Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச ஊடகவியலாளரகள் இன்று நாடு கடத்தப்படவுள்ளனர்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச ஊடகவியலாளர் பேரவையின் ஆசிய பசுபிக் பிராந்திய வலயப் பணிப்பாளர் ஜாக்யூ பார்க் மற்றும் பேரவையின் உறுப்பினர் ஆகிய இரு வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் இன்று வியாழக்கிழமை நாடு கடத்தப்படவுள்ளனர்.

இலங்கைக் குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் தடுத்து வைத்துள்ள இவர்கள் இன்று காலை நாடு கடத்தப்படுவார்கள் என்று மேற்படி திணைக்களம் தெரிவித்துள்ளது. சுற்றுலா விசாவில் நாட்டுக்குள் பிரவேசித்து, ஊடக கருத்தரங்கு நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையிலேயே குறித்த இரு ஊடகவியலாளர்களும் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

சுதந்திர ஊடக அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட கருத்தரங்கு ஒன்றில் இந்த இருவரும் பங்கேற்றுள்ளனர். இதேவேளை, குறித்த இரண்டு பேரும் கருத்தரங்கு நடாத்துவதற்காக இலங்கை விஜயம் செய்யவில்லை என சுதந்திர ஊடக அமைப்பு தெரிவித்துள்ளது.

ஊடகப் பேரவையின் பிரதிநிதிகள் இலங்கை விஜயம் செய்துள்ளதனை அறிந்து கொண்ட தாம், கருத்தரங்கில் பங்கேற்குமாறு கோரியதாகவும் அதன் அடிப்படையிலேயே அவர்கள் கருத்தரங்களில் பங்கேற்றதாகவும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும் குடிவரவு சட்டங்களை மீறிச் செயற்பட்டதால் அவர்களை நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்தார்.

http://www.sarithamnews.com/?p=13986

"வார உரைகல்"  பிரதம ஆசிரியர் பிணையில் விடுதலை.

 

 

காத்தான்குடியிலுள்ள ‘வார உரைகல்’ எனப்படும் பத்திரிகையின் பிரதம ஆசிரியரான எம்.ஐ.எம்.றஹ்மத்துல்லா (புவி) கஞ்சா வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் இவர் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் மகன் பெண்களுடன் காமலீலையில் ஈடுபட்டிருக்கும் படங்களை தனது வாரப்பத்திரிகை யான வார உரைகல் பத்திரிகையில் வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பாகவும் அவர் விசாரிக்கப்பட்ட போதிலும் படங்கள் உண்மையானவை என்பதால் அவர் மீது சட்டநடவடிக்கை எடுக்க முடியாமல் போய்விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை வார உரைகல் பத்திரிகையின் ஆசிரியரின் வீட்டுக்கு பொலிஸ் மோப்ப நாயுடன் சென்ற பொலிஸ், தேடுதல் நடத்தியது. இதன்போது அவரது வீட்டிலிருந்து கஞ்சா கட்டு ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட கஞ்சா 198 கிராம் எனவும், இவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

வார உரைகல் பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தியும் படங்களும் இவைதான்

இங்கையின் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், ஆளும்கட்சி நாடாளமன்ற உறுப்பினரும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் காத்தான்குடி மக்களால் தாஜுல் மில்லத் என பெயர் சூட்டி அழைக்கப்படும் எம் .எல் .ஏம் ஹிஸ்புல்லாஹ் வின் செல்வப் புதல்வர் ஹிராஸ் அஹ்மத் (பொறியியல் பீட மாணவர் ) வெளிநாட்டு இளம் பெண்களுடன் சல்லாபம் அனுபவிக்கும் புகைப்படங்கள் எமது இணையத்தளத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளன .

காத்தான்குடியில் மக்கள் செல்வாக்குடன் அரசியல் களத்தில் தற்போது வலம்வரும் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மார்க்க அறிஞ்சர்களின் வழிகாட்டலில் அரிசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறிக்கொள்ளும் இவர் கிழக்கு மாகாணத்தில் உலமாக்களுக்கான உம்முள்குறா பல்கலைக்கழகத்தையும் அமைத்துவருகிறார் இவர் மிக அன்மை காலமாக காத்தான்குடியை இஸ்லாமிய கிராமமாக மாற்றப் போவதாக கூறிக் கொண்டு அறபு எழுத்தாணிகள் கொண்ட கற்ஷிட் பங்களையும் அமைத்து வருகிறார் .

