Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முள்ளிவாய்க்காலில் சரண் அடைந்த விடுதலைப் புலித் தளபதிகள் போராளிகள் எங்கே? -

Featured Replies

balakumaran-150x150.jpgண்டே ரைம்ஸ் செய்தி ஏட்டின் புகழ்பெற்ற போர்க்கள செய்தியாளரான மேரி கொல்வின்  கடந்த 2012 பெப்ரவரி மாம் 23 நாள் சிரியாவின் நகரங்களில் ஒன்றான Homs   நகர முற்றுகையின் போது ஏவப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் பலியானார்.   அவருக்கு அப்போது அகவை 55 ஆகும். அவரோடு பிரான்ஸ் நாட்டு படப்பிடிப்பாளரான Remi Ochlik (28)  என்பவரும் இறந்து பட்டார்.  அதற்கு முன்னர் வன்னியை விட்டு 2001 ஆம் ஆண்டு 30 மைல்கள் காடுகள் ஊடாகக் களவாக வெளியேறிய போது எதிர்பாராத விதமாக  பதுங்கியிருந்த சிறீலங்காப் படையினரால் சுடப்பட்டு ஒரு கண்ணை இழந்திருந்தார். இப்போது ‘புலிகள் சரண் அடைவதற்குரிய ஏற்பாட்டைச் செய்யுமாறு என்னிடம் யாசித்தார்கள்’ (Tigers begged me to broker surrender – Marie Colvin , Times UK – May 24, 2009) என்ற  தலைப்பில் மேரி கொல்வின் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கத்தை இப்போது பார்ப்போம்.

இராணுவம் வி.புலிகளைத் தோற்கடிப்பதற்குத் தனது இறுதிப் படைநடவடிக்கையை மேற்கொண்டிந்த  வேளையில் நான் விடுதலைப் புலிகளின் தலைமைக்கும் அய்க்கிய நாடுகள் சபைக்கும் இடையில்   ஒரு இடைத்தரகராகப் பல நாட்களாகச்   செயல்பட்டேன்.

நடேசன் என்னிடம் மூன்று அம்சங்களை அய்நா வுக்கு அறிவிக்குமாறு கேட்டிருந்தார்:  நாங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கத் தயார், அமெரிக்கா அல்லது பிரித்தானியா நாடுகளிடம் இருந்து தங்களது பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரவேண்டும், சிறீலங்கா அரசு சிறுபான்மைத் தமிழ்மக்களது  உரிமைகளுக்கு உத்தரவாதம் வழங்கும் ஒரு அரசியல் செயல்முறைக்குச்  சம்மதிக்க வேண்டும்.

உயர்மட்டத்தில் இருக்கும் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய அதிகாரிகள் மூலம் கொழும்பில் உள்ள அய்நா சிறப்புத்  தூதுவர், அய்நா செயலாளர் நாயகம் பான் கி மூன் அவர்களது முக்கிய அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோரோடு தொடர்பு ஏற்படுத்தி இருந்தேன்.  சரண் அடைவதற்கு வி.புலிகள் முன்வைத்த நிபந்தனைகளை விஜய் நம்பியாரிடம் சொன்னேன். அவர் அதனை சிறீலங்கா அரசுக்குத் தெரிவிப்பதாக என்னிடம்  சொன்னார்.

மோதல் ஒரு  அமைதியான முடிவுக்கு வருவது போல் தென்பட்டது.  பதுங்கு குழியில் இருந்து  ஜாலியான,  மூக்குக் கண்ணாடி அணிந்த புலித்தேவன் தனது படத்தை எனக்கு அனுப்புவதற்கு அவருக்கு அந்த நெருக்கடியிலும் நேரம் இருந்திருக்கிறது.

இருந்தும்  ஞாயிறு இரவு இராணுவம்  நெருக்கிக் கொண்டிருந்த போது புலிகளிடம் இருந்து அரசியல் கோரிக்கைகளோ அல்லது படங்களோ வருவது நின்றுவிட்டது. நடேசன் என்னை அழைத்தபோது “சரண்” என்ற சொல்லைப் பயன்படுத்த மறுத்துவிட்டார். ஆனால் அதைத்தான் அவர் செய்ய நினைத்தார். புலிகளது பாதுகாப்பை உறுதிப்படுத்த நம்பியார் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

மேலும் ஒரு முறை நியூ யோர்க்கில் உள்ள அய்நாவின் 24 மணித்தியால கட்டுப்பாட்டு மையம் கொழும்பில் உள்ள நம்பியாரோடு என்னைத் தொடர்பு படுத்தியது. அப்போது நேரம் திங்கட்கிழமை (மே 18) காலை 5.30 மணி.  நான் அவரை நித்திரையில் இருந்து எழுப்பினேன்.

