Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமேல் - வட மாகாண ஆளுநர்களை அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகுமாறு தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடமேல் - வட மாகாண ஆளுநர்களை அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகுமாறு தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு :

12 செப்டம்பர் 2013

bass_CI.png

 

வடமேல் மாகாணம் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர்கள் தமது பதவியின் கௌரவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால்,  அந்த அரசியல் பணிகளில்  இருந்து உடனடியாக விலகுமாறு  தேர்தல் ஆணையாளர் அரசியல் கட்சிகளின் செயலாளர் ஊடாக அறிவித்துள்ளார்.

 

வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி,  வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ பலல்ல ஆகியோர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் மேடைகளில் ஏறி பிரசாரப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் உள்ளிட்ட அமைப்புகள் சுட்டிக்காட்டியிருந்தன.

 

 

இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரகாரம் மாகாணங்களின் ஆட்சி கலைக்கப்பட்ட பின்னர் அதன் நிறைவேற்று அதிகாரம் ஆளுநர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் அவர்கள் தேர்தலின் போது ஒரு கட்சிக்கு சார்பாக செயற்படுவது அரசியல் சட்டத்தை மீறும் செயல் என அந்த அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/96416/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னைத் தடுக்க எந்த சட்டமும் இல்லை – வடக்கு ஆளுனர் சந்திரசிறி கொக்கரிப்பு
[ வியாழக்கிழமை, 12 செப்ரெம்பர் 2013, 00:14 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]


சிறிலங்கா அதிபரின் பிரதிநிதியாக, தன்னால் எங்கும் செல்வதற்கு உரிமை உள்ளது என்றும் தன்னை யாரும் தடுக்க முடியாது என்றும், வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

வடக்கில், சிறிலங்கா அமைச்சர் பசில் ராஜபக்ச பங்கேற்ற ஆளும்கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில், வடமாகாண ஆளுனர் சந்திரசிறியும் பங்கேற்பது தொடர்பாக, குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையிலேயே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“என்னிடம் அதிகாரம் உள்ளது. யாருடனும் எங்கேயும் நான் செல்லமுடியும்.

சிறிலங்கா அதிபரும், அவரது சகோதரர் பசிலும் வடக்கை அபிவிருத்தி செய்ய கடினமாக உழைத்து வரும் நிலையில் அவர்களுடன் பல்வேறு இடங்களுக்குச் சென்றுள்ளேன்.

அவர்கள் வடக்கிற்கு வரும் போது அவர்களுடன் நான் இருப்பேன்.

எனது பரப்புரைகளை மனிதஉரிமை ஆணைக்குழுவுக்கு கொண்டு சென்றாலும் நான் கவலைப்படவில்லை.

வடக்கு மாகாணத்தில் நான் தான் ஆளுனர். அங்கு எனது பயணங்களைத் தடுப்பதற்கு எந்த சட்டமும் கிடையாது.

சிறிலங்கா அதிபரின் பிரதிநிதி என்ற வகையில் எனக்கு அரசியல்உரிமை உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அரச அதிகாரியாக உள்ள வடக்கு மாகாண ஆளுனர் ஆளும்கட்சியின் சார்பில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட முடியாது என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்ற நிலையில் - அவர் சிறிலங்கா அதிபரின் பிரதிநிதி என்று அரசதரப்பு கூறுகிறது.

இந்தநிலையில் தன்னால் எந்த முடிவுக்கும் வரமுடியாது என்றும், மனிதஉரிமை ஆணைக்குழுவே இதுகுறித்து தீர்மானிக்கும் என்று சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


http://www.puthinappalakai.com/view.php?20130912109031

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.