Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா சபையையே ஏமாற்றிய மகிந்தவும் சிங்களப் படையினரும்

Featured Replies

navi%20vanni.jpgஉலகத்தின் மிகப் பெரிய சபையாகிய ஐக்கிய நாடுகள் சபையையே மகிந்தவும் சிங்களப் படையினரும் ஏமாற்றிக்கொண்டிருப்பதாக வன்னிப்பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஐ.நாவின் மனித உரிமைக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை சிறிலங்காவில் நிற்கின்ற போதே ஐ.நாவிற்கு எதிரான செயற்பாடுகளில் மகிந்தவும் படையினரும் ஈடுபட்டுள்ளனர் என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

வன்னியில் இருந்த படையினரின் சில காவலரண்கள் நவநீதம்பிள்ளையின் வருகையை முன்னிட்டு அகற்றப்பட்டிருந்தன. அந்த காவலரண்கள் நவநீதம்பிள்ளை வன்னியை விட்டு அகன்றவுடன் மீண்டும் அமைக்கப்பட்டு வருகின்றமை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே வன்னி மக்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

நவநீதம்பிள்ளையின் வருகையை முன்னிட்டு வன்னியிலிருந்து அகற்றப்பட்ட காவலரண்கள் மீண்டும் அந்தந்த இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஆனையிறவிலிருந்து அகற்றப்பட்ட இராணுவச் சோதனைச் சாவடியையும் மீண்டும் அமைப்பதற்கு படையினர் முற்பட்டு வருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள மனித உரிமைகள் ஆணையாளர் கடந்த திங்கட்கிழமை மாலை யாழ்ப்பாணத்திற்கு வந்தடைந்தார். இவரது விஜயத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த அதேவேளை அவர் விஜயம் செய்த பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

குறிப்பாக வெளியிடங்களில் இராணுவத்தினரது நடமாட்டங்கள் வழமைக்கு மாறாக மிகக் குறைவாகவே காணப்பட்டன. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களுக்கு நவிப்பிள்ளை விஜயம் செய்து அப்பகுதிகளின் தற்போதைய நிலைமைகளை ஆராய்ந்தார்.

ஆனையிறவில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டிருந்த இராணுவச் சோதனைச் சாவடி மூடப்பட்டிருந்ததோடு அங்கு வழமையாக கடமையிலிருக்கும் இராணுவத்தினரையும் காண முடியாதிருந்தது. குறிப்பாக சோதனைச் சாவடி இருந்ததற்கான எந்த அறிகுறிகளும் இல்லாதவாறு முழுமையாக யாவும் அகற்றப்பட்டிருந்தன.

இவை தவிர கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிலும் நவிப்பிள்ளையின் விஜயம் ஒழுங்கு செய்யப்பட்ட பிரதான வீதிகளிலும் இராணுவத்தினரது நடமாட்டம் தடை செய்யப்பட்டிருநததோடு இராணுவத்தினர் தொடர்பான தடயங்கள் மற்றும் எச்சங்களும் ஒன்றும் இல்லாதவாறு மிக துரித கதியில் அகற்றப்பட்டிருந்தது.

ஆனால், அகற்றப்பட்ட காவலரண்களை மீண்டும் அமைக்கும் பணியில் படையினர் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பாக மக்கள் பெரும் விசனம் வெளியிட்டுள்ளனர். சிறிலங்கா படையினரினரினதும் அரசாங்கத்தினதும் இந்த ஏமாற்று வேலையை நாம் யாரிடம் சொல்லி முறையிடுவது என்று கேள்வியெழுப்பியுள்ள மக்கள் உலகத்தின் பிரதான சபையாக விளங்குகின்ற ஐ.நா சபையையே ஏமாற்ற முனைகின்ற அரசாங்கத்திற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

http://www.sankathi24.com/news/32649/64//d,fullart.aspx

நவநீதம்பிள்ள இலகுவில் ஏமாறும் ஒருவராக தெரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.