Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துடன் கூட பேசுவதற்கு அரசாங்கம் தயார்: ரொஹான் குணரட்ண

Featured Replies

Rohan_CI.jpg
 
 
நாடு கடந்த தமி­ழீழ அர­சாங்­கத்­துடன் கூட பேச்­சு­வார்த்தை நடத்த இலங்கை அர­சாங்கம் தயா­ரா­கவே உள்­ளது .யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர் நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த அர­சாங்கம் திறந்த கொள்­கை­யு­ட­னேயே செயற்­பட்­டது. ஆனால் அவற்றை தவ­றாக அர்த்­தப்­ப­டுத்­திய சர்­வ­தேச பார்­வையே இலங்கை மீதும் காணப்­ப­டு­கின்­றது என தேசிய பாது­காப்பு கொள்­கைகள் மற்றும்  பயங்­க­ர­வாத ஒழிப்பு தொடர்பான ஆலோ­சகர் கலா­நிதி ரொஹான் குண­ரட்ன தெரி­வித்தார்.
 
யுத்­தத்தின் இறுதிக் காலப்­ப­கு­தியில் பல்­லா­யிரம் தமி­ழர்கள் கொல்­லப்­பட்­டார்கள் என்­பது போலி­யான பிர­சா­ர­மாகும். 2009 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் தொடக்கம் மே மாதம் யுத்தம் முடி­வ­டையும் வரை வடக்கில் 7 ஆயிரம் பேர் மாத்­தி­ரமே கொல்­லப்­பட்­டனர். இவர்­களில் 5 ஆயிரம் பேர் விடு­தலைப் புலி உறுப்­பி­னர்கள் என்­பதே உண்மை. புலம்­பெ­யர்ந்து வாழும் புலிகள் இலங்­கைக்குள் மீண்டும் செயற்­பட சந்­தர்ப்பம் தேடு­கின்­றனர். 10 வீத­மான தமி­ழர்கள் சர்­வ­தே­சத்தில் வாழும் புலி­க­ளுடன் தொடர்பு வைத்­துள்­ளனர். ஆகவே இலங்­கைக்கு பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் குறைந்­துள்­ள­தாக கூற முடி­யாது என்றும் அவர் குறிப்­பிட்டார்.
 
21 ஆவது நூற்­றாண்டில் யுத்த பயங்­க­ர­வா­தத்தை முழு­மை­யாக முடி­விற்கு கொண்டு வந்த ஒரே நாடு இலங்கை தான். அதன் பின்னர் இரா­ணு­வத்தை விரை­வாக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிவா­ரண உத­வி­களைச் செய்­யவும் மீள் கட்­டு­மான பணி­களை மேற்­கொள்­ளவும் செயற்­ப­டுத்­திய நாடு இலங்கை தான். சுமார் 3 இலட்­சத்து 83 ஆயிரம் மக்­களை தற்­கா­லிக முகாம்­களில் வைத்து பரா­ம­ரித்து மிக விரை­வாக அவர்­களை சொந்த இடங்­களில் மீள் குடி­ய­மர்த்­து­வது எளி­தான விட­ய­மல்ல.
 
ஈராக் மற்றும் ஆப்­கா­னிஸ்தான் போன்ற நாடு­களில் அமெ­ரிக்கா முன்­னெ­டுத்து வரும் நட­வ­டிக்­கைகள் முடி­வுக்கு வந்­த­தாக கூறப்­பட முடி­யாது. அங்கு பாதிக்­கப்­பட்டு இடம் பெயர்ந்த மக்­கள் எந்­த­ள­விற்கு பரா­ம­ரிக்­கப்­பட்­டார்கள் என்­பது முக்கியமானதாகும். இலங்கை மூன்று தசாப்த கால யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர் நிலை­யான முன்­னேற்­றத்தை நோக்­கியும் நல்­லி­ணக்­கத்தை நோக்­கி­யுமே பய­ணிப்பதாகவும் தெரிவித்தார். 
 
அதற்­காக சர­ண­டைந்த புலி போரா­ளிகள் மற்றும் சர்­வ­தேச புலி செயற்­பாட்­டா­ளர்­களை கைது செய்து அவர்­களை சிறையில் அடைக்­காது உரிய புனர்­வாழ்வு அளித்து நல்­லி­ணக்­கத்தை நோக்­க­மா­கக்­கொண்டு செயற்­ப­டு­கின்­றது. குறிப்­பாக கே.பி. எனப்­படும் குமரன் பத்­ம­நாதன் இன்று இலங்­கையில் சுதந்­தி­ர­மாக செயற்­ப­டு­கிறார். தமிழ் மக்­களை பிரித்து நோக்கும் நிலை அர­சாங்­கத்­திடம் கிடை­யாது. அனை­வரும் இலங்­கை­யர்கள் என்ற கொள்­கையே தற்­போது பின்­பற்­றப்­ப­டு­கின்­றது எனக் குறிப்பிட்டார். 
 
