Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாய்ப் புலியும் கழுதைப்புலிகளும்-புகழேந்தி தங்கராஜ்!

Featured Replies

மானுட இனத்தின் நம்பிக்கையாகத் திகழ்ந்த சோவியத் யூனியனின் ராதுகா பதிப்பக வெளியீடுகளில் 'அனிமல் புக்' குறிப்பிடத்தக்கது. மிருகங்களின் அழகான ஓவியங்கள் கவிதை வடிவில் அவற்றைப்பற்றிய குறிப்புகள் அடங்கிய அற்புதத் தொகுப்பு. ஓநாய்க்கு அதில் இரண்டுபக்கம் ஒதுக்கப்பட்டிருந்தது.

தோட்டத்தை நெருங்குகிறது ஓநாய். 

கால் நடைகள் பதறுகின்றன.

தோட்டத்தில் நுழைகிறது ஓநாய்.

முயல்கள் பதுங்குகின்றன..........

...................................................................

தோட்டக் காரன் துப்பாக்கியை எடுக்கிறான்.

இப்போது ஓநாய் நடுங்குகிறது.

தோட்டக்காரன் குறிபார்க்கிறான்.

ஓநாய் பதுங்குகிறது..........................

என்று கவிதை மாதிரி எழுதப்பட்டிருந்தது அந்தப் புத்தகத்தில். (நினைவிலிருந்து எழுதுவதால் வார்த்தைகள் மாறியிருக்கலாம். மற்றபடி உள்ளடக்கம் இதுதான்.)

இலங்கையில் இதுதான் நடந்தது நடக்கிறது. 'போர்' என்கிற போலிப்பெயரால் நடத்தப்பட்ட இன அழிப்பு இப்போதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. பெண்கள் மீதான பாலியல் வன்முறை முதல் ஆள் கடத்தல் வரை எதுவுமே நின்றபாடில்லை. வெள்ளை வேன் வருகிறது என்றாலே மக்கள் அஞ்சி நடுங்குகிற நிலை. (இயக்குநர் தமிழ்வேந்தனின் 'இனவெறி' குறும்படம் பாருங்கள்.... வெள்ளைவேன் பதற்றத்தை உணர்வீர்கள்.)

இப்படியொரு நிலையில்தான் நவநீதன் பிள்ளை வந்தார். அவரது வருகையால் நடுங்கியது இலங்கை. விடிந்து எழுந்து பார்த்தால் ராணுவச் சோதனைச் சாவடிகளைக் காணோம் ராணுவ நடமாட்டத்தைக் காணோம். நவநீதம் பிள்ளைக்குப் பயந்து பதுங்கிக் கொண்டது கோதா என்கிற கோழையின் படை.

நவநீதம் பிள்ளை திரும்பியவுடன் வடகிழக்கில் மீண்டும் வீதிக்கு வீதி வந்து நிற்கின்றன அந்த ஓநாய்கள். வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுகிறார்கள் எங்கள் சகோதரிகள். 'என் காதருகே வந்து பேசு சகோதரி' என்று உரிமையுடன் தங்களை அணைத்த நவநீதம் பிள்ளை என்கிற சகோதரி மூலம் தங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை ஒன்றே உயிர்த்திருக்க வைக்கிறது அவர்களை!

நவநீதம் பிள்ளை ஏற்படுத்தியிருக்கும் இந்த நம்பிக்கையைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை சிங்கள வெறியர்களால். தனது அதிகார வரம்புகளை மீறி பிள்ளை நடந்துகொண்டதாக ஒப்பாரி வைக்கிறார்கள்.

புலிப் பிள்ளை - என்றார்கள். விடுதலைப் புலிகளின் ஏஜென்ட் - என்றார்கள். பிள்ளை எதையுமே பொருட்படுத்தவில்லை. கொல்கத்தா வீதியில் ஏழைக் குழந்தைகளுக்காகக் கையேந்திய அன்னை தெரசாவின் கையில் எச்சில் துப்பியது ஒரு மிருகம். தன்னைச் சிறுமைப்படுத்த நினைத்த அந்த மிருகத்திடம் 'இது எனக்கு! அந்தக் குழந்தைகளுக்காக நீ என்ன தரப் போகிறாய்' என்று புன்னகை தவழ கேட்டார் தெரசா. அதைப்போலவே தன்னை அவமதிப்பது பற்றிக் கவலைப்படாமல் ஈழ மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டறிவதிலேயே கவனம் செலுத்தினாரே.... அந்த தடுமாற்றமில்லாத தேடல்தான் நவ்வியின் வெற்றி.

