Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதலில் எம்மை நம்புங்கள் பக்கசார்பற்று விசாரணைகளை மேற்கொள்வோம்' என்கிறார் அரசின் அதிபர் அருமைநாயகம்

Featured Replies

"அனந்தி சசிதரன் மீதான தாக்குதல் தொடர்பில் சர்வதேச பத்திரிகையாளர்கள் பலரும் கேள்விக்கணைகளை தொடுத்தனர்"

Arumai_CI.jpg

அனந்தி சசிதரன் மீதான தாக்குதல் தொடர்பினில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடைபெறுமென  அரச அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். 

இன்று மாலை வாக்கெண்ணும் மையம் அமைக்கப்பட்டிருக்கும் யாழ்.மத்திய கல்லூரியினில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்;திப்பில் அவர் இத்தகவலை வெளியிட்டார். 

அனந்தி சசிதரன் மீதான தாக்குதல் தொடர்பில் அங்கு சென்றிருந்த சர்வதேச பத்திரிகையாளர்கள் பலரும் ஏறுமாறாக கேள்விக்கணைகளை தொடுத்தனர். இதற்கு பதிலளித்த அவர் 'முதலில் எம்மை நம்புங்கள். நாங்கள் பக்கசார்பற்று விசாரணைகளை மேற்கொள்வோம். சம்பவ இடத்திற்கு அதிகாலை வேளையிலேயே எமது  உதவி தெரிவத்தாட்சி அலுவலர் அச்சுதன் சென்று விசாரணைகளை நடத்திவிட்டார். தற்போது பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். வேட்பாளர்களது சுவரொட்டிகள் பாகுபாடு ஏதுமின்றி கிழித்தகற்றப்பட்டுள்ளது. அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டதாக கூறப்படுகின்ற நிலையில் இன்று அதிகாலை அவை முளைத்துள்ளன. எனினும் அவையும் அகற்றப்படும்' என அவர் தெரிவித்தார்.

தபால் மூலவாக்குகள் மாலை 4மணியளவினில் எண்ண ஆரம்பிக்கப்படும். அதை தொடர்ந்து மாலை 6 மணியளவினில் ஏனைய வாக்குகள் எண்ணப்படும். இரவு 10 மணியளவினில் முதல் முடிவுகள் வெளியாகுமென திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே வலிவடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களிற்கான வாக்களிப்பு நிலையங்களிற்கு பயணிக்க ஏதுவாக போதிய போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.