Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத் தலையீடு பற்றி உடனடி விசாரணை தேவைவடக்குத் தேர்தல் தொடர்பில் பொதுநலவாய கண்காணிப்பாளர்கள் வலியுறுத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

kamalesh%20sharma.jpg

வடபகுதியில் கடந்த மாதம் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலின்போது இராணுவத் தலையீடு இடம்பெற்றுள்ளது என எழுந்துள்ள முறையீடு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என பொதுநலவாய அமைப்பின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்தக் கண்காணிப்பாளர்கள் தமது இறுதி அறிக்கையில் இது தொடர்பாக ஏழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர். அதில் அவர்களால் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு
 
வடமாகாணசபைக்கான தேர்தல் பரப்புரைக் காலத்தில் இராணுவத் தலையீடும், செல்வாக்கும் ஊடுருவியுள்ளமையை நாம் கவனத்தில் கொள்கின்றோம். இது ஒரு பாரதூரமான செயற்பாடு. குழப்பியடிக்கும் நடவடிக்கை. இந்தத் தலையீடு குறித்தும், செல்வாக்குப் பிரயோகம் குறித்தும் விசாரணை நடத்தப்படவேண்டும். இத்தகைய முறைகேடான செயற்பாடுகள் எதிர்காலத்தில் தவிர்க்கப்படவேண்டும்.அதேவேளை, பாரபட்சமற்ற முறையில் தம் கடமையை மேற்கொண்ட உள்ளக தேர்தல் அவதானிப்பாளர்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு பரிகாரம் காணப்படவேண்டும்.
 
ஜனநாயக முன்னெடுப்புகளில் ஈடுபடும் உள்ளகத் தேர்தல் கண்காணிப்பாளர்கள், சுயாதீனமாக செயற்படுவதற்கான பாதுகாப்பு அவசியம். இவர்களின் காத்திரமான பணிகள் சம்பந்தமான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படவேண்டும். 
 
தேர்தல் பரப்புரைக் காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய அங்கீகரிக்கப்பட்ட நடவடிக்கைகளை வலியுறுத்தும் விதிமுறைகளும் மீளாய்வு செய்யப்படவேண்டும். தேர்தல் காலத்தில் பரவலாக மேற்கொள்ளப்படும் அரசு உடைமைகள் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கான சட்டமும் கண்டிப்பாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். 
 
சுயாதீனமான தேர்தல் ஆணைக் குழுவொன்று நிறுவப்பட வேண்டும்.  தற்போதைய சட்டங்கள் கண்டிப்பாகநடைமுறைப்படுத்தப்படவேண்டும். அவசியம் ஏற்படின், குளறுபடிகளுக்கும், குழப்பங்களுக்கும் தூபமிடும் நோக்கமான பேச்சுகளைத் தடுக்க இறுக்கமான நடவடிக்கைகள் அவசியம். 
 
அரசியல் கட்சிகள்,  தமது ஆதரவாளர்கள் மேற்கொள்ளும் வன்முறை நடவடிக்கைகளைத் தடுக்க முன்வரவேண்டும். பொறுமைகளையும், சகிப்புத்தன்மையையும் கடைப் பிடிப்பதற்கான ஒரு கலாசாரத்தை அரசியல் கட்சிகள் உருவாக்கவேண்டும்.
 
ஊடகங்கள் சுயாதீனமாக சமப்பாடான செய்திச் சேவைகளை மேற்கொள்வதற்கான ஊடகக் கலாசாரமும் தோற்றுவிக்கப் படவேண்டும். அதேவேளை, ஊடகவியலாளர்களின் பாதுகாப்பும் உத்தரவாதப்படுத்தப் படவேண்டும்.
 
செயலாளர் நாயகம்
 
வடமாகாணசபைத் தேர்தலுக்கான பொதுநலவாய அமைப்பின் தேர்தல் கண்காணிப்புக் குழுவினரின் இந்த அறிக்கையை பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா விடுத்துள்ளார். 
 
இது குறித்தும் கமலேஷ் சர்மா குறிப்பிடுகையில், 
 
இந்தத் தேர்தல் இலங்கையைப் பொறுத்தமட்டில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இதைக் கண்காணிப்பதற்குபொதுநலவாய அமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டமை எமக்கு மகிழ்ச்சியளித்தது.
 
தேர்தல் நடத்தப்பட்ட முறைமை குறித்து பொதுநலவாய அமைப்பு கண்காணிப்பாளர்கள் திருப்தி தெரிவித்துள்ளார்கள். வாக்களிப்பில் பெரும் எண்ணிக்கையில் வாக்காளர்கள் பங்குபற்றியிருக்கிறார்கள். தேர்தல் அதிகாரிகள் கடமை உணர்வோடும், அர்ப்பணிப்போடும் செயற்பட்டுள்ளார்கள்.
 
இந்தத் தேர்தலுக்குப் பின்னரான சூழ்நிலையும் அமைதியானது. இதற்கான இத்தேர்தலில் பங்குபற்றிய அரசியல் கட்சிகளின் தலைமைகளுக்கும் பாராட்டுதலைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அதே வேளை, இத்தேர்தலுக்கு முன்னர் நிலவிய நிலைப்பாடு குறித்தே பொதுநலவாய அமைப்புக் கண்காணிப்புக் குழுவினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
 
இக்குழுவினரின் கோரிக்கையை நான் ஆதரிக்கின்றேன். தேர்தல் என்பது ஒரு முன்னெடுப்பே. இது ஒரு சம்பவமாகிவிடாது.  தேர்தலுக்கு முந்தைய நிலைப்பாடு, ஆட்புல ஒருமைப்பாட்டையும் நம்பகத் தன்மையையும் பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும். 
 
பொதுநலவாய கண்காணிப்பாளர் குழு, சுயாதீனமான தேர்தல் ஆணைக்குழு நிறுவப்படவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது. இது பரந்தளவில் பெறுமானமுள்ள பொதுநலவாய அமைப்பின் சிறந்ததொரு செயற்பாடாகும். இலங்கையோடு இணைந்து செயற்படவிருக்கிறோம். இலங்கையின் தேர்தல் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு உதவவும் நாம் தயாராகவுள்ளோம்.இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தேர்தல் வடபகுதியினதும் முழு இலங்கையினதும் இணக்கப்பாட்டோடு கூடிய அபிவிருத்திகளுக்கு வழிகோலும் என பொதுநலவாய கண்காணிப்புக் குழுவினரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்கள்.
 
செப்ரெம்பர் 14ஆம் திகதி முதல் 28ஆம் திகதிவரை இலங்கையில் பொதுநலவாய அமைப்புக் கண்காணிப்புக்குழு தங்கியிருந்தது. தேர்தல் சமயத்தில் இதன் உறுப்பினர்கள் வடமாகாணத்தில் ஐந்து மாவட்டங்களில் கண்காணிப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தார்கள்.  

 

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=332742409331594593

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.