'நாங்கள்தான் நவநீதம் பிள்ளையை அழைத்தோம். குற்றமிழைத்திருந்தால் அழைத்திருப்போமா' என்று வசனம் பேசினார்கள்இ இனப்படுகொலை தடயங்களை அழித்து விட்டதாக நினைத்துக் கொண்டிருந்தவர்கள். ஒரே ஒரு கொலையைத் திட்டமிட்டு செய்திருந்தாலும்இ ஒரே ஒரு தடயத்தையாவது தேடிப் பிடித்து விடமுடியும். ஒன்றரை லட்சம் பேர் கொலைக்குத் தடயமே கிடைக்காது என்றா நினைக்கிறார்கள் அந்த மேதாவிகள். நோ எவிடென்ஸ் நோ கிரைம்!

அறநெறிப் பார்வையோடும் அறிவுக் கூர்மையோடும் இனவெறி இலங்கையின் மென்னியைப் பிடித்து நவநீதம் பிள்ளை முறுக்கிய பிறகு அவசர அவசரமாகப் பேசுகிறது கோதபாய மிருகம் - 'புலிகளின் ஆதரவாளர்கள் சொல்லித்தான் பிள்ளை இலங்கைக்கு வந்திருக்கிறார்' என்று! ஒரே வாரத்தில் டயலாக் மாறுகிறது.

பெண்தானே என்கிற திமிரில்தானே 'கல்யாணம் கட்டிக்கட்டா' என்று கேட்டான் மேர்வின் சில்வா என்கிற பொறுக்கி. ஓநாய்களின் ஊளைச் சத்தத்தைக் குறித்துக் கவலைப்பட்டாரா பிள்ளை.... இல்லை! காதருகே வந்து கண்ணீருடன் பேசிய தமிழ்ச் சகோதரிகளின் கதறலைக் கேட்டு அழுதுகொண்டிருந்தார். இந்த நூற்றாண்டின் மணிமேகலை என்று பிள்ளையைச் சொல்லாமல் வேறெவரைச் சொல்வது!

(கூச்சநாச்சமில்லாமல் மணிமேகலையை அவமதிக்கும் இத்தாலிச் சாத்தனார்கள் பற்றி எழுதவே மாட்டீர்களா - என்று கேட்கிறார் போர்க்குணம் மிக்க தங்கை ஆனந்தி. அது என்ன காப்பியமா இவர்கள் இஷ்டத்துக்குப் போடுகிற தோப்புக்கரணமா - என்பது அவரது கேள்வி. மணிமேகலை என்னுடைய கதாநாயகி சகோதரி! அடுத்த வாரம் அதை எழுதுகிறேன்!)

நவநீதம் பிள்ளை மீதான புலிக் குற்றச்சாட்டு திட்டமிட்டே பரப்பப்பட்டது. இலங்கையின் குற்றங்களைத் தட்டிக் கேட்கவேண்டிய அவரைத் தற்காப்பு நிலைக்குத் தள்ளவே இந்தத் தாக்குதல் - என்கிற வாதம் ஒருபுறம். 'பிள்ளையின் பார்வையிலிருந்து எல்லாவற்றையும் மறைத்துவிட முடியாது என்பது தெரிந்தேஇ அதையெல்லாம் பார்த்தபின் அவர் என்ன பேசுவார் என்பதை யூகித்திருந்தது இலங்கை. அதனால்தான் அவர் நடுநிலையானவர் அல்ல என்கிற பொய்யைப் பரப்ப - புலிகளின் ஆதரவாளர் - என்று முத்திரை குத்த முயன்றது' என்பது இன்னொரு வாதம்.

எந்த வாதம் சரி என்கிற கேள்வி தேவையில்லாதது. பிள்ளை இருக்கும் இடத்திலிருந்து எப்படி ஒரு அறிக்கை வரவேண்டுமோ அப்படியொரு அறிக்கைதான் இந்த மாதம் வரும் என்பது சர்வநிச்சயம். மிகுந்த ராஜதந்திரத்துடன் அந்த அறிக்கை இருக்கும் என்பதை பிள்ளையின் கொழும்பு பேட்டியிலிருந்து புரிந்துகொள்ள வேண்டாமா நாம்?

