Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலை புலிகளை விட நாட்டை ஆட்சி செய்த தலைவர்களே அதிக அழிவை ஏற்படுத்தினர் - அமைச்சர் டளஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
dalas-seithy-20131010.jpg

நாட்டின் வரலாற்றில் நாட்டை ஆட்சி செய்த தலைவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு பிரிவினைவாத நோக்கில் செய்த அழிவுகளை விட அதிகமான அழிவுகளை செய்துள்ளதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போது அவர் இதனை கூறினார். இலங்கையில் எந்த அரசாங்கம் ஆட்சி செய்தாலும், தொழிற்கல்வி தொடர்பாக உரிய கவனம் செலுத்தப்படுவதில்லை. அந்த கல்விமுறை தொடர்பில் அறியாமை அல்லது போதிய அளவில் புரிதல் இன்மை அல்லது தெரிந்து கொள்வதற்கான ஆர்வம் இன்மை போன்ற விடயங்களை சுட்டிக்காட்டலாம். தொழிற்கல்வி பற்றி சிந்திக்காமல், பல்கலைக்கழகம் சென்று வரவேண்டும் என்ற நோக்கம் மாத்திரமே இன்றைய இளைஞர்கள் மத்தியில் இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

  

நாட்டில் கல்வித்துறையில் முன்னேற்றங்களை செய்யாததன் மூலம் நாட்டை ஆட்சி செய்த தலைவர்கள் நாட்டுக்கு அழிவை ஏற்படுத்தியுள்ளனர். எமது நாடு பின்னடைவான நிலைமையில் இருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். சோமாலியா, எத்தியோப்பியா, சூடான் ஆகிய நாடுகளுடன் ஒப்பிடும் போது ஒவ்வொன்றும் வேறுபட்டது. இதனால் எமது நாட்டின் பின்னடைவை வாத பிரதிவாதங்கள் ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாது.

சுகாதாரம் போன்ற பொதுவசதிகளை எடுத்து கொண்டால் இலங்கை உயர்ந்த நிலையில் உள்ளது. இந்த விடயங்களில் எத்தியோப்பிய, சோமாலியா போன்ற நாடுகள் மிகவும் கீழ் நிலையில் உள்ளன. எமது நாட்டில் தொழில் கல்வியில் முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை. 1893 ஆம் ஆண்டு தொழில் பயிற்சி கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதுடன் அதன் பின்னர் 100 வருடங்கள் கழிந்தே அதனை சீர்செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=96208&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.