நான் சொன்னேன் வி.புலிகள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டார்கள் என்று.   அவர் (நம்பியார்) சொன்னார் சிறீலங்காவின் சனாதிபதி தனக்கு வாக்குறுதி அளித்துள்ளார். நடேசன் மற்றும் புலித்தேவன் இருவரும் பத்திரமாகச் சரண் அடையலாம். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் ‘வெள்ளைக் கொடியை உயரப் பிடிக்க வேண்டியதுதான்’ எனச் சொன்னார்.

நான் நம்பியாரிடம் கேட்டேன் ‘வடக்கில் இடம்பெறும் சரணாகதியை நேரில் பார்க்க நீங்கள்  போகவேண்டிய அவசியம்  இல்லையா?’ அதற்கு அவர் இல்லை, அப்படிப் போக வேண்டிய அவசியம் இல்லை:  சனாதிபதியின் வாக்குறுதிகள் போதுமானது என்றார்.

இலண்டனில் அப்போது ஞாயிறு (மே 17)  நள்ளிரவு.  நான்  நடேசன் அவர்களோடு செய்மதி தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால்  நான் அதில்  தோல்வி கண்டேன். எனவே  தென் ஆபிரிக்காவில் உள்ள ஒரு புலிகளது தொடர்பாளரோடு பேசினேன். அவரிடம்  நம்பியாரின் செய்தியைச் சொன்னேன்: வெள்ளைக் கொடியை உயரப் பிடித்து அசைக்கவும்.

தென்னாசியாவில் இருந்த வேறொரு புலித் தொடர்பாளரிடம் இருந்து வந்த தொலைபேசி என்னை நித்திரையில் இருந்து 5.30 மணிக்கு எழுப்பியது. அவரால் நடேசனோடு தொடர்பு கொள்ள முடியவில்லை. “நான் நினைக்கிறேன், எல்லாம் முடிந்துவிட்டது” என்று அவர் சொன்னார். “அவர்கள் எல்லோரும் இறந்து போய்விட்டார்கள்.”

அன்று மாலை சிறீலங்கா இராணுவம் அவர்களது உடல்களை காட்சிப் படுத்தியது.  சரணடைவு ஏன் பிழைத்துப் போனது?  அதனை நான் விரைவில் அறிந்து கொண்டேன்.

சிறீலங்கா நடாளுமன்ற தமிழ் உறுப்பினர் றோகன் சந்திர நேருவை நடேசன் ஞாயிறு இரவு அழைத்திருந்தார் என்பதைக் கண்டு பிடித்தேன். சந்திர நேரு ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்.  அவர் இராசபக்சேயை உடனடியாகத் தொடர்பு கொண்டார்.

அடுத்த சில மணித்தியாலங்கள் நடந்த சம்பவங்களை அந்த  நாடாளுமன்ற உறுப்பினர் விபரித்துச் சொன்னார்: “நடேசன் மற்றும் அவரது குடும்பத்துக்கு முழு அளவிலான பாதுகாப்புக் கொடுக்கப்படும் என என்னிடம் சனாதிபதியே சொன்னார். நடேசன் தன்னிடம் 300 பேர் இருக்கிறார்கள் எனச் சொன்னார். அதில் சிலர் காயம்பட்டவர்கள்.”

 

நான் சனாதிபதிக்குச் சொன்னேன் ‘நான் போய் அவர்களது சரணடைவை பார்வையிடுகிறேன்’என்றேன்.

“இராசபக்சே சொன்னார், “இல்லை, எங்களது இராணுவம் மிகவும் பெருந்தன்மை படைத்தது.  அதோடு மிகவும் கட்டுப்பாட்டோடு நடப்பது.  நீங்கள் போர் வலையத்துக்குப்  போக வேண்டிய தேவையில்லை.  அதுமட்டுமல்ல உங்களுடைய உயிரை ஆபத்துக்குள்ளாக்க வேண்டிய அவசியமும்  தேவையற்றது.”