இன்று நாடு கடந்த தமி­ழீழ அர­சாங்­கத்தை ருத்­தி­ர­குமார் என்­பவர் அமைத்­துக்­கொண்டு இலங்­கைக்கு எதி­ராக செயற்­ப­டு­கின்றார். அதே போன்று நோர்­வேயில் நெடி­யவன் பாரிசில் விநா­யகம் மற்றும் லண்­டனில் இம்­மா­னுவேல் எனப்­படும் பாதி­ரியார் ஆகி­யோரும் உள்­ளார்கள். இலங்­கைக்கு வரும் விமா­னங்­களில் 15 சத­வீ­த­மா­னவை தமி­ழர்­க­ளி­னா­லேயே நிரம்­பி­யுள்­ளது. இவர்கள் நாட்­டிற்குள் வந்து என்ன செய்­கின்­றார்கள் என்­பது தொடர்பில் சந்­தே­கங்கள் உள்­ளது. எவ்­வா­றா­யினும் சர்­வ­தே­சத்தில் வாழும் 10 வீத­மான தமி­ழர்கள் விடு­தலைப் புலி­க­ளுடன் தொடர்பு வைத்­துள்­ளனர். எனவே இலங்­கைக்கு காணப்­படும் அச்­சு­றுத்தல் குறை­வ­டை­ய­வில்லை. அதே­போன்று நிலை­யான நல்­லி­ணக்­கத்­திற்­காக நாடு கடந்த தமி­ழீழ அர­சுடன் கூட பேசு­வ­தற்கு அர­சாங்கம் தயா­ரா­கவே உள்­ளது என்றார் அவர். 
 
ஆனால் மேற்­குல நாடு­களின் இலங்கை மீதான தவ­றான பார்வை மாற்­ற­ம­டைய வேண்டும். இலங்­கையில் உள்ள ஐ.நா. அலு­வ­ல­கத்தில் உள்­ளக அறிக்­கையின் பிர­காரம் 7 ஆயிரம் பேர் மாத்­தி­ரமே யுத்­தத்தின் இறுதிக் காலப்­ப­கு­தியில் கொல்­லப்­பட்­டனர். இவர்­களில் 5 ஆயிரம் பேர் புலிகள் என்­பதும் உண்மை. ஆகவே போலி­யான எண்­ணிக்­கை­களை கூறு­வது ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இலங்­கையில் யுத்­தத்தை முடி­விற்கு கொண்டு வந்­த­தற்கு சர்­வ­தேச நாடு­களின் தலை­யீ­டு­களே கார­ண­மாக அமைந்­தது எனவும் தெரிவித்தார். 
 
1983 தொடக்கம் 1987 ஆம் ஆண்டு வரை இந்­தியா ஆதிக்கம் செலுத்தி புலிகளுக்கு ஆயுதப் பயிற்சிகளை வழங்கியது. அதேபோன்று நோர்வே இவ்வாறு நாடுகளின் பேச்சைக் கேட்கப்போய் உள்நாட்டுப் போர் மூன்று தசாப்த காலமாக நீடித்தது. ஆனால் இலங்கை தனது நிலைப்பாட்டில் உறுதியாக செயற்பட்டு போரை முடிவுக்கு கொண்டு வந்தது. இலங்கை இந்தியாவுடனோ சீனாவுடனோ அல்லது மேற்குலகத்துடனோ ஆழமான நெருக்கத்தை உருவாக்கி தீர்வுகளை பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை என்றும் அவர் கூறினார்.
  • கருத்துக்கள உறவுகள்
21 ஆவது நூற்­றாண்டில் யுத்த பயங்­க­ர­வா­தத்தை முழு­மை­யாக முடி­விற்கு கொண்டு வந்த ஒரே நாடு இலங்கை தான். அதன் பின்னர் இரா­ணு­வத்தை விரை­வாக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிவா­ரண உத­வி­களைச் செய்­யவும் மீள் கட்­டு­மான பணி­களை மேற்­கொள்­ளவும் செயற்­ப­டுத்­திய நாடு இலங்கை தான்.

 

 

இல்லையே.. உள்ள ரெம்ப பீதியோட இருக்கிற மாதிரி எல்லோ இந்த ஸ்ரேட்மெண்டு இருக்குது. பின்ன இருக்கத் தானே செய்யும். இன்னும் எத்தினை காலம் தான் ஊரை.. ஏய்க்கிறது. அதைவிட எத்தினை காலம் தான் உலகத்தை ஏய்க்கிறது..!!! :lol::)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.