Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்நோவ்டென் எதிர்காலம் இருளா? ஒளியா? சவாலுக்குத் தயாராகுமா அமெரிக்கா? - சோழ.கரிகாலன்

Featured Replies

 

ஸ்நோவ்டென் வேட்டை - 6

snowden%202.jpgமொஸ்கோவின் ஸெரமெட்டியோவோ விமான நிலையத்தில் தொடர்ச்சியாக ஒலித்துக் கொண்டிருந்த ரஷ்யக் காவற்துறையினரின் அபாயச்சங்கொலி ஒருவாறாக நின்றுள்ளது. கிட்டத்தட்ட ஆறு கிழமைகளின் பின்னர் கடந்த வியாழக்கிழமை (01.08.2013) அமெரிக்காவின் கோரிக்கைளையும் கெஞ்சல்களையும் நிராகரித்து ஸ்நோவ்டென்னிற்கு ரஷ்யா தற்காலிகத் தஞ்சத்தினை ஒரு வருடத்திற்கு வழங்கி உள்ளது.

விமான நிலையக் கட்டடத்தை விட்டு வெளியேறிய ஸ்நோவ்டென்னை விபரங்கள் எதுவும் தெரிவிக்கப்படாத இடத்திற்கு ரஷ்ய அரசு கொண்டு சென்றுள்ளது. விமான நிலையச் சரித்திரம் முடிவடைந்தாலும் வெளியே சென்ற ஸ்நோவ்டென் சரித்திரம் இன்னமும் அதிகமாகத் தொடர்கின்றது. அமெரிக்கக் கொங்கிரஸ் சபை உறுப்பினர்கள் ஸ்நோவ்டென்னிற்குத் தஞ்சம் வழங்கியதால் வரும் பிரச்சினைகளிற்கு ரஷ்யாவே பொறுப்பேற்க வேண்டும் என எச்சரித்துள்ளனர். அத்தோடு செப்படெம்பர் மாதம் ரஷ்யா செல்ல இருந்த ஓபாமாவின் பயணமும் இரத்துச் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்டுகின்றது.

ஸ்நோவ்டென்னிற்கு உதவி புரியும் பிரபல் வழக்கறிஞரும் ரஷ்யப் நாடாஞமன்ற இல்லத்தின் ஆதரவு பெற்றவருமான அனட்டோலி குச்செரெனா, ஸ்நோவ்டென்னிற்கு வழங்கப்பட்டிருக்கும் ரஷ்யக் குடிவரவுத் திணைக்களத்தின் அனுமதிப்பிரதியைக் காட்டி இதன் மூலம ஸ்நோவ்டென் வெளியே சென்று வாழ சகல உரிமையும் உள்ளது என்று கூறினார். அத்தோடு ரஷ்யாவின் புலனாய்வுத்துறையான FSB யின் நெருங்கிய நபரான குச்செரெனா ஸ்நோவ்டென்னிற்கு வழங்கப்பட்டிருக்கும் ஆவணமானது ஒரு ரஷ்யக் குடிமகனுக்குரிய அனைத்து உரிமைகளையும் ஸ்நோவ்டென்னிற்கு வழங்குவதாக ரஷ்யக் குடிவரவுத் திணைக்களம் உறுதி அறித்துள்ளதாகத் தெரிவித்தார்.

அத்தோடு ஸ்நோவ்டென் தனது வாழ்க்கையை ரஷ்யாவில் வாழ்வதற்கான ஒழுங்குகளைச் செய்வதாகவும் அவர் ஒரு வேலையைத் தேடிக்கொண்டு தன்னைத் திடப்படுத்த உள்ளார் என்றும் அவரது தஞ்ச அனுமதி ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஸ்நோவ்டென் தான் வாழ்வதற்கான இடத்தைத் தெரிவு செய்துள்ளதாகவும் அவரின் பாதுகாப்புக் கருதி அவ்விடம் பற்றிக் குறிப்பிடமுடியாது என்றும் கூறினார்.

