Jump to content

பற்பொடி உற்பத்தி தொழில் முயற்சிக்கு உதவி தேவை.


Recommended Posts

பற்பொடி உற்பத்தி தொழில் முயற்சிக்கு உதவி தேவை.

 

போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறு சிறு தொழில் முயற்சிகளை மேற்கொண்டு வரும் எமது திட்டத்தில் நாம் முன்னெடுத்த முயற்சிகளின் வெற்றியைத் தொடர்ந்து முல்லைத்தீவு வள்ளுவர்புரத்தில் பற்பொடி உற்பத்தியை ஆரம்பிக்கவுள்ளோம்.

 

பற்பொடி உற்பத்தியில் தேர்ச்சி பெற்ற போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை உள்வாங்கி இத்தொழிலை ஆரம்பிக்கும் நோக்கில் முதல் கட்ட வேலைகளை முடித்துள்ளோம்.

 

உற்பத்திப் பொருட்கள் கொள்வனவு மற்றும் இட ஒழுங்கு அத்தோடு உற்பத்தி செய்யப்படும் பற்பொடியை கடைகளுக்கு விநியோகம் செய்வதற்கான வாகனம் உட்பட மொத்த முதலீட்டுத் தொகை ஒருலட்சத்து ஐயாயிரம் ரூபா தேவைப்படுகிறது.

 

இத்தொழிலில் 3குடும்பங்களுக்கான வேலை வாய்ப்பை வழங்கலாம்.

 

இத்தொழிலுக்கான முதலீடு செய்பவருக்கான இலாபம் :- உற்பத்தியில் கிடைக்கும் வருமானத்தில் தொழிலாளர் சம்பளம் உற்பத்திச் செலவு போக அரைப்பங்கு வழங்கப்படும்.

 

ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.

தொடர்புகளுக்கு :-

Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

 

nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh

 

www.nesakkaram.org

 

முகவரி:
Nesakkaram e.V
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany

 

Shanthy Germany – 0049 6781 70723
Skype ID – Shanthyramesh
Vereinsregister:
AZ- VR 20302
Amtsgericht 55543 Bad Kreuznach
Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

 

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

 

http://nesakkaram.org/ta/%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/

Link to comment
Share on other sites

அருமையான திட்டம். :)

 

இப்போ நியூயோர்க்கில் பழைய மாதிரியான "கோபல் பல்போடி" வாங்க முடிவதில்லை. அதே பெயரில் படு குப்பைகள்தான் கிடைக்கின்றன. போலிகளா தெரியாது. தரமானவை செய்து நியூயோக்கும் தயவுசெய்து அனுப்பி வைக்கச்சொல்லுங்கள் :D

Link to comment
Share on other sites

அருமையான திட்டம். :)

 

இப்போ நியூயோர்க்கில் பழைய மாதிரியான "கோபல் பல்போடி" வாங்க முடிவதில்லை. அதே பெயரில் படு குப்பைகள்தான் கிடைக்கின்றன. போலிகளா தெரியாது. தரமானவை செய்து நியூயோக்கும் தயவுசெய்து அனுப்பி வைக்கச்சொல்லுங்கள் :D

 

அண்ணா உங்களுக்கு இல்லாததா முதல் உற்பத்தியின் பரீட்சார்த்தம் உங்களுக்குத்தான். :lol: ஆனால் முதலீடு கிடைத்ததும் தான் தொழில் ஆரம்பிக்கும் அதுவரை பொறுத்திருங்கள்.

 

Link to comment
Share on other sites

இதைப் பற்றி பேசுவோம் .காலை 6-8 மணி வரை கணனியில் இருப்பேன் தொடர்பு கொள்ளுங்கள் .

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இதைப் பற்றி பேசுவோம் .காலை 6-8 மணி வரை கணனியில் இருப்பேன் தொடர்பு கொள்ளுங்கள் .

 

தொடர்பு கொள்ளுங்கள் அவசியம் பேச வேண்டும். பற்பொடி உற்பத்தி முழுமையான விபரங்கள் யாவும் கிடைக்கப்பெற்றுள்ளது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அக்கா,

கனடிய தமிழ் இளையவர் ஒருவர் ஊரில் வியாபாரம் தொடங்கும் ஆவலுடன் இருக்கிறார்.

அவர் முன்பு தமிழ் இளையோர் அமைப்புகள், அரசியல் அமைப்புகளுக்கு தொண்டராக பணியாற்றியவர்.

ஊருக்கு மார்கழியில் சென்று வியாபர நிலைமைகளை அறிய உள்ளார்.

அவருக்கு நேசக்கரத்தின் திட்டங்களை பற்றி கூறினேன். அவரும் உங்களுடன் திட்டங்கள் பற்றி பேச விரும்புகிறார்.

நீங்கள் சம்மதித்தால் அவரின் மின்னஞ்சலை அனுப்பிவிடுகிறேன்.

 

எனது மின்னஞ்சல் , ஸ்கைப் , தொலைபேசியிலக்கங்களை அந்தத் தம்பியிடம் கொடுத்துவிடுங்கள். பேசுகிறேன். அல்லது அவருடைய தொடர்பெண்ணை தந்தாலும் நான் தொடர்பு கொண்டு பேச முடியும். இத்தகையவர்களின் தொடர்புகளை பெற்றுத் தாருங்கள் விவசாயி விக். நம்மால் பல முன்னெடுப்புகளை செய்ய உதவியாக இருக்கும்:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.