தமிழ்நாட்டில் போற்றப்படும் ராஜதந்திரம் வேறு இது வேறு. ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட்டபோதும் அதை எதிர்ப்பதைப்போல பாவலா காட்டிக்கொண்டே அந்த இனப்படுகொலைக்கு முழுமுதற் காரணமான கேடுகெட்ட காங்கிரஸின் தயவில் தமிழ்நாட்டின் முதல்வர் நாற்காலியில் ஒட்டிக்கொண்டிருந்த கோழைகள் தான் இங்கே ராஜதந்திரிகள். எங்கள் ஒன்றரை லட்சம் உறவுகளின் பிணக்குவியல் மீது போடப்பட்டிருந்தது கோபாலபுரத்துக் கோழைகளின் பதவி நாற்காலி. நவநீதம் பிள்ளையோஇ ஐ.நா.வின் முக்கியப் பதவியில் நேர்படப் பேசும் தன் தெளிவால் அமர்ந்திருக்கிறார். அயோக்கிய ராஜதந்திரத்துக்கும் நேர்மையான ராஜதந்திரத்துக்கும் வித்தியாசம் புரிகிறதா உங்களுக்கு? இதுபுரியாமல் பிள்ளையை விமர்சிக்கக் கூடாது.

பயணத்தின் முடிவில் நவநீதம் பிள்ளை எழுப்பிய கேள்வி ஒவ்வொன்றும் சிங்கள மிருகங்களுக்குக் குலை நடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதே ஏன்? பிள்ளையின் கருத்துக்கள் நியாயமற்றவை நடுநிலையற்றவை - என்று இலங்கை புலம்பித் திரிகிறதே ஏன்?

மனித உரிமைகள் விவகாரங்கள் தொடர்பாகப் பேச மட்டுமே பிள்ளைக்கு அதிகாரம் இருக்கிறதாம் உள்நாட்டு அரசியலில் தலையிட அவருக்கு அதிகாரம் இல்லையாம்! கண்டுபிடித்து அறிவித்துவிட்டார்கள் மேதாவிகள். நவநீதம் பிள்ளை குறித்து பான் கீ மூன் விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமாம் - 'பான் மாமா' என்று பாசத்தோடு அழைத்தவரிடமே கோரிக்கை வைக்கிறார்கள் கோதாவின் சினேகிதர்கள்.

இதையெல்லாம் மிஞ்சுகிற விதத்தில் பேசுகிறார் இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீஸ். அலரி மாளிகையிலிருந்து ராஜபக்சே கொடுக்கும் அரளி விதையை அரைத்து சாதத்துடன் குழைத்து தமிழர்களுக்குப் பாசத்துடன் ஊட்டுகிற மரண வியாபாரி அவர். இங்கே இருக்கும் சிவகங்கை பூனையைப் போன்றே அதுவும் ஆக்ஸ்போர்டு புளுகுப் பூனை. இது அக்பர் ரோட்டுப் பூனை அது அலரி மாளிகைப் பூனை - என்பதுதான் வித்தியாசம்.

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே நவநீதம் பிள்ளையை அழைத்தார்களாம் இலங்கைக்கு! 'எங்களிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்பதால்இ அவரை அப்போதே அழைத்தோம்' என்கிறார் பெரீஸ். மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றால் ஐ.நா.வின் நிபுணர் குழுவை ஏன் உள்ளே விட மறுத்தார்கள்? நவநீதம் பிள்ளை வந்து இறங்கியதும் ராணுவக் கூடாரங்களை அவசர அவசரமாக ஏன் சுருட்டி வைத்தார்கள்? இதற்கெல்லாம் ஆக்ஸ்போர்டு பூனைகளிடம் பதிலில்லை.