அமெரிக்கா தனது சி.ஐ.ஏ வின் இரகசிய நடவடிக்கையில் இறங்குவோரின் பாதுகாப்பிற்காக உலகின் பல பாகங்களிலும் SAFEHOUSE  ஒன்றையோ அல்லது பலவற்றையோ அமைப்பது வழக்கம். இது சாதாரண இடம்போல் காட்சியளித்தாலும் மிகவும் பாதுகாப்பை வழங்கக்கூடிய நவீன வசதிகளையும் ஆயுதங்களையும் கொண்டது. ஸ்நோவ்டென் விடயத்தில் FSBயின் பங்கு பெரிதாக இருப்பதால் அப்படியான SAFEHOUSE களை ரஷ்யப் புலனாய்வுத்துறையும் பல இடங்களில் வைத்திருக்கும். ஆகையால் அப்படியான ஒன்றிற்குள் ஸ்நோவ்டென் பாதுகாக்கப்பட்டால் CIA அல்லது NSA நெருங்குவதென்பது குதிரைக்கொம்பாகவே அமையும்.

ரஷ்யாவின் பிரபல சமூகவலைத்தளமான VKONTAKTE யின் நிறுவனர் பவல் டியுரொவ் ஸ்நோவ்டென்னிற்குத் தனது சமூகவலைத்தளத்தில் ஒரு வேலை தரத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார். இவ்வேலையின் மூலம் தனது சமூகவலைத்தளத்தின் மில்லியன் கணக்கான பயன்பாட்டார்களின் தரவுகளை ஸ்நோவ்டென் பாதுகாக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார். பெரும் பரபரப்புக்களை விரும்பும் பவல் டியுரொவ் வேலை அறிவிப்பையும் தனது விளம்பரத்திற்காகப் பயன்படுத்தி இருக்கலாம் என கார்டியன் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

கிரெம்ளின் ஸ்நோவ்டென்னின் மன உறுதியை வளர்க்கும் செய்றபாடாக மட்டுமே இந்தக் காரியத்தைச் செய்துள்ளதாகவும் இலத்தீன் அமெரிக்கா நோக்கிய ஒரு பாதுகாப்பான பயணம் மறக்கப்பட்ட நிலையில் அவரை விமான நிலையத்திலேயே தொடர்ந்தும் வைத்திருப்பது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ரஷ்யாவின் முகத்தை அசிங்கப்படுத்தி விடும் என்பதாலும் அவருக்குத் தஞ்சம் வழங்கியதாகவும் ரஷ்யப் பத்திரிகைகள் விமர்சித்துள்ளன.

‘இணைய யுகத்தில் கொல்லப்பட்ட தனிமனித சுதந்திரம்’ என ஆங்கிலத்தில் ஒரு வழக்குமொழி உள்ளது. அதனையே அமெரிக்கா இன்று செயற்படுத்தி வருகின்றது. மற்றைய நாடுகளை முக்கியமாக மத்திய கிழக்கு மற்றும் அரபு நாடுகளை அதன் மனித உரிமை மீறலுக்காகத் தண்டிக்க வேண்டும் என்று குரல் கொடுக்கும் அமெரிக்கா, முழுமையான தனிமனித சுதந்திரக் கொலையயைத் தனது உளவு நடவடிக்கைள் மூலம் செய்து வருகின்றது.

ஸ்நோவ்டென்னின் நடவடிக்கைகள் அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை எந்த விதத்திலும் பாதிக்கவோ அமெரிக்க மக்களுக்கு எந்த விதப் பாதிப்பையோ ஏற்படுத்தவில்லை. மாறாக ஒபாமா அரசின் தனிமனித சுதந்திரக் கொலையையே தோலுரித்துக் காட்டியுள்ளது. ஸ்நோவ்டென்னிற்குத் தஞ்சம் வழங்குவதன் மூலம் தான் மனித உரிமைகளின் காவலன் என்ற தோற்றத்தை உலகிற்கு எடுத்துக் காட்ட ரஷ்யா முயன்றுள்ளது. தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் பேச்சுரிமை மறுப்புக் குற்றத்தை அதன் மூலம் துடைத்தெறிய ரஷ்யா முயன்றுள்ளது. ஒரு முன்னை நாள் நகைச்சுவை ஒன்று உண்டு. ரஷ்யாவின் சுதந்திர பேச்சுரிமையை விமர்சிப்பதற்காக அமெரிக்கர் ஒருவர் ரஷ்யர் ஒருவரிடம் ‘நான் வேண்டுமானால் வெள்ளை மாளிகை முன்னால் நின்று அமெரிக்க ஜனாதிபதி ஒழிக என்று கத்த முடியும். அந்த அளவிற்கு அமெரிக்காவில் பேச்சுரிமைக்கு மதிப்பு உண்டு’ என்று கூறியுள்ளார். அதற்கு அந்த ரஷ்யரும் ‘ நான்கூட கிரெம்ளின் மாளிகை முன் நின்று அமெரிக்க ஜனாதிபதி ஒழிக என்று கத்த முடியும். அதற்கு எந்நாட்டிலும் பேச்சுரிமை உள்ளது’ என்று சொன்னாராம்.

