Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மாகாணசபை தேர்தல் படைத்தரப்பினர் நேரடியாக வன்முறைகளை கையிலெடுத்தனர்:-

Featured Replies

வடக்கு மாகாணசபை தேர்தல் பிரச்சாரங்கள் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்ற நிலையில் படைத்தரப்பு நேரடியாக தேர்தல் வன்முறைகளை கையிலெடுத்துக் கொண்டுள்ளது. குறிப்பாக கூட்டமைப்பின் இளம் வேட்பாளர்கள் பலரும் பகிரங்கமாகவே பாதுகாப்பு தரப்பின் கண்காணிப்பு வளையத்தினுள் கொண்டுவரப்பட்டுள்ளனர். 

நேற்றிரவு அவ்வாறான வேட்பாளர்கள் பலரது வதிவிடங்களிலும் படையினரது பிரச்சன்னம் அதிகளவில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல வேட்பாளர்கள் வாக்களிப்பு தினம் வரை வதிவிடங்களை மாற்றிக்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இதனிடையே நேற்று கனகராயன் குளம் பகுதியில்  பிரச்சார கூட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஆதரவாளர்கள் மீது படையினர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். மோட்டார் சைக்கிள்கள் ஓட்டோக்களில் துரத்தி வந்தே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. குறித்த கூட்டத்தினை முடித்துக்கொண்டு வீடுகள் நோக்கி திரும்பிக்கொண்டிருந்தவர்களே தாக்கப்பட்டுள்ளனர்.

அதே வேளை இன்று வவுனியா பூந்தோட்டப்பகுதியிலும் ஆளும் தரப்பினது பிரச்சாரக்கூட்டமொன்றிற்கு இன்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  ஆளும் தரப்பு வேட்பாளர் தர்மபால என்பவருக்கு ஆள்திரட்டுவதில் படை அதிகாரிகளே நேரடியாக பிரசன்னமாகியுள்ளனர்.

வட மாகாணசபை தேர்தல், கூட்டமைப்பின் இறுதி பிரசாரக் கூட்டங்கள்- 

வட மாகாணசபைத் தேர்தலின் இறுதிப் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற தினம் இன்றாகும். இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இறுதிப் பிரசார கூட்டங்கள் யாழ் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று இடம்பெற்றன. 

குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆறு பிரதான பரப்புரைக் கூட்டங்கள் இன்று நடைபெற்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பரப்புரைக் கூட்டம் பருத்தித்துறை கடற்கரைப் பகுதியில் இன்றுபிற்பகல் இடம்பெற்றது. 

ஏனைய கூட்டங்கள்; உடுப்பிட்டி, வதிரி உள்ளியன் எல்லை அம்மன் ஆலய வளாகம், சுன்னாகம் மயிலங்காடு, யாழ். சட்டநாதர் கோவிலடி, யாழ். குருநகர் ஆகிய இடங்களில் இன்றுமாலையில் இடம்பெற்றுள்ளன. 

இன்றைய இறுதி தேர்தல் பிரசார கூட்டங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ. சுமந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.கே.சிவாஜிலிங்கம், வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி விக்னேஸ்வரன் ஆகியோரும் யாழ் மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களும் உரையாற்றினார்கள். 

இங்கு உரையாற்றியவர்கள், 'இத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரிய வெற்றியைப் பெறுவதை தமிழ் மக்கள் உறுதிசெய்ய வேண்டும். இதன்மூலமே தமிழ் மக்கள் தமது உரிமையைத் தொடர்ந்தும் உறுதியாக வலியுறுத்துகின்றார்கள் என்பதை அரசுக்கும், எம்மீது அக்கறையுள்ள நாடுகளுக்கும் தெளிவுபடுத்த முடியும். எனவே ஒட்டுமொத்த தமிழ் மக்களும் கூட்டமைப்புக்கு வாக்களிப்பது அவர்களின் வரலாற்றுக் கடமையாகும். தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களித்து கூட்டமைப்பை பெரும்பான்மை வெற்றிபெறச் செய்யவேண்டும்' என்ற கருத்துப்பட உரையாற்றினார்கள். இக்கூட்டங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி சபை தலைவர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள்; என பெருந்திரளானோர் பங்கேற்றிருந்தார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.