Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் வாக்கு கேட்டு நிவாரணபொதிகள் வழங்கிவைப்பு!

Featured Replies

ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட முதன்மை வேட்பாளர் றிச்சாட் பதியுதீன் வாக்கு கேட்டு நிவாரணப்பொதிகள் வழங்கி வைப்பு.

எதிர் வரும் 21 ஆம் திகதி இடம் பெறவுள்ள வடமாகாண சபைத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு மன்னார் மாவட்டத்தில் அமோக வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் வேட்பாளரினால் வியாழக்கிழமை(19-09-2013) இரவு முதல் வாக்களர்களின் வீடுகளுக்குச் சென்று நிவாரணப்பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் சார்பாக மன்னார் மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்களின் சகோதரனான றிப்கான் பதியுதீன் அவர்களினால் குறித்த உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

மன்னார் பெரிய கடை வீதி வயல் வீதியில் அமைந்துள்ள வேட்பாளர் றிப்கான் பதியுதீன் என்பவருடைய வீட்டில் தற்போது லொறி லொறியாக உலர் உணவுப்பொதிகள் மற்றும் மதுபானப்பொருட்கள் இறக்கப்பட்டுள்ளது.

-இதே வேளை மன்னார் தாரபுரம் கிராமத்தில் உள்ள வாக்காளர்கள் பலருக்கு 5 ஆயிரம் ரூபாய் வீதம் பணமும் உலர் உணவுப்பொதிகளும் வேட்பாளர் றிப்கான் பதீயுதீன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதே சமயம் இன்று மாலை மடு விற்கு பொறுப்பான சமூர்த்தி அதிகாரியினால் பல சமூர்த்தி பணியாளர்கள் வரவலைக்கப்பட்டு தம்பனைக்குளம் கிராமத்தில் றிப்கான் பதியுதீனுக்கு தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு உலர் உணவுப்பொதிகள் மற்றும் மதுபானப்போத்தல்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

-மன்னார் நகர் பகுதியிலும் பல்வேறு பட்ட தேர்தல் வன்முறைகள் இடம் பெற்று வருகின்ற போதும் தொடர்ந்தும் தேர்தல் கண்கானிப்புக்குழுக்கள் மௌனம் காத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

mannar%20%20fot%201.jpg

mannar%20fot.jpg

http://www.sankathi24.com/news/33360/64//d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.