Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழைப் பாதுகாக்க வேண்டிய காலத்தில் உள்ளோம்: முன்னாள் அரச அதிபர் இராசநயாகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழைப் பாதுகாக்க வேண்டிய காலத்தில் உள்ளோம்: முன்னாள் அரச அதிபர் இராசநயாகம்:-
28 அக்டோபர் 2013

குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்


Rasanayakam_CI.JPG


தமிழைப் பாதுகாக்க வேண்டிய காலத்தில் உள்ளதாக முன்னாள் அரச அதிபரும் மகோதேவ சைவச் சிறுவர் இல்லத்தின்; (குருகுலம்) தலைவருமான தி. இராசநாயகம் தெரிவித்தார். கடந்த கால நிகழ்வுகள் மாத்திரமின்றி நிகழ்கால நிகழ்வுகளும் இந்தத் தேவைiயை வலியுறுத்தி நிற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

கிளிநொச்சியில் ஜெயந்தி நகரில் உள்ள குருகுலம் சிறுவர் இல்லத்தின் வளரும் 12 குழந்தைகளுக்கு தமிழ் முறைப்படி கொண்டாடப்பட்ட பிறந்தநாள் நிகழ்வில் தலமை தாங்கிப் பேசிய பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவடட்ட அரசாங்க அதிபராக இருந்த காலத்தில் அரச அலுவலகங்களில் தமிழ் மொழியை பயன்படுத்துவது தொடர்பில் நடவடிக்கைகளை கிளிநொச்சி மாவட்டத் தமிழ் சங்கம் ஊடாக மேற்கொண்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன் தமிழில் திருமணம் செய்தல், தமிழில் ஆலயங்களில் பூசை செய்தல், தமிழில் மரணக் கிரியைகளைக் கொண்டாடுதல் என பல்வேறு பட்ட நிகழ்வுகளில் கிளிநொச்சி மாவட்ட தமிழ் சங்கம் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

குருகுலம் சிறுவர் இல்லத்தில் தொடர்ச்சியாக தமிழ் முறைப்படியே பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

ஆங்கில முறையில் மெழுகு திரியை அணைத்து கேக் வெட்டப்பட்டு கொண்டாடுவதற்கு பதிலாக தமிழ் முறையில் விளக்கை ஏற்றி அமுதூட்டுதல் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டார். ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பாக கொண்டாபடப்ட்ட பண்டைத் தமிழர் முறை என்றும் சுட்டிக்காட்டினார்.  

இந்த நிகழ்வானது எங்கள் வாழ்க்கையில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற வார்த்தைக்கு செயலுருவம் கொடுக்கின்ற வைகயில் அமைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார். இது ஒரு மகத்தான பணி என்றும் இதற்கு தமிழ்ச் சங்கம் பெரும் பங்களிப்பு செய்துள்ளது என்றும் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் மொழிக் கலப்பு காரணமாக பல மொழிகள் வழக்கிழந்திருக்கின்றன என்று சுட்டிக்காட்டிய முன்னாள் அரச அதிபர் கலப்பு மிகவும் ஆபத்தானது எனவும் குறிப்பிட்டதுடன் அது தனித்துவமான மொழியை மெல்ல மெல்ல அழித்துவிடும் என்றும் குறிப்பிட்டார்.

வருங்காலத்தில் தூய தமிழைப் பாவிப்பது அவசியமானது என்றும் தெரிவித்தார். இப்பொழுது ஆங்கிலமொழியுடன் சிங்கள மொழிகூட தமிழ் மொழியுடன் கலந்து பேசப்படுகிறது எனக் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்திலேயே தூய தமிழ் பேசப்படுகின்றது எனவும் தெரிவித்த அவர் இப்பொழுது அதிலும் ஆங்கிலமும் சிங்களமும் கலக்கப்படுகிறது என்றார்.

இந்த நிலைப்பாடுகளுக்கு இடம்கொடுக்காமல் எல்லோரும் இணைந்து தமிழ்மொழி ஆக்க நடவடிக்கையில் முற்றுமுழுதாக ஈடுபடவேண்டும் என்றும் அலுவலகங்கள் மற்றும் கல்விச்சாலைகள் என்பன இந்தப் பணியில் திட்டமிட்டு ஈடுபடவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

நிகழ்வில் கரைச்சிப் பிரதேச சபையின் முன்னாள் விசேட ஆணையாளர் நித்தியானந்தன், கிளிநொச்சி மாவட்ட காணி ஆணையாளர் பத்மநாதன், கிளிநொச்சி மாவட்ட தமிழ் சங்கச் செயலாளர் இறைபிள்ளை முதலியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் தமிழ் நெறியில் பிறந்த நாள் கொண்டாடுவது எப்படி என்ற வழிகாட்டிக் கையேடு வெளியிடப்பட்டது. அத்துடன் குருகுலம் சிறுவர் இல்லக் குழந்தைகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்
 
 
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98223/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.