சந்திர நேரு சனாதிபதியின் சகோதரர் பசில் தன்னை அழைத்ததாகச் சொன்னார். “அவர் சொன்னார், ‘அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். அவர்கள் வெள்ளைக் கொடியை மேலே உயர்த்திப் பிடிக்க வேண்டும்.  அத்தோடு அவர்கள் போக வேண்டிய  வழியை அவர் எனக்குத் தந்தார்.”

திங்கட்கிழமை (மே 18) காலை 6.20 மணிக்கு நடாளுமன்ற உறுப்பினர் நடேசன் அவர்களோடு தொடர்பு கொண்டார். அப்போது துப்பாக்கிச் சூட்டின் சத்தம் முன்னரைவிட அதிகமாகக் கேட்டது.

“நாங்கள் ஆயத்தம்” என நடேசன் சந்திர நேருவுக்குச் சொன்னார். “நான்  வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடித்துக் கொண்டு நடந்து செல்லப் போகிறேன்.”

“நான் சொன்னேன் ‘அண்ணை உயரப் பிடியுங்கள் – அவர்கள் அதைப் பார்க்க வேண்டும். நான் உங்களை மாலை சந்திக்கிறேன்” என்றார் சந்திர நேரு.

கொலைக் களத்திலிருந்து ஒருவாறு தப்பிய ஒரு தொகுதியில் இருந்த ஒரு தமிழர் அங்கு என்ன நடந்தது என்பதை விளக்கினார். இவர், பின்னர் ஒரு  தொண்டு நிறுவனத் தொழிலாளியோடு பேசியவர், அவர் சொன்னார் ‘நடேசன் மற்றும் புலித்தேவன் சிறீலங்கா இராணுவம் நிலைகொண்டு  நின்ற பக்கம் ஒரு வெள்ளைக் கொடியோடு  ஒரு பத்துப் பன்னிரண்டு ஆண், பெண் குழு சகிதம் நடந்து போனார்கள்.  உடனே இராணுவம் இயந்திரத் துப்பாக்கிகளால் அவர்களை நோக்கிச் சுடத் தொடங்கியது.’

 

நடேசனது மனைவி,  அவர் ஒரு சிங்களப் பெண், சிங்களத்தில் அந்த இராணுவத்தினரை நோக்கிச் சத்தம் போட்டார். “அவர் சரணடைய முயற்சிக்கிறார், நீங்கள் அவரைச் சுடுகிறீர்கள்”  என்றார். அவரும் சுட்டு வீழ்த்தப்பட்டார்.

 

இந்த வட்டாரம் எல்லோரும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் எனத்  தெரிவித்தது.  சொன்னவர் இப்போது தனது உயிருக்குப் பயந்து ஒளிந்திருக்கிறார். சந்திர நேரு தன்னை சனாதிபதியும் அவரது  சகோதரரும் பயமுறுத்தியதை அடுத்துத் தான் நாட்டை விட்டு ஓடித் தப்பியதாகச் சொன்னார்.

கடந்த சில நாட்களாக அய்நா தூதுவர் நம்பியாரின் வகிபாகம் கேள்விக்குறியாகி இருக்கிறது. அவரது சகோதரர் சதீஷ் சம்பளத்துக்கு சிறீலங்கா இராணுவத்தின் ஆலோசகராக 2002 ஆம் ஆண்டு தொடக்கம் இருக்கிறார். சதீஷ் ஒருமுறை சிறீலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகா பற்றி எழுதியிருந்தார் “இராணுவ தளபதி சரத் பொன்சேகா  ஒரு மாபெரும் படைத்தளபதிக்குரிய குணாம்சங்களை உடையவர்.”

தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னைய தற்கொலைத் தாக்குதல் உட்பட  பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக அனைத்துலக மட்டத்தில் தடை செய்யப்பட்டிருந்தாலும் நடேசனும் புலித்தேவனும் மோதலுக்கு ஒரு அரசியல் தீர்வை எட்ட விரும்பினார்கள். அவர்கள் உயிரோடு இருந்திருந்தால், அவர்கள் தமிழ்ச் சிறுபான்மையினருக்கு நம்பகத்தன்மை வாய்ந்த தலைவர்களாக விளங்கியிருப்பார்கள்.

