதி மகன ஏழாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறார்.

போரில் தொடர்ச்சியாக பல்வேறு துயரங்களுக்கு முகம் கொடுத்தவர். சத்ஜெய இராணுவ நடவடிக்கையிலும் பின்னர் முள்ளிவாய்க்கால் யுத்தத்திலும் பல தடவைகள் இடப்பெயர்வுகளைச் சந்தித்து தனது வீடு வாசல், சொத்துக்கள் என்று எல்லாவற்றையும் இழந்த நிலையில் முள்வேலி முகாமிலிருந்து தனது சொந்த ஊருக்கு மீண்டு வந்து வாழ்க்கையை தொடங்கியிருக்கிறார். 

நான்கு பிள்ளைகளுடன் கணவனின் துணையற்றிருந்த தவசிறி போரின் மத்தியில் சமூகத்தில் எதிர்கொண்ட போராட்டம்தான் அவரை சாதனைப் பெண்ணாக்கியிருக்கிறது. சிறிய வயதிலிருந்தே சமூக சேவை செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் தனக்கிருந்தாகச் சொல்லும் தவசிறி அந்தப் பணியை ஆற்ற வேண்டிய நாட்டுச் சூழல் ஏற்பட்டிருந்தது என்றும் குறிப்பிடுகின்றார். தனது பிள்ளைகள் தனது ஆர்வத்தை ஊக்குவிப்பதாகச் சொல்லுகிறார். தவசிறியின் இறுதிமகன் அவரது பணிக்கான எல்லா ஒத்தாசைகளையும் மகிழ்வோடு செய்து கொண்டிருந்தார். 

அவர்கள் வசிப்பதற்கு எந்த வசதியும் இல்லாத அந்த வீட்டில் ஒரு மேசையில் தனது பணிகளுக்கான கோவைகளை எல்லாம் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார் தவசிறி. திருநகர் மாதர் சங்கத்தில் செயலாளராகவும் கிளிநொச்சி மாவட்ட மாதர் சங்கங்களின் பொருளாராகவும் செயற்படுகிறார். தன் வாழ்வின் முழுப்பணி இதுவே என்பதைப்போல சமூகப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்துகிறார் தவசிறி. 

தன்னைப்போலவே ஆண் துணையற்ற பெண் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் உதவுகின்ற உன்னதப் பணியில்தான் இவர் ஈடுபடுகின்றார். பசிப்பவனுக்குத்தான் பசியின் அருமை தெரியும் என்று குறிப்பிடும் தவசிறி கிராம மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும் பெண்தலைமைத்துவக் குடும்பங்களைச்சேர்ந்த சிறுவர்களும் பெண்களும் நலன் பெறும் திட்டங்களை முன்னெடுக்கும் திட்டவரைபுகளை செய்வதாகவும் சொல்கிறார். 

பெண்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பல வகையான பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் நடவடிக்கையிலும் ஈடுபடுகின்றார். காவல் நிலையத்திற்குப் போக அஞ்சும் பெண்களின் பிரச்சினைகளை தீர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை சம்பந்தப்பட்டவர்களை அணுகிச் செயற்படுவதாகவும் தவசிறி குறிப்பிடுகின்றார். பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பானவர்களை அணுகி தீர்த்து வைப்பதே இவரது நோக்கமாகும். 

பெரும் படிப்புக்களைப் படித்து பட்டங்களைப் பெற்று பெரும் பதவிகளில் இருந்து பெருமளவு ஊதியத்தைப் பெற்றுக்கொண்டிருப்பவர்கள் தமது கடமையை சரிவரச் செய்யாது நமது சமூகம்மீது அக்கறையையும் பார்வையையும் செலுத்தாது நமது சமூகத்தையே நோகின்ற பாதிக்கச் செய்கின்ற இக்காலத்தில் ஊதியமற்ற சமூகப் பணியில் இடையராது ஈடுபட்டு பிறரது வாழ்வின் சிரிப்பை கண்டு மகிழ்ந்து வாழ்கிறார் தவசிறி என்ற வன்னிப்பெண். 

போரால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட பெண்களும் சிறுவர்களும்தான் அதிகமாக இருப்பார்கள். ஒரு சமூகத்தில் பெண்களும் சிறுவர்களும் பாதிக்கப்பட்டிருந்தால் அது சமூகத்தின் பெரும்பாதிப்பாகும். அதுவே அச்சமூகத்தின் வளர்ச்சியை கடுமையாகவும் பாதிக்கும். இங்கு பாதிக்கப்பட்ட சமூகத்திற்காக பணி செய்யும் உணர்வும் அதற்கான சிந்தனைகளும் கொண்ட சாதனைப் பெண்ணாக திகழும் தவசிறி சாள்ஸ் விஜயரத்தினம் நம்பிக்கை தருகின்றார். 

பெண் சமூகத்தை உருவாக்குபவள். போரில் எல்லாமும் நிர்மூலமாகிய வன்னி மண்ணில் இம் மாதிரியாக சுயாதீனமாக எழும் பெண்களே அதிகமும் தேவைப்படுகின்றனர். போரில் நிர்மூலமாகிய வன்னி மண் உயிர் பெற இம் மாதிரியான பெண்களே அதிகமும் தேவைப்படுகின்றார்கள். மிகவும் நலிவான ஒரு தற்காலிக வீட்டிலிருந்து ஒரு வலிய சாதனைப் பெண்ணைக் காணுகின்ற பொழுது எமது குழந்தைகளும் தாய்மார்களும் அழிந்த சமூகத்தை உயிர்த்தெழச் செய்வார்கள் என்றகிற நம்பிக்கை பிறக்கிறது. 

குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/95326/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதனைப் பெண்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.