முஸ்லிம் சமூகத்தை மறைமுகமாகவும் பகிரங்கமாகவும் ஏமாற்றி வரும் இவர் காத்தான்குடி பிரதேச அபிவிருத்தியில் கொள்ளை அடித்து வருகின்ற போதிலும் இவரால் மேற்கொள்ளப்படும் அணியாங்களின் பின்னணியில் உலமாக்களும் புத்திஜீவிகளும் காத்தான்குடி சம்மேளனமும் இவருக்கு உதவிவருவது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமூகத்தை வழிகாட்டப் புறப்பட்டுள்ள இவர் தன் மகனின் இழி செயலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் .

இவரது மகன் ஹிராஸ் அஹ்மத் முகப்புத்தகத்தில் பெண்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு இவரது வலையில் விழும் பெண்களுடன் கொழும்பில் உல்லாச விடுதிகளில் சல்லாபம் அனுபவித்து வருகிறார் .

இவர் பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்த போதிலும் கொங்காங் நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட அலானா சலேய் என்ற இப்பெண்ணுடன் பல முறை உல்லாச விடுதிகளில் உல்லாசம் அனுபவித்தாதாக தெரிய வருகிறது .

அதற்கான புகைப்படங்ககளுடன் முழுமையான ஆதாரம் கிடைக்கப் பெற்றுள்ளன இவரால் இப்பெண்களுக்கு போடப்பட்ட பாலியல் உரையாடல்கள் எம்மிடம் முழுமையாக கிடைக்கப்பெற்றுள்ளன இவை அனைத்தும் மிக விரைவில் பதி வேற்றப்படும் .
அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பொய்க்கு பெயர்போன ஒருவர் என்பது கிழக்கு மாகாண மக்களுக்கு நன்கு தெரியும் இதையும் சிலவேளை மறுக்கவும் வாய்ப்பு இருக்கிறது. Hisbulla-son.jpg Hisbulla-son-1.jpg Hisbulla-son-2.jpg

 

 

விபச்சாரத்திற்கு ஜேம்ஸ் பக்கருக்கு அனுமதி வழங்கும் அரசு ஊடகவியலாளர்களை கைதுசெய்கிறது - திஸ்ஸ அத்தநாயக்க
[Friday, 2013-11-01 18:28:24]
News Service
சுற்றுலா விசாவில் வந்து விபச்சாரம் மற்றும் கசினோ பேச்சுவார்த்தைகளிலும் கருத்தரங்குகளிலும் கலந்து கொள்ள ஜேம்ஸ் பக்கருக்கு அனுமதி வழங்கும் அரசாங்கம், அதே விசாவில் வந்து கருத்தரங்கில் பங்கேற்ற ஊடகவியலாளர்களை கைதுசெய்த நடவடிக்கையை அங்கீகரிக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவிக்கையில், ஜேம்ஸ் பக்கர் சுற்றுலா விசாவில் வந்து இரண்டாயிரத்து 500 வருடங்கள் கொண்ட உன்னதமான கலாசாரத்தை கொண்ட இலங்கையில் விபச்சாரத்தையும் கசினோ சூதாட்டத்தையும் பற்றி பேச்சுகளிலும் கருத்தரங்குகளில் கலந்து கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்குகிறது.

 
அதே விசாவில் வந்து கருத்தரங்கில் கலந்து கொண்ட வெளிநாட்டு ஊடகவியாளர்களை கைதுசெய்தது. சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஆசிய - பசுபிக் பிராந்திய பணிப்பாளர் ஜெக்கி பார்க் மற்றும் ஜான் வேர்த்திங்டன் ஆகிய ஊடகவியலாளர்களை கைதுசெய்து இரண்டு நாட்கள் இடைவிடாது விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகளையும் இடையூறுகளையும் ஐக்கிய தேசியக்கட்சி வன்மையாக கண்டிக்கின்றது.

பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெறவுள்ள தருணத்தில் அரசாங்கத்தின் இந்த நடத்தையானது பொதுநலவாயத்தின் 54 உறுப்பு நாடுகளின் இணக்கத்துடன் கையெழுத்திடப்பட்ட அதன் 16 அடிப்படை கோட்பாடுகளை மகிந்த ராஜபக்ச அரசு மதிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.

பொதுநலவாயத்தின் அடிப்படை கோட்பாடுகளில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது, ஜனநாயகம், மனித உரிமை, மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பது, நல்லாட்சி ஆகியவற்றை அரசாங்கம் கடுமையாக மீறியுள்ளது. ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டதன் மூலம் ராஜபக்ச அரசாங்கம் நாட்டின் நற்பெயருக்கு சர்வதேச ரீதியில் அழிவை ஏற்படுத்தும் தேசத்துரோகத்தை செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=96251&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.