அவர்களின் தளபதி வேலுப்பிள்ளை பிரபாகரனே இயக்கத்தை ஒரு இராணுவ இயந்திரமாகக் கட்டி

எழுப்பினார்.  அவர் பிறர்மீது நம்பிக்கை இல்லாதவராகவும் இரக்கமற்றவராகவும் இருந்தார்.  சிறீலங்கா இராணுவத்தின் தாக்குதல்களினால் நிலம் பறிபோய்க் கொண்டிருந்த காலத்திலும் இராணுவ வெற்றியில் அவர் உறுதியாக இருந்தார்.

கடந்த வாரம்,  பிரபாகரன் தப்பிவிட்டார் என வதந்திகள் உலாவினாலும் இயக்கம் குழம்பிப் போயிருந்தது.  தப்பிய தமிழ் தலைவர்கள் ஒரு அரசியல் தீர்வு பற்றிப் பேசினார்கள். அதே சமயம் தீவிர சார்பாளர்கள் பழிக்குப் பழித் தாக்குதல் மேற்கொள்ள வேண்டும் என அச்சுறுத்தினார்கள்.

நான் ஒரு செய்தியாளர் என்ற முறையில் இந்தச் செய்தியை எழுதுவது பற்றி ஒரு இக்கட்டான நிலையில் உள்ளேன். நான் 2001 இல் தான் அரை இலட்சம் மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் போவதை அரசு தடுக்குகிறது என்ற அறிக்கைகள் பற்றி விசாரணை செய்ய சிறீலங்காவுக்குப் போனேன். செய்தியாளர்கள் வடக்கிலுள்ள தமிழர்களது பகுதிகளுக்குப் போக 6 ஆண்டுகளுக்கு மேலாக தடை விதிக்கப்பட்டிருந்தது.

மக்கள் குப்பை கூழங்களுக்கு மத்தியில் வாழ்ந்ததைப் பார்த்தேன். மருத்துவர்கள் மருந்துக்கு மன்றாடிக் கொண்டிருந்தார்கள். நடேசன் மற்றும் புலித்தேவன் இருவரும்  தாங்கள் தங்களது தனிநாட்டுக் கோரிக்கையைக் குறைத்து சிறீலங்காவுக்குள் தன்னாட்சி உரிமையைக் கேட்பதாக என்னிடம் சொன்னார்கள்

ஒரு நாள் இரவு விடுதலைப் புலிகளது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து வெளியே நான் கடத்தப்பட்ட போது பதுங்கியிருந்த சிறீலங்கா இராணுவத்தினால் இடைமறிக்கப்பட்டேன்.  எனக்குக் காயம் எதுவுமில்லை ஆனால்  ”செய்தியாளர், செய்தியாளர்” என சத்தம் போட்டேன். உடனே அவர்கள் என்னை நோக்கிச் சுட்டார்கள். நான் படு காயம் அடைந்தேன்.

அதன் பின்னர் அவ்வப்போது புலிகளோடு தொடர்பில் இருந்தேன்.  சிறீலங்கா இராணுவத்தின் புதிய  தாக்குதல் காணமாக புலிகள் பின்வாங்க வேண்டியிருந்தது.  அதன் பின்னர் அண்மையில் சில மாதங்களாக  தலைவர்களிடம் இருந்து தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்புக்கள் வந்தன.  அப்படி வந்த ஒரு அழைப்பின் போது ஒரு நேரடி வாக்கெடுப்பின் முடிவுக்கு  அமைய  நடப்பதாகவும் அதற்கு முன்னோடியாக ஒரு போர் நிறுத்தம் வேண்டுமென்றும் யாசித்தார்கள். அவர்களது வேண்டுகோள் கொழும்பு அரசினால் நிராகரிக்கப்பட்டது. 

புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தலைநகர் கொழும்பு வீதிகளில் ஆட்டம் பாட்டம் இடம்பெற்றது.  ஆயினும் தமிழ்ப் பொதுமக்களுக்கு (இராணுவ) வெற்றி அதிர்ச்சியாக  இருந்தது. அய்க்கிய நாடுகள் கடைசிக் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 7,000 பேர் இறந்தார்கள் எனச் சொல்கிறது. ஆயினும் இறந்தவர்கள் எண்ணிக்கை இதைவிட அதிகம் என நம்பப்படுகிறது. சண்டை காரணமாக அண்ணளவாக 280,000  மக்கள் முள்ளுக்கம்பிகளால் சுற்றி அடைக்கப்பட்ட “நலன்புரி” முகாம்களுக்குள் அகப்பட்டுக் கொண்டார்கள். இவர்களது  நிலைமை மோசமாகிக் கொண்டுவருவதாகச் சொல்லப்படுகிறது.

