Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈ.பி.டி.பி சார்பான மருதங்கேணி பிரதேச செயலாளருக்கு எதிராக மக்கள் போராட்டம்

Featured Replies

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் ந.திருலிங்கநாதன் ஈ.பி.டி.பி கட்சியின் முகவராக செயற்படுவதாகவும், சாதி பிரச்சினையை தூண்டும் வகையில் பேசி வருகிறார் என்றும் அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்ற பணிகளை தனது அடியாட்களை வைத்து  மோசடி செய்து வருவதாகவும் குற்றம் சாட்டி வடராட்சி கிழக்கு மக்கள் இன்று மருதங்கேணியில் உள்ள வடமராட்சி கிழக்கு உதவி அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கு முன்னால் கவனஈர்ப்பு போராட்டத்தை நடத்தினர்.

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் 2010ம் ஆண்டு மக்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ள போதும் வீட்டுத் திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எவையும் வழங்கப்படாத நிலையில் உதவி அரசாங்க அதிபரினால் தாம் தொடர்ந்தும் அநாகரீகமாக நடத்தப்படுவதாகக்கூறி பிரதேச மக்கள் இப்போராட்டத்தை நடத்தினர்.

சுனாமி மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்குவதில் பாரபட்சம், கடற்றொழில்களில் ஈடுபடும் மக்களுக்கு உதவிகளை வழங்கும் நிறுவனங்களை, மக்களுடன் பேச விடாது இரகசியமாக உதவிகளை பெறுகின்றமை, வீதிகள் மற்றும் பொது இடங்களை அபிவிருத்தி செய்வதில் அக்கறை காட்டாமை,

ஒப்பந்தங்களை தன்னிடம் உள்ள உத்தியோகத்தர்களை வைத்து செய்து கொள்வது, சாதி, சமய பிரிவினைகளை தூண்டும் வகையில் பேசுவது, நாகர்கோவில், வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, போக்கறுப்பு, போன்ற இடங்களுக்கு மின்சாரம் வழங்கும் நடவடிக்கைகளில் தாமதம் காட்டுவது போன்ற குற்றச்சாட்டுக்களை அப்பிரதேச மக்கள் வடமராட்சி கிழக்கு உதவி அரசாங்க அதிபருக்கு எதிராக கூறுகின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த கரையார் எல்லோரும் போய் உங்கள் தலைவர்களிடம் பிரச்சினையை கூறுங்கள். என்னிடம் வரவேண்டாம் என உதவி அரசாங்க அதிபர் கூறுகிறார் என வடமராட்சி கிழக்கில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். வடமராட்சி கிழக்கு உதவி அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டிருப்பவர் ஈ.பி.டி.பியினால் நியமனம் பெற்றவர் என அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கு நியாயம் கேட்டுச் சென்றபோது மக்களை மிகமோசமான வார்த்தைப் பிரயோகங்களால் பிரதேச செயலர் திட்டுவதாக கூறி, இன்று காலை 11மணியளவில் பிரதேச செயலகத்திற்கு முன்பாக கூடிய மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இந்நிலையில் அங்குவந்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், மக்களுடன் பேசியதுடன், சம்மந்தப்பட்ட உதவி அரசாங்க அதிபருடனும் பேச்சினார்.maruthankeni_people.jpg1278017_590212651040531_469927130_o.jpg

 http://www.thinakkathir.com/?p=53040#sthash.Z0wYLKxe.f

Edited by யாழ்அன்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.