இதற்கிடையே தமிழர்களின் மன உறுதியை உடைப்பதற்காகவே பரப்பப்படும் அழுகிப் போன அபாண்டமான ஒரு பொய்யை மீண்டும் கடை விரிக்கப் பார்க்கிறது சிங்கள கழுதைப் புலி. முள்ளிவாய்க்காலுக்குப் போன நவநீதம் பிள்ளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் போய் மலரஞ்சலி செய்ய முயன்றாராம்! அந்த முயற்சிக்கு இலங்கை எதிர்ப்பு தெரிவித்ததாம். அது எந்த இடமாம் தெரியுமா...... பிரபாகரன் கொல்லப்பட்ட இடமாம்! இப்படிப் போகிறது கதை!

இந்தக் கடைந்தெடுத்த பொய்ப் பிரச்சாரத்துக்கு இரண்டு முகம்.

ஒன்று - நவநீதம் பிள்ளை முகத்தில் கரி பூசுவது.

இரண்டு - பிரபாகரன் இல்லவே இல்லை என்கிற பித்தலாட்டத்துக்கு சவுரி கட்டி மீண்டும் ஒரு ரவுண்ட் ஆட விடுவது.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப் பார்க்கிறது கழுதைப்புலி. ஒன்று தன்னைக் காப்பாற்றிக் கொள்வது. இன்னொன்று உன்னைக் காப்பாற்ற எவருமில்லை என்று தமிழரை அதைரியப்படுத்துவது. இரண்டுமே பொய் என்பது அம்பலமாகும்போதுதான் சிங்கள மிருகங்கள் அம்மணமாகும். எவ்வளவு திமிர் இருந்தால் உளுத்துப்போன ஒரே குற்றச்சாட்டின் மூலம் நவநீதம் பிள்ளையையும் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் பற்றி ஒரு அபாண்டத்தைப் பரப்ப முயற்சிப்பார்கள்! இல்லை இல்லை என்று புளுகியபடியே உலகம் முழுக்க கோதாவின் கூலிப்படை யாரைத் தேடுகிறது என்பதை அறியாத மூடர்கள் என்று நினைக்கிறீர்களா நம்மை?

பிள்ளையின் மானுடப் பார்வையைக் கேவலப்படுத்த இலங்கை மிருகம் என்னவெல்லாம் செய்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டால்தான் சுதந்திரப் போராட்ட வீரர்களான விடுதலைப்புலிகளை - பயங்கரவாதிகள் - என்று சித்தரிக்க அது என்னென்ன செய்திருக்கும் என்பதை அறிந்துகொள்ள முடியும்.

முள்ளிவாய்க்காலுக்குச் சென்ற நவநீதம் பிள்ளை அங்கு கொன்று குவிக்கப்பட்ட ஆயிரமாயிரம் மக்களுக்கு மலரஞ்சலி செலுத்த விரும்பினார். போரின் பெயரால் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்துவது ஐ.நா.வின் வழக்கமான நடைமுறை. '30 ஆண்டுப் போரில் கொல்லப்பட்ட அனைவருக்கும் சேர்த்து போர் முடிவடைந்த இடத்தில் அஞ்சலி செலுத்த முடிவெடுத்தோம். அதை இலங்கை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்ததால் அந்த முயற்சியைக் கைவிட்டோம். இதைத் திரித்து பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த முயன்றதாக இலங்கை பழி சுமத்துவது தவறானது' என்று ஐ.நா. மனித உரிமைகள் பணியகம் வேதனையுடன் அறிவித்துள்ளது.

பிள்ளை இலங்கையில் போய் இறங்கும் முன்பே அவரைப் பற்றி பொய்ப் பிரசாரம் நடந்ததற்கு அவர் என்ன சொல்வார் என்பதை இலங்கை யூகித்ததுதான் காரணம். அதே பார்முலா இதற்கும் பொருந்துகிறது. இந்த மாதம் பிள்ளை சமர்ப்பிக்க இருக்கும் அறிக்கை எப்படியிருக்கும் என்பதை இலங்கை யூகித்து விட்டது. அதனால்தான் பிள்ளையைச் சிறுமைப்படுத்தும் வேலையை இப்போதே தொடங்கிவிட்டது. பிரபாவுக்கு அஞ்சலி செலுத்த முயன்றார் - என்கிறது. சர்வதேசத்தின் முன் பிள்ளையைக் கேவலப்படுத்த முயலும் மஹிந்தனும் அவனுடன் பிறந்த மற்ற இரு மிருகங்களும் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்...... பிள்ளையால் அல்ல உங்களது பொய்களால்தான் நீங்கள் நசுங்கி நாசமாகப் போகிறீர்கள்!

பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தில் நவநீதம் பிள்ளை அஞ்சலி செலுத்த விரும்பினார் - என்கிற புளுகுமூட்டையை நீங்கள் அவிழ்க்கிறபோதே பிரபாகரன் கொல்லப்பட்டார் - என்று இதற்கு முன் நீங்கள் அவிழ்த்ததும் புளுகுமூட்டை தான் என்பது அம்பலமாகியிருக்கிறது. தங்களைத் தாங்களே அம்பலப்படுத்திக் கொள்வோர் பட்டியலில் எங்கள் ஊர் முத்தமிழறிஞரைத் தொடர்ந்து நீங்கள் இடம்பிடித்துள்ளீர்கள்! (அறிவாலயமும் அலரி மாளிகையும்னு ஒரு கட்டுரை எழுதலாமாங்ணா!)

வெட்கமேயில்லாமல் தமிழ்நாட்டிலும் கடைவிரிக்கும் ஆங்கில நியூஸ் சேனல் நண்பர்களே! வழக்கம்போல் பிள்ளை மீது இலங்கை பழி சுமத்துவதையும் இருட்டடிப்பு செய்யுங்கள். லசந்த விக்கிரமதுங்க தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டான் - என்று கோதபாய ஒருநாள் அறிவிக்கத்தான் போகிறான். அடுத்த நொடியே அனைத்து சேனல்களிலும் 'லசந்த மரணம் தற்கொலைதான்' என்று சு.சுவாமியிடம் பேட்டி எடுத்து வெளியிட்டு பிழைப்பு நடத்துங்கள். உங்கள் செவுளில் அறைவதற்கான சுரணை தமிழனுக்கு இருக்கிறதா என்ன!

ஆங்கில சேனல்களின் கூத்து இப்படியென்றால் அதை மிஞ்சுவதாக இருக்கிறது பாரதீய ஜனதா கூத்து. அதன் நெடிய தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹா 'விடுதலைப் புலிகளின் கடற்படையைத் தகர்த்தது இலங்கைக் கடற்படையல்ல இந்தியக் கடற்படை தான்' என்கிற உண்மையைப் போட்டு உடைத்து பா.ஜ.க. மீது மரியாதையை ஏற்படுத்தினார். அவர் சொன்னதிலிருந்து இனப்படுகொலையில் இந்தியாவுக்கு நேரடித் தொடர்பு இருப்பது அம்பலமானது. இதற்காக இலங்கை இந்தியாவுக்குக் கடமைப்பட்டிருக்கவேண்டும்.

இந்த கால்குலேஷன் கூட தெரியாமல் கொழும்புக்குப் போய் இலங்கை ராணுவத்தின் கருத்தரங்கில் கலந்துகொண்டு 'விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததற்காக இலங்கை அரசுக்கு இந்தியா கடமைப்பட்டிருக்கிறது' என்று சுப்பிரமணிய சுவாமி பேச எப்படி அனுமதிக்கிறது பா.ஜ.க.? சுவாமி பாரதீய ஜனதாவில் சேர்ந்திருக்கிறாரா இத்தாலிய ஜனதாவில் சேர்ந்திருக்கிறாரா? தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காக சோனியா அவரை இங்கே அனுப்பியிருக்கிறாரா?பொன்.ராதாகிருஷ்ணனும் இல.கணேசனும் தமிழிசையும் தான் பதில் சொல்லவேண்டும்.

(அவசர அவசியமாக ஒரு வேண்டுகோள்: எங்கள் உயிருக்குயிரான ஈழ உறவுகளே! நியாயத் தீர்ப்பை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.... தீக்குளிப்பது போன்ற உயிர்த் தியாகங்களால் எம் இதயத்தை உடைத்துவிடாதீர்கள்! இன்னொரு களத்தை நாம் சந்திக்க நேரலாம். அன்று நாம் ஒவ்வொருவரும் உயிருடன் தேவைப்படுவோம்! மறந்துவிடாதீர்கள்!)

தமிழக அரசியல் 9.9.13 இதழ் கட்டுரை

http://www.sankathi24.com/news/32994/64//d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.