அன்று விமர்சிக்ப்பட்ட பேச்சுரிமை தலைகீழாகி கருத்துரிமையும் பேச்சுரிமையும் அமெரிக்காவால் மறுக்கப்பட்ட ஸ்நோவ்டென்னிற்கு ரஷ்யா அடைக்கலம் கொடுத்து தன் நிலையை உயர்த்தி உள்ளது.

‘2006ம் ஆண்டு ஸ்நோவ்டென் ஒரு இணையக்கருத்துத் தளத்தில் NSA வின் உளவு பார்க்கும் நடவடிக்கையின் மேல் அதிருப்தியாக இருப்பதாகக் கூறித் தான் ஒரு சுதந்திரமான கருத்துக்களைத் துணிந்து வெளியிடும் பிரஜை எனக்காட்டிக் கொண்டார்.

‘2007 இல் சி.ஐ.ஏ வின் தொழில்நுட்ப நடவடிக்கை முகவராக ஒரு உருமறைப்பு உளவு நடவடிக்கைக்காக இராஜதந்திர அலுவலகர் என்ற போர்வையில் அனுப்பி வைக்கப்பட்டார்.

‘2010 இல் NSA வினால் ஒரு கணினித் தகவல்களைத் திருடும் விற்பன்னராகப் (Hacker) பயிற்றுவிக்கப்பட்டார். அதன் மூலம் இன் கணினி அமைப்பினுள் புகுந்து மிகவும் இரகசியமாகப் பாதுகாக்கப்பட்ட ஆவணங்களைத் திருடும் அளவிற்குத் தன் திறமையை வளர்த்துக் கொண்டார். இதன் மூலமே இன்று தன்னிடம் இருக்கும் ஆதாரங்களையும் பெற்றுக் கொண்டார்.

‘2013 ஏப்ரல் மாதம் ஸ்நோவ்டென் கணினி ஒருங்கியத்தின் உட்கட்டமைப்பு ஆய்வாளராகப் பணியிலமர்த்தப்பட்டார். இணையத் தொடர்பு மற்றும் தொலைபேசித் தொடர்பாடல்களை எப்படி உளவு பார்க்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. Booz Allen எனப்படும் ஒரு உருமறைப்பு நிறுவனம் மூலம் NSA உலகம் முழுவதும் உளவு பார்க்கத் தேவையான கணிணிகளையும் இணையத் தொடர்பாடல்களையும் பட்டியலிடும் பொறுப்பு இவரிடம் வழங்கப்பட்டது.

‘இதன் மீது அதிருப்தி கொண்ட ஸ்நோவ்டென் உலகெங்கிலும் கிட்டத்தட்ட பத்தாயிரம் குறியீட்டு வடிவம் மூலம் பாதுக்காக்கப்பட்ட முக்கிய NSA வின் இரகசிய ஆவணங்களைத் தறைவிறக்கம் செய்து கொண்டார். மே 20ம் திகதி சீனா சென்ற ஸ்நோவ்டென் முக்கிய ஊடகவியலார்களை கிளென் கிறீன்வால்ட் தலைமையில் சந்தித்ததிலிருந்து அமெரிக்கா தனது ஸ்நோவ்டென் வேட்டைய ஆரம்பித்தது.

இன்று ரஷ்யாவில் அடைக்கலம் அடைந்திருக்கும் ஸ்நோவ்டென் அங்கு மிகப் பிரபல்யமான புள்ளியாகவும் மாறியுள்ளார். ஆனாலும் அவரின் எதிர்காலம் அவரின் கையில் இருக்காது என்பதையே ரஷ்யாவின் வரலாறு காட்டுகின்றது. ஸ்நோவ்டென் மிகவும் சிக்கலான சவால்களைச் சந்திக் வேண்டி வரும் என ரொய்ட்டர்ஸ் நிருபர் அலிசா கார்போனல் கூறி உள்ளார். இவரின் எதிர்காலம் ரஷ்ய - அமெரிக்க இராஜதந்திரப் போருக்குள் சிக்கி உள்ளது. 

