Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

த.தே.கூட்டமைப்பினர் மீதான தாக்குதலின் பின்னணியில் படையினர்

Featured Replies

sri-lankan-army-soldiers.jpgவெள்ளை வாகனத்தில் வந்திறங்கிய குண்டர்கள் சிங்களத்தில் கத்திக்கொண்டு வந்து எங்களைத் தாக்கினார்கள் என்று நேற்று பிற்பகல் நாவற்குழியில் தாக்குதலுக்கு உள்ளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் எங்கள் வாகனத்திற்கு குறுக்கே தங்கள் வாகனத்தைக் கொண்டு வந்து நிறுத்தினர். இதனால் எங்கள் வாகனம் தொடர்ந்து செல்ல முடியவில்லை. அந்த வெள்ளை வாகனத்தில் வந்த பத்து வரையான குண்டர்கள் இரும்புக் கம்பிகளால் எங்களைத் தாக்கினார்கள். நாங்கள் செய்வதறியாது ஓடினோம் என்றும் அவர்கள் சாவகச்சேரி காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலின் பின்னணியில் சிறிலங்கா படையினரே உள்ளனர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தாங்கள் தனங்கிளப்பில் பிரச்சாரம் நிறைவடைந்து நாவற்குழிக்கு திரும்பிய போது தச்சந்தோப்பு சந்தி காவலரணிலிருந்த படையினர் தங்களை எங்கே செல்கிறீர்கள் என்று விசாரித்தாகவும் இதன் பின்னணியிலேயே வெள்ளை வானொன்றில் தங்களைப் பின்தொடர்ந்தவர்கள் தங்கள் மீது தாக்குதல் நடத்தி இருவரைக் காயமடைய வைத்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த தாக்குதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் ஞா.கிஸோர் (வயது 24) மற்றும் றஜிந்தன் (வயது 19) ஆகிய இருவரும் காயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று பிற்பகல் இவர்களிடம் சாவகச்சேரி காவல்துறையினர் நடத்திய விசாரணைகளின் போதே தங்களுக்கு ஏற்பட்ட நிலையை அவர்கள் பொலிஸாரிடம் விளக்கினர்.

இராணுவத்தினர் எங்களை எங்கே போகின்றீர்கள் என்று அடிக்கடி விசாரிக்கும் போதே ஏதோ அசம்பாவிதம் நிகழப்போகின்றது என்று நாங்கள் ஊகித்தோம். அவ்வாறே எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

http://www.sankathi24.com/news/33166/64//d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.