நேற்று அனைத்துலக தொண்டர் முகமைகள் மூன்று குடும்பங்கள் மட்டில் ஒவ்வொரு கூடாரத்திற்குள்ளும் நெருக்கமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள் எனக் கூறியன. அவர்கள் தண்ணீருக்கும் உணவுக்கும் நீண்ட கியூவரிசையில் நிற்க நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். ஒரு  தொண்டர் பேசும் போது 44,000 மக்களைக் கொண்ட ஒரு முகாமுக்கு ஒரேயொரு மருத்துவர் மட்டும் பணியில் இருக்கிறார் என்றார்.

த சண்டே ரைம்ஸ், தொண்டர் அமைப்புக்கள் ஊடாக ஏதிலிகளை  தொடர்பு கொள்ளப்பட்ட போது அவர்கள் தங்கள்  சீற்றத்தை வெளிகாட்டினார்கள். “பாருங்கள் நாங்கள் எப்படி வாழ்கிறோம் என்று” எனத்  தனது இரண்டு குழந்தைகளோடு முகாமில் இருந்த ஒரு பெண் சொன்னார். “எங்களுக்கு இடவசதி இல்லை, சூரிய வெப்பத்தில் இருந்து தப்ப எமக்குப் பாதுகாப்பு இல்லை. முள்ளு வேலிக்கும் ஆயுதம் தாங்கிய காவலாளிகளுக்கும் இடையில் நாம் 

சிறைக் கைதிகளாக இருக்கிறோம்.   அவர்கள் இரண்டு குழந்தைகளுக்குத்  தாயான நான் என்ன செய்துவிடுவேன் என நினைக்கிறார்கள்? ஏன் நாங்கள் இங்கு இருக்கிறோம்?”

ஆயுதக் கும்பல்களைச் சேர்ந்த நபர்கள் முகாமில் வாழும் இளைஞர்களைப்  புலிகள் எனக் குற்றம் சாட்டி  அவர்களைக் கடத்திச் சென்று இரகசிய இடங்களில் தடுத்து வைக்கப்படுகிறார்கள் என்ற   அறிக்கைகள் உலா வருகின்றன.

சனாதிபதி தமிழ் சமூகத்தோடு உறவாடவும் நாட்டை ஒருமைப்படுத்தவும் 80 விழுக்காடு ஏதிலிகளை ஆண்டு முடியுமுன்னர் மீள் குடியமைர்த்தவும் போவதாகச் சொல்கிறார்.

“நான் நினைக்கவில்லை இது சாத்தியம் என்று”  என மனித உரிமைக்  காப்பகத்தை சேர்ந்த Anna Neistat சொன்னார். “யாரையும் வெளியில் விடுவதற்குரிய நடைமுறை இல்லை” என்றார்.

அரசு தெரிவிக்கும் நோக்கங்கள் எதுவாக இருந்தாலும் சிறீலங்காவை ஒருமைப்படுத்தும் சிறிய சாத்தியம் கூட எதிர்காலத்தில் இல்லை. புலிகள் தளைப்பதற்கு இருந்த ரிய குறைபாடுகளையிட்டு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அது சாத்தியமாகும். (http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6350563.ece ) (வளரும்)

நக்கீரன்

http://www.thinakkathir.com/?p=51950#sthash.1qafEAoB.dpuf

Edited by யாழ்அன்பு

அன்பு, 
செய்திகளை இணைக்கும்போது எழுத்து அளவுகளை சரிபார்க்கவும் சிறிதாக உள்ள எழுத்துகளை படிப்பதற்கு  கஸ்ரமாக உள்ளது  
  • தொடங்கியவர்

 

அன்பு, 
செய்திகளை இணைக்கும்போது எழுத்து அளவுகளை சரிபார்க்கவும் சிறிதாக உள்ள எழுத்துகளை படிப்பதற்கு  கஸ்ரமாக உள்ளது  

 

மன்னிக்கவும் தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி அண்ணா  :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.