முன்னை நாள் ரஷ்ய உளவுத்துறை அதிகாரி ஒருவர் ‘ஸ்நோவ்டென் கிரெம்ளின் பிடித்திருக்கும் மிகவும் பெறுமதி வாய்ந்த ஒரு தகவற்களஞ்சியம்’ என்று கூறி உள்ளார். தமது நாடுகளுக்கு எதிராகத் திரும்புபவர்களுக்கு நீண்டகாலத்திற்கு மன அழுத்தம் இருந்து கொண்டே இருக்கும். அது வாழ்நாள் முழுவதும் நீடிக்கலாம்.

ஏற்கனவே இரண்டாம் உலகப் போரின் பின்னாலும் பனிப்போரின் பின்னாலும் 1960களில் NSA வின் தகவற்குறியீட்டு மாற்றாளர்களாக இருந்த William Martin  மற்றும் Bernon Mitchel ஆகியோர் அமெரிக்கா தனது சக நாடுகள் மீதே வேவுபார்ப்பதை வெளிப்படுத்தி ரஷ்யாவில் ஸ்நோவ்டென்னிற்கு அரை நு£ற்றாண்டுகள் முன்பே தஞ்சமடைந்தனர். ஆனால் சில காலத்திற்குப் பின்னர் இவர்கள் அடையாளமிழந்தே போனார்கள்.

இதே போல் பிரித்தானியாவின் உளவுத் தகவல்களை வெளியிட்ட பலரும் ரஷ்யாவிலேயே தஞ்சம் அடைந்தனர். ரஷ்யப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டவர்கள் சாதாரண வாழ்க்கையை இலகுவாக கொண்டு சென்றுள்ளனர். மற்றவர்கள் அழுத்தங்களினு£டு தன்னிலை தொலைந்தவர்களாகவே ஆகி உள்ளனர். ஆனாலும் இப்பொழுது கிட்டத்தட்ட ஒரு நேர வெடிகுண்டைப் போல் இருக்கும் ஸ்நோவ்டென்னை மேலும் பாதுகாப்பாக வைத்திருக்கக் கூடும். ஊடகங்கள் இவரைப் பிரபலப்படுத்தக் கூடும். ஸ்நோவ்டென் இதுவரை வெளியிட்டதை விட வெளியிடாமல் வைத்திருக்கும் தகவல்கள் அமெரிக்க அரசாங்கத்தையும் ஒபாமா நிர்வாகத்தையும் சுக்கு நு£றாக உடைக்கக் கூடியவை.

ஆனாலும் அவை பல அடுக்குக் குறியீட்டு அலகுகளால் வேறு ஒருவராலும் களவாடப்பட முடியாதவாறு பாதுகாக்கப்பட்டுள்ளது. அத்தோடு ஸ்நோவ்டென் உருமறைப்பு இரகசிய நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டபோது எந்த விதமான சித்திரவதைகளையும் தாங்கும் முறையைக் கற்பித்துள்ளனர். அதனால் ஸ்நோவ்டென் வெளியிடும் வரை அந்தத் தகவல்கள் புத்திரமாகவே இருக்கும். அதுவே ஸ்நோவ்டென்னையும் தொடர்ந்து பாதுகாப்பாக வைத்திருக்கும். ஸ்நோவ்டென் மன அழுத்தங்களுக்கு ஆளாகிக் காணமற் போகின்றாரா அல்லது திடமான நிமிர்ந்து நிற்பாரா? அமெரிக்கா இவர் இருப்பிடத்தை அணுகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி: ஈழமுரசு

 

http://www.sankathi24.com/news/32366/64//d,fullart.aspx

  • கருத்துக்கள உறவுகள்

மிகுதியான பேரம் பேசலுடனுயே அவர் உள்நுழைந்துள்ளார் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 கள்ளன் பொலிஸ்வீட்டிலை போய் ஒளிச்சகதைதான் சிங்கனுக்கும்......... :D    05082013%20010.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.